கடந்தவருடம்
(ஏப்ரல் 23,2017)
துவங்கப்பட்ட சிறுவாணி
வாசகர் மையத்தின்
இரண்டாம் ஆண்டில்
.........
ஏப்ரல் 2018- "மண்ணாசை".- நாவல் -
தமிழின் முன்னோடி நாவலாசிரியர் சங்கரராம்
பக்கங்கள் 208 விலை 200 /-
ISBN 978-81-940988-0-5
************************************************************************************************************
*******************************************************************
தமிழின் முன்னோடி நாவலாசிரியர் சங்கரராம்
பக்கங்கள் 208 விலை 200 /-
ISBN 978-81-940988-0-5
************************************************************************************************************
நினைவூட்டல்
சிறுவாணி வாசகர்
மையத்தின் "மாதம் ஒரு நூல்"திட்டம்.
(2018 ஏப்ரல்---2019 மார்ச் க்கான உறுப்பினர் சந்தா ரூ 1600 /-)
***வணிகநோக்கின்றி சிறந்த
நூல்களை வெளியிட்டு வாசகர்களின் வீடுகளுக்கே அனுப்பிவைக்கிறோம்.
***(தயவுகூர்ந்து மார்ச்
இறுதிக்குள் தங்கள் சந்தாவைப் புதுப்பிப்பதோடு,தங்கள் நண்பர்களையும்
இணைத்து தொடர்ந்து செயல்பட ஊக்கம்அளிக்குமாறு வேண்டுகிறோம்.)
*************
சிறுவாணி வாசகர்
மையத்தில் உறுப்பினராக ,சந்தா செலுத்த ,புதுப்பிக்க காசோலை/வரைவோலை/மணி ஆர்டர் கீழ்க்கண்ட
முகவரிக்கு அனுப்பவும். :
சிறுவாணி வாசகர்
மையம்,
24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, கே. கே. புதூர், கோவை - 641038
************
NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப
Syndicate Bank, Avinashi
Road Branch, Coimbatore - 641018,
Current A/c no.
61211010003590
IFSC : SYNB0006121
Beneficiary : Siruvani
Vasagar Maiyam.
*************
நேரடியாக
சந்தாவைக் கணக்கில் கட்டினால் தகவல் மற்றும் தங்கள் முகவரியை
9488185920, 9940985920
என்கிற தொலைபேசி எண்ணுக்கோ/siruvanivasagar@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு ஈமெயில் மூலமோ தெரிவிக்கவும்9488185920, 9940985920
*******************************************************************
07.04.2018 நாகா
*சிறுவாணி வாசகர் மையம்*
அன்பார்ந்த
நண்பர்களே,
வணக்கம்.
வாசிப்பு வாழ்க்கையின் முக்கிய அங்கம் என்பதையும் வாசிப்பு மனிதனை
பக்குவப்படுத்துகிறது என்பதையும் நன்கு உணர்ந்த வாசிப்பாளர்கள் நீங்கள் அனைவரும்
என்பதை நான் நன்கறிவேன்.
எந்த புத்தகங்களை
படிப்பது என்பது பல வாசகர்கள் முன்பு எழுப்பப்படும் நியாயமான கேள்வி!
நல்ல புத்தகங்களை
அறிமுகப்படுத்துவதோடு அல்லாமல் வாசிப்பை ஊக்குவிக்க கோவையில் ஒரு மையம் ஏற்படுத்தி
சிறப்பான ஒரு சேவை செய்து வருகிறது
*சிறுவாணி வாசகர் மையம்*
இந்த அமைப்பை
உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
புகழ்பெற்ற
சாகித்ய அகாடமி விருது பெற்ற திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் ஆலோசனையில் இன்னும்
சில எழுத்தாளர்கள் குழுவினரின் நேரடி மேற்பார்வையில் இந்த மையம் செயல்பட்டு
வருகிறது.
2017ம் ஆண்டு தொடங்கப்பெற்ற
இந்த மையம் இந்த மாதம் இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
நூலிலிருந்து
நெசவு வாசித்து வரும் நண்பர்கள் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் இந்த
மையம் பற்றிய விபரங்கள், இந்த மையம்
பற்றிய விபரங்கள் "தி இந்து"தமிழ் நாளிதழில் வந்தது, மற்றும் மையத்திலிருந்து
பெறப்பட்ட வேறு விபரங்கள் இத்துடன் இணைத்துள்ளேன்.
இதில்
உறுப்பினர்கள் ஆகி பயன்பெற்று வாசிப்பின் பலன் முழுமையாக அடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
விருப்பமுள்ளவர்கள்
நேரடியாக இந்த மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. பிரகாஷ் (கோவை) அவர்களை தொடர்பு
கொள்ளலாம்.
அனைத்து
விபரங்களும், தொடர்புக்குண்டான முகவரி, கைப்பேசி எண்கள் இத்துடன்
இணைத்துள்ளேன்.
நன்றி!
அன்புடன்
நாகா.
07.04.2018
******************************************************************************
19/9/18 TNL Deepa natrajan:
சித்தார்த் மனம் திறந்து பேசியது என்னையும் மனம் திறக்க
வைத்துவிட்டது.
நானும் டிவி.யை
பார்ப்பது மிகக்குறைவு. புத்தகம் படிப்பதில்த்தான் நேரம் கழிகிறது.
நான் படிப்பது
கட்டைவண்டி வேகத்தில். வயது மூப்பு காரணம்.
தி.க.சி.
இன்லாண்டு கவரில் எனக்கு சிபாரிசு செய்தவைகளில் இதயநாதம், ஜனனி,
பொய்த்தேவு, நாகம்மாள் மற்றும்
புதுமைப்பித்தன் கு.ப.ரா. சிறுகதைகள் உண்டு. மண்ணாசை இருந்ததா என்பது ஞாபகம்
இல்லை.
இசையில் ஆர்வம்
உள்ளவனாதலால் இதயநாதம் என்னை ஈர்த்தது. சிறுவாணி மூலம் படித்து மகிழ்ச்சி அடைந்தேன்.
இப்போது மண்ணாசை
யில் இறங்கியிருக்கிறேன். அடுத்து புல்புல் பக்கம் போகவேணும்!
ரசிகமணி டிகே.சி.
பெரிய மனிதர்களிடம் உரையாடுவதைக் கேட்டு
கேட்டு என் அறிவு வளர்ந்ததுதான் நான் பெற்ற கல்வி.
"காலை எழுந்தவுடன்
படிப்பு" டி.கே.சி. அதிகாலை எழுதிவைத்துள்ள கடிதங்கள்தான்!
அன்று வந்த
இதழ்கள் எல்லாமே தரமான படைப்புகளை உள்ளடக்கியவை.
எங்கள் வீட்டில்
புத்தகக்குவியல் உண்டு. கவனம் சிதறுவதற்கு ரேடியோ கூடக் கிடையாது. புத்தகம்
படிப்பது ஒன்று தான் நேரப்போக்கு.
****************************************************************************************************************************
No comments:
Post a Comment