Thursday, August 15, 2019

ஆகஸ்ட்-2019 ரா.கி.ர.டைம்ஸ் ரா.கி.ரங்கராஜன்





 



ஆகஸ்ட்-2019  வெளியீடு
ரா.கி.ர.டைம்ஸ்

ரா.கி.ரங்கராஜன் (கட்டுரைகள்)
பக்கங்கள் 216   விலை 200/-

ISBN 978-81-942051-0-4
-----------------------------------------------------------------------------------------------------------------
.ரா.கி.ர.டைம்ஸ்“ – ரா.கி.ரங்கராஜன் வெளியீடு-சிறுவாணி வாசகர் மையம், கோவை. வாசிப்பனுபவம்
----
பதிப்பகம்:- பவித்ரா பதிப்பகம், 24-5, சக்தி மஉறால், சின்னம்மாள் வீதி, கே.கே.புதூர் போஸ்ட், கோயம்புத்தூர்-641038 (siruvanivasagar@gmail.com)
-----
 குமுதத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் திரு ரா.கி.ரங்கராஜன் அவர்கள். நாற்பது ஆண்டுகள் பணிபுரிந்த அவர் ஏராளமான சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகள் என்று எழுதியுள்ளார். டைம்ஸ் என்ற வாராந்திர செய்தித்தாளில் சுமார் 12 வருடங்கள் தொடர்ச்சியாக நாலு மூலைஎன்ற தலைப்பில் அரசியல், நாட்டு நடப்புகள், சினிமா, விளையாட்டு, நகைச்சுவைத் துணுக்குகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அரைப்பக்கக் கட்டுரைகள், பெரிய கட்டுரைகள் என்று எழுதியுள்ளார். அண்ணா நகர் டைம்ஸ் என்ற பத்திரிகையில் வெளிவந்த நாலு மூலைஎன்ற தலைப்பிலான கட்டுரைகளைக் கதம்பமாகத் தொகுத்து ரா.கி.ர. டைம்ஸ்என்ற தலைப்பில் தற்போது கோவை, சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டிருக்கிறது.

 ரா.கி.ர.வின் மூன்று நாவல்கள் திரைப்படமாகியுள்ளன. பல படைப்புக்கள் சின்னத்திரையிலும் வெளிவந்துள்ளன.. சுஜாதா இவரைப்பற்றி மிகப் பெருமையாகச் Disciplined, Beautiful writing என்று சொல்லி இவர் எழுத்தைப் பெருமைப்படுத்துகிறார். திரு.ரா.கி.ர.வின் திக்திக்கதைகள்என்று ஒரு தொகுப்பு மிகவும் ஸ்வாரஸ்யமானது. ஜனரஞ்சகமான எழுத்துக்குச் சொந்தக்காரரான இவர் எத்தனை விஷய ஞானம் உள்ளவர் என்பதை இவரது கதைகள் மூலமும், கட்டுரைகள் மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம்.

 குரங்கும் சாணக்கியனும் என்ற கட்டுரையில் குல்லா வியாபாரியைப் பற்றிய கதையைச் சிறுவர்களுக்குச் சொல்லும் இவர், அதன் மூலம் சாணக்கியனின் அரசியல் வித்தகத்தை அவரது வரிகள் மூலம் அழகாக விவரிக்கிறார்.

சாணக்கிய நீதி இதோ-
 அரசர்கள் எளிய குடிமகன்போல் வாழ்கிற தேசங்களில் குடிமக்கள் அரசர்களைப் போல் வாழ்வார்கள். தோல்வியின் இன்னொரு பெயர் பொறாமை ஆணவம் மிக்கவரை மரியாதை காட்டி வெற்றி கொள்ளலாம். முட்டாள்களை அவர்களுடைய முட்டாள்தனத்தைப் பொருட்படுத்தாமல் இருப்பதன் மூலம் வெற்றி கொள்ளலாம். அறிவாளியை உண்மையின் மூலம் வெற்றி கொள்ளலாம் ஒரு வேலையைச் செய்யத் தொடங்கிய பிறகு தயக்கத்தாலோ தோல்வி பயத்தாலோ அதை நிறுத்தாதீர்கள். விஷமில்லாத பாம்பானாலும் சீறுவது அவசியம். வளைந்து கொடுத்தால் வீழ்ச்சிகளைத் தவிர்க்கலாம். எப்போதும் நிமிர்ந்தே நிற்பது மரங்களுக்கும் ஆபத்து. மனிதர்களுக்கும் ஆபத்து. உங்கள் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். உங்களாலேயே அதை ரகசியமாக வைத்துக் கொள்ள முடியாதபோது மற்றவர்களாலும் முடியாது.

 அர்த்த சாஸ்திரம் என்ற அறிவுநூலை இயற்றிய மேதை பிறக்கும்போதே முப்பத்திரண்டு பற்களோடு பிறந்தவராம். கௌடில்யன், விஷ்ணுகுப்தன் என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. நந்த வம்சத்தை ஆண்ட அரசனால் அவமதிக்கப்பட்டபோது தன் குடுமியை அவிழ்த்துக் கொண்டார். இவனை அழிக்கும்வரை அவிழ்ந்த குடுமியை முடிக்க மாட்டேன் என்று சபதம் செய்து, சந்திரகுப்தனை அரசனாக்கிப் பழி தீர்த்துக் கொண்டார் என்பது வரலாறு.

 வாழ்க்கை வரலாறுகள் வீணா? என்ற தலைப்பில் இட்லிதான் என்னை உலகை வலம் வரச் செய்த்து. என் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய இட்லியை நான் எவ்வாறு மறக்க முடியும்என்று நூலாசிரியர் காமத் எழுதிய இட்லி ஆர்கிட் மன உறுதிஎன்ற விசித்திரமான தலைப்பைத் தாங்கிய புத்தக்கத்தைப்பற்றிய அறிமுகம் இந்நூலில் நமக்குக் கிடைக்கிறது. இந்தியாவெங்கும், உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட நானூறு ரெஸ்ட்டாரென்ட்களையும் மூன்று நான்கு நட்சத்திர உணவுவிடுதிகளையும் வெற்றிகரமாக நடத்தும் அதிபர் காமத்தின் சொந்தக் கதையை இந்தப் புத்தகம் சிறப்பாக விவரிக்கிறது.

 தத்தாத்ரேயரை நாம் அறிவோமா? உறிந்து மதத்தின் பெருமையை நிலைநாட்டிய மகான்களில் ஒருவர் இவர். இவருக்கு இந்தியாவில் பல இடங்களில் கோயில்கள் உள்ளன. மூன்று தலைகளும் நான்கு கைகளும் கொண்டவராக அவருடைய திருவுருவம் காட்சி தருகிறது. சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரையும் குறிப்பிடுவதாகவும், கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்றைக் குறிக்கின்றன என்றும் கருத்து.
இருபத்து நான்கு குருமார்கள் என்ற அவருடைய உபதேசம் மிகவும் பிரசித்தி பெற்றது என்று அறிகிறோம். பூமி, தண்ணீர், அக்னி, காற்று, பிரபஞ்சம், நிலா, சூரியன், புறாக் கூட்டம், மலைப்பாம்பு, சமுத்திரம், விட்டில் பூச்சி, வண்டு, தேனீ, காட்டு யானை, மான், மீன், வேசி, சின்னப்பறவை, குழந்தை, இளம் பெண், “பாம்பு, அம்பு, சிலந்திப் பூச்சி, ஒரு புழுஇப்படியாக்க் கூறி ஒவ்வொன்றுக்கும் அளித்திருக்கும் காரண காரியங்களுடன் கூடிய விளக்கம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இப்படியெல்லாம் நாம் நினைத்துப் பார்த்திருக்கிறோமா என்று மனம் எண்ணுகையில் வெட்கமுறுகிறது. இந்த உலகில் ஞானிகள் எப்படிஎப்படியெல்லாம் உருவாகியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நாம் ஒன்றுமேயில்லை என்று சிறுத்துப் போகிறோம்.

எனக்குத் தமிழ் தெரியாது, வித்வான்களும் மனிதர்கள்தான், முன் தூங்கி முன் எழுவது எப்படி? அன்பு கொல்லுமா? தேவை பழி போட ஒரு ஆள், சில நேரங்களில் சில தாத்தாக்கள், அரைக்கால் அர்ச்சுனன், டெல்லியில் சில புத்திசாலிகள், ஒழிக உம்மணாம் மூ!ஞ்சிகள், மனிதனும் மசாலா தோசையும், புள்ளோசை என்று விதவிதமான தலைப்புகளில் இந்தப் புத்தகத்தில் இருக்கும் கட்டுரைகள் அந்தந்தத் தலைப்புகளுக்காகவே உள்ளே செல்லும் ஆர்வத்தைத் தூண்டி, என்னதான் சொல்கிறார் பார்ப்போம் என்று படிக்க வைத்து விடுகிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பற்றிச் சொல்லியுள்ள இரண்டு கட்டுரைகளும் இப்புத்தகத்திற்கு சிகரம் வைத்தாற்போல் அமைந்துள்ளன.
கிருஷ்ணதேவராயரைப்பற்றிய கதையை இவரை எழுத வைத்தது, அவரை அரசன் என்பதை விட சாதாரண மனிதன் என்று வரித்து எழுதுங்கள்..அதாவது அவனுக்கு முதுகு அரித்தது, சொரிந்து கொண்டான் என்று எழுதுங்கள் என்று சுஜாதா சொல்லியது….அந்த நாவலை எழுதி முடித்து, முழுக்கப் படித்து …“ராட்சஸன்யா நீஎன்று பாராட்டியது….கறுப்பு, சிவப்பு, வெளுப்பு என்ற தலைப்பில் சிப்பாய்க் கலகம் என்று சொல்லப்பட்ட முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றினை சுஜாதா எழுத் தலைப்பட்டு அது மூன்றே வாரங்களில் குமுதத்தில் நிறுத்தப்பட்டது, ஒரு குறிப்பிட்ட வாரக் குமுத்தை சுஜாதா தயாரித்தது என்று சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கிய இந்தக் கட்டுரையோடு இந்தப் புத்தகம் முடிவடையும்போது, அத்தோடு ஒதுக்கி வைத்து விடுவோம் என்று அலமாரியில் அடுக்காமல்அவ்வப்போது எடுத்துப் படிப்போம் என்று அருகிலேயே வைத்துக் கொள்ளத் தூண்டுகிறது.

வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட கோவை சிறுவாணி வாசகர் மையத்தின் மாதம் ஒரு நூல்திட்டத்தின் கீழ் வெளியாகியுள்ள திரு  ரா.கி.ரங்கராஜனின் இந்த ரா.கி.ர.டைம்ஸ்என்ற இந்தப் புத்தகம் வாசிப்பை விரும்பும் அன்பர்கள் அல்லாது அனைத்துத் தரப்பினரும் படித்து அறிய வேண்டிய முக்கியமான, தவிர்க்க முடியாத, தவிர்க்கக் கூடாத புத்தகம் என்று சொல்வதையே விரும்புகிறேன்.

கோவை, சிறுவாணி வாசகர் மையம் வெளியிடும் புத்தகங்கள் ஒவ்வொன்றும் அரிய பொக்கிஷம். அதிலும் வாங்காமல் விட்டுப் போன அசோகமித்திரனின் புத்தகமும் பூங்கொத்தாய் இப்போது என் கையில். அவர்களின் இலக்கியப் பணி மெச்சத் தகுந்தது. தொடர்ந்து கை கொடுக்க வேண்டியது நம் கடமை...

நன்றி-உஷாதீபன்
--------------------------------------------------------------------------------------------------------------------------
navina virutcham Azagiya singar
-------------------------------------------------------------------------------------------------

கோவையின் மூத்த வாசகர் 
"விஜயா பதிப்பகம்" திரு.வேலாயுதம் ஐயா 
கைகளில் "ரா.கி.ர.டைம்ஸ்".

---------------------------------------------------------------------------------------------------------------------------


ஓம்சக்தி இணைஆசிரியர் 
திரு.பெ.சிதம்பரநாதன் அவர்களிடம் 
சிறுவாணி வெளியீடுகள்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------



      அழகான ரா.கி.ர.டைம்ஸ் புத்தகம்  கிடைக்கப் பெற்றேன். காலையில் உஷாதீபன் அவர்களின் குறிப்பை வாசித்ததிலிருந்து கொரியர்க்காரர் எப்போ வருவாரோ என ஆவலோடு காத்திருந்தேன். 
நன்றி.  திரு.Tirumalaiyappan 
-------------------------------------------------------------------------------
Books to be read are piling up on a stool beside my bed,,, Life goes hectic,,, Tiring body slows down the activity of the mind,,, The routine of monotonous and tedious travelling back home from office was broken y’day as I was going to a swanky pub to meet my old friends (of course, it does not mean that friends are old),, It was nice talking to them all,,, Life requires such breaks from routine mundane activities to have a fresh perspective on things,,, Similarly, if you are a reader, you have to change the genre of books that you have been reading once in a while,,, 

Recently I came across two such refreshing books,,, One is a Tamil book,  Ra.Ki.Ra Times, anthology of writings by legendary Ra.Ki.Rangarajan, a man who epitomises the middle alphabet of Aa.Ra.Su pathilgal (AaRaSu Answers) in Kumudam magazine,,, I have subscribed to Siruvani Vasagar Mayyam (Siruvani Readers Group) and I am getting  interesting, thoroughly readable and carefully chosen for publication books from them,,,  I would recommend this group for people who are interested in reading quality Tamil writings,,,  Other one is Word Play by Gyles Brandreth, which is “a cornucopia of puns, anagrams and other curiosities of the English language” as the wrapper of that book delineates,,, Both of these books are, I would say that, for light reading,,, Still you will be absorbed into them,,, 

Two jokes I read from those books and enjoyed much are,,,

A wife complains to her professor husband about the offensive habit of their daughter who has always been singing degraded and vulgar movie songs,,, Professor husband meets his daughter’s school teacher and complains about it,,, She takes him to the head-mistress,,, Having heard of his whining, head-mistress promises to set up a committee with that professor as its head to advise the parents to do something to get rid of this disgusting habit,,, Professor, being happy at his new role as the chairperson of the committee, starts car and drives it away singing gleefully in loud voice “Why this kolaveri, kolaveri, kolaveri di !!!”,,, 
(From Ra.Ki.Ra Times by Ra.Ki.Rangarajan),,,

A king, getting thoroughly bored of his punster jester ordains to execute him immediately and bans the usage of puns in his kingdom with hanging as the punishment for the violators of this new law. The punster is being dragged to gallows,,, But king suddenly at the surge of sympathy for his old pal decides to pardon him but with a condition that he should never pun again in his life,,, A message with this regards has been sent out and the hanging of the punster is being stopped at right moment,,, Hearing this, the punster exhales with the following, uncontrollable words - “No noose is good news”,,,  Well, old habits die hard and that poor guy is hanged,,, Story does not end here,, His brother is being asked to be an undertaker and so he is carting the coffin to the burial ground,,, On the way, the coffin falls from the cart due to rough road,,, That undertaker brother of deceased punster involuntarily utters that “We will have to rehearse that”,,, And They hang him too,,,
(From Word Play by Gyles Brandreth)

Ganesan krishnamurthy
31.08.2019
---------------------------------------------------------------------------

அட!

நான் சிறுவாணியை வியக்கிறேன்...அடுத்து என்ன செய் வார்கள் என்றே தெரியாமல் "சடக்" இன்ப அதிர்ச்சி கொடுப்பார்கள்.
இந்த மாத இன்ப அதிர்ச்சி...சுஜாதாவுக்குச் சவால் விடும் (இவர்தான் சீனியராக இருந்தாலும்).. அலட்சிய எழுத்துப்பாணி கொண்ட
ரா.கி. ரங்கராஜன் படைப்பு.

அட்டையின் கவர்ச்சியில் ஆரம்பிக்கிறது விறுவிறுப்பு.(ஜீவாவின் ஜீவோவியம்)

ஹென்றி ஷாயர் எழுதிய PAPILLON ஐ தமிழில் மொழிபெயர்த்து பட்டாம்பூச்சியைப் பறக்கவிட்டவர் ரா.கி.ரா. அந்தப்புத்தகத்தைப் படித்தேன்.. படிக்கிறேன். படிப்பேன்.. படித்துக்கொண்டேயிருப்பேன்..
என் வயதுக்காரர்கள் எல்லாருமே இதையேதான் சொல்வார்கள்.. மொழிப்பெயர்ப்பு  (என்றே)தெரியாத மொழிபெயர்ப்பு.

நான் அம்பத்தூர் என்பதால். அண்ணாநகர் டைம்ஸ் அவ்வப்போது மிக்சரில் முந்திரிபோல  சுவைத்திருக்கிறேன். . .
இப்போது சிறுவாணியால் கிடைத்திருப்பது முழுக்கமுழுக்க மொறு மொறு வறுத்த முந்திரி.


சுவையுங்களேன்....அடுத்தவர்களுக்கும் சிபாரிசு செய்து சிறுவாணியில் உறுப்பினராகி..... சுவைக்கச்செய்யுங்களேன்.....

நன்றி;- திரு.Saptharishi Lasara 

----------------------------------------------------------------------------









Tuesday, August 13, 2019

The Hindu 16.July 2019 /வாழ்த்துகள்.

The Hindu
16.July 2019

 


------------------------------------------------------------------------------------------------------------------
வறண்டு, எதிர்காலம் இருள் மூடி இருக்கிறதோ என பதிப்பகத்தார் வருத்தமுற்று இருக்கும்  ஒரு சூழலில்,  வணிக நோக்கம் சற்றுமின்றி சிறந்த நூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து எழுத்தாளர், வாசகர், பதிப்பாளர் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஒரு பாலமாக சிறுவாணி வாசகர் மையம் இயங்கி வருகிறது. 


2017ஆம் ஆண்டு உலக புத்தக தினத்தன்று ஏப்ரல் 23 இல் துவங்கப்பட்ட இவ்வியக்கம் இரண்டு ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக 350 உறுப்பினர்களுக்கும் மேலாக பங்கேற்கும் வளம்மிக்க இயக்கமாக மூன்றாவது ஆண்டைத் துவக்கி உள்ளது.

இவர்களது range வியக்க வைக்கும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களிலிருந்து 21ம் நூற்றாண்டின் நவீன எழுத்தாளர்கள் நூல்கள் வரை இவர்களது வெளியீட்டில் வந்துள்ளன.

மூன்றாவது வருடத்தின் துவக்கத்தில்தான்  இருக்கிறார்கள் .இது ஒரு மிக இளைய இயக்கம். அதற்குள்ளாகவே நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், பயண இலக்கியம், பக்தி இலக்கியம், தீண்டாமை ஒழிப்பு போன்ற மறுமலர்ச்சிக் கால இலக்கியம் முதலிய அனைத்து வகைகளிலிருந்தும் தரம் மிக்க நூல்களை இவர்கள் தம் உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளார்கள்.

ஒருபுறம் பாரதி, தாகூர், இராய.சொ, டி.கே.சி.  லா. ச .ராமாமிர்தம்,
க.நா.சு, அசோகமித்திரன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் நூல்கள் என்றால் மறுபுறம் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, எம்.கோபாலகிருஷ்ணன்,கண்மணி குணசேகரன்,சு.வேணுகோபால் முதலிய புகழ் பெற்ற நவீன இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றி வருபவர்களின் நூல்கள்; மேலும் இளைய தலைமுறையைச் சேர்ந்த  கீரனூர் ஜாகீர் ராஜா,சுநில்கிருஷ்ணன், ஜி. ஏ. பிரபா, வே முத்துக்குமார், ரமேஷ் கல்யாண் முதலிய நவீன contemporary எழுத்தாளர்களது நூல்கள் இவர்களிடமிருந்து வந்துள்ளன. 

இவர்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்.. திரு பிரகாஷ் GR, திருமதி சுபாஷிணி மற்றும் இம்மையத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்குத் துணை நிற்பவர்கள், இவர்கள் ஊக்கத்துக்குக் காரணமாக உள்ள உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

திரு.வ.ஸ்ரீநிவாசன் 
6/8/2019
--------------------------------------------------------------------------------------------------------------------

சிறுவாணியின் பெருமைகள்!

இந்த மாத ஜீவாவின் அட்டையைப்பார்த்ததும் ஏற்பட்ட குஷி என்னை இப்படி எழுதத் தூண்டிவிட்டது.
எண்ணிப்பார்க்கிறேன்..ஆஹா!.... புத்தகம் படிக்கவைக்க  மாதாமாதம் வீட்டிற்கே அனுப்பிவைக்கும் சிறுவாணி....அப்படி அனுப்பிவைத்த புத்தகங்கள்...சுவாரஸ்யமாகவும்.....
இலக்கியத்தரமாகவும்.. 'நவீன இலக்கியத்தரமாகவும்'.... வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களாகவும் அமையும் படி பார்த்துக்கொள்வதன்... உழைப்புத் தரத்தின் பெயரே சிறுவாணி வாசகர் மையம்.

100 வருடங்களுக்கு முந்தைய டி.கே.சி...  தாகூர்..தேசியகவி பற்றி பாரதி.தேசிய கவி.....லா.ச.ரா....வின் விளிம்பில்..
தக்கர்பாபா..கேள்வி மட்டுமே பட்டிருப்போம்...தமிழின் முதல் வெளியீடாய்....
க.நா சு.வின் ஆட்கொல்லி ....
அசோகமித்திரன் புத்தகத்துக்கு... ஒரு சிறப்பு உண்டு. இதுவே அவரின் இறுதியாய் வெளிவந்த புத்தகம்...இளசை மணியன்.. நாஞ்சில் நாடன்...வ.ஸ்ரீ. சார் போன்ற மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள்.....

அடுத்த தலைமுறையான சு. வேணுகோபால் ..எம்.கோபால கிருஷ்ணன், கண்மணிகுணசேகரன்....
அதற்கடுத்ததாக.....ஜி.ஏ.பிரபா...வே.முத்துக்குமார்...
பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் ஜெயமோகன்..சாரு நிவேதிதா.....
இளம் எழுத்தாளரில் ரமேஷ் கல்யாண்...இதிலும் ஒருபுதுமை ரமேஷின் முதல் சிறுகதைத் தொகுப்பு... ( ப்ரகாஷின் ரிஸ்கிற்கு செம பலன்...வாழ்த்துக்கள்)...
பிரகாஷின்...இலக்கிய ரசனையும்...அவரின் வழிகாட்டிகள்..சுபாஷிணி திருமலை மலை..மேடம்..வ.ஸ்ரீநிவாசன்,நாஞ்சில் நாடன் ஐயாக்களின்..ஆலோசனைகள்.....ஓவியத்தில் இலக்கியம்படைத்துக்கொண்டிருக்கும் நம் ஜீவாவின்....தூரிகைத் துணை...

350....350.... 350..( உறுப்பினர்களுக்கு மரியாதை மும்முறை)...உறுப்பினர்களின் வலுவான ஆதரவு...அவர்கள் உடனடியாக படித்துவிட்டு ...சட்..விமர்சனம் செய்யும்..வாசகர்கள்...மேலும் பல விதங்களில் ஆதரவுக்காட்டும்.....கோவைவாசிகள்.....இருக்கும் வரை......
பிரகாஷின் உழைப்பின் பலமும்....உறுப்பினர் சேர்க்கையும் கூடிக்கொண்டே போகும் என்பது விதி!
நான் கோவை புத்தகத் திருவிழாவில் இரண்டுநாட்களில்.. தினம் 12 மணி நேரமிருந்து பிரகாஷின் பேய்த்தனமான உழைப்பை வியந்தேன்... அதற்குப்பலனாக..பல பிரபலங்கள் அவர் டேபிளுக்கு வந்து..கௌரவித்ததில் எனக்கு மகிழ்ச்சி!

இந்த இரண்டுவாரங்களில்....'இத்தனை' உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்கிற வெறியை..போனவருடத்தின் புத்தகக்கண்காட்சி சேர்ப்பைவிட அதிகப் பேர்களை சேர்த்தது அவரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு.

சிறுவாணிக்கு அடுத்தவருடம் 500 பேர் சேர்ந்தால்... மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டால் கூடத் தப்பில்லை என்று சில சமயங்களில்  தோன்றுவது கூட பிரகாஷின் லட்சியத்துக்கு செய்யும் மரியாதைதான்... அவ்வளவு WORTH!
நன்றி Saptharishi Lasara   6/8/2019

கோவை புத்தகத் திருவிழா (2019)

கோவை புத்தகத் திருவிழா (2019) ல்
சிறுவாணி வாசகர் மையம். (Siruvani Vasagar maiyam)

அனைவருக்கும் வணக்கம்.
கோவை புத்தகத் திருவிழா ஜூலை 19 ம் தேதி துவங்கி நேற்று(28.07.2019)டன் பத்துநாட்கள் இனிதே நிறைடைந்தது.
நமது சிறுவாணி வாசகர் மையம் சார்பில் பங்குபெற்றதையும் அறிவீர்கள்.

கோவை புத்தகத் திருவிழாவில் பங்குபெற ஊக்குவித்த திரு.நாஞ்சில்நாடன்,
திரு.வ.ஸ்ரீநிவாசன் ,
திரு.ஆர்.ரவீந்திரன்,திரு.CGS.மணியன்,ஓவியர்.ஜீவா,
உதவிய
திரு.விஜய் ஆனந்த்,
திரு.CR.இளங்கோவன்,திரு.மரபின்மைந்தன் முத்தையா  ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.

சிறுவாணி  வாசகர் மைய மேசைக்கு வருகைதந்து பெருமைப்படுத்திய நண்பர்கள்/ எழுத்தாளர்கள்/உறுப்பினர்கள் ;

ஒசூரிலிருந்து வந்து முதலிரண்டு நாட்களும் உடனிருந்து ஊக்கப்படுத்திய திரு.சப்தரிஷி லா.ச.ரா,
கோவை மாவட்ட ஆட்சியர் திரு.ராஜாமணி,

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
திரு.நாஞ்சில்நாடன்,
திரு.காலசுப்பிரமணியம்(லயம்),
திரு.சௌந்தர் வல்லத்தரசு அண்ணா,
திரு.ஜீவகரிகாலன்,
திரு.சிதம்பரநாதன்(ஓம்சக்தி)
திரு.மரபின்மைந்தன் முத்தையா,
திரு.சாருநிவேதிதா,
பேராசிரியர் துரை,
திரு.கவிதாசன்,
இயக்குநர் ராம்-ன் தந்தையார் திரு.சங்கரநாராயணன்.....,

திரு.நாகசந்திரன்,
வரலாற்று ஆய்வாளர் செ.திவான்
திரு.அய்யப்பமாதவன்,கவிஞர்கள் சக்திஜோதி, மனுஷி,அகிலா,ஜோதிமீனா,மஞ்சுளாதேவி,
வானதிசந்திரசேகரன்

புரவலர்கள்ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
திரு.ஆர்.ரவீந்திரன்,
திரு.CGS.மணியன்,
திரு.V.கிருஷ்ணகுமார்,

கோவை கங்கா மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன்,திரு.D.பாலசுந்தரம்,

ஓவியர் ஜீவா,
எழுத்தாளர்கள் திரு. எம்.கோபாலகிருஷ்ணன்,திரு.சு.வேணுகோபால்,திரு.க.வை.பழனிச்சாமி,
திரு.வ.மணிகண்டன்,திரு.முகில்,

புத்தகத் திருவிழாவின் முதல்நாளே வந்திருந்த விஜயா பதிப்பகம் வேலாயுதம் ஐயா உடன்வந்தவர்களிடம்"சிறுவாணி  சிறந்தநூல்களை வெளியிட்டு மாதாமாதம் வீட்டுக்கே புத்தகங்களை அனுப்பிவருவதாக" சிறப்பாகச் சொன்னதை  நமக்குக் கிடைத்த ஆசிகளாகக் கொள்கிறோம்.

திரு.இயகாகோ சுப்பிரமணியம்,திரு.பத்மநாபன்(Lead India)

திரு.கோபாலகிருஷ்ணன்,திரு.சுரேஷ்குமார்,திரு.பானுமதி பாஸ்கோ

மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன்,பேராசிரியர் எம்.ஏ.சுசீலா,மொழிபெயர்ப்பாளர் அமரந்தா,
திரு.வ.ஸ்ரீநிவாசன்,
திரு.செல்வேந்திரன்,
திரு.கண்ணன் தண்டபாணி

திரு.மு.சந்திரகுமார்(லாக்கப்),
நெல்லையிருந்து திரு.சண்முகசுந்தரம்(IOB),திரு.எம்.எம்.தீன் மற்றும்
திரு.வே.சிதம்பரம்,திரு.கலாப்ரியா,திரு.ஜான்சுந்தர் மற்றும் Prof.கண்ணன்,டாக்டர்.சேகரன்,ஆல்இந்தியா ரேடியோ திரு.ராஜாராம்,

எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா,
அன்பான ஆசிரியர் முத்தரசி, திரு.சி.ஆர்.ரவீந்திரன்
அனைவருக்கும் நன்றி.

நமது உறுப்பினரும் நண்பருமான திரு.கஜேந்திரகுமார் தினமும் வந்திருந்து உதவிசெய்தார்.

திரு.ரவீந்திரன்(SBI),சூர்யா பிரிண்டர்ஸ் திரு.மனோகரன்,திரு.திருவள்ளுவனார்,

புத்தகத் திருவிழாவிற்காக பணிநேரத்தை மாற்றிக் கொடுத்து உதவிய எங்கள் நிறுவன மேலாளர் S.சம்பத்குமார்,
HR திரு.ஜெயகாந்தன்,

கிடைத்தநேரத்தில் ஓய்வெடுக்காமல் வந்திருந்து உதவிய நண்பர்கள் சண்முகம்,பாலகிருஷ்ணன் ஆகியோருக்கும்
நன்றி.

சென்னை சில்க்ஸ் உரிமையாளர்கள். திரு.விநாயகம்,திரு.காளியப்பன்அவர்கள்,
CRI Pumps சேர்மன் திரு.வேலுமணி இவர்களோடு  இணைந்துள்ள உறுப்பினர்களுக்கும் நன்றி.

மேலும் நமது சிறுவாணி வாசகர் மையத்திற்கு வருகைதந்த வாசகர்கள்,புதிதாக இணைந்துள்ள வாசகர்கள்,

வெளிநாட்டில் இருந்தாலும் தினமும் தொலைபேசியில் அழைத்து ஊக்கப்படுத்திய திரு.சிவசுப்பிரமணியம்,உடல்நிலை காரணமாக வரமுடியாதபோதும் போனில் விசாரித்து வாழ்த்திய திரு.வேங்கடசுப்ரமணியம்

தும்பி நண்பர்கள்,

"ஜீரோடிகிரி பப்ளிஷர்ஸ்"திருமதி காயத்ரி,திரு.ராம்ஜி மற்றும் பத்மநாபன் ,
பேராசிரியர் ஜவஹர்பாபு,

எனது மகளுக்காகப் புத்தகங்களைத் தேடித்தேடி ,பரிந்துரை செய்து வாங்கித் தந்த ஆர்.காயத்ரி,பேராசிரியை.மாதங்கி,

இத்தனை நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் காரணமாயிருந்தது சிறுவாணி வாசகர் மையம் அமைப்பு.

இதனை உருவாக்கிய திரு.நாஞ்சில்நாடன்,
ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
மூத்த சகோதரியாக விளங்கும் தி.சுபாஷிணி மற்றும் ஆலோசகர்கள்,

மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த 15 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி (நூலகங்களுக்கு) மாணவர்களுக்கு வாசிப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி,
திரு.நாஞ்சில்நாடன் எழுதிய "அஃகம் சுருக்கேல்" நூல் அன்பளிப்பாக வழங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது.

எனது குடும்பஉறுப்பினர்கள்

நமது வாட்ஸ்அப் குழுவில் தொடர்ந்து ஊக்குவித்தவர்கள் ,
மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள்/விடுபட்டவர்கள் இருப்பின் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.


தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.

ஜி.ஆர்.பிரகாஷ்
கோவை
*****************************************************





 


 


 


 

















 




 
 














 



 
 

 

 




















 


 













 




 




 




 






















 


 







 








கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....