Tuesday, March 5, 2019

தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை - வே.முத்துக்குமார்



 மார்ச்-2019.
"தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை"

எழுத்தாளர் வே.முத்துக்குமார் சிறுகதைகள்.

பக்கங்கள் 218   விலை 200 /-

ISBN 978-81-940988-6-7

******
எழுத்தாளர்
வே. முத்துக்குமார் பற்றி...
------------------------
தாமிரபரணி நதி தீரமான கல்லிடைக்குறிச்சியில் 1974ஆம் ஆண்டு பிறந்தவர்.தந்தையார்  வேலாயுதம்.  தாயார் இராமலெட்சுமி. மூன்று சகோதரிகள்.

மனிதவள மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர்,தற்போது தனியார் நிறுவனமொன்றில் மனிதவளத்துறை மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

தந்தை, மனைவி, மகள் என குடும்பத்துடன் தற்போது வசிப்பது திருநெல்வேலியில்.

கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு என பன்முக இலக்கியத் தளங்களில் பயணிக்கின்ற இவரை, சாகித்ய அகாதமி விருது பெற்ற காலஞ்சென்ற மூத்த இலக்கியச் செயற்பாட்டாளர் "தி.க.சி.யின் இளவல்" எனக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

நூல் வடிவம் பெறாது போன தி.க.சி.யின் பல்வேறு படைப்புகளைத் தொகுத்துப் பதிப்பித்தவர்.

 கவிதைத் தொகுப்புகள் :

 இசைக்குறிப்புகளை மொழிபெயர்த்தல்  (2010), நியாசுரம் (2019)

கட்டுரைத் தொகுப்புகள் : ஒரு வயலினும் சில நினைவுக் குறிப்புகளும் (2011), கதையாகாத நினைவுகள் (2018)

தொகுப்பு நூல்கள் : கடல் படு மணல் – தி.க.சி  (2010), தி.க.சி நேர்காணல்கள் (2011), காலத்தின் குரல் – தி.க.சி  (2011), தி.க.சி.யின் நாட்குறிப்புகள் (2014), தி.க.சி நாடகங்கள் (2017), தி.க.சி திரைவிமர்சனங்கள் (2017), தி.க.சி கவிதைகள் (2017), நினைவோடைக் குறிப்புகள் (2018)
---------------------------------------------------------------------------------------------
Nagarajan subramaniam

நெல்லை மாவட்ட எழுத்தாளர் வே.முத்துக்குமாரின் சிறுகதைத் தொகுப்பு- சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு- தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை படிக்க ஆரம்பித்திருக்கிறேன். பச்சோந்தி மனசு.தண்டனை.
மானஸ ஸஞ்சரரே.அம்மன் கொண்டாடி கதைகள் வித்யாசமாகவும் யதார்த்தமாகவும் இருந்தன.பங்குனி உத்தரத்திற்காக வள்ளியூர் பக்கம் பெருமழிஞ்சி சாஸ்தாவை வழிபடச் செல்ல இருப்பதால் முழுப் புத்தகமும் படித்து விட்டு மற்ற கதைகள் பற்றிச் சொல்கிறேன்.
நெல்லை மட்டுமல்ல கதை ரசிக்கும் தமிழ் நேயர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

-----------------------------------------------------------------------------------------------
Nagarajan subramanian

வே.முத்துக்குமாரின் சிறுவாணி வாசகர் மையம் வெளியீடான "தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை" சிறுகதைத் தொகுப்பில் நிறைய கதைகள் யதார்த்தமாக உள்ளன என்றாலும் இரண்டு கதைகள் ஆத்ம ஜெயம் மற்றும் மாய வாழ்வு முற்றும் கனவு மனதை பாதித்தது.

முதல் கதையில் சாதுகோயில் பூசாரி சாமிக்கண்ணுவிடம் ஆடு மேய்க்கும் சீனி ஒருவாரமாகப் பேசாமல் இருப்பதும் பார்த்தாலும் பேசாமல் நழுவி விடுவதும்.காரணம் யோசிக்கையில் அவன் மகளுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கையில் பூசாரி கொடுத்த கடனை அடைக்காதது.கடைசியில் அவனிடம் அவர் நீ ஒண்ணும் தர வேண்டாம்டே.எனக்குப் படியளக்கறதுக்கு சமாது கோவில் தலைவரும் கல்வீட்டுக் காரியும் இருக்காங்.அதைப்பத்தி நீ கவலைப்பட வேண்டாம்.மனுசனுக்கு பணம் காசு முக்கியமில்லை.வாஞ்சையும் கருணையும் நன்றியுணர்வும்தாண்டா முக்கியம் என்று சொல்வது அருமை.

அதேபோல இரண்டாவது கதையில் புட்டாரத்தி அம்மன் கோயிலுக்குப் போய்விட்டுத் திரும்பும் போது முதல் செய்வினைத் தகடு கிடைப்பதும்.மூன்றாவது தகடுகிடைத்ததும் குடும்பம் ஊரை வீட்டை மாற்றுவதும் குடும்பத் தலைவியின் மரணமும் செய்வினை வைத்தவன் ரத்தம் கக்கிச் சாவதும் எங்கேயோ நிகழ்ந்த கதையாக இருக்கும்.ஜோர்.
----------------------------------------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மைய நூலுக்கு விருது 

------------------------------------------------------------------
கடந்த மார்ச் 2019இல் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ள 'தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை' சிறுகதைத் தொகுப்பானது,  நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப்  பேரவையின் சார்பில் சிறந்த நூலாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வமைப்பின் சார்பில் நூலாசிரியர் வே முத்துக்குமார் அவர்களுக்கு 'தினமலர் ராமசுப்பையர் விருது' வழங்கப்படுகிறது.  வருகிற ஆகஸ்ட் 17, 2019 அன்று நாகர்கோவிலில் நடைபெறுகிற விழாவில் இவ்விருது வழங்கப்படுகிறது.



------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட ' தாழ்வார ஊஞ்சலில் ஒரு வீணை' நூலுக்கு மற்றுமொரு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் சார்பில் 2019இல் வெளிவந்த சிறந்த நூல்களுக்கான போட்டியில், சிறுகதை நூலுக்கான முதல் பரிசிற்கு இந்நூல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வரும் 15-08-2019 அன்று கம்பத்தில் நடைபெறவுள்ள பாரதி தமிழ் இலக்கியப் பேரவையின் ஐம்பெரும் விழாவில் இப்பரிசு வழங்கப்படுகிறது.

 

----------------------------------------------------------------------------------------

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....