தேடித் தேடி வாசிக்கும் புத்தக நேசர்களுக்காக குறைந்த வருடக் கட்டணத்தில் "மாதம் ஒரு நூல்" என வீடுதேடி வரும் புத்தகங்கள்
Tuesday, January 15, 2019
"காணக் கிடைத்தவை"-வ.ஸ்ரீநிவாசன்
ஜனவரி-(2019) "காணக் கிடைத்தவை"
எழுத்தாளர்
வ.ஸ்ரீநிவாசன்
கட்டுரைகள்
பக்கங்கள் 216 விலை 200 /-
ISBN 978-81-940780-8-1
-------------------------------------------------------------------------------------------------------
கட்டுரைகள்
பக்கங்கள் 216 விலை 200 /-
ISBN 978-81-940780-8-1
-------------------------------------------------------------------------------------------------------
காணக்கிடைத்தவை
(சிறுவாணி) தொகுப்பில் வாடிவாசல் பற்றி
வ ஸ்ரீனிவாசன்
எழுதியுள்ள கட்டுரை சிறப்பாக
உள்ளது. நாவலை ஊன்றி வாசித்திருப்பது நன்றாக தெரிகிறது. அதை நமக்கும்
தெரிவிக்கிறார். ஒரு கேம்கார்டரை போன்ற கதைசொல்லல் முறை 'நிகழில்' சொல்லப்பட்ட கதை என்பதை highlight செய்கிறார்.
அது 'சஞ்சயன் சொல்வது
போல' என்ற உவமை படு
கச்சிதம். இத்தன்மையை கதைகள் அரிது என்று
எண்ணுகிறேன். காரி காளையையும் பிச்சியையும் கதை நாயகர்களாக வைத்திருக்கும் பங்கு
பற்றி குறிப்பிடுகிறார். அது வீர
விளையாட்டு என்று காலத்தையும் களத்தையும் கொண்டு இந்த கதை வாசிக்கப்பட வேண்டியதை
சொல்கிறார்.
குறைவான
பாத்திரங்களும் நேரடி பேச்சு குறைவாகவும் அமைந்த நாவல் வாடிவாசல் மனித சாதியின்
மிருக சாதியின் கதை. அட்டைக்கத்தி வீரம் அல்ல
என்கிறார். இது சாதி பற்றிய ஒற்றை பரிணாம கதை என்று வகைப்படுத்துவது
நியாயம் அற்றது என்று சொல்லி நபகோவ் வகைப்படுத்தலை மறுப்பதை குறிப்பிடுகிறார்.
பழி வாங்கல்,
அதிகாரம் , அதிகார எதிர்ப்பு , சாதி ஆதிக்கம் என்பதே இந்த நாவல் கிடையாது
என்பதை விளக்கி பேசுகிறார். பிச்சி ஜமீன்தார் காளை அம்புலி மருதன் - யாரும்
ஒருவருக்கு ஒருவர் பகை இல்லை. ஆனால் அம்புலி. காரி காளையை அடக்குவது மரணத்தை
தழுவுதலுக்கு சமம் என்பது ஊரானுபவமும் கூட. ஆனால் பிச்சி அணைகிறான். தனது அப்பாவை
கொன்ற அல்ல - மரணத்துக்கு காரணமான காரியை அடக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது
குறி. யாரும் எதிரி அல்ல. iஆனால் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று
காளை. இன்னொன்று அம்புலி. இருவருக்குமே மரணம் விளையாட்டின் தோல்விப் பரிசாக
கிடைக்கிறது.
மிருகத்துக்கு
ரோசம் வந்தாலும் போச்சு. மனுஷனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு என்ற வரியை கதையின்
சரடாக சொல்லிக்காட்டுகிறார்.
ஸ்ரீனிவாசன் கட்டுரையில் இரண்டு இடங்கள் அருமை.
அம்புலித்தேவன்
காரி காளையை அடக்க முயன்று சாகிறான். அவன் மகன் பிச்சி காரியை அடக்க
வந்திருக்கிறான். ஒரு வேளை இவனும் குடல் சரிந்து இறந்தால் ? என்று கேள்வி எழுப்பி அப்படி நிகழாது. அவனும்
ஒருவிதத்தில் அம்புலித்தேவன்தான். மாடு அணையும் வீரர்கள் அனைவரும் ஒருவரேதான்
என்று எழுதுகிறார். நாவலை இந்த வரி எங்கோ கொண்டுபோய் நிறுத்தி மறுபடி படிக்க
தூண்டுகிறது.
காளை பாவம். அது
என்ன பிழை செய்தது. இந்த நாளுக்காகவே ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டது. அதற்கு
விளையாட்டு தெரியாது. தான் கௌரவச் சின்னம் என்பது தெரியாது. அதனிடம் பிச்சியைப்
பற்றி எடுத்து சொல்ல கிழக்காளை இல்லை .உதவ மைத்துனன் நிலை. எதற்கென்றே தெரியாமல்
வந்து அங்கு மனித அளவீட்டின்படி அழைக்கப்பட்டு (அழகான வரி இது ) புரியாமல்
எரிச்சல் ஊட்டப்பட்டு பின் கொல்லவும் படுகிறது. காலைதான் முதல் கதாநாயகன்.
வாடிவாசலை மறுபடி
வாசிக்க தூண்டும் கட்டுரை
Ramesh kalyan
6.6.19
டிசம்பர் (2018)-
"ஆட்கொல்லி"
க.நா.சுப்ரமணியம்
-நீண்ட காலத்திற்குப் பின் மறுபதிப்பு காணும் நாவல்-
பக்கங்கள் 120 விலை 120 /-
ISBN 978-81-940988-5-0
---------------------------------------------------------------------------------------------
Saraswathi Gayathri
December 17, 2018 at 7:46 AM ·
சிறுவாணி வாசகர்
மையம் மறுபதிப்பு செய்திருக்கிற க.நா.சுப்ரமண்யம் அவர்களின் ஆட்கொல்லி நாவல்
படித்து நான்கைந்து நாட்களாகியும்
என்னிடமிருந்து
நகர்ந்து போகாமல் கொல்கிறது.
முப்பது ,நாற்பது வருடங்கள் முன்புவரை உறவினர்
வீட்டிற்கு குழந்தைகளை அனுப்பி படிக்க வைப்பது நடைமுறையில் இருந்திருக்கிறது .
அப்படி தன் மாமா,மாமி வீட்டில்
தங்க நேர்ந்து படிக்கிற பையன் தான் நாயகன்.அவன் பார்வையில் வட்டிக்குப் பணம்
கொடுத்து ( லேவா தேவி)லட்சாதிபதியாகிற மாமா வை,அவர்தம் மனைவியை ,அவர்கள் இருவரின் குணங்கள் படியாத அவர்தம் மகனை
, பணத்தை
இரட்டிப்பாக்குகிறதிலேயே முனைப்புடன் இருந்து வாழ்கிற மாமாவின் நிழலில் ,அவரின் சாதுர்ய மனைவியின் வளர்ப்பில் தான்
பெரியவனானாலும் தனக்கு பணத்தைப் பற்றிய ஒரு சமத்தும்
இல்லாதிருப்பதை
நூறு பக்கங்களில் சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு வரியும் திரும்பத் திரும்ப படிக்க
வைக்கிறவை.
அந்த காலத்தில்
வேறு வழியில்லாமல் உறவினர் வீட்டில் இடி சோறு சாப்பிட்டு ,படித்து ,வளர்ந்த அத்தனை பேரும்
இப்புத்தகத்தை
படித்தார்களெனில்,
// மாமாவோ,மாமியோ ஓடிப்போ என்று சொல்லி அவனை
விரட்டியிருக்க மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.அவன் வீட்டிலிருந்த வரையில் அவனை
ஏவுவதற்கு மாமிக்கு ஆயிரக்கணக்கான காரியங்கள் இருந்தன. சாப்பாடு சரியாகப்
போட்டிருக்க மாட்டாள்.உண்மைதான். சோற்றைத் தின்னும்போதும் வாயால் பொறிந்து கொட்டி,
நெஞ்சுக்குக் கீழ்
இறங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள்//
இந்த வரிகள்
கண்ணீரை வரவழைக்கும்.
இந்த உலகில்
மற்றெல்லா பேதங்களை விடவும் பணம் படைத்தவன் ,பணம் இல்லாதவன் என்கிற பேதம் தான் இன்றுவரை
கொடுங்கோலாட்சி செய்துவருகிறது என்று நினைக்கிறேன். குடும்பம்,அலுவலகம்,பொதுவிலென அதன் ஆக்டோபஸ் கரங்களே மனிதனை
அந்தஸ்துக்குரியவனாக மகிழ்ச்சிக்குரியவனாக ,தூய்மையின்,வாய்மையின் சொரூபனாக
காட்டிக்கொண்டிருக்கிறது.அல்லது கழுத்தை நெருக்குகிறது.
பணம் இருந்தாலே
பலம் வந்து விடுகிறது.
இந்த நாவல்
மனிதர்களின் குணங்களை மிகவும் நுட்பமாக சொல்கிறது .முகத்திலறையும்
உண்மையை ,இல்லையென்று மறுக்க முடியாத நிலைதான்.
க.நா.சு வின்
எழுத்தில் கதைநெடுக ஒட்டிக்கொண்டே வருகிற அந்த எள்ளல் தொனி..
" ஏய் எல்லாம்
பொய்யடா! இதுக்காடா இப்படி அலையறீங்க !" என்ற கேள்வியை கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
புத்தகத்தில் Bharathi
Mani அவர்கள் தம் மாமனார்
க.நா.சுப்ரமண்யம் அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள் , வ.ஸ்ரீனிவாசன் அவர்களின் வாசிப்பனுபவம்
இரண்டும்
வாசகர்களுக்கு போனஸ்.
தனது
முன்னுரையில் க.நா.சு இப்படியாக சொல்கிறார்.
//வேங்கடாசலத்தின்
ஒரு மருமான் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் இன்னொரு மருமான் சமையற்காரனாகப் பெண்
வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை
ரஸிகர்களுக்கு என று ஏற்பட்ட மெலோட்ராமா .அதிகப்படுத்திக்கூறல்.,கோயின்சிடென்ஸ் என்கிற வகையைச் சேர்ந்து
விட்டது .அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது போகட்டும் என்று விட்டு
விட்டேன். (25.03.1957.).//
இதனாலேயே எனக்கு
க.நா.சு வை பிடித்திருக்கிறது.❤️
// நல்லது
செய்பவர்கள் மட்டும்தான் நலம் பெறுகிறார்கள் உலகிலே என்று அப்படி ஒன்றும் சுலபமாகச்
சொல்லிச் சாதித்து விட முடியாது .நம் கண்ணெதிரிலே தப்பு செய் கிறவர்களை அப்படி
ஒன்றும் கடவுள் தண்டித்து விட்டதில்லை.தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்லித்
தப்பித்துக் கொள்கிறோம்.தவறு செய்துவிட்டு தன் வாழ்நாளில் அதற்குரிய பலனை
அனுபவிக்காததற்கு ஒரு காரணம் சொல்வதற்காக அடுத்த ஜன்மத்தில் அனுபவிப்பான் என்று
சொல்லி ஆனந்தப்படும் உலகமிது .கையாலாகத்தனம் என்று தான் சொல்ல வேண்டும் என்று
தோன்றுகிறது.//
// மனித சுபாவத்திலே
ஒரு பகுதிக்குப் பிறர் செய்கிற தவறுகளை எடுத்துச்சொல்லி ஆனந்தப்படுகிற ஒரு கர்வம்
அதிகமாகவே இருக்கிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது//
// அநித்தியமான
மனிதன் நித்தியத்துவத்தை விரும்புகிறான்//
// சிருஷ்டி
தத்துவம் மிகவும் விசித்திரமானது .மனிதன் தான் சிருஷ்டித்துக்கொண்டு ,சௌகரியம் என்று ஏற்றுக்கொண்ட ஒரு விஷயத்துக்கு
அடிமைப்பட்டுக் கிடக்கிறானோ என்று எண்ணும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது//
// பணத்தை ஒரு
லக்ஷியமாக எண்ணாமல் வாழ்க்கை நடத்த முயலுகிறவனை உலகம் பைத்தியக்காரன் என்றுதான்
மதிக்கிறது.வாழத்தெரியதவன் என்றும் சொல்லி விடுகிறது.பொருளில்லார்க்கு இவ்வுலகம்
இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது.சிலசமயம் சிந்திக்கும்போது இதை கலியுகம் என்று
சொல்வதற்குப் பதில் பணயுகம்,பொருளாதார யுகம்
என்று சொல்லலாம் என்றுதோன்றுகிறது.அடிமைப்பட்டுக் கிடப்பதில் வருத்தத்துக்குப்
பதில் ஆனந்தத்தையே மனிதன் காணத் தொடங்கி விட்டால் அதை என்னவென்று சொல்வது?//
// பணக்கார்ர்களிடம்
பணம் சேருகிறது ஏழையிடம் பணம் படிப்படியாகப் பணம் குறைகிறது .கண்கூடாக இது தினமும்
காண்கிற விஷயம்தான். பணக்காரனுக்கு உதவ பாங்குகள் முதல் தனிமனிதர்கள் வரையில் எல்லோருமே
தயாராக இருக்கிறார்கள் .உறவினர்கள் போட்டி போட்டுக்கொண்டு,இந்த லாபமில்லாத உதவியை ஒரு ஏழை உறவினனுக்குச்
செய்தால் ,அந்த ஏழை உறவினன்
ஏழைமை நீங்காவிட்டாலும் ,அன்புடனும்,ஆதரவுடனும் ஒரு கவலை நீங்கியிருக்க மாட்டானோ?
உதவி தேவையாகிற இடத்திலே ,உதவி தேவைப்படுகிற காலத்திலே கிடைக்கக் கூடாது
என்பதுதான்
ஈசுவர
சிருஷ்டியின் நியதியா?//
தெரியாத ஒரு
விஷயத்தை மறைப்பதற்காக" சில பேருக்கு அப்படித்தான் சேரும் ,தொட்டதெல்லாம் போன னாகும் ஜாதகம் "
என்றுசொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான்.பர்ஸைத் தொட்டால் தொட்ட மாத்திரத்திலேயே
பர்ஸைக் காலியாக்கி விடுகிற ஜாதகம் அதற்கென்ன செய்வது??
_________________________________________________________________________
Suresh Venkatadri
December 7, 2018
அம்மாமி,'பணம் என்னவெல்லாம்,பண்ணும்னு எனக்கு இப்போதுதான் தெரிகிறது ராஜா'
என்றாள்.
'பணம் என்னென்ன
பண்ணாது என்று தெரிகிறது,என்று சொல்
அம்மாமி' என்றேன்.இது இந்த
நாவலின் கடைசி வரிகளில் ஒன்று.
வாழ்க்கையெல்லாம்,பணம் பணம் என்று பணத்தையே பிரதானமாக மதித்து
வாழ்ந்து வந்த தம்பதிகளையும்,அவர்களிடம்
பணத்தை, உலகியல்
வெற்றியைப் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வளர்ந்த ஒருவரையும் பற்றிய நாவல்.மனித
சுபாவத்தின் எண்ணிப் பார்க்க முடியாத விசித்திரங்கள்,அத்தகைய சுபாவங்களைக் கொண்டவர்கள்,தங்களை தாங்களே சமாதானப்படுத்திக்கொள்ள,நியாயப் படுத்திக்கொள்ள உண்டாக்கிக் கொள்ளும்
தர்க்கங்கள்,வாழ்க்கையின்
நியாய தர்மங்கள்,அதன் மெய்யான
வெற்றி ரோல்விகள்,என சகலத்தையும்
நூறே பக்கங்களில் அலசித் தீர்த்துவிடும்,படைப்புதான்,க.நா.சுவின் '
ஆட்கொல்லி'.
கோவைசிறுவாணி வாசகர் மையத்தின் மீள்
வெளியீட்டாக வெளி வந்திருக்கிறது.
க.நா.சுவின் படைப்புகளை இப்போது மீள் வாசிப்பு
செய்கையில்,ஒரு படைப்பாளியாக
அவரது உண்மையான உயரம்,உணரப்படவில்லையென்றே
தோன்றுகிறது. இந்த நூலில் போனஸாக, இந்த நாவலைப்
பற்றிய வ.ஸ்ரீ அவர்களின் மிக அழகான ஒரு பதிவும்,க.நா.சுவின் மாப்பிள்ளை,திரு.பாரதி மணி,க.நா.சு.அவர்களைப் பற்றி எழுதியிருக்கும் ஒரு
கட்டுரையும் இடம்பெற்றிருக்கிறது.
வழக்கம் போல் ஒவியர் ஜீவா அவர்களின் எளிமையான,நாவலின் உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான அட்டைப்
படமும்....
--------------------------------------------------------------------------------------------------------------------
ஆட்கொல்லி
படித்தேன்.
பணம்தான்
ஆட்கொல்லி!
பணத்தின் மீதான
மனிதர்களின் பற்று வியாக்கியானம் தர்மம் அதர்மம் நியாயம் அநியாயம் என்று போகும்
நாவல்.
அற்புதமான நடை.
நன்றி திரு.கோவை
காமு (எ)கா.முருகானந்தம்
---------------------------------------------------------------------------------------------------------------------
Kathai solli - கதைசொல்லி
// நல்லது செய்பவர்கள் மட்டும்தான் நலம் பெறுகிறார்கள் உலகிலே என்று அப்படி ஒன்றும் சுலபமாகச் சொல்லிச் சாதித்து விட முடியாது .நம் கண்ணெதிரிலே தப்பு செய் கிறவர்களை அப்படி ஒன்றும் கடவுள் தண்டித்து விட்டதில்லை.தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறோம்.தவறு செய்துவிட்டு தன் வாழ்நாளில் அதற்குரிய பலனை அனுபவிக்காததற்கு ஒரு காரணம் சொல்வதற்காக அடுத்த ஜன்மத்தில் அனுபவிப்பான் என்று சொல்லி ஆனந்தப்படும் உலகமிது .கையாலாகத்தனம் என்று தான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.//
// அநித்தியமான மனிதன் நித்தியத்துவத்தை விரும்புகிறான்//
Kathai solli - கதைசொல்லி
ஆட்கொல்லி-க.நா.சுப்ரமண்யம்
——————————————-
#சிறுவாணிவாசகர்மையம் மறுபதிப்பு செய்திருக்கிற க.நா.சுப்ரமண்யம் அவர்களின் ஆட்கொல்லி சிறுவாணி வாசகர் மையம் தலைவர் நன்பர் திரு ஜி.ஆர்.பிரகாஷ் அன்புடன் அனுப்பி வைத்தார். அதை படித்துவிட்டு அந்த
சூழலை இரண்டு நாட்களாக அசை
பொட்டுக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது; நகர முடியவில்லை .
——————————————-
#சிறுவாணிவாசகர்மையம் மறுபதிப்பு செய்திருக்கிற க.நா.சுப்ரமண்யம் அவர்களின் ஆட்கொல்லி சிறுவாணி வாசகர் மையம் தலைவர் நன்பர் திரு ஜி.ஆர்.பிரகாஷ் அன்புடன் அனுப்பி வைத்தார். அதை படித்துவிட்டு அந்த
சூழலை இரண்டு நாட்களாக அசை
பொட்டுக் கொண்டு இருக்க வேண்டியுள்ளது; நகர முடியவில்லை .
கடந்த 1950-80ல்முப்பது ,நாற்பது ஐம்பது வருடங்கள் முன்புவரை உறவினர் வீட்டிற்கு பிள்ளைகளை அனுப்பி தங்கி படிக்க வைப்பது உறவு நடைமுறையில் இருந்திருக்கிறது . அப்படி தன் மாமா,மாமி வீட்டில் தங்க நேர்ந்து படிக்கிறவன் இதில் நாயகன்.அவன் பார்வையில் வட்டிக்குப் பணம் கொடுத்து ( லேவா தேவி)லட்சாதிபதியாகிற மாமா வை,அவர் மனைவியை ஆகியோரின் குணங்கள் படியாத அவர் மகனை , பணத்தை இரட்டிப்பாக்குகிறதிலேயே முனைப்புடன் இருந்து வாழ்கிற மாமாவின் நிழலில் ,அவரின் சாதுர்ய மனைவியின் வளர்ப்பில் தான் பெரியவனானாலும் தனக்கு பணத்தைப் பற்றிய ஒரு சமத்துவம்
இல்லாதிருப்பதை சொல்லியிருக்கிறார் இதன் படைப்பாளி க.நா. சு.
இல்லாதிருப்பதை சொல்லியிருக்கிறார் இதன் படைப்பாளி க.நா. சு.
பணம் படைத்தவன் ,பணம் இல்லாதவன் என்கிற பேதம் தான் கொடுமை கொடுமையிலும் கொடுமை.குடும்பம்,பொது தளங்கள்,
உற்றார் உறவினர் இடையே மனிதனை
உயர்த்துகிறது அந்தஸ்தில்........
பணம் இருந்தால் கேடு கெட்டவனையும்
உத்தமர் ஆக்கிறது.பணம்தான் பிராதனம் என்பது யதார்த்தம்.அதுவே
சகலமும்,மிருக பலம் etc
உற்றார் உறவினர் இடையே மனிதனை
உயர்த்துகிறது அந்தஸ்தில்........
பணம் இருந்தால் கேடு கெட்டவனையும்
உத்தமர் ஆக்கிறது.பணம்தான் பிராதனம் என்பது யதார்த்தம்.அதுவே
சகலமும்,மிருக பலம் etc
ஆட்கொல்லியில் சில காட்சிகள்:
// மாமாவோ,மாமியோ ஓடிப்போ என்று சொல்லி அவனை விரட்டியிருக்க மாட்டார்கள் என்பதும் நிச்சயம்.அவன் வீட்டிலிருந்த வரையில் அவனை ஏவுவதற்கு மாமிக்கு ஆயிரக்கணக்கான காரியங்கள் இருந்தன. சாப்பாடு சரியாகப் போட்டிருக்க மாட்டாள்.உண்மைதான். சோற்றைத் தின்னும்போதும் வாயால் பொறிந்து கொட்டி, நெஞ்சுக்குக் கீழ் இறங்காமல் பார்த்துக் கொண்டிருப்பாள்//
இந்த வரிகள் உணர்வு பூர்வமானது.
இந்த வரிகள் உணர்வு பூர்வமானது.
க.நா.சு வின் எழுத்தில் கதைநெடுக ஒட்டிக்கொண்டே வருகிற அந்த எள்ளல் தொனி..
" ஏய் எல்லாம் பொய்யடா! இதுக்காடா இப்படி அலையறீங்க !" என்ற கேள்வியை கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
" ஏய் எல்லாம் பொய்யடா! இதுக்காடா இப்படி அலையறீங்க !" என்ற கேள்வியை கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
புத்தகத்தில் Bharathi Mani அவர்கள் தம் மாமனார் க.நா.சுப்ரமண்யம் அவர்களை பற்றி பகிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகள் , வ.ஸ்ரீனிவாசன் அவர்களின் வாசிப்பனுபவம்
இரண்டும் வாசகர்களுக்கு போனஸ்.
இரண்டும் வாசகர்களுக்கு போனஸ்.
க.நா.சு தனது முன்னுரையில் சொல்கிறார்.
//வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் இன்னொரு மருமான் சமையற்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என று ஏற்பட்ட மெலோட்ராமா .அதிகப்படுத்திக்கூறல்.,கோயின்சிடென்ஸ் என்கிற வகையைச் சேர்ந்து விட்டது .அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது போகட்டும் என்று விட்டு விட்டேன். (//
//வேங்கடாசலத்தின் ஒரு மருமான் கல்யாணத்திற்கு வந்திருக்கிறான் இன்னொரு மருமான் சமையற்காரனாகப் பெண் வீட்டார் வீட்டில் வேலை செய்ய வந்திருக்கிறான் என்று நான் முடிக்கிற இடம் தொடர்கதை ரஸிகர்களுக்கு என று ஏற்பட்ட மெலோட்ராமா .அதிகப்படுத்திக்கூறல்.,கோயின்சிடென்ஸ் என்கிற வகையைச் சேர்ந்து விட்டது .அதை நான் மாற்ற முயலவில்லை. அப்படித்தான் வந்தது போகட்டும் என்று விட்டு விட்டேன். (//
// நல்லது செய்பவர்கள் மட்டும்தான் நலம் பெறுகிறார்கள் உலகிலே என்று அப்படி ஒன்றும் சுலபமாகச் சொல்லிச் சாதித்து விட முடியாது .நம் கண்ணெதிரிலே தப்பு செய் கிறவர்களை அப்படி ஒன்றும் கடவுள் தண்டித்து விட்டதில்லை.தெய்வம் நின்று கேட்கும் என்று சொல்லித் தப்பித்துக் கொள்கிறோம்.தவறு செய்துவிட்டு தன் வாழ்நாளில் அதற்குரிய பலனை அனுபவிக்காததற்கு ஒரு காரணம் சொல்வதற்காக அடுத்த ஜன்மத்தில் அனுபவிப்பான் என்று சொல்லி ஆனந்தப்படும் உலகமிது .கையாலாகத்தனம் என்று தான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது.//
// மனித சுபாவத்திலே ஒரு பகுதிக்குப் பிறர் செய்கிற தவறுகளை எடுத்துச்சொல்லி ஆனந்தப்படுகிற ஒரு கர்வம் அதிகமாகவே இருக்கிறது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது//
// அநித்தியமான மனிதன் நித்தியத்துவத்தை விரும்புகிறான்//
// சிருஷ்டி தத்துவம் மிகவும் விசித்திரமானது .மனிதன் தான் சிருஷ்டித்துக்கொண்டு ,சௌகரியம் என்று ஏற்றுக்கொண்ட ஒரு விஷயத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறானோ என்று எண்ணும் போது ஆச்சரியமாகவே இருக்கிறது//
// பணத்தை ஒரு லக்ஷியமாக எண்ணாமல் வாழ்க்கை நடத்த முயலுகிறவனை உலகம் பைத்தியக்காரன் என்றுதான் மதிக்கிறது.வாழத்தெரியதவன் என்றும் சொல்லி விடுகிறது.பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது.சிலசமயம் சிந்திக்கும்போது இதை கலியுகம் என்று சொல்வதற்குப் பதில் பணயுகம்,பொருளாதார யுகம் என்று சொல்லலாம் என்றுதோன்றுகிறது.அடிமைப்பட்டுக் கிடப்பதில் வருத்தத்துக்குப் பதில் ஆனந்தத்தையே மனிதன் காணத் தொடங்கி விட்டால் அதை என்னவென்று சொல்வது?//
// பணக்கார்ர்களிடம் பணம் சேருகிறது ஏழையிடம் பணம் படிப்படியாகப் பணம் குறைகிறது .கண்கூடாக இது தினமும் காண்கிற விஷயம்தான். பணக்காரனுக்கு உதவ பாங்குகள் முதல் தனிமனிதர்கள் வரையில் எல்லோருமே தயாராக இருக்கிறார்கள் .உறவினர்கள் போட்டி போட்டுக்கொண்டு,இந்த லாபமில்லாத உதவியை ஒரு ஏழை உறவினனுக்குச் செய்தால் ,அந்த ஏழை உறவினன் ஏழைமை நீங்காவிட்டாலும் ,அன்புடனும்,ஆதரவுடனும் ஒரு கவலை நீங்கியிருக்க மாட்டானோ? உதவி தேவையாகிற இடத்திலே ,உதவி தேவைப்படுகிற காலத்திலே கிடைக்கக் கூடாது என்பதுதான்
ஈசுவர சிருஷ்டியின் நியதியா?//
ஈசுவர சிருஷ்டியின் நியதியா?//
தெரியாத ஒரு விஷயத்தை மறைப்பதற்காக" சில பேருக்கு அப்படித்தான் சேரும் ,தொட்டதெல்லாம் போன னாகும் ஜாதகம் " என்றுசொல்லி தப்பித்துக் கொள்ள வேண்டியதுதான்.பர்ஸைத் தொட்டால் தொட்ட மாத்திரத்திலேயே பர்ஸைக் காலியாக்கி விடுகிற ஜாதகம் அதற்கென்ன செய்வது?//
K S Radhakrishnan
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
25/12/2018
----------------------------------------------------------------------------------------------------------------
"நினைவில் நின்ற கவிதைகள்"- எம்.கோபாலகிருஷ்ணன்
நவம்பர்(2018)-
"நினைவில் நின்ற கவிதைகள் "
எம்.கோபாலகிருஷ்ணன்
-கவிதைகளும் வாசிப்பனுபவமும் சார்ந்த நூல்-
பக்கங்கள் 166 விலை 160
ISBN 978-81-940988-4-3
-----------------------------------------------------------------------------------------------------ISBN 978-81-940988-4-3
அழகழகான, ஆழமான, எந்தக் காலத்திலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் கவிதைகளை அடையாளம் காட்ட வேண்டும். கவிதைகள் குறித்த உரையாடலுக்கு பங்களிக்கும் விதமாய் நூல் அமைய வேண்டும். அந்தப் புத்தகம்தான் இந்தப் புத்தகம்.
சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கும் "நினைவில் நின்ற கவிதைகள்" புக்கிலிருந்து...
கல்யாண்ஜியின் (அதாங்க, நம்ப வண்ணதாசன்தான்) வாழ்வின் எளிய அற்புதங்களை உணர்த்தும் ஒரு அழகான கவிதை...(இதில் குறிப்பிட்ட ஒரு இரண்டு வரி எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் அதை அப்படிச் சொல்லத் தெரிய வேண்டுமே...! )
(கூட ரெண்டு வரி எனக்கு மட்டும் பிடிக்கும்)
கவித....கவித....
******************
தாத்தாதான் எங்களுக்கு
நிறைய காட்டினார்
பாபநாசத்து ஆற்று மீன்கள் முதல்
நெல்லையப்பர் கோயில் யானை வரை.
பொருட்காட்சியும்
தசராச் சப்பரமும்
ஆனித் திருவிழாத் தேரும்
அம்மா காட்டியவை
பாம்பன் பாலம், பாப்பநாதசாமி
கன்யாகுமரிக் கடல்
எல்லாம்
காட்டியது ஆச்சி
எதுவும் காட்டாமல்
அப்பா எங்களை
அடைத்துப் போட்டது
புத்தகங்களுக்குள்.
இவள் வந்து காட்டியது
இருக்கவே இருக்கிறது
மூத்த பெண்ணுக்கு
மலைகளைக் காட்டினோம்
இவன் பார்க்க
இப்போது
திராட்சைத் தோட்டம்,
கட்டுபடியாவதைக்
காட்டும் வாழ்க்கை
விட்டு விடுதலையாவது
அவரவர் வேட்கை.
*************************
நன்றி Ushadeepan Sruthi Ramani,
சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கும் "நினைவில் நின்ற கவிதைகள்" புக்கிலிருந்து...
கல்யாண்ஜியின் (அதாங்க, நம்ப வண்ணதாசன்தான்) வாழ்வின் எளிய அற்புதங்களை உணர்த்தும் ஒரு அழகான கவிதை...(இதில் குறிப்பிட்ட ஒரு இரண்டு வரி எல்லோருக்குமே பிடிக்கும். ஆனால் அதை அப்படிச் சொல்லத் தெரிய வேண்டுமே...! )
(கூட ரெண்டு வரி எனக்கு மட்டும் பிடிக்கும்)
கவித....கவித....
******************
தாத்தாதான் எங்களுக்கு
நிறைய காட்டினார்
பாபநாசத்து ஆற்று மீன்கள் முதல்
நெல்லையப்பர் கோயில் யானை வரை.
பொருட்காட்சியும்
தசராச் சப்பரமும்
ஆனித் திருவிழாத் தேரும்
அம்மா காட்டியவை
பாம்பன் பாலம், பாப்பநாதசாமி
கன்யாகுமரிக் கடல்
எல்லாம்
காட்டியது ஆச்சி
எதுவும் காட்டாமல்
அப்பா எங்களை
அடைத்துப் போட்டது
புத்தகங்களுக்குள்.
இவள் வந்து காட்டியது
இருக்கவே இருக்கிறது
மூத்த பெண்ணுக்கு
மலைகளைக் காட்டினோம்
இவன் பார்க்க
இப்போது
திராட்சைத் தோட்டம்,
கட்டுபடியாவதைக்
காட்டும் வாழ்க்கை
விட்டு விடுதலையாவது
அவரவர் வேட்கை.
*************************
நன்றி Ushadeepan Sruthi Ramani,
-------------------------------------------------------------------------------------------------------
#நினைவில் நின்ற கவிதைகள்
கவிதைக் கடலைக்
கண்டேன்.
ஆரவாரத்துடன்
இறங்கி
மீன்பிடித்தல்
கற்றேன்.
கற்றது கைம்மண்
அளவு
கற்க நினைப்பதோ
இமயமலை அளவு.
கவிதைகள்
படிக்கப் படிக்க
பொழுது
தெரியவில்லை.
காப்பியை மறந்தேன் சாப்பாட்டை மறந்தேன்,
ஏன் மனைவியையே மறந்து விட்டேன்.
வாழ்த்துக்கள்,
மீண்டும்
வேண்டும் கவிதைப் படைப்புக்கள்.
நன்றி திரு.M.R.Venkateswaran
-------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர்
மையம் வெளியீடாக வந்திருக்கும்
"நினைவில் நின்ற கவிதைகள்"
"நினைவில் நின்ற கவிதைகள்"
- எம்.கோபாலகிருஷ்ணன்.
// நான் வாசிக்க
நேர்ந்த கவிதைகளை என் நினைவில் இருந்தபடி எழுதினேன்.பிறகு தேவைப்படும் இடங்களில்
தேவையான தொகுப்புகளிலிருந்து குறிப்பிட்ட கவிதைகளை எடுத்துக்கொண்டேன்.
இதில் தர
வரிசை ஏதுமில்லை. சில மூத்த கவிஞர்களின் கவிதைகளுக்கு முன்னால் காலத்தால் பிந்தைய
கவிஞர்களின் கவிதைகள் இடம்பெற்றிருக்கலாம்.சில கவிஞர்களின் பெயர்கள் விடுபட்டும்
இருக்கலாம்.முடிநத வரையிலும் அவ்வாறன்றி எழுதியிருக்கிறேன்.//
என்று அவர் தன்
முன்னுரையில் சொல்லி விட்டாலும் விடுபட்ட பல நல்ல கவிதைகளை எழுதிய கவிஞர்களை '
அச்சச்சோ விட்டுட்டாரே!'
என நினைக்கத்தோன்றியது.(
இரண்டாம் பாகம் வெளிவருமோ !?)
இதுவரை நானறியாத
நல்ல கவிதைகளை/ கவிஞர்களை அறிந்து கொண்டேன்.
* பாதசாரி
* சி.மணி
* ஸ்ரீநேசன்
* சு.வில்வரத்னம்
* சேரன்
*இரா.மீனாட்சி
* சுகந்தி
சுப்ரமணியன்
* திரிசடை
* தென்றல்(!?)
*ரமேஷ் பிரேம்
* குணா கந்தசாமி
*தீபு ஹரி
* பாலை நிலவன்.
* முகுந்த்
நாகராஜன்.
புத்தகம் கிடைத்த
தினத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக படித்துக்கொண்டிருக்கிறேன்
மெல்லிசை
கேட்டபடி ஐஸ்க்ரீமை மெதுவாய் ...மிக மெதுவாய் சுவைத்து சாப்பிடுகிறார் போன்ற
நிதானத்துடன்...
கல்யாண்ஜியின்
கவிதைகளை
கையெழுத்துப்பிரதியாகவே
படித்ததை,
கலாப்ரியாவின்
பிரபல கவிதைகளை,
ஞானக்கூத்தனின்
சைக்கிள் கமலத்தை
நினைவிலிருந்து
சிலாகித்து எழுதியிருக்கிறார்.
// முட்ட முட்ட
பால்
குடிக்கின்றன
நீலக்குழல்
விளக்கில்
விட்டில்
பூச்சிகள் //
என்கிற
பாலகுமாரனின் கவிதையை,( யாருக்குத்தான்
மறக்கும்!?)
விரிந்து
கிடக்கும் கவிதைவெளி..இன்னாருக்கு இது பிடிக்கும்; புரியும் என்பதை
எளிதில்
வகைப்படுத்த முடியாது.இருந்தும் எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடுகிற
கவிதைகள் அத்தனையும் எளிய வாசகியான எனக்குப் பிடித்திருக்கின்றன.( புரிகின்றன.)
இதுவே இந்நூலுக்கான சிறப்பென நினைக்கிறேன்.
வாழ்த்துகள்.
*
நினைவிலிருந்து
ஏகப்பட்ட கவிதைகளை சொல்லக்கூடிய நபர்களில் ஒருவராக எழுத்தாளர் ஜெயமோகனை
சொல்கிறார்.
( எனக்கு எத்தனை
கவிதைகளை மனப்பாடமாக சொல்லத் தெரியுமென நினைக்கத் தொடங்கி விட்டேன்.)😊
எனக்கும்
எனக்கும்
தமிழ்தான் மூச்சு
ஆனால் அதனை
பிறர்மேல்
விடமாட்டேன்.
- ஞானக்கூத்தன்.
***********************************
கையில் அள்ளிய
நீர்
அள்ளி,
கைப்பள்ளத்தில்
தேக்கிய நீர்
நதிக்கு
அந்நியமாச்சு.
இது நிச்சலனம்.
ஆகாயம்
அலைபுரளும் அதில்.
கைநீரைக்
கவிழ்த்தேன்
போகும் நதியில்
எது என் நீர்?
- சுகுமாரன்.
***********************************
மழையின்
பெரிய புத்தகத்தை
யார் பிரித்துப்
படித்துக்கொண்டிருக்கிறார்கள்
படிக்கட்டில்
நீர்
வழிந்து
கொண்டிருக்கிறது.
- தேவ தச்சன்.
**********************************
கருகாத
தவிப்புகள் கூடி
நாவின் திரி
பிளந்து
அணையாது எரியும்
ஒரு பெயர் நீ!
- பிரமிள்.
***********************************
பெண்ணைக் கண்டு
பேரிரைச்சலிடுகிறாயே
மனமே!
பெண் யார்?
பெற்றுக்கொண்டாள்
மகள்.
பெறாத வரையில்
பிரகாசமான இருள்.
வேறொன்றுமில்லை.
- பிரான்சிஸ்
கிருபா.
***********************************
கைகளற்ற ஒருவன்
தன் காலால்
திருவள்ளுவரை
வரைந்து காட்டி விட்டான்.
இதில் ஒரு
சுவாரஸ்யம் கிட்டி விட்டது
எனவே
அவனுக்கு நமது
நாளிதழ்களில்
ஒரு போட்டோவும்
கிடைத்து விட்டது.
சுவாரஸ்யமற்ற
முடவர்கள்
சுவாரஸ்யமற்ற
குருடர்கள்
சுவாரஸ்யமற்ற
ஊமைகள்
மூத்திர
சந்துகளில்
ஒளிந்து
கொள்கிறார்கள்.
- இசை.
***********************************
பூச்சேர்ந்து
தான் மணக்கும்
சுகந்த வைபவம்
நார் கண்ட
சொப்பனம்
பூக்காம்பு
பற்றியதே
கிட்டாத
பாக்கியம்.
சூடிய சுந்தரி
காரிருள்
கூந்தலில்
சூடிய அனுபவம்
மற்றொரு
மகத்துவம்.
- மகுடேசுவரன்.
***********************************
Jeeva Nanthan அவர்கள் வரைந்த
அட்டைப்படம் - ஓவியம் ☝ super.
Saraswathi Gayathri
December 12, 2018
-------------------------------------------------------------------------------------------------------
Suresh Venkatadri updated his status.
December 5, 2018 ·
சென்ற
நூற்றாண்டின் 80களில் தமிழ்க்
கவிதை படிக்கத் துவங்கிய என் போன்ற பலருக்கு,சுஜாதா, கணையாழியின் கடைசிப்பக்கங்களில்
அறிமுகப்படுத்திய கவிதைகள் தாம் ஒரு Launching Pad. பின் கணையாழிக் கவிதைகள் என்ற ஒரு நூல்
வெளியானது.கணையாழி இதழில் வந்த சிறந்த கவிதைகள் அதில் இருந்தன.ஒரு பாராயணப்
புத்தகம் போல் அதை வைத்திருந்தோம்.அதற்கு நீண்ட காலத்துக்குப் பின் வந்த ஒரு நல்ல
கவிதை அறிமுக நூல்,ஜெயமோகனின்,உள்ளுணர்வின் தடத்தில் எனும் நூல்.அதன் பின்
இப்போது,கோவை சிறுவாணி
வாசகர் மையம் கொண்டுவந்திருக்கும்,எம்.கோபாலகிருஷ்ணனின்,'நினைவில் நின்ற கவிதைகள்' முக்கியமான ஒன்றாக வந்திருக்கிறது.
புதிதாக
தமிழின் நவீனக் கவிதைக்குள் வருபவர்களுக்கு ஒரு நல்ல அறிமுக நூலாகவும்,மற்றவர்களுக்கு ஒரு நல்ல இனிமையான நினைவு
மீட்டலையும் அளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.கவிதையை,கவிஞர்கள்,கவிதை இயக்கங்கள் கருத்தாக்கங்கள்,என்ற பல அலகுகளின் அடிப்படையில் பகுத்து,தன் ரசனயையும் சேர்த்து,மிக அழகாக எழுதியிருக்கிறார்
கோபால்.
பிரமிளிலிருந்து இன்று எழுதிக்கொண்டிருக்கும் தீபு ஹரி வரை தமிழின் நவீனக்
கவிஞர்களை பற்றி ரசனையோடு பேசும் நூலில் சில பிரபல கவிஞர்களின் பெயர்களோ கவிதைகளோ
இல்லாததும் சற்று வியப்பளிக்கிறது.உதாரணமாக, ஆண்களிில்,ந.பிச்சமூர்த்தி,மயன் ( க.நா.சு.),எஸ்.வைத்தீஸ்வரன், நா.விச்வநாதன்,இளங்கோ கிருஷ்ணன்,லிபி ஆரண்யா.பெண்களில்,கிருஷாங்கினி,பெருந்தேவி.
ஆனால்,அவரது நினைவில் நின்ற கவிதைகள் என்பதால்,இதைக் குறையாகச் சொல்லமுடியாது. இன்று தமிழின்
நவீனக் கவிதைக்குள் நுழையும் ஒரு இளம் வாசகனுக்கு ஒரு கையேடாகவே இதை நான்
பரிந்துரைப்பேன்.
ஒவியர் Jeeva Nanthan அவர்களின் எளிமையான அழகுடன் கூடிய அட்டைப்படமும் அழகு.வாழ்த்துக்கள்,
Murugesan Gopalakrishnan ,Prakash GR..
-------------------------------------------------------------------------------------------------------
S R Viswanathan
December 12, 2018 ·
படித்துக்
கொண்டிருக்கிறேன்.
ஆரம்பமே அசத்தல்.
--------------------------------------------------------------------------------------------------------------------
Subscribe to:
Posts (Atom)
9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026
சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.
-
2019 ஜுன் மாத நூல் "தாகூர் கதைகள்" மகாகவி பாரதியார் மொழிபெயர்ப்பில்... பக்கங்கள் விலை 130 /- I SB...
-
· செப்டம்பர்( 2018) " உருமால் கட்டு" சிறுகதைகள் எழுத்தாளர் சு.வேணுகோபால்- பக்கங்கள் 170 விலை 160 /- ...
-
மார் ச்- 2020 வெளியீடு அர்த்தங்கள் ஆயிரம் -ஆர்.சூடாமணி ( எழுத்தாளர் ஆர்.சூடாமணி எழுதி முதல்முறையாக நூல்வடிவமாகும் 4 குற...





