Sunday, December 31, 2023

எட்டாம் ஆண்டுத் துவக்கம்- அறிவிப்பு


அனைவருக்கும்  வணக்கம்.


2017 இதே நாளில் அறிவித்துத் துவக்கப்பட்ட சிறுவாணி வாசகர் மையம் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வாசிப்பை நேசிப்பவர்களை ஒருங்கிணைத்து "மாதம் ஒரு நூல்"எனச் சிறந்த நூல்களைத் தேர்வுசெய்து உறுப்பினர்களுக்கு அனுப்பிவருகிறோம்.

இப்பணியில் எங்களை வழிநடத்திச் செல்லும் ஆலோசகர்கள், எழுத்தாளர்கள்,
உறுப்பினர்கள்,
அச்சகத்தார், பத்திரிகை 
நண்பர்கள், முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.

எட்டாம் ஆண்டுத் துவக்கத்தை முன்னிட்டு மார்ச்-31க்குள் கட்டணத்தைப் புதுப்பிக்கும் உறுப்பினர்களுக்கும்,
புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கும் ஒரு புத்தகம் கூடுதலாக அன்பளிப்பாக அளிக்கவுள்ளோம்.

🙏🙏🙏
தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ்
சிறுவாணி வாசகர் மையம்.
------------------------------------------------





சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச் - 2024 உடன் ஏழாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)

*ஏப்ரல் 2024-மார்ச் 2025 (எட்டாம்) ஆண்டுக்கான 
கட்டணம் ரூ.1800 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-
(தபால் செலவு உட்பட).

தங்கள் ( ஏப்ரல் 2024-மார்ச் 2025) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் -31க்குள் புதுப்பிப்பவர்களுக்கும்,புதிதாக இணைபவர்களுக்கும் வழக்கம்போல் புத்தகஅன்பளிப்பு உண்டு.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 
நன்றி.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ் 

9940985920 whatsapp 
8778924880 Gpay

சிறுவாணி வாசகர்  மையம்.


 

Sunday, December 17, 2023

மழையும் புயலும் -வ.ரா- அக்டோபர்-2023






 வ.ரா.-வின் எழுத்துக்கள் எல்லாம் மனிதனுடைய சிந்தனையைக் கிளறுவனவாகவே அமைந்திருக்கின்றன. அவர் எழுதிய நாவல், நாடகம், அளவற்ற கட்டுரைகள், பத்திரிகைத் தலையங்கம் எதுவாயினும் சரி, குறுகிய நமது முதுகெலும்பை நிமிர்த்தாமல் போகாது.

வ.ரா, புதுமையான பல துறைகளில், ‘முதல் ஏர்’ பிடித்திருக்கிறார். தமிழுக்குப் புதிதான ‘நடைச் சித்திர'த்தை வெற்றியுடன் கையாண்டவர் இவர்தான்.
வ.ரா.-வின் நடை எளிதானது: சக்தியுள்ளது.

 தற்காலத் தமிழ் இலக்கியத்தின் சரித்திரம் எழுதப்படுமானால், அவருடைய கட்டுரைகளுக்கு நிச்சயமாய் அதில் இடம் உண்டு. சிந்தனை செய்பவர்களைப் பற்றிப் பேச்செழுந்தால் வ.ரா-வை மறக்க முடியாது. வசன நடையைப் பற்றி நினைத்தால், வ.ரா-வுக்கு முன்னணியில் ஸ்தானம் கொடுத்தே தீரவேண்டும்.

வ.ரா-தான் நம்முடைய 'பெர்னார்ட் ஷா.'

ந.பிச்சமூர்த்தி





கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....