Monday, October 29, 2018

"தமிழ்க் களஞ்சியம்"--ரசிகமணி டி.கே.சி






நவம்பர்-2017
"தமிழ்க் களஞ்சியம்"--ரசிகமணி டி.கே.சி 
(2004க்குப் பிறகு வெளிவரும் கட்டுரைகள்-)

பக்கங்கள் 160     விலை 150 /-
ISBN 978-81-940780-6-7
*****************************************************************************************
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 8-
தமிழ்க் களஞ்சியம்
- - - - - - - - - - -
ஓர் எழுத்தாளரின் படைப்பையோ ஒரு கவிஞரின் கவிதையையோ ஒரு வாசகர்   வாசிக்கும்போது  'என்னமா எழுதியிருக்கிறார் !' என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படவேண்டும். அந்தப் படைப்பை கவிதையை அந்த வாசகர் ரசித்து அனுபவித்து
'என்னமா எழுதியிருக்கிறார் பாருங்கள் !'
என்று தமது சக இருதயர்களிடம் கூறித்
தமது ரசானுபவத்தைப்பகிர்ந்துகொள்ள
வேண்டும்.

அந்த மாதிரி 'என்னமா எழுதிய' அற்புதமான தமிழ்க் கவிதைகளை 'என்னமா
எழுதியிருக்கிறார்கள் பாருங்கள் !' எனஅழைத்து டி.கே.சி. என்னும் ரசிகமணி
நமக்கு ஊட்டுகின்ற அற்புதம் 'தமிழ்க்களஞ்சியம்' என்ற இந்தப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

39 கட்டுரைகளில் நூற்றுக்கும் மேற்பட்டசிறப்பான கவி மலர்களின் நறுமணத்தை/கவிக்கனிகளின் இன்சுவையை சரளமானநடையில் வெகு இலகுவாக நமக்கு ஊட்டிவிடுகிறார்கள் டி.கே.சி.

1953ல் கல்கியில் வாராவாரம் இடம்பெற்று 2004ல் பாரதி அறநிலையால் புத்தக வடிவம் கொண்டு இப்போது சிறுவாணி வாசகர் மையத்தால் புதிய பதிப்பாக வெளிவந்
துள்ள தமிழ்க் களஞ்சியம் - ஒரு தமிழ்ப்பொக்கிஷம்.

"வைகுந்த நாட்டில் இடம்பிடிக்க
வேண்டும் எனில்
தென்அரங்கர் திருத்தேரின்
வடம்பிடிகக வாருங்கள் !"
எனப் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
மக்களை அழைக்கும் அருமையான பாடல் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

தமிழ்க் கவி அமுதத்தை அருந்த வேண்டு
மெனில் டி.கே.சியின் தமிழ்க் களஞ்சியம்
புத்தகத்தை வாசிக்க வாருங்கள் !
பவித்ரா பதிப்பகத்திற்கும் சிறுவாணி வாசகர் மையத்துக்கும் மனம்
நிறைந்த நன்றி.

திரு.கி.ரா.திருமலையப்பன்)
***************************************************************************************************************
Suresh Venkatadri

கோவை, சிறுவாணி வாசகர் மையத்தின் இந்த மாத,வெளியீடு.தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களை குறித்து ரசிகமணி டி.கே.சி.அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு.நமக்கு தமிழின் நவீன இலக்கிய பரிச்சயம் உள்ள அளவு, மரபு இலக்கியத்தில் இல்லை. இதைப் படித்தாவது, அங்கு நுழைய முடியுமா பார்க்கலாம்.

***************************************************************************************
 ·
நவமாய் உதித்த சிறுவாணி வாசகர்
மையம், இலக்கியத்தின் உச்சி விளிம்பில்
இதயநாதம் எழுப்பிப் பூங்கொத்து வைத்துத்
தேவாரமணி ஓசை ஒலிக்க, இனி இல்லை
மரண பயம் எனக்கூறித் தீண்டாமையைத்
தகர்த்த தக்கர்பாபாவின் வரலாற்றைத்
தமிழ்க் களஞ்சியமாக வழங்கியிருக்கிறது.
சிறந்த பணி தொடர்ந்து மிளிர
வாழ்த்துக்கள் !

**************************************************************************************·



"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா" வெளியீடு 2017






அக்டோபர்-2017
"தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா"
தி.சுபாஷிணி
(தக்கர்பாபா பற்றித் தமிழில் வெளிவரும் முதல்நூல்)


























               2017,அக்டோபர் 1,2 தேதிகளில் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் "யாதுமாகி நின்றாய்"-தமிழ்நாடு,தமிழர், நம் காந்தி என்ற பெயரில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
               கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,லீட் இந்தியா,டெல்லி காந்தி அருங்காட்சியகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் தமிழர்களுக்கும் காந்திக்குமான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களும் நிகழ்வுகளும் அமைந்திருந்தன.
அக்டோபர் 1 காலை புகைப்படக் கண்காட்சியை சாந்தி ஆசிரமம் Dr. வினிஅறம் திறந்துவைக்க, ஆனைமலை ரங்கநாதன், காந்தி டுடே சுநில் கிருஷ்ணன், தி.சுபாஷிணி திருமலை சிறப்புஅழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு  உரையாற்றினர்.
மாலையில் "மைத்ரீம் பஜத" இசைநிகழ்ச்சியில் MS சுப்புலஷ்மி அவர்களின் கொள்ளுப் பேத்தி சௌந்தர்யா காந்தி பாடல்களைப் பாடினார்.

அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாலையில் காந்தியின் ஆப்த நண்பர் தக்கர்பாபா பற்றி தமிழில் வெளிவரும் "தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா"நூலை  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வெளியிட "Raac"அமைப்பின் செயலர் R.ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.

TD திருமலை அவர்களின் மகளும் எழுத்தாளருமான தி.சுபாஷிணி எழுதிய இந்நூலை ,கோவை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ளது. நாஞ்சில்நாடன்,விப்ரநாராயணன் சிறப்புரையாற்ற தி.சுபாஷிணி ஏற்புரை வழங்கினார்.

தொடர்ந்து ஏ.கே.செட்டியார் தயாரித்த "காந்தி"ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இரு நாட்கள் நடந்த கண்காட்சியை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


அனைவருக்கும் கண்காட்சி பற்றிய "யாதுமாகி நின்றாய்"என்ற நூல் வழங்கப்பட்டது.

மேலும் கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்களின் பின்னணி 
குறித்த "Gandhi expo" app உருவாக்கப்பட்டுள்ளது.இந்த App ஐ இலவசமாக டவுன்லோட்செய்துகொள்ளலாம்.

"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா" தி.சுபாஷிணி(5)



.அக்டோபர்-2017

"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா" தி.சுபாஷிணி 

தக்கர்பாபா பற்றித் தமிழில் வெளிவரும் முதல்நூல் 


பக்கங்கள்  210   விலை 160 /-
ISBN 978-81-940780-4-3
**********************************************************************************
சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடு 7-
தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா

அடகென்று சொல்லி அங்கவையும்
சங்கவையும் அமுதத்தை இட்டதாக அவ்வையார் போற்றினார்.

'வாழ்க்கை வரலாறு'என்று சாதாரணமாகக் குறிப்பிட்டு ஒரு மகாபுருஷரின் திவ்விய சரிதையைத் தமிழில் முதன்முதலாக எழுத்தில் வடித்திருக்கிறார் மதிப்பிற்குரிய சகோதரி சுபாஷிணி.

படிக்கப் படிக்கப் பரவசமும் இப்படிப்பட்ட
மகானைப் பற்றிய விவரங்களை இத்தனைநாட்கள் அறியாமல் இருந்தேனே என்றவெட்கமும் அடைந்தேன்.

'எற்றே இவர்க்கு நாம் என்று' காந்திஜியேவியந்த மாமனிதர். அவருடைய வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவமும் அவர்
புரிந்த ஒவ்வொரு சேவையும் மனிதகுலம் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டியவை.

அவரது நாட்குறிப்புகளும் அவர் தொடர்புகொண்ட மாந்தர்களின் விவரங்களும் வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வை என்னால் விவரிக்க முடியவில்லை. பின்னிணைப்பாகத் திரு. டி.டி. திருமலை,லட்சுமண அய்யர் முதலியவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளது மிகவும் பயனுள்ளது.

நூல்ஆசிரியைக்கும் பவித்ரா பதிப்பகத்தார்க்கும் சிறுவாணி வாசகர் மையத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.


திரு.கி.ரா.திருமலையப்பன்.
************************************************************************************************************************
சிறுவாணி வாசகர் மையத்தின் அக்டோபர் மாத நூல் இதுவரை அறியப்படாத காந்திய ஆளுமையைப் பற்றியது.

காந்தியின் ஆப்தநண்பர் திரு.தக்கர்பாபா பற்றி தமிழில் முதல்முறையாக வெளிவரும் வாழ்க்கை வரலாற்றுநூலின் ஆசிரியர் எழுத்தாளர் தி.சுபாஷிணி அவர்கள்.


 நன்றி-சிறுவாணி வாசகர் மையம் .
**************************************************************************************************************************

காந்தியப்பேரொளியால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் அகிம்சை வழியில் போராடியவர்கள் விடுதலைபெற்றபின் நாட்டின் நிர்மாணப்பணிகளில் சில தலைவர்கள் பதவியில் அமர்ந்து நாட்டின்  தொழில், வேளாண்மை, மின்உற்பத்தி, போக்குவரத்து வசதி போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முனைந்தார்கள்.வேறுசிலர் அரசுப்பதவிகளை மறுத்து சமூக சீர்திருத்தம், மதநல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, கல்வி வளர்ச்சி ,கிராம வளர்ச்சி போன்ற காந்தியப்பணிகளைத்தொடர்ந்தார்கள்.

வினோபாபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கமலாதேவி, தக்கர் பாபா போன்றவர்களைப்பற்றி வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

தக்கர்பாபா தீண்டாமை ஒழிப்புப்பணிகளில் காந்தியடிகளையே பொறாமைப்படவைத்தவர்.
அவருடைய வாழ்வையும் பணிகளையும் விவரிக்கும் 'தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா ' நூலினை காந்தியத்தொண்டர் T.D.திருமலையின் மகள் தி.சுபாஷிணி சிறப்பாக எழுதியுள்ளார்.சிறுவாணி வாசகர் மையத்திற்காக,  பவித்ரா பதிப்பகம் 
வெளியிட்டுள்ளது.

பக்கங்கள் 208.விலை ரூ160/-

பஞ்சாப் லோஹனா ராஜ பரம்பரையினர் குஜராத்திற்குக் குடிபெயர்ந்து பவநகரில் எளிய வாழ்வு வாழ்ந்தவர்கள்.

விட்தல்தாஸ் தக்கர் மூலிபா மகன் அம்ரித்லால் விட்தல்தாஸ் தக்கர்பாபா 29-11-1869 அன்று பிறந்தார்.சிவில் என்ஞினீயங் டிப்ளமா படித்து1899இல் கிழக்கு ஆப்ரிக்கா உகாண்டாவில் ரயில்பாதை அமைக்கும் பணியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து 1903 இல் இந்தியா திரும்பி சஸ்லி எனுமிடத்தில் அரசுப் பொறியாளரானார்.1906 இல் பம்பாய் முனிசிபாலிட்டியில் ரயில்வே இன்ஸ்பெக்டரானார்.1914 இல் வேலையைவிட்டுவிட்டு இந்திய ஊழியர் சங்க த்தில் உறுப்பினராகி கோகலே தலைமையேற்றார்.காந்தியடிகள் சந்திப்பிற்குப்பின் 1932 இல் ஹரிஜன சேவா சங்கச் செயலாளரானார்.வாழ்நாள் முழுதும் ஒடுக்கப்பட்டோர் உயர்விற்காகவும், தீண்டாமை ஒழிப்பிலும் முழுமையாக ஈடுபட்ட தக்கர்பாபா நிறுவியதே தி.நகர் தக்கர்பாபா வித்யாலயா ஹரிஜன மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சிநிலையம். காந்தியடிகள் 1946 இல் அடிக்கல் நாட்டினார்.தக்கர்பாபாவின் பணிகளை எழுதுவது புத்தகத்தையே மீண்டும் எழுதுவதாகும்.

1951 இல் 82 ஆம் வயதில் மறைந்தார்.
Ilango krishnan











OM SAKTHI -Magazine
July-2017




சிறுவாணி வாசகர் மையம்
தன் முதல் வெளியீடாக
நாஞ்சில் நாடனின்
நவம்
என்னும் புத்தம் புதிய
படைப்பை அளிக்கிறது.
அடுத்தடுத்த பதிப்புகளாக
அசோகமித்திரன் அவர்களின்
படைப்புக்கள்!
பின்
லா.ச.ரா
சிதம்பர சுப்ரமணியன்
என ஆழமான அருமையான
படைப்பாளிகளின் அரிதான
படைப்புக்கள்!
எனவே நண்பர்களே
ஆண்டு சந்தா செலுத்தி
நல்ல புத்தகங்களை
மாதம் ஒன்றாகப் பெறுங்கள்.!
உங்கள் நண்பர்களுக்கும்
பரிசளிக்கலாம்.

தி.சுபாஷிணி

ஜி.ஆர்.பிரகாஷ்

"இனி இல்லை மரண பயம்"


செப்டம்பர்-2017
"இனி இல்லை மரண பயம்"  
சந்தியா நடராஜன் 
( மரணம் பற்றிய தொகுப்பு-)

பக்கங்கள்  112   விலை 100 /-
**************************************************************
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 6.இனி இல்லை மரணபயம்...
- - - - - - - - - - - - - - - - -
மனிதர்களை எத்தனையோ பயங்கள் ஆட்டிப்படைக்கின்றன. ஒரு திரைப்படத்தில்கதாநாயகன், தனக்கு அதிலே பயம், இதிலேபயம் என்று ஏகப்பட்ட பயங்களை விவரிப்பார்.

ஆங்கில மொழியில் அந்த ஃபோபியா,
இந்த ஃபோபியா என ஒவ்வொரு பயத்திற்கும் தனித்தனிப் பெயர் இருக்கிறது.இந்த எல்லாப் பயங்களிலும் தலைசிறந்ததுமரண பயம்தான்.

அருளாளர்கள், மகான்களைத் தவிர்த்து, அரசர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளில் ஆரம்பித்துச் சாமானியர்கள் வரை மரணபயத்திற்கு வசப்படாதார் யார்?

ஆனால், மரணம் என்பது நிச்சயமானது,
தவிர்க்கமுடியாதது, எனவே மரணத்தை
நினைத்து பயப்படவேண்டியதில்லை என்பதை ஆதாரங்கள், உதாரணங்கள், அறிஞர்கள் மற்றும் மகான்களின் அறிவுரைகளோடு எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

"இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்,
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலையலாம்"
என சிம்பிளாக ஜஸ்ட் லைக் தட் கல்யாண்ஜி கூறும் கவிதை,

"மரணம் என்பது என்றோ வர இருக்கும் நம் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெறலாம்" என்னும் ஆசிரியர் குறிப்புடன் இந்த நூலும் அழகாக நிறைவு பெறுகிறது.

"இருப்பதற்காக வருகிறோம்,
இல்லாமலே போகிறோம்"
என்ற வரிகள் ( நகுலன் எழுதியதுதானே? )
நினைவுக்கு வருகின்றன.

மரணபயம் நம்மை இல்லாமல் போக்கிவிடும். எதற்காக வந்தோம் என்பதை உணர்ந்து செயலாற்றினால் வரலாற்றில் இடம்பெறலாமே.

"நமக்கினி பயமேது - தில்லை
நடராஜன் அருள் இருக்கும்போது..."
என்ற பிரபலமான கீர்த்தனையை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம்.
"சந்தியா நடராஜனின்
இந்த நூல் இருக்கும்போது
நமக்கினி மரணபயம் ஏது ?"என நாம் திடம் பெறலாம்.

பாராட்டுக்கள்.

( ராஜாஜியின் "குறையொன்றும் இல்லை.."பாடலில் "கலிநாளுக்கிரங்கி கல்லிலேஇறங்கி..." என்ற வரிகளில் குறிப்பிடும் வரலாறு என்னவென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ் ! )     நன்றி.

திரு.கி.ரா.திருமலையப்பன்
*******************************************************************************************************************************

"தேவார மணி"- ராய. சொ(4)



ஆகஸ்ட்-2017 
"தேவார மணி" -
தமிழ்க் கடல் ராய. சொ. 

(1953 க்குப் பிறகு மறுபதிப்பு)

பக்கங்கள்  128   விலை 100 /-
ISBN 978-81-940780-3-6
*********************************************************************************************************** 

சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடு 5 -தேவார மணி

        அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் பாடிப் பரமனைத் துதித்த ஆயிரக்கணக்கான
தேவாரப் பாடல்களில் நமக்குக் கிடைத்தவை 8239. அவை அத்தனையையும்
கற்றுத் துறைபோக இயலாத என் போன்றோர்க்கு உதவும் அருள்நோக்கோடு
தமிழ்க்கடல் ராய.சொ. தொகுத்தளித்த 300 பாடல்களின் திரட்டை நாஞ்சில்நாடனின் தூண்டுதலால் பவித்ரா பதிப்பகம் வெளியிட்டுச் சிறுவாணி வாசகர் மையம் வழங்கியுள்ள சிறந்த புத்தகம்.

தேவாரத்திற்கு விமர்சனம் ஏது ? எங்கெல்லாம் தித்திப்பு தூக்கலாக இருக்கிறது என்று
எடுத்துக்காட்டுவது  கூட இயலாத காரியம்தான்!

"மாசில் வீணையும்...",
"விறகில்த் தீயினன்..."
போன்ற அற்புதப் பாடல்கள் அடிக்கடி
கேட்டு மனதில் பதிந்தவை.

"மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும் மைமிடற்றன்,
ஆயவன் ஆகியொர் அந்தரமும்அவன் என்றுவ ரையாகம்
தீயவன், நீரவன், பூமியவன்,திரு நாரையூர்தன்னில்
மேயவ னைத் தொழு வார் அவர் மேல்வினை ஆயின வீடுமே."

"எல்லாத் தெய்வங்களும் ஒன்றே. ஏகன்அநேகன். அந்த ஒன்று பரம்பொருளைத்
தொழுது வினை யாவற்றையும் அறுத்துக்கொள்ளுங்கள்" என்று வழிகாட்டுகிறது
அருமையான இந்தத் தேவாரமணி.

'காமரம்' என்றால் 'இசை' என்று கற்பிக்
கிறது இன்னொரு பாடல். (68 ).
"ஒருமுழம் உள்ள குட்டம் ( 89 )" எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என எச்சரிக்கிறது.
"கல்நெடுங் காலம் வெதும்பி" னாலும்(49)
கலங்கவேண்டாமென அபயக்கரம் நீள்கிறது.
"விண்ணிடைத் தருமராசன் வேண்டினால்
விலக்குவார் யார் ? - விடை தருகிறது 96.

வாசித்துக்கொண்டே இருக்கிறேன்,
நன்றியுடன்.
ஏடு பெயர்த்து எழுதியபோது ஏற்பட்ட பிழைகளை ராய. சொ. சரிசெய்திருக்கிறார். "இக்குறைபாட்டைச் சரிசெய்யவில்லையானால் நூலாசிரியர்க்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்தவர்கள் ஆகமாட்டோம்" என்கிறார் அவர்.

ரசிகமணியும்இதே பணியைத்தான் மேற்கொண்டார்.
Great men think alike.

திரு.கி.ரா.திருமலையப்பன்
***************************************************************************************************************************

"பூங்கொத்து" அசோகமித்திரன்- ஜூலை-2017 -(3)









ஜூலை-2017  -
"பூங்கொத்து"  
அசோகமித்திரன்
(-அவர் மறைவுக்கு சில நாட்கள் முன்பாக மையத்தின் நோக்கம் கருதி மனமுவந்து அளித்த இதுவரை நூல் வடிவில் வெளிவராத கட்டுரைகள் )

பக்கங்கள்  176  விலை 140 /-

ISBN 978-81-940780-2-9

****************************************************************************************************
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 4.
பூங்கொத்து

இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் -
அவரே தேர்ந்தெடுத்து, தலைப்பும் தந்து,
பவித்ராவுக்கு வழங்கி, சிறுவாணி வாசகர் மையம் நமக்கு அளித்த கட்டுரைத் தொகுப்பு.
அறிமுக உரையில் ஞாநி "முதல் வாசிப்பில் அசோகமித்திரனின் படைப்புகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. மறுமுறை வாசிக்கும்போதுதான் அவற்றின் சிறப்புகள் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கின்றன
என எழுதியிருக்கிறார். ஏன் அப்படி என்று யோசித்தபோது, ஒரு பதிவில் கி.ரா. இப்படிக் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது :-

"எழுத்தாளர்களும் ஒரு வகையில் துர்வாசர்கள்தாம். சபலம், கர்வம், அகம்பாவம், அக்கரமம் எல்லாமே இவர்களிடம் உண்டு. இதே
சமயம் பசுப்போல குணவான்களும் இருக்கிறார்கள்."

அசோகமித்திரன் பசுப்போல குணவான். கோபத்தைக் காட்டமாட்டார், லேசா முகத்தைச் சுளிப்பார். ஓங்கி மண்டையில் குட்டமாட்டார், சின்னதா, செல்லமா இடுப்பில் நிமிண்டுவார். குலுங்கக் குலுங்க நம்மைச்
சிரிக்கவைகக மாட்டார், உதட்டோரம் ஒருசிறுநகை அரும்பச் செய்வார்.
அந்தப் பாணியில் அவர் எழுதிய கட்டுரைகள்.
"தேவ் ஆனந்த்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குகொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது,முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லைஆனால் அவர் எழுதிய புத்தகத்தில் ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறை கூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை."
என எழுதும் அசோகமித்திரனின் இயல்பும்அதுதான் என்பதை இந்தக் கட்டுரைகள்நிரூபிக்கின்றன.

புத்தகங்கள், எழுத்தாளர்கள், திரைப்படங்கள்,
அந்தக்காலச் சென்னை, சிங்கம் ஜெயகாந்தன் எனத் தாம் பார்த்த, கேட்ட, படித்த, சிந்தித்தவற்றையெல்லாம் சரளமாகக் கூறிக்கொண்டே போகிறார்.
நன்று,

திரு.கி.ரா.திருமலையப்பன்)

****************************************************************************************************
Suresh Venkatadri

July 24, 2017

"பிற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி அவர் மெல்லிய குரலில்தான், சொல்வார்.தான் விமர்சகன் அல்ல என்று அவர் திரும்பத் திரும்ப கூறினாலும், அவருடைய அபிப்ராயங்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு.
நகுலன் ஒரு கவிதை கூட எழுதினார்:

கநாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக வராது.
கவிதையோ படு அபத்தம்.
அது சரி. அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?

க.நா சு, பற்றி அசோகமித்திரன்.கோவை சிறுவாணி வாசகர் மையம், வெளியிட்டிருக்கும், "பூங்கொத்து " நூலிலிருந்து. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. முந்தாநாள் புத்தகம் கையில் கிடைத்தது. சரி சும்மா ஓரிரண்டு கட்டுரைகளை வாசிக்கலாம் என்று தொடங்கினேன். ஆனால், நூலிள்ள , 39 கட்டுரைகளையும், வாசிக்காமல், வைக்க முடியவில்லை. அவ்வளவு, சுவாரசியம், எளிமை, கூறிய நகைச்சுவை, உள்பொதிந்த சோகம் என்று,ஒரு அற்புதமான கலவை. 

சிறுவாணி வாசகர் மையத்துக்கும், பவித்ரா பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.

****************************************************************************************************
Akila Alexander
அன்றொருநாள் அசோகமித்திரன் ...
ஹிந்து லிட் ஃபெஸ்டிவலில் பார்க்க நினைத்து இயலாமல் போயிற்று. புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படுவதை அறிந்திருந்தும் அலுவலக நேரம் என்பதால் தவரவிட்டு விடுவேனோ என்று அஞ்சினேன். தென்னக ரயில்வே புண்ணியத்தில் ஆவணப்படத்தைப் பணியிடையே வந்து பார்த்து திரும்பினேன்.
நண்பர்களை அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருந்த பிரசன்னாம்மாவையும், கலைராணி அவர்களையும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் அறிந்த அறியாத VIP க்கள் வர அரங்கம் நிறைந்து திரையிடல் ஆரம்பமானது.
திரை உயிர் பெற அசோகமித்திரனுக்கு பாராட்டு மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பில் ஆரம்பித்து, அவருடன் அவருடை வேளச்சேரி வீட்டிலில் உரையாடல், சில குடும்ப புகைப்படங்கள், திருவல்லிக்கேணி, ஹைத்ராபாத், அங்கு அவர் படித்த கல்லூரி என பயணித்திருக்கிறார்கள்.
ஆவணப்படத்தில் பலர் அசோகமித்திரனுடன் உரையாடி இருக்கிறார்கள். உலக யுத்த, இந்திய சுதந்திரப்போர் அதன்பின் நடந்த மதக்கலவரங்களைப் பார்தவர். ஹத்ராபாத் வளர்பினால் மதங்களுக்கப்பார்பட்டவராக அவரும் அவருடைய எழுத்தும் இருக்கிறது தன் எழுதுவதில் தனக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் ambition இருந்தது என்கிறார். தன் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்து வழி அவர் கொண்டிருக்கும் வாசகர் பரப்பு அதிகம். அரவிந்த் அடிகா அசேகமித்திரனின் எழுத்து பற்றி கூறக்கேட்டது இனிய அனுபவம்.
ஆவணப்படம் எடுக்கையில் instruction தருவது, கமிரா நகர்வது, லைட்டிங் சரிசெய்வது மற்றும் பிரசன்னாம்மா பேசுவது போன்ற காட்சிகளும் அதன் இயல்பில்வர, நம் கண்முன் shooting நடப்பது போன்றதொரு வித்யாசமா அனுபவத்தைத் தந்திருக்கிறார் Prasanna Ramaswamy .
அசோகமித்திரன் சட்டென்று திரும்பி தன் மெல்லிய குரலில் "என்னப்பா" எனக் கேட்பது போன்று இருந்தது. திரையிலும், திரைக்குப் பின்னும் இந்த ஆவணப் படத்திற்கு தம் பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
உங்கள் கட்டுரைத்தொகுப்பான "பூங்கொத்து" வாசித்துக்கொண்டிருக்கிறேன் அசோகமித்திரன்.

*************************************************************************************************************************************
 #சிறுவாணி_வாசகர்_மையம்-
#பவித்ரா_பதிப்பகம்
"மாதம் ஒரு நூல்"திட்டத்தில்
(ஜூலை-2017)
 வெளியீடு 
-------------

வருடம்-1       நூல் 3.பூங்கொத்து
- - - - - - - - -
இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் -
அவரே தேர்ந்தெடுத்து, தலைப்பும் தந்து,
பவித்ராவுக்கு வழங்கி, சிறுவாணி வாசகர் மையம் நமக்கு அளித்த கட்டுரைத் தொகுப்பு.
அறிமுக உரையில் ஞாநி "முதல் வாசிப்பில் அசோகமித்திரனின் படைப்புகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. மறுமுறை வாசிக்கும்போதுதான் அவற்றின் சிறப்புகள் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கின்றன
என எழுதியிருக்கிறார். ஏன் அப்படி என்று யோசித்தபோது, ஒரு பதிவில் கி.ரா. இப்படிக் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது :-

"எழுத்தாளர்களும் ஒரு வகையில் துர்வாசர்கள்தாம். சபலம், கர்வம், அகம்பாவம், அக்கரமம் எல்லாமே இவர்களிடம் உண்டு. இதே
சமயம் பசுப்போல குணவான்களும் இருக்கிறார்கள்."

அசோகமித்திரன் பசுப்போல குணவான். கோபத்தைக் காட்டமாட்டார், லேசா முகத்தைச் சுளிப்பார். ஓங்கி மண்டையில் குட்டமாட்டார், சின்னதா, செல்லமா இடுப்பில் நிமிண்டுவார். குலுங்கக் குலுங்க நம்மைச்
சிரிக்கவைகக மாட்டார், உதட்டோரம் ஒருசிறுநகை அரும்பச் செய்வார்.
அந்தப் பாணியில் அவர் எழுதிய கட்டுரைகள்.
"தேவ் ஆனந்த்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குகொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது,முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லைஆனால் அவர் எழுதிய புத்தகத்தில் ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறை கூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை."
என எழுதும் அசோகமித்திரனின் இயல்பும்அதுதான் என்பதை இந்தக் கட்டுரைகள்நிரூபிக்கின்றன.
புத்தகங்கள், எழுத்தாளர்கள், திரைப்படங்கள்,
அந்தக்காலச் சென்னை, சிங்கம் ஜெயகாந்தன் எனத் தாம் பார்த்த, கேட்ட, படித்த, சிந்தித்தவற்றையெல்லாம் சரளமாகக் கூறிக்கொண்டே போகிறார்.
நன்று, 

(திரு.கி.ரா.திருமலையப்பன்)
-------------
"பிற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி அவர் மெல்லிய குரலில்தான், சொல்வார்.தான் விமர்சகன் அல்ல என்று அவர் திரும்பத்  திரும்ப கூறினாலும், அவருடைய அபிப்ராயங்களுக்கு  மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு. 
நகுலன் ஒரு கவிதை கூட எழுதினார்:
கநாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக வராது.
கவிதையோ படு அபத்தம்.
"அது சரி. அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?"

   க.நா சு, பற்றி அசோகமித்திரன்.கோவை சிறுவாணி வாசகர் மையம், வெளியிட்டிருக்கும், "பூங்கொத்து " நூலிலிருந்து. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. நூலிள்ள , 39 கட்டுரைகளையும், வாசிக்காமல், வைக்க முடியவில்லை. அவ்வளவு, சுவாரசியம், எளிமை, கூறிய நகைச்சுவை, உள்பொதிந்த சோகம் என்று,ஒரு அற்புதமான கலவை.
 (திரு.சுரேஷ் வெங்கடாத்ரி)
-----------------
"இலக்கியம் என்றதும் அது சராசரி மனிதர்களைப் போல இல்லாத அசாதாரணக் காவிய நாயகர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஏதோ ஒரு பழங்காலத்தில் இருந்திருக்கலாம். உண்மையில் இலக்கியம் என்பது தங்களுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரண நிகழ்ச்சிகளின் சில தருணங்களில் எப்படி சராசரி மனிதர்கள் தங்களை அறியாமலேயே கூட காவிய நாயகர்களுக்குச் சமமானவர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துவது தான். அப்படி உணர்த்தும் எழுத்தாளர் அசோகமித்திரன்.
-பரிக்க்ஷா ஞாநி
------------------
பக்கங்கள் 176
விலை ரூ140/-

#Siruvani_vasagar_maiyam
#pavithra_pathippagam

Gpay 
8778924880






கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....