Tuesday, November 6, 2018

ஓராண்டு நிறைவு




அனைவருக்கும் வணக்கம்.
*தங்கள் அனைவரின் நல்லாதரவோடு சிறுவாணி வாசகர் மையம் ஓராண்டை நிறைவுசெய்துள்ளது.

**நாங்கள் அறிவித்தபடி ரூ 1200 பெற்றுக்கொண்டு ரூ 1647 மதிப்புள்ள நூல்களை அனுப்பியுள்ளோம்.

***இதுவரை வெளியிட்டுள்ள நூல்களைப் பற்றிய நிறை/குறைகள், மதிப்பீடுகளை தங்களிடமிருந்து அறிய ஆவலாகவுள்ளோம்.

****வரும் ஆண்டில் நாங்கள் புத்தகங்களுக்குத் திட்டமிட ,செம்மைப்படுத்த தங்கள் ஆதரவையும்,ஆலோசனைகளையும் அளிக்க வேண்டுகிறோம்.

 *****************************************************************************
·

       கடந்த வருடம் இதேபொங்கல் நாளில் சிறுவாணி வாசகர் மையத்தின் மாதம் ஒருநூல் திட்டத்தை அறிவித்து,துவங்கியமுயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

மார்ச்--2018 உடன் முதல் வருடச் சந்தா முடிவடைகிறது.(12 புத்தகங்கள்)

ஏப்ரல் 2018- மார்ச் 2019 க்கான இரண்டாம் ஆண்டுக்கான சந்தா ரூ 1600 /-(தபால் செலவு உட்பட).

இத்தொகையை அனுப்பி சந்தாவைப் புதுப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

சிறுவாணி வாசகர் மையம் வணிகநோக்கின்றி முழுக்க சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

காகிதவிலையேற்றம்,அச்சு மற்றும் தயாரிப்புச் செலவுகள் உயர்வு, உயரும் கூரியர்/தபால்செலவு ஆகியவற்றால் தவிர்க்கமுடியாமல் மேற்கண்டவாறு சந்தாத் தொகையை உயர்த்தவேண்டியதாயிற்று.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக்கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

இப்போதிலிருந்தே தங்கள் ( ஏப்ரல் 2018-மார்ச் 2019) சந்தாவைப் புதிப்பித்துத் தொடர்ந்து ஆதரவு தருவதோடு தங்கள் நண்பர்களையும் சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களாகச் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த
நன்றி.
சிறுவாணி வாசகர் மையம்.

                                                               (2018 ஏப்ரல்---2019 மார்ச் )
சிறுவாணி வாசகர் மையத்தில் உறுப்பினராக ,சந்தா செலுத்த ,புதுப்பிக்க காசோலை/வரைவோலை/மணி ஆர்டர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். :

சிறுவாணி வாசகர் மையம், 24-5, சக்தி மஹால், சின்னம்மாள் தெரு, கே. கே. புதூர், கோவை - 641038

NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப Syndicate Bank, Avinashi Road Branch, Coimbatore - 641018,
Current A/c no. 61211010003590

IFSC : SYNB0006121 Beneficiary : Siruvani Vasagar Maiyam. நேரடியாக சந்தாவைக் கணக்கில் கட்டினால் தகவல் மற்றும் தங்கள் முகவரியை 9488185920,9940985920என்கிற தொலைபேசி எண்ணுக்கோ/siruvanivasagar@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு ஈமெயில் மூலமோ தெரிவிக்கவும்
*************************************************************************************

அக்ஷயத்ரிதியை அன்று சிறுவாணி வாசகர் மையத்தில் உறுப்பினரானால் வருடம்முழுதும் புத்தகம் மாதாமாதம் வீட்டிற்கே வரும்.!
------------------------------------------------------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையம் முதல்வருடத்தில் வெளியிட்ட நூல்கள்
(-2017 ஏப்ரல்-2018 மார்ச்)

1.ஏப்ரல்-நாஞ்சில் நாடன்("நவம்" - எண்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு),

2.மே-லா.ச. ராமாமிர்தம் ("விளிம்பில் "- சுய சரித நவீனம்),

3.ஜூன்-ந. சிதம்பர சுப்ரமணியன் ("இதய நாதம்" - நாவல்),

4.ஜூலை-அசோகமித்திரன் (-அவர் மறைவுக்கு சில நாட்கள் முன்பாக மையத்தின் நோக்கம் கருதி மனமுவந்து அளித்த இதுவரை நூல் வடிவில் வெளி வராத கட்டுரைகள்-"பூங்கொத்து" ) ,

5.ஆகஸ்ட்-தமிழ்க் கடல் ராய. சொ. (1953 க்குப் பிறகு மறுபதிப்பு காணும் "தேவார மணி"),

6.செப்டம்பர்-சந்தியா நடராஜன் ( மரணம் பற்றிய தொகுப்பு-"இனி இல்லை மரண பயம்")

7.அக்டோபர்-திருமதி சுபாஷிணி (தக்கர்பாபா பற்றித் தமிழில் வெளிவரும் முதல்நூல் -"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா")

8.நவம்பர்-ரசிகமணி டி.கே.சி (2004க்குப் பிறகு வெளிவரும் கட்டுரைகள்- "தமிழ்க் களஞ்சியம்")

9 ".டிசம்பர்- பாரதி பற்றிய கட்டுரைகள

"நண்பர்கள் நினைவில் பாரதியார்- இளசை மணியன்-


10.ஜனவரி (2018)-வ.ஸ்ரீநிவாசன் -எதைப்பற்றியும்(அ)இதுமாதிரியும் தெரிகிறது- கட்டுரைகள்

11.பிப்ரவரி(2018)-கீரனூர் ஜாகிர்ராஜா -கட்டுரைகள் -


12.மார்ச்(2018)-ஏன் எழுதுகிறார்கள்?-சார்வாகன் கட்டுரைகள்

No comments:

என் பதவிக்கால நினைவுகள் - பாரதரத்னா. டாக்டர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா- செப்டம்பர் 2024

கோவை புத்தகத் திருவிழா வெளியீடு நாள் 20.07.2024 மாலை 3.00 மணி... சிறுவாணி வாசகர் மையத்தின் செப்டம்பர் மாதப் புத்தகம் என் பதவிக்கால நினைவுகள்...