Tuesday, August 13, 2019

The Hindu 16.July 2019 /வாழ்த்துகள்.

The Hindu
16.July 2019

 


------------------------------------------------------------------------------------------------------------------
வறண்டு, எதிர்காலம் இருள் மூடி இருக்கிறதோ என பதிப்பகத்தார் வருத்தமுற்று இருக்கும்  ஒரு சூழலில்,  வணிக நோக்கம் சற்றுமின்றி சிறந்த நூல்களை வாசகர்களிடம் கொண்டு சேர்த்து எழுத்தாளர், வாசகர், பதிப்பாளர் ஆகிய மூன்று புள்ளிகளையும் இணைக்கும் ஒரு பாலமாக சிறுவாணி வாசகர் மையம் இயங்கி வருகிறது. 


2017ஆம் ஆண்டு உலக புத்தக தினத்தன்று ஏப்ரல் 23 இல் துவங்கப்பட்ட இவ்வியக்கம் இரண்டு ஆண்டுகளை கடந்து வெற்றிகரமாக 350 உறுப்பினர்களுக்கும் மேலாக பங்கேற்கும் வளம்மிக்க இயக்கமாக மூன்றாவது ஆண்டைத் துவக்கி உள்ளது.

இவர்களது range வியக்க வைக்கும் ஒன்று. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல்களிலிருந்து 21ம் நூற்றாண்டின் நவீன எழுத்தாளர்கள் நூல்கள் வரை இவர்களது வெளியீட்டில் வந்துள்ளன.

மூன்றாவது வருடத்தின் துவக்கத்தில்தான்  இருக்கிறார்கள் .இது ஒரு மிக இளைய இயக்கம். அதற்குள்ளாகவே நாவல்கள், சிறுகதைகள், விமர்சனங்கள், பயண இலக்கியம், பக்தி இலக்கியம், தீண்டாமை ஒழிப்பு போன்ற மறுமலர்ச்சிக் கால இலக்கியம் முதலிய அனைத்து வகைகளிலிருந்தும் தரம் மிக்க நூல்களை இவர்கள் தம் உறுப்பினர்களுக்கு வழங்கி உள்ளார்கள்.

ஒருபுறம் பாரதி, தாகூர், இராய.சொ, டி.கே.சி.  லா. ச .ராமாமிர்தம்,
க.நா.சு, அசோகமித்திரன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் நூல்கள் என்றால் மறுபுறம் நாஞ்சில் நாடன், ஜெயமோகன், சாரு நிவேதிதா, எம்.கோபாலகிருஷ்ணன்,கண்மணி குணசேகரன்,சு.வேணுகோபால் முதலிய புகழ் பெற்ற நவீன இலக்கியத்தில் பெரும் பங்கு ஆற்றி வருபவர்களின் நூல்கள்; மேலும் இளைய தலைமுறையைச் சேர்ந்த  கீரனூர் ஜாகீர் ராஜா,சுநில்கிருஷ்ணன், ஜி. ஏ. பிரபா, வே முத்துக்குமார், ரமேஷ் கல்யாண் முதலிய நவீன contemporary எழுத்தாளர்களது நூல்கள் இவர்களிடமிருந்து வந்துள்ளன. 

இவர்கள் பணி மேலும் சிறக்க வேண்டும்.. திரு பிரகாஷ் GR, திருமதி சுபாஷிணி மற்றும் இம்மையத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்குத் துணை நிற்பவர்கள், இவர்கள் ஊக்கத்துக்குக் காரணமாக உள்ள உறுப்பினர்கள், எழுத்தாளர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.

திரு.வ.ஸ்ரீநிவாசன் 
6/8/2019
--------------------------------------------------------------------------------------------------------------------

சிறுவாணியின் பெருமைகள்!

இந்த மாத ஜீவாவின் அட்டையைப்பார்த்ததும் ஏற்பட்ட குஷி என்னை இப்படி எழுதத் தூண்டிவிட்டது.
எண்ணிப்பார்க்கிறேன்..ஆஹா!.... புத்தகம் படிக்கவைக்க  மாதாமாதம் வீட்டிற்கே அனுப்பிவைக்கும் சிறுவாணி....அப்படி அனுப்பிவைத்த புத்தகங்கள்...சுவாரஸ்யமாகவும்.....
இலக்கியத்தரமாகவும்.. 'நவீன இலக்கியத்தரமாகவும்'.... வெவ்வேறு தலைமுறை எழுத்தாளர்களாகவும் அமையும் படி பார்த்துக்கொள்வதன்... உழைப்புத் தரத்தின் பெயரே சிறுவாணி வாசகர் மையம்.

100 வருடங்களுக்கு முந்தைய டி.கே.சி...  தாகூர்..தேசியகவி பற்றி பாரதி.தேசிய கவி.....லா.ச.ரா....வின் விளிம்பில்..
தக்கர்பாபா..கேள்வி மட்டுமே பட்டிருப்போம்...தமிழின் முதல் வெளியீடாய்....
க.நா சு.வின் ஆட்கொல்லி ....
அசோகமித்திரன் புத்தகத்துக்கு... ஒரு சிறப்பு உண்டு. இதுவே அவரின் இறுதியாய் வெளிவந்த புத்தகம்...இளசை மணியன்.. நாஞ்சில் நாடன்...வ.ஸ்ரீ. சார் போன்ற மூத்த எழுத்தாளர்களின் படைப்புகள்.....

அடுத்த தலைமுறையான சு. வேணுகோபால் ..எம்.கோபால கிருஷ்ணன், கண்மணிகுணசேகரன்....
அதற்கடுத்ததாக.....ஜி.ஏ.பிரபா...வே.முத்துக்குமார்...
பிரபல எழுத்தாளர்கள் வரிசையில் ஜெயமோகன்..சாரு நிவேதிதா.....
இளம் எழுத்தாளரில் ரமேஷ் கல்யாண்...இதிலும் ஒருபுதுமை ரமேஷின் முதல் சிறுகதைத் தொகுப்பு... ( ப்ரகாஷின் ரிஸ்கிற்கு செம பலன்...வாழ்த்துக்கள்)...
பிரகாஷின்...இலக்கிய ரசனையும்...அவரின் வழிகாட்டிகள்..சுபாஷிணி திருமலை மலை..மேடம்..வ.ஸ்ரீநிவாசன்,நாஞ்சில் நாடன் ஐயாக்களின்..ஆலோசனைகள்.....ஓவியத்தில் இலக்கியம்படைத்துக்கொண்டிருக்கும் நம் ஜீவாவின்....தூரிகைத் துணை...

350....350.... 350..( உறுப்பினர்களுக்கு மரியாதை மும்முறை)...உறுப்பினர்களின் வலுவான ஆதரவு...அவர்கள் உடனடியாக படித்துவிட்டு ...சட்..விமர்சனம் செய்யும்..வாசகர்கள்...மேலும் பல விதங்களில் ஆதரவுக்காட்டும்.....கோவைவாசிகள்.....இருக்கும் வரை......
பிரகாஷின் உழைப்பின் பலமும்....உறுப்பினர் சேர்க்கையும் கூடிக்கொண்டே போகும் என்பது விதி!
நான் கோவை புத்தகத் திருவிழாவில் இரண்டுநாட்களில்.. தினம் 12 மணி நேரமிருந்து பிரகாஷின் பேய்த்தனமான உழைப்பை வியந்தேன்... அதற்குப்பலனாக..பல பிரபலங்கள் அவர் டேபிளுக்கு வந்து..கௌரவித்ததில் எனக்கு மகிழ்ச்சி!

இந்த இரண்டுவாரங்களில்....'இத்தனை' உறுப்பினர்களை சேர்க்கவேண்டும் என்கிற வெறியை..போனவருடத்தின் புத்தகக்கண்காட்சி சேர்ப்பைவிட அதிகப் பேர்களை சேர்த்தது அவரின் உழைப்பிற்கு கிடைத்த பரிசு.

சிறுவாணிக்கு அடுத்தவருடம் 500 பேர் சேர்ந்தால்... மொட்டை அடிப்பதாக வேண்டிக்கொண்டால் கூடத் தப்பில்லை என்று சில சமயங்களில்  தோன்றுவது கூட பிரகாஷின் லட்சியத்துக்கு செய்யும் மரியாதைதான்... அவ்வளவு WORTH!
நன்றி Saptharishi Lasara   6/8/2019

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....