Friday, January 3, 2020

சிறுவாணி வாசகர் மையம் - அறிவிப்பு






அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

2017  புத்தாண்டு தினத்தன்று சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒருநூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச்--2020 உடன் மூன்றாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)

ஏப்ரல் 2020- மார்ச் 2021 க்கான நான்காம் ஆண்டுக்கான 
கட்டணம் ரூ 1600 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2000 /-
(தபால் செலவு உட்பட).

இப்போதிலிருந்தே தங்கள் ( ஏப்ரல் 2020-மார்ச் 2021) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களாகச்  சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி,கல்லூரிகளின் நூலகங்களோடும் கைகோர்க்க விரும்புகிறோம்.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 
நன்றி.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ் 
சிறுவாணி வாசகர்  மையம்.








நன்றி-
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்,

அந்திமழை ஜனவரி 2020

நாஞ்சில்நாடன் விருது-2020

கோவையிலிருந்து செயல்பட்டுவரும் "சிறுவாணி வாசகர் மையம்" ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது.

2020 க்கான "நாஞ்சில்நாடன் விருது"  எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கா.சு.வேலாயுதன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

2020 , பிப்ரவரி 02 இல் கோவையில் "ஆர்த்ரா ஹாலில்" நடைபெறவுள்ள  "நாஞ்சில் நாடன் விருது"விழாவிற்கு
திரு.நாஞ்சில்நாடன் தலைமை ஏற்கிறார்.

 விழாவில் பேராசிரியர்.கண.சிற்சபேசன் விருது வழங்குகிறார். விஜயா பதிப்பகம் திரு.மு.வேலாயுதம், திரு.வ.ஸ்ரீநிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

விருது பற்றி....

கலை, இலக்கியம் , சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் நாஞ்சில் நாடன்  விருது , பரிசுத் தொகை ரூபாய் 50,000 , பாராட்டுப் பத்திரம் மற்றும் விருதுச் சிற்பம் அடங்கியது .

2018 இல் ஓவியர் ஜீவா அவர்களுக்கும், 
 2019 ஆம் ஆண்டு
முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் நாஞ்சில்நாடன் விருது வழங்கப்பட்டது.
------------------
சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் தலைவராக
 தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
-------------







                                                                               நன்றி- அந்தி மழை



நன்றி- காலச்சுவடு-ஜனவரி 2020








          




ஜனவரி-2020 "லீயர் அரசன்" தமிழில்- ஜஸ்டிஸ் மகராஜன்






ஜனவரி மாதப் புத்தகம்
"லீயர் அரசன்"
மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம்

தமிழில்- ஜஸ்டிஸ் மகராஜன் அவர்கள்
பக்கங்கள் 176 விலை 200/-
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஷேக்ஸ்பியரின் (கிங் லீயர்)  லீயர் அரசன்  - ஜஸ்டிஸ் மகாராஜன்

ஷேக்ஸ்பியரின் King Lear  அதன் தமிழாக்கம் சென்னை   உயர்நீதி
மன்றத்தின்  நீதிபதியாக இருந்த,  இரசிகமணி  டி.கே.சியின் வட்டதொட்டி இயக்கத்தில் பங்கேற்ற ஜஸ்டிஸ் எஸ். மாகாராஜன் இதை லியர் அரசன் என்று 1965ல் தமிழாக்கம் செய்து 1965லும்1971-72லும் என்று மூன்று பதிப்புகளாக வெளிவந்து அன்றைய சென்னை மாகாணத்தில் முக்கிய தமிழுக்கான வரவு என்று அப்பொழுதுகொண்டாடப்பட்டது. 

நான்  கல்லூரியில்   1970களில் படிக்கும்போது தமிழ் துணைப்பாடமாக இந்த நூல் மதுரைபல்கலைக்கழகத்தால் பாடப் புத்தகமாகவும் வைக்கப்பட்டது. இதற்கு இராஜாஜி அணிந்துரையும் வழங்கியுள்ளார். அது கீழ்வருமாறு:

‘’ஷேக்ஸ்பியரின் கிங் லீயர் அவருடைய சோக நாடகங்களில் எல்லாம் தலைசிறந்த ஒன்று. ஆனால் கதையின் சோகம் ஆங்கிலேய சூழ்நிலையை சார்ந்திருக்கிறது என்றாலும் கதையில் பொதிந்துள்ள துராசைகளும் பாசங்களும் மனிதர் அனைவருக்கும் பொதுவான பாவச்சுமையும் துயரமும் ஆகும்._ 

ஸ்ரீ மகாராஜனின் நூலைப் படித்து அதன் பயனாக நம்முடைய கண்கள் கலங்கி, அந்தக் கண்ணீர், வினைப் பயனாக உள்ளங்களில் அமைந்து அல்லற் படுத்தும் துர்குணங்களை கழுவித் தீர்க்கும் என்பது என்னுடைய எண்ணம்.

_கிங் லீயர் தற்காலத் தமிழ்ப் படைப்புகளில் நல்ல மதிப்பும் ஸ்தானமும் பெற்ற ஒரு நூலாகும்.’’
- ராஜாஜி_

நீதித்துறையிலும்,தமிழ்இலக்கியத்திலும் 
ஒரு ஆளுமையாக திகழ்ந்த  ஜஸ்டிஸ் மகாராஜன்   திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றியவர். 2012ல் அவருடையநூற்றாண்டுகொண்டாடப்
பட்டு அவருடைய தமிழ் படைப்புகளை எல்லாம்ஒரேதொகுப்பாகவெளியிடப்
பட்டது. 

நீண்ட காலத்திற்கு பிறகு கோவை சிறுவாணி  வாசகர் மையம்   அதன் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ்  இந்த அரிய நூலை திரும்பவும் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். இந்த பணியில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கிய நாஞ்சில் நாடன் மற்றும் கோவை ரவீந்திரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி அரிய நூல்களை சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து வெளியிட வேண்டும். 

இந்த மாதம் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட இந்த லியர் அரசன் மற்றும் உஷா தீபனின் முழு மனிதன்  என்ற இரண்டு நூல்களையும் அனுப்பி வைத்த பிரகாஷ் அவர்களுக்கு மிக்க  நன்றி.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.01.2020
#கிங்_லீயர்    #ஷேக்ஸ்பியர்     #சிறுவாணிவாசகர்மையம்       #இராஜாஜி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

  தென்றல் பேசுகிறது... Jan 2024 கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி...