கோவை புத்தகத் திருவிழா வெளியீடுகள்
நாள் 20.07.2024 மாலை 3.00 மணிக்கு....
நடந்ததும் நடக்கக் கூடியதும்...
சில வரலாறுகள்
சுரேஷ் வெங்கடாத்ரி
பேரிலக்கியங்கள் நம் மனதில் ஒரே சமயத்தில் உருவாக்கும் பேரமைதியையும், வெறுமையையும் மகத்தான ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறுகளும் உருவாக்குகின்றன.
அத்தகைய ஒரு மகத்தான ஆளுமையின் வாழ்க்கை வரலாற்றையும், இந்தத் தேசத்தின் வரலாற்றையும் பேசும் சில நூல்களைப் பற்றிய பார்வைகளே இந்த நூல்.
ரூ180/-
(+40 தபால் செலவு )
பவித்ரா பதிப்பகம்
Gpay 8778924880
Whatsapp 9940985920
வாழ்வைப் புனைவாக்குதல்
- சாதித்தவையும் தவறியவையும்
சுரேஷ் வெங்கடாத்ரி
வாழ்க்கையின் அனுபவங்களை நேரடியாக அறிவதைக் காட்டிலும்,புனைவுகள் மூலம் அறிந்து கொள்வது அவற்றை மேலும் சுவாரஸ்யமானதாகவும்,செறிவானதாகவும் மாற்றுகிறது.ஒரு வாசகனின் மனதில்,அவற்றை அப்படி மாற்றுகையில் நிகழும்,ரசவாதமே அவற்றின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கின்றன.அது ஒரு X Factor எனலாம்.அப்படி வெற்றிபெற்ற அல்லது தோல்வி அடைந்த புனைவுகளைப் பற்றிய எழுத்துக்களே இவை.
ரூ 200/-
(+40 தபால் செலவு )
கோவை புத்தகத் திருவிழா
(ஜூலை 19-28)வெளியீடு
20.07.2024 மாலை 3.00 முதல்...
புனைவை மிஞ்சும் வாழ்க்கைச் சித்திரங்கள்
சுரேஷ் வெங்கடாத்ரி
Truth is Stranger than fiction என்பது அடிக்கடி நிரூபணமாகிக் கொண்டே இருக்கும் ஒரு சொற்றொடர்.ஒரு வாழ்க்கை இப்படியும் அமைய முடியுமா என்று கேள்விக்கு முன் அப்படி அமைந்து கொண்டேதான் இருக்கிறது என்று முகத்தில் அறைந்து பதில் சொல்லிக் கொண்டே இருக்கிறது வாழ்வின் யதார்த்தம்.சமயங்களில் மகிழ்வுறும் வகையில்,பல சமயங்களில் துயருறும் வகையில்..அப்படியமைந்த பல வாழ்க்கைகள் மீதான பார்வைகளே இந்நூல்.
ரூ 120/- (+40 தபால்செலவு)
விளையாட்டில் வாழ்தல்
சுரேஷ் வெங்கடாத்ரி
இந்தியாவில் விளையாட்டு என்றால் அதில் முதலிடம் பெறுவது கிரிக்கெட் தான்... எல்லா சராசரி இந்தியர்களைப் போலவே நானுமொரு பரம கிரிக்கெட் ரசிகன். கூடவே டென்னிஸ் ரசிகனும் கூட. அவ்விளையாட்டுகளில் நான் ரசித்த தருணங்களையும் மனிதர்களையும்,ஓரிரு புத்தகங்களையும் பற்றிய எழுத்துக்களே இந்த நூல்..
ரூ 120/-(+40 தபால்செலவு )
நான்கு நேர்காணல்கள்
சுரேஷ் வெங்கடாத்ரி
ஒரு படைப்பாளி புனைவுகளையும் அபுனைவுகளையும் தாண்டியும் பேச வேண்டித்தான் இருக்கிறது. அவர்களை எழுதத் தூண்டியவை தொடர்ந்து செலுத்தும் விசை,சக படைப்பாளிகள்,என்று ஏராளமான விஷயங்கள் பகிர்ந்துகொள்ள இருக்கின்றன அவர்களிடம்.அதற்கு இம்மாதிரியான நேர்காணல்கள் உதவுகின்றன.இவற்றை வாசிக்கையில் இவற்றிலும் அவர்களின் படைப்பூக்கம் வெளிப்படுவதைக் காணலாம்.
கோவையை தமதாக்கிக் கொண்ட மூன்று எழுத்தாளர்களுடன்,
கோவையைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற அற்புதமான ஒரு புகைப்படக்கலைஞரும் தமது அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.இன்று இதனைக் காண அவர் இல்லை என்பதே ஒரு பெரிய வருத்தம்.
ரூ220/-(+40 தபால் செலவு)
நான் பயணித்த தமிழகம்
சுரேஷ் வெங்கடாத்ரி
இந்தப் பரந்த பூமியில் நமக்கென அமைந்திருப்பது ஒரு சின்னஞ்சிறிய வாழ்விடமே.
'கட்டுப்படியாவதைக் காட்டுவது வாழ்க்கை.விட்டு விடுதலையாவதே அவரவர் வேட்கை' என்றார் கல்யாண்ஜி. அலுவல் ரீதியாகவே தமிழகத்தின் முக்கால் பங்கை சுற்றி பார்க்கும் நல்லூழ் அமைந்தது எனக்கு.
இந்த கட்டுரைகளில்,
குறிப்புகளில் நான் பார்த்ததைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
பார்க்கப் பார்க்க விடுதலையென்பதில்லாமல் இவற்றுடன் பிணைந்து கிடப்பதே போதும் என்றும் தோன்றுகிறது.
ரூ 250/-(+40 தபால் செலவு )
சிறுவாணி வாசகர் மையத்தின் ஜூலை மாதப் புத்தகம்.
ஆதவன் சிறுகதைகள் -மானுட உளவியலின் கலையாக்கம்
சுரேஷ் வெங்கடாத்ரி
வாழ்க்கையின் ஓட்டத்திலிருந்து சற்று விலகி அமர்ந்து வாழ்க்கையைப் பார்க்கும் கலையே ஆதவனின் புனைவுலகம். அதில் கசப்பும் கழிவிரக்கமும் வேடங்களைக் கலைக்க வேண்டும் என்ற பரிதவிப்பும் இருந்தாலும், அடிப்படையில் ஆதவன் வாழ்க்கையை, அதன் ‘ஆரோகண அவரோகணங்களை’ ரசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரசனையால், அதன் அழகுணர்வால், அவர் தன் எழுத்தைக் கொண்டு வாழ்க்கைக்கு ஏற்படுத்தித் தரும் ஒழுங்கு அவரது கதைகளுக்கும் அழகு சேர்க்கிறது.
“என்னுடைய ‘நானை’ இனம் கண்டு கொள்வதற்காக நான் எழுதுவதுண்டு, என்னுடைய
‘நானி’லிருந்து விலகி இளைப்பாறவும் எழுதுவதுண்டு. இந்த இளைப்பாறல் உண்மையிலிருந்து ஒளிதல் அல்ல, வாழ்வின் பரந்துபட்ட தன்மையில், அதன் விசித்திரங்களில், மீண்டும் மீண்டும் திளைக்கும் ஆர்வமேயாகும்.”
ஆதவன் விட்டுச் சென்ற வெற்றிடம் இன்னும் நிறைக்கப்படவில்லை.
ரூ 250/-(+ 40 தபால் செலவு )
தமிழகக் கோவில்களூடே ஒரு உலா
சுரேஷ் வெங்கடாத்ரி
நான் பரம பக்தனல்ல.ஆனால், நம் தமிழகத்தின் பழம் பெரும் கோவில்கள் என்னை எப்போதுமே பரவசம் கொள்ளச் செய்கின்றன.ஒரே சமயத்தில்,அவை என்னை மிகச் சிறியவனாகவும், மிகப்பெரிய ஆகிருதி கொண்டவனாகவும் மாற்றுகின்றன.அப்படிப்பட்ட பெரும் ஆலயங்களின் முன் நான் உணர்ந்தவையே இந்தக் கட்டுரைகள்.
ரூ 180/-(+40 தபால் செலவு)
தொன்மம்,தத்துவம்,
மிகுகற்பனை- ஜெயமோகன் படைப்புலகம்
சுரேஷ் வெங்கடாத்ரி
தமிழின் நவீன இலக்கியப் பரப்பில் அவ்வளவாக பேசப்பட்டிராத,
இந்திய இதிகாசங்கள் தமிழக,வட்டார, நாட்டார் வரலாறுகள்,
தொன்மங்கள், இந்திய மெய்யியலின் கூறுகள்,விவாதங்கள் ஆகியவற்றை புனைவின் பெருவெளிக்குள் கொண்டுவந்ததில் ஜெயமோகனின் பங்கு மிகவும் முக்கியமானது.
அதில் அவர் அடைந்த வெற்றி தோல்விகளை அவரது முக்கியமான படைப்புகளில் சிலவற்றை முன் வைத்துப் ஆராய்கின்றன இந்நூலிலுள்ள கட்டுரைகள்.
ரூ 120/-(+40 தபால் செலவு)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)


.jpeg)
No comments:
Post a Comment