Sunday, January 7, 2024

"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

 





தென்றல் பேசுகிறது...

Jan 2024

கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி வாசிக்கும் சுவைஞர்கள் இருக்கிறார்கள் என்று உறுதிபடக் கூறுகிறார் ‘சிறுவாணி வாசகர் மையம்’ ஜி.ஆர். பிரகாஷ் இந்த மாத நேர்காணலில்.

---------------------------

தென்றல் இணைய தளத்தில் வாசிக்கலாம்/ஒலி வடிவில் கேட்கலாம்.


வாசிக்க:

http://tamilonline.com/thendral/article.aspx?aid=15462


கேட்க:

http://tamilonline.com/thendral/playaudio.aspx?aid=15462


#தென்றல்_பேசுகிறது 

#ஜி_ஆர்_பிரகாஷ் #சிறுவாணி_வாசகர்_மையம்


அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய  நேர்காணல்.


நன்றி

நேர்காணல் செய்த திரு.அரவிந்த் சுவாமிநாதன்,

ஆசிரியர் குழு.

குரல்வடிவம் தந்துள்ள திருமதி.சரஸ்வதி தியாகராஜன்.


ஜி.ஆர்.பிரகாஷ்

---------------------

நல்ல விவரமான, உங்கள் பணிகளை அடக்கத்துடன் வெளிப்படுத்தும் பேட்டி, வாழ்த்துகளுடன்👏

Thiru.Vijayaramalingam ,Tanjore

----------------------

மிக்க மகிழ்ச்சி..

நீங்கள் தகுதி உடையவர் என்று அயலகம் அறிந்துள்ளது..

தமிழகமும் விரைவில் அறியும்

🙏🙏🙏 Mr. Venkatraghavan ,Coimbatore

------------------------

படிச்சிட்டேன் பிரகாஷ். அருமை.  அர்ப்பணிப்பான உழைப்பிற்கான அங்கீகாரம். வெற்றி தொடர வாழ்த்துகள்.

G.A.Prabha,Gobichetti palayam

-------------------------

வாழ்த்துகள்.தொடர்க! பொலிக! முன்னெடுக்கும் செயல்கள் யாவும் நனி சிறக்க!

Mr.Parthiban,Karaikal

--------------------------

First class Prakash ! ரொம்ப நல்லா வந்திருக்கு. நல்ல கவரேஜ். போட்டோக்களும் நல்லா இருக்கு. வாழ்த்துகள் !! 

Thiru.Va.Srinivasan

-------------------------




Sunday, December 31, 2023

எட்டாம் ஆண்டுத் துவக்கம்- அறிவிப்பு


அனைவருக்கும்  வணக்கம்.


2017 இதே நாளில் அறிவித்துத் துவக்கப்பட்ட சிறுவாணி வாசகர் மையம் ஏழு ஆண்டுகளை நிறைவுசெய்து எட்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வாசிப்பை நேசிப்பவர்களை ஒருங்கிணைத்து "மாதம் ஒரு நூல்"எனச் சிறந்த நூல்களைத் தேர்வுசெய்து உறுப்பினர்களுக்கு அனுப்பிவருகிறோம்.

இப்பணியில் எங்களை வழிநடத்திச் செல்லும் ஆலோசகர்கள், எழுத்தாளர்கள்,
உறுப்பினர்கள்,
அச்சகத்தார், பத்திரிகை 
நண்பர்கள், முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.

எட்டாம் ஆண்டுத் துவக்கத்தை முன்னிட்டு மார்ச்-31க்குள் கட்டணத்தைப் புதுப்பிக்கும் உறுப்பினர்களுக்கும்,
புதிதாக இணையும் உறுப்பினர்களுக்கும் ஒரு புத்தகம் கூடுதலாக அன்பளிப்பாக அளிக்கவுள்ளோம்.

🙏🙏🙏
தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ்
சிறுவாணி வாசகர் மையம்.
------------------------------------------------





சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச் - 2024 உடன் ஏழாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)

*ஏப்ரல் 2024-மார்ச் 2025 (எட்டாம்) ஆண்டுக்கான 
கட்டணம் ரூ.1800 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2200 /-
(தபால் செலவு உட்பட).

தங்கள் ( ஏப்ரல் 2024-மார்ச் 2025) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மையத்தில் இணைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மார்ச் -31க்குள் புதுப்பிப்பவர்களுக்கும்,புதிதாக இணைபவர்களுக்கும் வழக்கம்போல் புத்தகஅன்பளிப்பு உண்டு.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 
நன்றி.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ் 

9940985920 whatsapp 
8778924880 Gpay

சிறுவாணி வாசகர்  மையம்.


 

Sunday, December 17, 2023

மழையும் புயலும் -வ.ரா- அக்டோபர்-2023






 வ.ரா.-வின் எழுத்துக்கள் எல்லாம் மனிதனுடைய சிந்தனையைக் கிளறுவனவாகவே அமைந்திருக்கின்றன. அவர் எழுதிய நாவல், நாடகம், அளவற்ற கட்டுரைகள், பத்திரிகைத் தலையங்கம் எதுவாயினும் சரி, குறுகிய நமது முதுகெலும்பை நிமிர்த்தாமல் போகாது.

வ.ரா, புதுமையான பல துறைகளில், ‘முதல் ஏர்’ பிடித்திருக்கிறார். தமிழுக்குப் புதிதான ‘நடைச் சித்திர'த்தை வெற்றியுடன் கையாண்டவர் இவர்தான்.
வ.ரா.-வின் நடை எளிதானது: சக்தியுள்ளது.

 தற்காலத் தமிழ் இலக்கியத்தின் சரித்திரம் எழுதப்படுமானால், அவருடைய கட்டுரைகளுக்கு நிச்சயமாய் அதில் இடம் உண்டு. சிந்தனை செய்பவர்களைப் பற்றிப் பேச்செழுந்தால் வ.ரா-வை மறக்க முடியாது. வசன நடையைப் பற்றி நினைத்தால், வ.ரா-வுக்கு முன்னணியில் ஸ்தானம் கொடுத்தே தீரவேண்டும்.

வ.ரா-தான் நம்முடைய 'பெர்னார்ட் ஷா.'

ந.பிச்சமூர்த்தி





Wednesday, September 27, 2023

'இன்னொரு கனவு' - சுப்ரமணிய ராஜு -செப்டம்பர்-2023






'இன்னொரு கனவு' 

சுப்ரமணிய ராஜு 



 சுப்ரமணிய ராஜு அவர்களின் 'இன்னொரு கனவு' சிறுகதைத் தொகுப்பை வாசித்து மகிழ்ந்து மிதந்தேன். அவரின் எழுத்து நடை, கதை நேர்த்தி , கதை மாந்தரின் அனுபவ பகிர்வு எல்லாமே வித்தியாசமான ரசிக அனுபவத்தைத் தந்தது. ஒவ்வொரு கதை முடிவிலும் ஒரு முடிச்சு, ஒரு திடுக்கிடல் பிறகு நம் மனதில் ஒரு புன்முறுவல் நிச்சயம். இதுதான் அவரைப் படிக்கும் முதல் அனுபவம். 

முன்னுரையில் அவரின் எழுத்தின் வழியே நீங்கள் சொல்லி இருந்ததைப் போல மந்தையில் முந்தைய மாட்டின்  பின் செல்லும் மாட்டுத்தனம் இல்லாத , மந்தையில் இருந்து பிரிந்தவர என்பதை அவரது கதைகளின் மூலம் அறிகிறேன்.

இவரை அறிமுகம் செய்த சிறுவாணிக்கு நன்றிகள். தொடர்ந்து அவரது அனைத்து படைப்புகளையும் படிக்க ஆவலாக உள்ளேன். நன்றி.

திரு.ஜெகதீசன், நிலக்கோட்டை

------------------------------------------------------------------

இன்னொரு கனவு.

அருமையான சிறுகதைகள்...

கையில் எடுத்து விட்டேன்.

பாதிக்கு மேல் படித்து விட்டேன்.

என் அபிமானமான எழுத்தாளர்.

 S.R.விஸ்வநாதன். கூடுவாஞ்சேரி

-------------------------------------------------------------------

I too read. It was nice. 🙏🙏

Saradha sundar,salem

--------------------------------------------------------------

இன்று 26.09.23  மாலை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் சுபாஷிணி மேடம் நடிகர் சிவக்குமார் வீட்டில் சென்று "அம்மா அம்மா,இன்னொரு கனவு,குஜராத்தி சிறுகதைகள்" ஆகிய புத்தகங்களைக் கொடுத்தார்.

நடிகர் சிவக்குமார் சிறுவாணியின் உறுப்பினர்.



With Oviyar Jeeva


அமரவாழ்வு- கல்கி கதைகள்-1 -ஆகஸ்ட்-2023



 ஆகஸ்ட்-2023

அமரவாழ்வு- கல்கி கதைகள்-1 

அம்மா அம்மா- பூர்ணம் விசுவநாதன் சிறுகதைகள் - ஜூலை-2023








ஜூலை- 2023
அம்மா அம்மா- 
பூர்ணம் விசுவநாதன் சிறுகதைகள்


                                                                    With Oviyar Jeeva



இன்று 26.09.2023 மாலை சிறுவாணி வாசகர் மையத்தின் தலைவர் சுபாஷிணி மேடம் நடிகர் சிவக்குமார் வீட்டில் சென்று "அம்மா அம்மா, இன்னொரு கனவு,குஜராத்தி சிறுகதைகள்" ஆகிய புத்தகங்களைக் கொடுத்தார்.
நடிகர் சிவக்குமார் சிறுவாணியின் உறுப்பினர்.

Thursday, September 21, 2023

நாஞ்சில் நாடன் விருது - 2023 YOUTUBE Videos & Photos



சிறுவாணி வாசகர் மையம்

வழங்கும்

நாஞ்சில் நாடன் விருது - 2023

(17.09.2023)

விருதாளர் அருட்செல்வப் பேரரசன்


எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தலைமை உரை

 https://www.youtube.com/watch?v=Kawmaxtq7HU


எழுத்தாளர் கிருஷ்ணா சிறப்புரை.

https://youtu.be/pkplS9-MGOI?si=dTbbyD1scWL9XbJm


எழுத்தாளர் சொல்வனம் வ.ஸ்ரீநிவாசன் வாழ்த்துரை.

https://youtu.be/R2dZmJyH41U


ஏற்புரை 

விருதாளர் அருட்செல்வப் பேரரசன்


வரவேற்புரை-

தி.சுபாஷிணி தலைவர்

சிறுவாணி வாசகர் மையம்


வாழ்த்துரை-

திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)


பாராட்டுப் பத்திரம் வாசிக்க....

ஜி.ஆர்.பிரகாஷ்

ஒருங்கிணைப்பாளர்

https://www.youtube.com/watch?v=oLCGHecN_pw

MEDIA PARTNER 

Shruthi ilakkiyam


-----------------------------------------------------------------------------------
நாஞ்சில்நாடன் விருது  2023 விழா 
விருது பெறுபவர் திரு அருட்செல்வப் பேரரசன் அவர்கள்
ஆவணம் Jayapal Ramiah Youtube Video 

சிறப்புரையாளர்களை மேடைக்கழைத்தல் மற்றும் கடவுள் வாழ்த்து  
 RaJa Morning STAR 3655


திரு ஜி.ஆர். பிரகாஷ் விருதாளருக்கு வாழ்த்துமடல் வாசித்தல் மற்றும் சிறப்புச் செய்தல் விருது வழங்குதல் 
 RaJa Morning STAR 3657



திருமதி தி. சுபாஷிணி  வரவேற்புரை
RaJa Morning STAR 3656


திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)வாழ்த்துரை 
RaJa Morning STAR 3658


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் அவர்களின் வாழ்த்துரை 
 RaJa Morning STAR 3659



திரு வ. ஸ்ரீநிவாசன் வாழ்த்துரை 
 RaJa Morning STAR 3661


திரு கிருஷ்ணா  வாழ்த்துரை
RaJa Morning STAR 3660



திரு அருட்செல்வப் பேரரசன் அவர்களின் ஏற்புரை
RaJa Morning STAR 3662


திரு ஜி.ஆர். பிரகாஷ் அவர்களின் நன்றியுரை 
 RaJa Morning STAR 3663



செயல்பாட்டாளர்களுக்குச் சிறப்புச்செய்தல்
RaJa Morning STAR 3664

-----------------------------------------------------------------------



                                                                        
நாஞ்சில் நாடன் விருது - 2023 (17.09.2023)Photos
 

"தென்றல்"இணைய இதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றிய நேர்காணல்.

  தென்றல் பேசுகிறது... Jan 2024 கையில் இருக்கும் செல்பேசியில் 10 வார்த்தையைத் தாண்டி வாசிக்கத் தயங்கும் இந்த யுகத்தில் சிறந்த நூல்களை வாங்கி...