Friday, April 5, 2024

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்





கனவு மழை
வ.ஸ்ரீநிவாசன்

சிறுகதைகள் 

பக்கங்கள்;166          விலை;ரூ 180/-

நாஞ்சில்நாடன்

அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது. மொழி சம்பவம், உரையாடல், உணர்ச்சி, புனைவு என்பன சார்ந்து எவ்வகை ஆடம்பரம்,  ஆரவாரம், கம்பலை எதுவும் இல்லை அவர் மொழிதலில்.

கொள்கை, கோட்பாடு, தத்துவம் என்று எதையும் எவருக்கும் நிறுவ வேண்டிய எந்த நெருக்கடியும் இன்றி இயல்பாகக் கதை சொல்லிப் போகும் வ.ஸ்ரீ.யின் பாணி சமகால இலக்கியச் சூழலில் காண்பதற்கு அரிது.

சுஜாதா சஞ்சீவி

கதைகளில் மனித சுபாவம், எண்ணங்களின் விசித்திரங்கள், கைவிடப்பட்ட வாழ்க்கை என பல சரடுகள் கோர்க்கப்பட்டு வாழ்க்கையில் பல வர்ணஜாலங்களை காட்டுகின்றன. 

அவரது சிந்தனை முதிர்ச்சி, அகமனப் பார்வை, எண்ண ஓட்டங்கள், உலகநோக்கு எல்லாம் சிறப்பாகப் பதிவாகியுள்ளன. 

ந. ஶ்ரீராம்.

தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் 21 கதைகளும் வாழ்வினை தரிசிக்கும் 21 சாளரங்களாக நமக்குத் திறந்து விடப்படுகின்றன.

வ. ஶ்ரீநிவாசன்

ஒவ்வொரு மனிதரும் ‘பல கோடி நூறாயிரம்’ கதைகள். பெரும்பாலும் நினைவில் தங்காதவை;  கவனிப்புப் பெறாதவை; சொல்லப் படாதவை.

இந்த எல்லையற்ற கதைக் கடலின், ஓரலையின், ஒரு நுரையின், ஒரு குமிழி இக்கதைகள்.



திரு. அசோகமித்திரன் பொறுப்பாசிரியராய் இருந்த கணையாழியிலும், சொல்வனம் இணைய இதழிலும் 1971 லிருந்து 2015 வரை வெளியான 21 சிறுகதைகள்.

-----------------------------------------

கனவு மழை வாசிப்பு அனுபவம் :

தலைப்பே சிந்தனையைத் தூண்டியது.👌🏻👌🏻👌🏻

கனவிற்கும் நூலறுந்த பட்டத்திற்குமான தொடர்பு அருமை.  

கனவின் மழையில் நனைய முடியுமா? என்றால் எடுத்தாளும் கருத்துக்கள் கருந்துளையின் ஈர்ப்பு கொண்டிருந்தால் கனவின் மழையில் நனைந்திட  முடியும்தானே...

Arul prakash
Tashildar
----------------------------------------------




 

மந்தைப்பிஞ்சை- கா.சி.தமிழ்க்குமரன்



 மந்தைப்பிஞ்சை-

கா.சி.தமிழ்க்குமரன்

ரூ.180/-


மொத்தம் இருபது  கதைகள் அடங்கிய தொகுப்பு  ‘மந்தைப்பிஞ்சை'. பாதையில்லாக் காட்டில், ஒற்றையடிப்பாதை அமைத்து பயணம் போனார் நூற்றாண்டைக் கடந்த கரிசல் இலக்கிய மேதை கி.ராசநாராயணன். பா.செயப்பிரகாசம், பூமணி, சோ. தர்மன் என நடந்து ஒற்றையடிப்பாதை அரசவீதி ஆயிற்று. அதில் திடமாகவும் தீர்மானத்துடனும் பயணிக்கின்றன கா.சி.தமிழ்க்குமரனின் கதைகள்.

                                                                                                          சென்னையில் உறைபவர்க்கும், அரசியல் - சினிமா -  ஆன்மீகத் தொடர்பு உடையவர்க்கும் எளிதாக வாய்க்கும் ஊடக, வாசகப் பூச்சொரிவு  நாட்டின் ஒதுக்குப் புறங்களில் வாழும் படைப்பாளிகளுக்கு வாய்ப்பதில்லை என்பதை சமீப காலமாய் நாம் உணர்கிறோம். 

மேலும் பெண்ணிய, தலித்திய, திராவிட, முற்போக்கு, சநாதன இன வரையறைப் பீடங்களின் முன் நின்று ஆராசனை வந்து சாமி ஆடுபவர்கள், தங்களது முன் முடிவுகளை அகல நீக்கி வைத்துவிட்டுத் திறந்த மனதுடன் வாசிப்பை மேற்கொண்டால், கா.சி.தமிழ்க்குமரன் போன்ற படைப்பாளிகள் கண்ணில் தென்படுவார்கள். 


நாஞ்சில் நாடன்



வென்றிலன் என்ற போதும்- தொ.மு.சி.ரகுநாதன்

 

வென்றிலன் என்ற போதும்-

தொ.மு.சி.ரகுநாதன்

ரூ.160/-

இந்நூல் 

தொ.மு.சி.ரகுநாதன் நூற்றாண்டு நிறைவு சிறப்பு வெளியீடு

1923- & 2023


“எல்லா இலக்கியங்களும் ஏதேனும் ஒரு வகையில், நம் வாழ்க்கையை ஒட்டியதுதான். வாழ்க்கை என்பது வாழ்வதற்கு மட்டுமல்ல: நன்றாக வாழ்வதற்கு. இந்த நல்வாழ்க்கைக்கு இலக்கியம் பயன்படுகிறது; அதைச் சுலபமாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. வாழ்க்கை என்பது காலத்தைப் பொறுத்ததல்ல; சிந்தனையையும், செயலையும் பொறுத்தது. இலக்கியம் மனித சிந்தனையின் அளவுகோல். சமுதாயமும் நாகரிகமும் செயலின் அளவுகோல்கள். மாத்யூ அர்னால்ட் சொல்வது போல், இலக்கியம் என்பது வாழ்க்கையின் விமர்சனம்தான்..”


மகாதேவ தேசாய்-காந்தியின் நிழல்- தி.விப்ரநாராயணன்




மகாதேவ தேசாய்-காந்தியின் நிழல்

தி.விப்ரநாராயணன்

ரூ 200/-

pages 208


தமது 25 ஆவது வயதில் காந்தியை வந்தடைந்த இளைஞர் மகாதேவ் தனது 50 வது வயதில் காந்தியின் மடியின் மீதே உயிர்த் துறந்தார். எந்தச் சீடனுக்கும் கிடைக்காத பெரும்பேறு.


மகாதேவுக்கு இரண்டு ஆசைகள் இருந்தன. ஒன்று, காந்தியின் Biography யை எழுதுவது. இரண்டு, அவர் மடியில் உயிர் விடுவது. அவ்வளவு பேராசை ஆகாதென்று இயற்கை ஒன்றை மட்டும் வரமளித்தது.


காந்தி தான் மகாதேவ் தேசாயின் உடலைக் குளிப்பாட்டினார். கொள்ளி வைத்தார். 

------------------------------------

இந்த வரலாறு தன்னை இழந்தவரின் வரலாறு. 

ஒரு செயலாளர் எப்படியிருக்க வேண்டும் என்று உலகிற்கு எடுத்துக்காட்டி அதன்படி வாழ்ந்தவரின் வரலாறு.

-----------------------------------

மகாதேவ தேசாய் மறைந்தபோது

ராஜாஜி அவர்கள் பல உள்ளங்களின் எதிரொலியாக ஒரு அஞ்சலி அனுப்பியிருந்தார். அதிலிருந்து....

"காந்திஜியோடு நெருக்கமாகப் பழகி உறவை அனுபவித்தவர்களுக்கு சொல்லால் வர்ணிக்க முடியாத துக்கம் ஆகும். மகாத்மா காந்தி அவர்களுக்கு பேரிடி. மனைவிக்கும் மகனுக்கும் ஏற்படுவதைக் காட்டிலும் பேரிடி ஆகும்.

 காந்திஜிக்கும் மகாதேவிற்கும் ஏற்பட்ட உறவை விவரிக்க முடியாது. மகாதேவ் தேசாய் அவருடைய மறு உடல். காந்திஜி ஓய்வெடுத்தபோது இந்த உடல் வேலை செய்யும். காந்திஜி அனாதையாக்கப்பட்டு விட்டார். 

மகாதேவ் காந்திஜியின் செயல் மட்டுமல்ல, அவருடைய குரலாகும். காந்திஜியுடன் போராடும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு பக்க பலமாக இருந்தவர் மகாதேவ்."

----------------------

வணக்கம்.

என் இனிய நண்பர் திரு விப்ரனின் அண்ணலின் நிழல் நூலுக்குத் தாங்கள் தந்திருக்கும் அற்புதமான

அணிந்துரை வாசித்துப் பெருமிதம் அடைந்தேன்.

நூலாசிரியரின் நூற்பொருள் தேர்வு ஓர் ஒப்பற்ற தியாகசீலரின் வாழ்க்கைச் சரிதம்.

அந்தத் தியாகசீலரின் ஆதர்சம் அறமார்ந்த பொது வாழ்க்கைக்கு ஒற்றைப் பெரும் சான்று.

இருபதாம் நூற்றாண்டை இரு பெரும் உலகப் போர்கள் கண்ட இருண்ட நூற்றாண்டு என்று மனித குலம் எண்ணி மருகி இருந்த காலத்தே அண்ணலின் அறப் போர் ஓர் அருமருந்தாய்த் தோன்றியது அதிசயத்திலும் பேரதிசயம்.

சத்திய வாழ்க்கைக்குச் சான்றாய் விளங்கிய மகானுக்கு அணுக்கத் தொண்டராயிருக்கும் பேறு பெற்ற மகாதேவ தேசாயின் வாழ்க்கை வரலாறு தேசியத்தில் திளைக்க மறுத்துத் திணறித் தடுமாறும் தமிழரைத் திருத்த வந்த நூல் திரு விப்ரனின் மகத்தான நூல்.அந்த நூலின் பெருமையை வியந்து பாராட்டும் தங்கள் உரை நூலுக்குச் சூட்டிய பன்மணி மகுடமாய் ஒளி வீசுகிறது.

அந்த ஒளியில் வாசிப்பவர் வெகு பலராய்ப் பெருகட்டும்.

நன்றி.வாழ்க.

அன்புடன்

விஜய திருவேங்கடம்

--------------------------------

https://youtu.be/VBMIxe9GIMM?si=KYXAzoowvaldmDz2

காந்தியின் நிழல் மகா தேவ தேசாய் புத்தகத்தை எழுதிய திரு விப்ரநாராயணன் அவர்களின் அறிமுக உரையை  மெய்நிகர் நிகழ்வில் கேட்டு மகிழ்ந்தேன்.காந்திக்கு சேவை செய்து மோட்சம் அடைய வேண்டும் என்பதற்காக அவரிடம் தனிச் செயலாளராக 25 ஆண்டுகள் பணிபுரிந்த மகாதேவ தேசாய் அவர்களைப் பற்றி படிப்பதற்கு ஆர்வத்தை தூண்டி உள்ளார் ஆசிரியர் விப்ரநாராயணன் அவர்கள்.  அவருக்கு  நெஞ்சார்ந்த நன்றி. இந்த அருமையான புத்தகத்தைப் பதிப்பித்து சிறப்பித்த சிறுவாணி வாசகர் மையத்திற்கு வாழ்த்துகள்

------------------------------------

படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தில் உள்ள  பல நிகழ்ச்சிகளை  பகிர்ந்து கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது.அப்படிப் பார்த்தால் மொத்த புத்தகத்தையே பகிர்ந்து கொள்ளத்தான் வேண்டும். அது சாத்தியமில்லை.ஆனாலும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டே தான் ஆகவேண்டும்..இந்த ஒரு நிகழ்ச்சி  முக்கியமானதாகப் பட்டது.


    காந்தி கஸ்தூர்பா ,காந்தியின் உதவியாளர் மகாதேவ தேசாய் அவரது குடும்பம் ஆகியோர் ஒரிஸ்ஸாவின் பூரி நகரின் அருகில்  தங்கியுள்ளனர்.பூரி ஜகந்நாதர் ஆலயம் அப்போது ஹரிஜனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை என்பதால் காந்தியும் அதனுள்ளே போவதில்லை. ஒருநாள் கஸ்தூர்பாவும், மகாதேவ தேசாயின்  மனைவி துர்காவும்  அவர்களது  மகன் நாராயண்  தேசாயும் பூரி ஆலயம் இருக்குமிடத்துக்கு  பக்கம் செல்கின்றனர். பரம பக்த  வைஷ்ணவர்களான அந்தப் பெண்கள் இருவருக்கும் உள்ளே போக வேண்டுமென்று ஆசை.ஆனால், 7 வயது சிறுவனான நாராயண் தேசாய் அங்கே போவது பாபுஜிக்குப் பிடிக்காது அதைச் செய்ய வேண்டாம் என்கிறான்.ஆனால் இவர்களால் உள்ளே போவதை தவிர்க்க முடிவதில்லை. நாராயண் வெளியிலேயே நின்று விடுகிறான்.


  பிறகு இவர்களது இருப்பிடம் சென்றதும் இந்த விஷயத்தை காந்தியிடமும் சொல்லி விடுகிறான் சிறுவன் நாராயண்.. காந்தி மிகவும் வருத்தமுறுகிறார். வருத்தம் என்பதை விட காந்தி கொதிப்படைந்து விடுகிறார் என்பதே பொருத்தமானது. 50 ஆண்டுகள் தன்னுடன் வாழ்ந்தும் பா இப்படியொரு காரியத்தை செய்துவிட்டாரே என்று எண்ணி கொதிப்படைந்து விடுகிறார். அவரது ரத்த அழுத்தம் அதிககரித்து விடுகிறது. மகாதேவ  தேசாயை அழைத்து  இவர்கள் அந்தப்பக்கம்  போகிறார்கள் என்று தெரிந்தும் நீ ஏன் கோவிலுக்குள் போகக்  கூடாது,என்றும், அப்படி போவது அதர்மம் என்பதை அவர்களுக்கு நினைவூட்டவில்லை என்று முன்னெப்போதுமில்லாத வகையில்கடுமையாகக்  கண்டித்து விடுகிறார். அந்தப் பெண்களின் இந்தத் தவறான  செய்கைக்கு மகாதேவ தேசாயு ம் தானும் தான்   காரணம் என்றும் பேசி விடுகிறார்.வழக்கம் போல இந்தத்தவரினை சரி செய்ய உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் சொல்கிறார்.


  தேசாயின் நிலை மிகவும் சங்கடத்துக்குள்ளாகிவிடுகிறது.காந்தியின் நிலைப்பாடு கஸ்தூர்பாவுக்கு  தெரியாதது அல்ல.இவரது மனைவிக்கும் அது நன்றாகத் தெறியும். மேலும் சிறுவன் நாராயண் தேசாய் அதைச் சொல்லி எச்சரிக்கவும் செய்து விட்டு தானும் கோவிலுக்குள் போகாமல் வெளியே நின்று இருக்கிறான். இத்தனைக்கும் பின் காந்தி இந்த பிழை தன்னுடையது, என்று நினைப்பது அவருக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

காந்திக்கு பதிலாக இவர் அந்த உண்ணா  நோன்பை மேற்கொள்கிறார்.காந்தியின் உதவியாளர் பணியிலிருந்து விலகி விடுவதாகவும் சொல்கிறார்.காந்தி தவறான சிந்தனைக்கும், சிந்தனையற்ற செயலுக்கும் உபவாசம் இருப்பது பரிகாரம் ஆகாது என்று சொல்லிவிடுகிறார்,கூடவே தன்னிடமிருந்து விலகுவது என்பதும் நடக்காத விஷயம் என்று விடுகிறார்.


  இந்தச் சம்பவத்தை மகாதேவ தேசாய் 'ஹரிஜன்' இதழில் எழுதி வெளியிடுகிறார்.ஆனால் இங்கே குஹா ஹரிஜன் இதழில் வந்த தேசாயின் எழுத்துக்கும் அவரது கையெழுத்துப் பிரதிக்கும் உள்ள வித்தியாசத்தைக் குறிப்பிடுகிறார்.கையெழுத்துப் பிரதி சபர்மதி ஆசிரமத்தில் கிடைத்திருக்கிறது. அதை காந்தி தணிக்கை செய்து சில இடங்களை ,சொற்களை மாற்றிய பிறகே ஹரிஜன் இதழில் வெளியிடப்பட்டிருக்கிறது.


  முக்கியமான மாற்றங்கள்..தேசாய், கோவிலின் அர்ச்சகர்களை, "Pot Bellied Pandas " என்றே குறிப்பிட்டிருக்கிறார். காந்தி அதை,'Unscrupulous ' என்று மாற்றியிருக்கிறார்.அந்தக் கட்டுரைக்கு தேசாய் தந்த தலைப்பு 'A  Blunder -and an Expiation',காந்தி அதை A Tragedy என்று மாற்றிவிடுகிறார்.


  அந்தக் கட்டுரையில் தேசாய்,கஸ்தூர் பாவும், தனது  மனைவியும் ஹரிஜனங்கள் மேல் மிகுந்த பற்று கொண்டவர்கள், எந்த வித்தியாசத்தையும் காண்பிக்காதவர்கள்,அவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டவர்கள் தான் என்றும், கஸ்தூர்பா பெண்ணினத்தின் தூய்மையான பிரதிநிதி அவரும் தனது மனைவியும்  ஹரிஜன சேவையில் ஆத்மார்த்தமான ஈடுபாடு கொண்டவர்கள் தான் என்றாலும்,காந்தியைப் போல,ஹரிஜனங்கள் உள்ளே நுழைய முடியாத கோவிலுக்குள் செல்வதே அதர்மம் என்று அவர்களுக்குத் தோன்றவில்லை,அதனாலேயே கோவிலுக்கு சென்று விட்டனர். அவர்களின் பரிசுத்தமான ஹரிஜன சேவையை பாராமல்,இந்த ஒரு சிறு பிழையை  காந்தி இவ்வளவு பெரிதாக்கியிருக்க வேண்டியதில்லை என்றும் எழுதுகிறார்.       


   இந்தக் கட்டுரையிலேயே காந்தியுடன்  இருப்பதென்பது எவ்வளவு சிரமமான காரியம் என்று. ஒரு   கவிதையின் மூலமும்  காட்டுகிறார்.. 


    To live with the saints in heaven

    is a bliss and a glory   

    But to live with a saint on earth  

    Its a different story..


  நம்முன் எழும் கேள்வி  காந்தியைப் போல,தாம் கொண்ட  கொள்கைக்கு தம்மை சார்ந்தவர்களையும் மாற்றி அதனிருந்து அவர்கள் வழுவினாலும் அதைத் தனது  தவறாக  நினைத்து வருந்திச் செயல்படுவது  சரியா,அல்லது தற்கால அரசியல் தலைவர்கள் போல வெளியே மத நம்பிக்கைகளையும் சாஸ்திர சடங்குகளையும்  இழித்துப் பேசி ஊருக்குப் பகுத்தறிவு உபதேசம் செய்து விட்டு, அந்தக் காரியங்களையே  தம் குடும்பத்தார் செய்யும் போது  அது அவர்களின்   ஜனநாயக உரிமை என்று போலியாக பேசுவது சரியா?


   'Be the change you want to see in the World' என்பது தானே எப்போதும் சரியானது.


(இந்த நிகழ்ச்சியில் வரும் சிறுவன் நாராயண் தேசாய் நம்  காலத்தின் முக்கியமான காந்தியராக விளங்கியவர் 2015ல் தமது 89வது வயதில் காலமானார்)

Suresh venkadathri 

------------------------------------

துளஸிதாஸர், "ராமனுடைய புகழ்க் கொடிக்கு இலட்சுமணனே கம்பம் " எனக்குறிப்பிட்டிருக்கிறார். அது வரலாற்று மனிதர்களில் முற்றிலும் பொருந்துவது மகாத்மா காந்தி - மகாதேவ் தேசாயின் உறவில் தான்.

காந்தியின் செயலர் மகாதேவ் என்பது குறைத்து மதிப்பிட்டு விடும் பிரயோகம்தான்.அவர்களிடையே நிலவிய அன்பும் பரஸ்பரம் மரியாதையும் பிணைப்பும் அதனினும் மேலானவை. உண்மையில் அந்தப் பிணைப்பை விளக்க உறவுமுறை வார்த்தைகள் ஏதும் இல்லை.

மனு காந்தி எழுதியதைப் போல பொறாமை படத்தக்க இறப்பும் மகாதேவுக்கே நேர்ந்தது.

காந்தியின் நிழல் என இப்புத்தகம் குறிப்பிடுகிறது. நிழல் எனில் அவ்வுடலே தன்னுடலாக மாறிய தருணம். உள்ளும் புறமும் மகாதேவின் சிந்தனையிலும் செயலிலும் காந்தியே நிறைந்து நின்றார்.

மிகச்சிறந்த படிப்பாளி, அதீத சுறுசுறுப்பு, நன்னடத்தை, பணிவு, பன்மொழிப் புலமை , செயல்திறன், நினைவாற்றல், விடாத தேடுதல்.....என ஆகச் சிறந்த குணநலன்களைப் பெற்றிருந்த மகாதேவ் தேசாயைச் சரியான படி காந்தியிடம் சேர்த்த காலத்தின் கரத்தைக் கண்களில் ஒற்றிக் கொள்ளவே தோன்றுகிறது.

மிகச் சிறந்த காந்தியரான திருமலை அவர்களின் புதல்வர் விப்ரநாராயணன், தந்தை வழி நின்று இந்த அபாரமான

முக்கியமான புத்தகத்தைத் தமிழுக்குத் தந்திருக்கிறார்.

சிறுவாணி வாசகர் மையம் இதனை வெளியிட்டதன் மூலம் மேலும் பெருமை கொள்கிறது.

chithra balasubramanian

---------------------

எத்தனையோ சித்தர்கள் இந்த பூவுலகில் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு நம்பிக்கையான சீடர்களைத் தேடியும் அது கிடைக்கவில்லை. ஆகவே, தங்கள் ஞானத்தை எல்லாம் இறக்கி வைக்க முடியாமல் – அடுத்த தலைமுறைக்கு கடத்த முடியாமல் - மறைந்து போயினர்!

காந்தியின் அதிர்ஷ்டம் மகாதேவ தேசாய் அவருக்கு சீடராக வாய்த்தது.

காந்தியோடு ஒப்பிடும் போது சந்தேகமில்லாமல் மகாதேவ தேசாய் காந்தியைக் காட்டிலும் அறிவு கூர்மையானவர்! இதற்கு Gita Accorging to Gandhi என்ற பிரமிக்கதக்க நூலும், பல பத்திரிக்கையில் அவர் எழுதிய கட்டுரைகளுமே சாட்சி! 

உழைப்பிலும் காந்தியை விஞ்சக் கூடிய உழைப்பாளி! காந்தியின் முகக் குறிப்பு அறிந்தும், மனதை அறிந்தும் செயல்படுவதில் நிகரற்றவர். ஆகவே, அவர் விரும்பி இருந்தால் தன்னையே ஒரு பெரிய ஆளுமையாக நிலை நிறுத்திக் கொண்டிருக்க முடியும்..! ஆனால், அவர் தன்னை முற்றிலும் கரைத்துக் கொண்டு காந்திக்கு பணிவிடை செய்வதற்காகவே தன் வாழ்வை அர்ப்பணித்தார்!

 ‘’தேசாய் என்னுடன் இருக்கையில் எனக்கு இரண்டு மடங்கு ஆற்றல் கிடைத்துவிடுகிறது’’ என்றார் காந்தி!

அதனால் தான் யாரையும் அவ்வளவு சுலபத்தில் அங்கீகரிக்காத ராஜாஜி அவர்களே, ‘’மகாதேவ் காந்தியின் குரல், காந்தியின் நிழல், காந்தியின் இன்னொரு உடல்’’ என்றார்!

காந்தி என்ற பிரம்மாண்ட ஆலமரத்தை தாங்கி நிற்கும் அடிமண்ணாக 25 ஆண்டுகள் வாழ்ந்து மகாதேவ் தேசாய் மறைந்த போது தான் காந்தி உணர்ந்தார், ‘இவன் சீடானாக இருந்ததாக நான் நம்பி இயங்கினேன்! ஆனால், இவன் குருவாகவும் இருந்து என்னை இயக்கி உள்ளான்’ என!

அதனால் தானோ என்னவோ, மகாதேவ் தேசாயை எரித்த சாம்பலை தினமும் சிறிதளவு பூசிக் கொண்டார், நன்றி கலந்த உணர்ச்சி பெருக்குடன்!

இப்படிப்பட்ட மகாதேவ் தேசாயை இன்றைய தலைமுறைக்கு கடத்தும் விதமாக அருமை நண்பர் விப்ரன் அவர்கள் கடந்த ஓராண்டு உழைப்பில் மகாதேவ் தேசாய் என்ற நூலை கொண்டு வந்துள்ளார். சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடாக நேற்று தி.நகர் காந்தி கல்வி நிலையத்தில் இந்த நூல் வெளியானது! இந்த நிகழ்வில் நானும் கலந்து பேருவகை கொண்டேன்.


சாவித்திரி கண்ணன்

--------------------------------------

தகடூர் புத்தகப் பேரவை 

24.12.23

நூல் அறிமுகம்

மகாதேவ் தேசாய்

நிகழ்ச்சி நிரல்

 நூல் அறிமுகம்

இராமமூர்த்தி

  (20 -25 நிமிடங்கள் )

  ஏற்புரை :

விப்ர நாராயணன் 

 கலந்துரையாடல் 10 நிமிடங்கள்

 நிறைவுறை : 

 மருத்துவர் இரா.செந்தில் செயலாளர் 

 தகடூர் புத்தகப் பேரவை ,

 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 

Zoom link

https://us02web.zoom.us/j/9805204425

-இ.தங்கமணி

ஒருங்கிணைப்பாளர்

தகடூர் புத்தகப் பேரவை 

தருமபுரி

-------------------------------------


https://youtu.be/CYCWmj7vj_Q

 https://www.youtube.com/watch?v=DRX8gPpAvaw

 https://youtu.be/CYCWmj7vj_Q

https://youtu.be/xiYgEHYdgf8

 https://youtu.be/Zg-WqBoOKck

 https://youtu.be/tmVINV5NUjA

 https://youtu.be/xiYgEHYdgf8

 https://karanthaijayakumar.blogspot.com/2024/02/blog-post_26.html

 https://youtu.be/VBMIxe9GIMM?si=KYXAzoowvaldmDz2





எப்படி வாழவேண்டும்? வெ.சாமிநாத சர்மா





 ஜனவரி -2024 வெளியீடு

எப்படி வாழவேண்டும்?

வெ.சாமிநாத சர்மா

       978-93-92916-84-7

பக்கங்கள் 192

விலை ரூ 200/-


கவிஞன்.


புகழுடன் வாழவிரும்பும் கவிஞன் இளமையிலிருந்து நல்ல நூல்கள் பலவற்றைக் கற்க வேண்டும். பழமையாயுள்ள இதிகாச புராணங்களென்ன, காவிய நாடகங்களென்ன, சங்கீதம், சிற்பம், நாட்டியம் முதலிய நுண்கலைகளென்ன. இப்படி பலவற்றிலும் தேர்ச்சி பெறவேண்டும். உலக விவகாரங்களிலும் நல்ல பரிச்சயம் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐவகை இலக்கணங்களிலும் புலமை பெற வேண்டும். கவிதை இலக்கண வரம்பிற்குட்படாதது என்று சொல்லிக் கொண்டு இலக்கணத்தை புறக்கணிக்கக்கூடாது.

பக். 16-17


ஆசிரியன்.


நீ தன்மதிப்புடைய வனாயிருக்க வேண்டுமானால், அதற்காக உன்னை எல்லோரும் மதிக்க வேண்டுமானால், நீ ஒழுக்கமுடையவனாயிருக்க வேண்டும். 

ஒழுக்கத்தினின்று பிறப்பதுதான் தன் மதிப்பு. ஒழுக்கம் இன்றேல் மதிப்பில்லை. செல்லாக் காசுதான்.

பக். 70.

                 .........

அறிஞர் வெ.சாமிநாத சர்மாவின் 

"எப்படி வாழவேண்டும்?",

1955 ல்  முதல் பதிப்பாகவும், 1959 ல் இரண்டாம் பதிப்பாகவும் வெளிவந்தது. தற்போது 64 ஆண்களுக்கு பிறகு மீள் பதிப்பாக 2024ல் வெளிவருகிறது. 69 ஆண்டுகளைக் கடந்தும் சர்மாவின் எழுத்து உயிர்ப்புடன் இருக்கிறது என்பதே இந்த நூலின் சிறப்பு.


சர்மா,சமுதாயத்திற்கு இன்றியமையாதவர்களாகக் கருதிய, 

கவிஞன்

ஓவியன்

நடிகன்

ஆசிரியன் (பத்திரிக்காசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்)

வைத்தியன்

வியாபாரி

உத்தியோகஸ்தன்

விவசாயி   

என்று எட்டு பேரை குறிப்பிட்டு அவர்கள் யார்? எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார். சமூகத்தில் ஒவ்வொருவரின் முக்கியத்துவம், அதனால் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள், வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆற்றல்கள் இவைகளைப் பற்றியெல்லாம் இங்கே பேசுகிறார் சர்மா. அதே நேரத்தில் எல்லோரிடமும் அவசியம் இருக்க வேண்டிய பண்புகளாக குறிப்பிடுவது, ஒழுங்கு,ஒழுக்கம்.


"ஒவ்வொருவரைப் பற்றியும் பிரஸ்தாபிக்கிற போதும், ஒழுங்கையும், ஒழுக்கத்தையும் வற்புறுத்தி வந்திருக்கிறேன். தனிமனிதனிடத்திலும், சமுதாயத்தியத்திலும் இவ்விரண்டு பண்புகளும் போற்றி வளர்க்கப்பட வேண்டும்.

இல்லாவிட்டால், தனி மனிதன் இரண்டு கால பிராணியாகவும், சமுதாயம் கீழான உணர்ச்சிகளின் விளையாட்டு மைதானமாகவும் மாறிவிடுதல் திண்ணம்.... சுதந்திர இந்தியாவே இதை நினைவில் வைத்துக் கொள்" என்கிறார் சர்மா நூலின் முன்னுரையில்

சிங்கப்பூர் வாசகர் வட்ட ஆண்டுவிழாவில் எழுத்தாளர் . நாஞ்சில் நாடன்

 

https://www.facebook.com/sangamam.sg/videos/427007093198709


https://www.tamilmurasu.com.sg/lifestyle/story20240318-148167?fbclid=IwAR2i5STotX-QcEP0R_zLu9jr7OuaKZjPpsLwQwrVySbLNEsWYhi6wZ-NhMg




நேற்று நடைபெற்ற வாசகர் வட்ட ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய சாகித்ய விருதுபெற்ற எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்கள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவின் இலக்கிய வளர்ச்சியைப் பாராட்டினார். மேலும், சிறுவாணி வாசகர் மையம் நடத்திய, ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப்போட்டிக்கு வந்திருந்த 500க்கும் மேற்பட்ட சிறுகதைகளில் பரிசுக்குரியதாக 12 சிறுகதைகளைத் தான் தேர்ந்தெடுத்ததாகவும் அவற்றில் 2 சிறுகதைகள் சிங்கப்பூரிலிருந்து வந்தவை என்றும் குறிப்பிட்டார். 

அவ்விரு சிறுகதைகள், எழுத்தாளர் தமிழ்ச்செல்வி இராஜராஜன் அவர்களது 'பெண்ணானவள்' மற்றும் என்னுடைய ‘பெருந்தீ’. 


தமிழ் இலக்கியத்தின் முக்கியப் படைப்பாளர் இதைக் குறிப்பிட்டது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. எழுத்தாளர் திரு. நாஞ்சில் நாடன் ஐயா அவர்களுக்கு  நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


விழாவின் ஏற்பாட்டாளர்கள் திரு.ஷாநவாஸ், திருவாட்டி சித்ரா ரமேஷ் இருவருக்கும் வாழ்த்துகள்.


புகைப்பட உதவி: திரு. தியாக இரமேஷ்     Manimala mathialagan

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....