Tuesday, January 15, 2019

"காணக் கிடைத்தவை"-வ.ஸ்ரீநிவாசன்

ஜனவரி-(2019) "காணக் கிடைத்தவை"

எழுத்தாளர் வ.ஸ்ரீநிவாசன் 
கட்டுரைகள்

பக்கங்கள் 216   விலை 200 /-
ISBN 978-81-940780-8-1

-------------------------------------------------------------------------------------------------------
காணக்கிடைத்தவை (சிறுவாணி) தொகுப்பில் வாடிவாசல் பற்றி
வ ஸ்ரீனிவாசன் எழுதியுள்ள கட்டுரை   சிறப்பாக உள்ளது. நாவலை ஊன்றி வாசித்திருப்பது நன்றாக தெரிகிறது. அதை நமக்கும் தெரிவிக்கிறார். ஒரு கேம்கார்டரை போன்ற கதைசொல்லல் முறை 'நிகழில்' சொல்லப்பட்ட கதை என்பதை highlight செய்கிறார்.  அது 'சஞ்சயன் சொல்வது போல' என்ற உவமை படு கச்சிதம்.  இத்தன்மையை கதைகள் அரிது என்று எண்ணுகிறேன். காரி காளையையும் பிச்சியையும் கதை நாயகர்களாக வைத்திருக்கும் பங்கு பற்றி குறிப்பிடுகிறார்.  அது வீர விளையாட்டு என்று காலத்தையும் களத்தையும் கொண்டு இந்த கதை வாசிக்கப்பட வேண்டியதை சொல்கிறார். 

குறைவான பாத்திரங்களும் நேரடி பேச்சு குறைவாகவும் அமைந்த நாவல் வாடிவாசல் மனித சாதியின் மிருக சாதியின் கதை. அட்டைக்கத்தி வீரம் அல்ல  என்கிறார். இது சாதி பற்றிய ஒற்றை பரிணாம கதை என்று வகைப்படுத்துவது நியாயம் அற்றது என்று சொல்லி நபகோவ் வகைப்படுத்தலை மறுப்பதை குறிப்பிடுகிறார்.

பழி வாங்கல், அதிகாரம் , அதிகார எதிர்ப்பு , சாதி ஆதிக்கம் என்பதே இந்த நாவல் கிடையாது என்பதை விளக்கி பேசுகிறார். பிச்சி ஜமீன்தார் காளை அம்புலி மருதன் - யாரும் ஒருவருக்கு ஒருவர் பகை இல்லை. ஆனால் அம்புலி. காரி காளையை அடக்குவது மரணத்தை தழுவுதலுக்கு சமம் என்பது ஊரானுபவமும் கூட. ஆனால் பிச்சி அணைகிறான். தனது அப்பாவை கொன்ற அல்ல - மரணத்துக்கு காரணமான காரியை அடக்க வேண்டும் என்பது மட்டுமே அவனது குறி.  யாரும் எதிரி அல்ல. iஆனால் இரண்டு மரணங்கள் நிகழ்கின்றன. ஒன்று காளை. இன்னொன்று அம்புலி. இருவருக்குமே மரணம் விளையாட்டின் தோல்விப் பரிசாக கிடைக்கிறது.

மிருகத்துக்கு ரோசம் வந்தாலும் போச்சு. மனுஷனுக்கு ரோசம் வந்தாலும் போச்சு என்ற வரியை கதையின் சரடாக சொல்லிக்காட்டுகிறார்.

 ஸ்ரீனிவாசன் கட்டுரையில் இரண்டு இடங்கள் அருமை.

அம்புலித்தேவன் காரி காளையை அடக்க முயன்று சாகிறான். அவன் மகன் பிச்சி காரியை அடக்க வந்திருக்கிறான். ஒரு வேளை இவனும் குடல் சரிந்து இறந்தால் ? என்று கேள்வி எழுப்பி அப்படி நிகழாது. அவனும் ஒருவிதத்தில் அம்புலித்தேவன்தான். மாடு அணையும் வீரர்கள் அனைவரும் ஒருவரேதான் என்று எழுதுகிறார். நாவலை இந்த வரி எங்கோ கொண்டுபோய் நிறுத்தி மறுபடி படிக்க தூண்டுகிறது.

காளை பாவம். அது என்ன பிழை செய்தது. இந்த நாளுக்காகவே ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்டது. அதற்கு விளையாட்டு தெரியாது. தான் கௌரவச் சின்னம் என்பது தெரியாது. அதனிடம் பிச்சியைப் பற்றி எடுத்து சொல்ல கிழக்காளை இல்லை .உதவ மைத்துனன் நிலை. எதற்கென்றே தெரியாமல் வந்து அங்கு மனித அளவீட்டின்படி அழைக்கப்பட்டு (அழகான வரி இது ) புரியாமல் எரிச்சல் ஊட்டப்பட்டு பின் கொல்லவும் படுகிறது. காலைதான் முதல் கதாநாயகன்.

வாடிவாசலை மறுபடி வாசிக்க தூண்டும் கட்டுரை
Ramesh kalyan

6.6.19

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....