Tuesday, January 15, 2019

நாஞ்சில் நாடன் விருது 2019



















நாஞ்சில் நாடன் விருது 2019

கோவையில் இருந்து செயல்பட்டு வரும் சிறுவாணி வாசகர் மையம் எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் விருது வழங்கி வருகிறது .கடந்த வருடம்(2018) ஓவியர் ஜீவா அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
ஆய்வாளரும், உ வே சா படைப்புகள் மற்றும் பலநூல்களின் பதிப்பாசிரியருமான முனைவர் ப. சரவணன் அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டுக்கான நாஞ்சில்நாடன் விருது வழங்கப்படவுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வரும் ஜனவரி 20 ம் தேதி மாலை , கோவை அண்ணாசிலை அருகிலுள்ள ஆர்த்ரா ஹாலில் விருது விழா நடைபெறவுள்ளது.
 
17.12.18          The Times of India


 

இந்து தமிழ்திசை 19.12.18



 தினமணி 15.01.2019


                                                           


 
















































This Tamil scholar is a real treasure....
Pa. Saravanan - The Ambassador of Tamil Thaatha U.Ve. Swaminatha Iyer
https://simplicity.in/articledetail.php?aid=891


2/4/2019 

நாஞ்சில்நாடன் விருது


.                      போனவார  (ஜன 20)... நிகழ்வை நினைத்தாலே மனசெல்லாம் சொகுசு...சொகுசாய் இருக்கும் போதே எழுதிவிடுவது சுகமாய்த்தானிருக்கிறது..
ஏற்கனவே..செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி..முதல்நாளே எழுத்தாளர் பிரபாகர் சர்மா என்றழைக்கப்படும்.. சத்தியப்ரியன் வீட்டிற்குச் சென்று தங்கி...அடுத்தநாள் காலை...கிளம்பி கோயமுத்தூர்.. ..வழியெல்லாம் பேச்சு பேச்சு பேச்சு... மலேஷியாபோகும் போது  விமானத்தில் பக்கத்துசீட்டிலிருந்தும் ஒருபேச்சு .....இல்லை....இல்லை ஒரு மூச்சு கூட...பேசவில்லை என்பதை பஸ் சீட்டின் பக்கத்து பக்கத்தில் அமர்ந்து பழிவாங்கினோம்..

மதியம் 1 மணிக்கு பிரகாஷ் வீட்டிற்குள் நுழையும் போதே வாழையிலை வரவேற்பு...
பிரகாஷின் அம்மாவிற்கு அட்சயபாத்திர ஆசீர்வாதம் எப்போதும் உண்டு...அன்றைக்கும்..!

அங்கு சுபாஷிணி திருமலை மேடம்..ஏற்கனவே வந்திருந்தார்...அங்கு ஏற்கனவே இருந்த..திருநெல்வேலி ஷண்முகசுந்தரம் சாரும் அவர் மனைவியும் சத்யப்ரியனின் 25 ஆண்டுகால நண்பராம்.... மாலை 4.30 க்கு கிளம்பும் அவசரத்தில்ஒரு பெரிய புத்தகபார்ஸலுடன்...(விழாமண்டபத்தில் விற்பனைக்குவைக்கவேண்டிய புத்தகங்களாம்) அவசரமாய் உள்ளே வந்து கொடுத்த பாலகிருஷ்ணன் பிரகாஷின் அலுவலகநண்பர்...4.30 வரை சாப்பிடாமல் ..உதவும் நண்பர்.. பிரகாஷ் குடும்பத்தினரால் மிரட்டப்பட்டு சாப்பிட வைக்கப்பட்டார்...

பாதிவழியில் ஓவியர் ஜீவாவிடமிமிருந்து ஃபோன் . சார் நான் வந்து ரொம்பநேரமாச்சு...
அடடா!... காக்கவைத்துவிட்டேனா!
           ஆ ரு த் ரா ஹா ல்
வாசலில் ஜீவாவும்...
ரிவோல்ட்..ஈரம் கசிந்த நிலம். எழுதிய சி.ஆர்.ரவீந்திரன்...இவர்களிடம்பேசி மகிழ்ந்திருந்தபோது...
வந்தவர்...மரபின்  மைந்தன் முத்தையா அவர்கள்..அடுத்து தற்போதைய கோவையின் இலக்கியப்புதையல் நாஞ்சில் நாடன் அவர்கள்..ஆஹா!   மண்டபத்தின் வெளியே முக்யஸ்தர்களுடன் குட்டி அரட்டையிலிருந்தபோது...காரசார பூந்தியும்..தரமான தேநீரும் (எவர்சில்வர்டம்ளரில்)...அப்போதைய நேரமும் சூழலும் வேளையும்...மனசுக்கு மனோகரம்.

 விழாநாயகன் சரவணன்..சார் காரிலிருந்து இறங்கியுடன் என்னைப்பார்த்து விட்டார்... நேரேவந்து என் கைகளை வாஞ்சையுடன் பிடித்தபடி..."சார் நான் உங்கள் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராயிருந்திருக்கிறேன்" என்றார் அன்றைய நாயகன் அவர் என்னும் கௌரவம் சற்றும்  பார்க்காமல்..."ஆமாம் சார்..நினைவிருக்கிறது நானும் சிவகுமார் சாரும்..பேசிய லா.ச.ரா நூற்றாண்டு நிகழ்ச்சியில்தானே" என்றேன்..
நான்கூட அவரைத்தொகுப்பாளர் என்றுதான் நினைத்தேன் அவருடைய ஆராய்ச்சிகளையும் எழுதிய புத்தகங்களின் எண்ணிக்கையும்..அவருடைய சாதனைகளையும் கேட்டுவிட்டு என் கணிப்பை எண்ணிக்கூனிப்போய்விட்டேன் .இருந்தாலும் ஒருவிஷயம் நிரூபணம்ஆனது... போனவருட நாஞ்சில் நாடன் விருது பெற்ற ஜீவாசாரைப் போலவே.. சரவணன்சாரும்மிக மிகப்பொருத்தமானவர்தான் என்று.

அதைவிட அவருடைய அடக்கமும்..அன்பும்..என்மேல் அவர் வைத்திருந்த மரியாதையின் வெளிப்பாடும் என்னை இன்னும் திகைத்தடித்துக்கொண்டு தானிருக்கின்றன.

உள்ளே போனோம்..மக்கள் கொஞ்ச கொஞ்சமாக மண்டபத்தை நிறைத்துக்கொண்டேயிருந்து.... ...இருந்து...நிறைத்தே விட்டார்கள்..
மேடையில் பாந்தமாய்  கீழே அமர்ந்திருந்த. ரெட்டைக்குட்டித் தேவதைகள்..சுரேஷ் வெங்கடாத்ரியின் புத்ரிகள்.
பாடல்கள் ஐந்தும்...(பஞ்சரத்னம்)... பாடியவர்கள் ரெட்டை இல்லையாம் அக்கா தங்கையாம்.....பார்வைக்கு ரெட்டை..குரல்களோ ஒத்தை...அவ்வளவு ஒருங்கிணைந்த குரல்....கள்.!( மயக் ).

சுரேஷ்வெங்கடாத்ரியும் அவர்திருமதியும்.. பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருக்க
. ..முன்வரிசையில் தொழிலதிபர் D.பாலசுந்தரம்சார்...(நாஞ்சில்சாருக்கே...
சைவ வைணவ தமிழ் மரபிலக்கியத்தில் சந்தேகம் தெளிவிப்பவர்...),
இருகூர் சுப்ரமணியன் பேராசிரியர் ஐ.கே.எஸ்...,
தமிழறிஞர் சுப்பிரமணியமுதலியார் (சிவக்கவிமணி) பெரியபுராணத்திற்கு உரை எழுதியவரின் பெயரர்..கே. கந்தசாமி சார் ,அவருடைய அண்ணன் சிவசுப்ரமணியன் சார்....,எம். கோபால கிருஷ்ணன்சார்... அமர்ந்திருந்தனர்.

அட...அதோ கூந்தல்பனை சு. வேணுகோபால் சாரையும் ...சுரேஷ்குமார் சாரையும் பார்த்துவிட்டேன்...
சென்னையிலிருந்து இதற்காகவே வந்திருந்த அரவிந்தன் சாருடன்...ஆயுட்கால நல்லாசிரியர் ..முத்தரசியம்மா....
வரவேற்புரைத்தவர் திருமதி சுபாஷிணிதிருமலை மேடம்.....
 வாழ்த்துரைத்தவர்கள் ..நடமாடும் பல்கலை... சொல்வனம்...வ.ஸ்ரீநிவாசன் சார். மெத்   குரலில் சிக்ஸர் அடித்தபடிஇருக்க....
அரங்கம் திடீர் பரபரக்க...                   விஜயா பதிப்பக உரிமையாளர் அண்ணாச்சி வேலாயுதம் ஐயாவின் வருகை... கூடவே அவர் தனயனும்...

அடுத்து முன் வரிசையில் கோவையின் முகவரி R. ரவீந்திரன் சார்...,வெங்கடசுப்பிரமணியம் சார்...,வரலாற்று ஆய்வாளர் சி.ஆர் இளங்கோவன் சார்.. .,கோவையின் என்சைக்ளோபீடியா ராஜேஷ் கோவிந்தராஜுலு சாரும் அமர்ந்திருக்க...,
பேரன்பு பட இயக்குநர்...ராமின் தந்தையாரும் வந்திருந்தார்.

மேனாள் கல்வித்துறை இயக்குநர் அருள்முருகன்சார்..., பேராசிரியர் IKS சார்...திகட்டதிகட்ட சரவணனுக்கு  பஞ்சாமிர்த வாழ்த்துரைக்க......
தலைமையுரையே வாழ்த்துரையாய் நாஞ்சில் சார்...  உள்ளடங்கியகுரலில்.....சொல்லடங்காச் சிறப்புரை!

சிறுவாணியின்..மிக முக்யஸ்தர் அப்புத்தகங்களை அச்சிட்டுத்தரும் சூர்யா பிரிண்டர்ஸ் மனோகரன் எனது நண்பர்..அத்தனைப் புத்தகங்களையும் அச்சிட்டுத்தந்துவிட்டு இந்தப்பூனையும் பாலைக்குடிக்குமா என்று..அமைதியாய் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தார்...அவர்மனைவியுடன்..
அவரவர் தனித்தனி குடும்பத்துடன் வந்திருந்து..(தனித்தனி குட்டிமேகங்கள் தோன்றி நேரப்போக்கில் இணைந்து ஒரே  பெரும்திரள்மேகமாவது போல....)..ஒரே பெருங்குடும்பமானது போலத்  தானிருந்தது இந்தக்குடும்ப விழா...காதுகுத்து, ஆண்டு நிறைவு..,சீமந்தம்..,சஷ்டியப்தபூர்த்தி  போய்வந்த உணர்வு!

"இவர்தான் பாலிமர் தொலைக்காட்சி பொறுப்பாளர் ராஜா.."என்று பிரகாஷ்அறிமுகப்படுத்தியபோதுதான் தெரிந்தது...அன்றைய நிகழ்ச்சிமுழுவதையும் பதிவு செய்துகொண்டிருந்தது பாலிமர் தான் என்று!

அன்றைய நிகழ்வுகளை சற்றும் சளைக்காமல்..கணீர்குரலில்..பளீர் தமிழில். ...தொகுத்து வழங்கிய குட்டிப்பெண் சஹானாவிற்கு நல்ல எதிர்காலம் வரவேற்கிறது.

சஹானாவின் தந்தையார் C.G.S மணியன்சார்..சரவணனுக்குப் பாராட்டுப்பத்திரம்  வாசித்தார்..
நிகழ்ச்சியின் உச்சக்கட்டமாக பாலசுந்தரம் சார்...சரவணனுக்கு நாஞ்சில் நாடன் விருதினை(ரூ 50 000) வழங்க ....போனவருட உலக அழகி ஓவியர் ஜீவாசார் சரவணனுக்கும் குடும்பத்தாருக்கும்                       பொன்னாடை போர்த்தி ...புத்தகங்களைத் துணிப்பையில் வைத்துக்கொடுத்து சிறப்புசெய்தார்..
.
கனகச்சிதமானது சாதனையாளர் சரவணனின் ஏற்புரை... குரு மார்களிடம் அவ்வளவு மரியாதை...அவ்வளவு எளிமை.....நான் சரவணனைக்காதலிக்கிறேன்....
இதற்கு ஒரு சிறு பதிவிட்டால் அகமகிழ்வேன்.

வலது ஓரத்தில் பிரகாஷின் அம்மா...மனைவி லஷ்மி மகள்..பவித்ரா நிகழ்ச்சிகளை ரசித்துக்கொண்டிருக்க அவர்களுக்குஅடுத்த வரிசையில் எழுத்தாளர் பானுமதி பாஸ்கோ...குடும்பத்தினருடன்...

கோவை முக்யர் ரவீந்திரன்சாருக்கும் அவரது திருமதி சித்ரா மேடத்திற்கும்...எவர்சில்வர் டம்ளரில் தேநீர் கொடுக்கச்செய்து...
துணிப்பையில் பரிசுகள் கொடுக்கச்செய்து...இம்மாபெரும் நிகழ்ச்சியை நெகிழி இல்லா நிகழ்ச்சிஆக்கியதற்கு....நன்றிகள் பலப்பல!

நிகழ்ச்சிமுடியும்வரை உள்ளேவந்தவர் யாரும் நடுவில் எழுந்துபோகாமல் இறுதி வரை இருந்தது....சிறப்பு!

ஆரம்பத்திற்கும் ஆரம்பத்திலிருந்து முடிந்தபின்னும் 15 நிமிடத்திற்கு. அத்தனை நிகழ்வுகளையும்...தன் காமராவால் வண்ணத்திலும்.  கருப்புவெள்ளையிலும்.. கவிதையாக்கிக்கொண்டேயிருந்த அய்யப்ப மாதவனுக்கு  ஆயுட்கால நன்றிகள்.....

இந்த விழாவிற்கு வராத கோவை விஐபிகளே இல்லை.. வராதவர்கள் அன்று கோவையில் இருந்திருக்கமாட்டார்கள்.

பிரகாஷ்... கோவையின் பெருமிதவிருது வாங்கியதற்கும்....இந்தநிகழ்ச்சி சிறப்பாய் நடந்ததற்கும் மறைமுக உதவியவர்கள் அவர் தாயாரும் ..திருமதி லக்ஷ்மி அம்மையாரும் ...ஆண்டவனின் ஆசீர்வாதங்கள் கிடைக்கட்டும்.

சிறுவாணி அமைய முக்ய காரணர்களில் ஒருவர்..ஆடிட்டர் கிருஷ்ணகுமார்சார்  நாளுக்கு அடுத்தநாள் அவர் மகளின் திருமணம் வைத்திருந்ததால்...வரமுடியாமல் போனது...ஒரு குறையாகவே இருந்தது.

விழா முடிந்தபின்னரும் அரைமணிநேரம் குளிரிலும்..இருளிலும் பேசிக்கொண்டேயிருந்தது  காதலியைப் பிரியும்...சுக சோகானுபவம்.!.

அடுத்த நாஞ்சில்நாடன் விருது விழாவிற்கு....இன்னும் 358 நாட்களே உள்ளன....காத்திருக்கிறேன் காதலியைக்காண!

நன்றி -Sabtharishi lasara fb












No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....