Tuesday, November 6, 2018

அன்புள்ள புல்புல்







ஆகஸ்ட் -2018 "அன்புள்ள புல்புல்"
காந்தியக் கட்டுரைகள்-
யுவபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன்-

பக்கங்கள் 196    விலை 200 /-
**********************************************************************************************************

Kannan Thandapani is with Jeeva Karikalan and 2 others.
July 30
சுனில் கிருஷ்ணன் காந்தி குறித்து எழுதிய முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பாக 'அன்புள்ள புல்புல்நூலை யாவரும் பதிப்பகம் மற்றும் சிறுவாணி வாசகர் மையம் பதிப்பித்துள்ளனர்.

கோவைப் புத்தகக் கண்காட்சியில்அன்புள்ள புல்புல் நூல் வெளியீட்டு விழாவின் போது...
 புத்தகத்திருவிழாவின் இறுதிநாளில் நடைபெற்ற "அன்புள்ள புல்புல்" நூல்வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புத் தந்த எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன்,
பதிப்பாளர் ஜீவகரிகாலன்,
திரு.கண்ணன் தண்டபாணி

                                                                       நன்றி.🙏🙏🙏 
*************************************************************************************************************************
       காந்தி முதலான பல உயர்ந்த மனிதர்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு
சேர்க்க வேண்டும் என்பது நம் அனைவரின்விருப்பம் அல்லவா ?அந்தப் பணியை   சுனில் கிருஷ்ணன் என்ற இளைஞர் மிக அற்புதமாகச் செய்து வருவதை அறிய மிகமிக ஆனந்தமாக இருக்கிறது.

கவிக்குயில் சரோஜினி நாயுடுவுக்கு காந்திஎழுதிய ஒரு கடிதத்தில் கவிக்குயிலை 'அன்புள்ள புல்புல்' என காந்தி விளித்திருக்கிறார். அந்த அழகான வாசகத்தை சுனில்
இந்தப் புத்தகத்திற்குத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார்.

காந்தியின் தார்மீகக் கோபங்கள் சிங்கத்தின் கர்ஜனை போலச் சீறாமல் சின்னக் குயிலின் இசையாக மென்மையாயிருந்தாலும், எதிரிகளையும் தன் வசப்படுத்திய மேன்மைக் குரல் அல்லவா நமக்கெல்லாம் காநதியைப் பற்றித் 'தெரியும்....ஆனால்....தெரியாது' என்பதைத்
தெரிந்துகொண்ட சுனில், நமக்குத் தெரியாதவற்றைக் கற்பிப்பதோடு, தெரிந்தவற்றில் சிலரால் ஏற்பட்ட குழப்பங்கள், தவறான   அபிப்பிராயங்களை ஆதாரத்தோடு களைந்து 
ஒளி பாய்ச்சுகிறார்.

இந்தப் புத்தகத்திலுள்ள அருமையான - சரியான கருத்துகளை மேற்கோள் காட்ட
ஆரம்பித்தால், எழுதும் என் கைபேசியிலும் படிக்கும் உங்கள் அலைபேசியிலும் சார்ஜ்  இறங்கிவிடும்.

கீழ்க்குறித்த பகுதிகளைத் தவறாமல் படியுங்கள் :-
பக்கம் 9 - செயலே....
11 - யோசித்து.....
17 - கடந்த.....
103 - கிருஷ்ணம்மாள்.....
137 - கருணைக்கு.....
182 - காந்தியின்.....
184 - முழு அத்தியாயம்
148 - உப்பு சத்தியாக்கிரகத்தில் ராஜாஜி

பின் அட்டை சிறந்த வாசிப்பு அனுபவத்தையும் விரிந்த யோசிப்பு அனுபவத்தையும் வழங்கியுள்ள   இளம் திரு. சுனில் கிருஷ்ணனை "இளைய பாரதத்தினாய் வா வா வா"
என வரவேற்று வாழ்த்துகிறேன்.

உயர்வான இந்தப் புத்தகத்தை வழங்கிய
சிறுவாணி வாசகர் மைய நிர்வாகிகளுக்கு ஆயிரம் நன்றி.

திரு.திருமலையப்பன் 

*சிறுவாணி வாசகர் மையம் ஆகஸ்ட் மாதம் உறுப்பினர்களுக்கு அனுப்பிய "அன்புள்ள புல்புல் பற்றிய வாசகர் பாராட்டு.
(நன்றி யாவரும் பதிப்பகம் திரு.ஜீவகரிகாலன்)
****************************************************************************************************************







No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....