சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விழா நாள்: ஆகஸ்ட் 09 மாலை 5.30 முதல்...
இடம்: ஆர்த்ரா ஹால் அண்ணாசிலை
அருகில், அவிநாசி சாலை, கோவை
----------
கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று
துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை
இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .
இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த
படைப்புகள் உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக திரு.நாஞ்சில்நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன்
(RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர். ஓவியர் ஜீவா புத்தகங்களுக்கான அட்டைப்படங்களை வடிவமைத்துத்
தருகிறார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும்
500+ உறுப்பினர்கள் உள்ளனர்.
எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது பற்றி சிறு
அறிமுகம் ;
கலை, இலக்கியம் சமூகம்
ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும்
இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000/- ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .இவ்விருதை
நிறுவியவர் திரு.வி.கிருஷ்ணகுமார் அவர்கள்.
முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;
ஓவியர் ஜீவா (2018),
முனைவர் ப. சரவணன் ( 2019) ,
பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் (2020),
மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்(2021)
சமூகச் செயற்பாட்டாளர் 'கௌசிகா' திரு. செல்வராஜ்(2022)
மொழிபெயர்ப்பாளர் திரு.அருட்செல்வப் பேரரசன்(2023)
கவிஞர் இசை(2024)
எழுத்தாளர் வேலாயுத முத்துக்குமார் (2025)
------------------
விருதாளர் திரு.இரா.மணிகண்டன்
நொய்யல் ஆறு, அதைச் சார்ந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பது, கோயம்புத்தூர்
நகரத்தில் மக்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவது, பசுமைப்
பரப்பளவை அதிகரிப்பது, பல்லுயிர்ச்சூழலைப் பெருக்குவது, பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல்
விழிப்புணர்வை மேம்படுத்துவது எனும் நோக்கங்களோடு 2017 முதல் திரு.இரா.மணிகண்டன் தலைமையில்
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டுவருகிறது.
.இவ்வமைப்பின் தன்னார்வலர்கள் வாரம்தோறும் ஏரிகள், குளங்கள், குட்டைகள்,தடுப்பணைகள்
போன்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தூர்வாருதல், நெகிழிக் குப்பைகளை அகற்றுதல் போன்ற
தூய்மைப் பணிகளைச் செய்துவருகிறார்கள்.இவர்களின் செயல்பாடுகளால் கோவையைச் சுற்றியுள்ள
நீர்நிலைகள் தற்போது நீர்நிறைந்து காணப்படுகின்றன.
பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் விதமாக பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள்
கோவையின் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன.
வெள்ளலூர் கிராமத்தில் வெள்ளலூர்க் குளம் பட்டாம்பூச்சி பூங்கா,
காளப்பட்டியில் சங்க இலக்கியப் பூங்கா,
சீரபாளையத்தில் சமூகப் பூங்கா ஆகியவை இவரது எண்ணத்தில் உருவாகியுள்ளன.
திரு.இரா.மணிகண்டன் அவர்களின் சீரிய இச்சேவைகளுக்காக மத்திய,மாநில
மற்றும் தனியார் அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிறுவாணி வாசகர் மையம் நாஞ்சில்நாடன் விருது (2026), திரு.இரா.
மணிகண்டன் அவர்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி
அடைகிறது.
தொடர்புக்கு - ஜி.ஆர்.பிரகாஷ்
9940985920 , 8778924880


No comments:
Post a Comment