Wednesday, December 13, 2017

நவம்- நாஞ்சில் நாடன்-ஏப்ரல்-2017 (1)



ஏப்ரல்-2017
"நவம்" -
நாஞ்சில் நாடன்

எண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு
பக்கங்கள் 216   விலை 150 /-
ISBN 978-81-940780-0-5

*************************************************************

January 14, 2017
அன்பான அருமை நண்பர்களே!
எங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்! அக்கார அடிசலாய் அதி இனிப்பான செய்தி! அரியதாய் இருந்த புத்தக கண்காட்சி இப்போது அனைத்து முக்கிய நகரங்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது. ஆங்காங்கே அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்த இலக்கிய , வாசகர் வட்டங்கள் நம்மை இலக்கியத்தை நோக்கி அழைத்துச் சென்று பண்படுத்திக் கொண்டு செல்கின்றன.இப்போது தொடர்ந்து பல அமைப்புகள் தோன்றிடினும், அதற்கானத் தேவைகளும் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன .

இப்போது சென்னை,புத்தகக்கண்காட்சியின் இன்பத்தில் திளைத்துக்
கொண்டிருக்கிறது.சிலசமயம்ஆர்வமாய் வாங்கிவரும் புத்தகங்கள்
அடுத்த வருடம் வரை கூடப்  பிரிக்கப்படாமல் போய்
விடுகிறது. இது நேரா வண்ணம் வாசிப்பை
ஒரு தொடர் "வாசிப்புச்சங்கிலி" இயக்கமாக  அமைக்க ஆசை!

கோவை பதிப்பாளர் நண்பர் திரு. G.R. பிரகாஷ் அவர்களுடன்
இணைந்து , சிறுவாணி நீரின் இனிமைபோல், " சிறுவாணி வாசகர் மையம் " என்னும் அமைப்பின் கீழ், நூலின் இன்சுவையை உங்களுடன் பகிர்ந்து,
ஒரு நூல்நெசவு நெய்ய விருப்பம்.

நீங்கள் செய்ய வேண்டியது வருட சந்தாவாக 1200 ரூபாய் கட்டி வாசகராக இணைத்துக்கொள்ளவேண்டியதுதான். நாங்கள் மாதம் ஒரு சிறந்த எழுத்தாளரின் புத்தகம் என 1600 ரூபாய் மதிப்புள்ள  12 நூல்களை அளிக்கிறோம்.

வரும் தமிழ் புத்தாண்டு நன்னாளில்(14.4.2017)
சாகித்ய அகாடமி விருதாளர் திரு.நாஞ்சில் நாடன் அவர்களின் புதிய கட்டுரைத் தொகுப்புடன்தொடங்க எண்ணம். என் எண்ணத்திற்கு
நண்பர்களே ,உங்களது வாழ்த்துக்களையும் ஆதரவுகளையும் ஆலோசனைகளையும்  உங்களது நண்பர்களின் ஆதரவுகளையும் பெற விழைகிறேன்.
--------------------------------------
ஏற்றி வைத்தாயிற்று விளக்கை
எண்ணெய் மிஞ்சுமா
திரி மிஞ்சுமா
இறுதியில் என்ற வாதங்கள் இப்போது அவசியமற்று
ஒளி என்ற ஒன்றுமட்டும்
பரவிக் கொண்டிருக்கிறது.
இந்தநேரத்து உண்மையாக.
-கல்யாண்ஜி.
----------------------------------
என்றென்றும் நட்புடன்,
தி். சுபாஷிணி மற்றும்  ஜி.ஆர்.பிரகாஷ்.
**********************************************************************
சிறுவாணி வாசகர் மையம்
தன் முதல் வெளியீடாக
நாஞ்சில் நாடனின்
நவம்
என்னும் புத்தம் புதிய
படைப்பை அளிக்கிறது.
அடுத்தடுத்த பதிப்புகளாக
அசோகமித்திரன் அவர்களின்
படைப்புக்கள்!
பின்
லா.ச.ரா
சிதம்பர சுப்ரமணியன்
என ஆழமான அருமையான
படைப்பாளிகளின் அரிதான
படைப்புக்கள்!
எனவே நண்பர்களே
வரும் தமிழ்ப் புத்தாண்டில்
நீங்களும் 1200 ரூபாய்
ஆண்டு சந்தா செலுத்தி
நல்ல புத்தகங்களை
மாதம் ஒன்றாகப் பெறுங்கள்.!
உங்கள் நண்பர்களுக்கும்
பரிசளிக்கலாம்.
***************************************************************************************************************************
கீரனூர் ஜாகிர்ராஜா
நவம்
ஒன்று முதல் பத்து வரைக்குமான எண்கள் குறித்த சொற்களைத் தொகுத்து 
ஒரு அகராதி போல தந்துள்ளார் நாஞ்சில் நாடன்.அரிய முயற்சி.
சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு.
******************************************************************************************************************************

11/7/2017Thirumalaiyappan: நவம்
- - - -
சென்ற மாதம்தான் சிறுவாணி வாசகர்மையத்தில் உறுப்பினன் ஆகிப் புத்தகங்களைப் பெற்றேன். முதல் வெளியீடாகிய'நவம்' புத்தகத்தை வாசித்தேன். நாவல்,சிறுகதை மட்டுமல்ல, கட்டுரையும்தமக்குக் கை வந்த கலை என்பதை ஏற்கெனவே நிறுவியுள்ள நாஞ்சில் நாடன்அவர்கள், நாம் இன்னொரு முறை 'போடும் வண்ணம் 'நவ'க் கட்டுரைகளை
வடித்திருக்கிறார். பரந்த வாசிப்பு, அதில்வசப்படும் வார்த்தைகளைச் சீராக
விதைத்துப் பாத்தி கட்டி நாற்று நட்டிருக்கிறார்.

ஒன்று முதல் பத்து வரையான எண்களை முன்னிறுத்தி இத்தனை சொற்
களா ? ஒரு மினி அகராதியை உருவாக்கி,
"தென்சொற் கடந்தான்,
வடசொற் கடற்கு எல்லை கண்டான்"
என்ற கம்பரின் பாராட்டைத் தமக்கும் உரித்
தாக்குகிறார். அவருடைய வழக்கமானகேலி, நையாண்டி, ஆதங்கம், அறச்சீற்றம்,அங்கங்கே கொஞ்சம் இடக்கரடக்கல் எல்லாவற்றையும் தூவியிருக்கிறார்.

நூல் வெளியீட்டில் நவமாக வருகை தந்துள்ள சிறுவாணி வாசகர் மையத்தின் முதலாவது வெளியீடு 'நவ'மாக அமைந்ததில்
இரட்டிப்பு மகிழ்ச்சி.
சிறந்த தொகுப்பு - வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையத்தின் முதலாவது வெளியீடு 
2017 ஏப்ரல் 23 அன்று வெளியிடப்பட்ட சிறுவாணி வாசகர் மையத்தின் முதல் நூல்.

1.நவம்

"சொற்களின் காதலர்"
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் எழுதிய "நவம்" எண்கள் சார்ந்த தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு.

ஒருமை,இருமை,மும்மை,சதுரம்,பஞ்சம்,
அறுமுகம்,சப்தம்,அட்டம்,நவம்,தசம் என எண்களின் சிறப்புகளைப் பேசும் நூல் இது.

பக்கங்கள் 216
விலை ரூ 150/-
#நவம்
#சிறுவாணி_வாசகர்_மையம்
#பவித்ரா_பதிப்பகம்
#pavithrapathippagam
#siruvani_vasagar_maiyam

Gpay
8778924880

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....