Thursday, January 21, 2021

"முடிவுகள்: சிறுவாணிவாசகர் மையம் - "ரா.கி.ர நினைவுச் சிறுகதைப் போட்டி"

 

"சிறுவாணிவாசகர் மையம்" 

வழங்கும்

"ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் 

போட்டி 2020" முடிவுகள் 

வணக்கம்.

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி-2020 முடிவுகள் இன்று வெளியாகின்றன.

கடந்த டிசம்பரில் வெளியிடுவதாக அறிவித்துக் காலதாமதமானதற்காக மன்னிப்பைக் கோருகிறோம்.

நன்றி.









பரிசு பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

 

தி.சுபாஷிணி தலைவர்

ஜி.ஆர்.பிரகாஷ்

ஒருங்கிணைப்பாளர்

சிறுவாணி வாசகர் மையம்,கோவை

----------------------------------------------------------------------------------

அனைவருக்கும் வணக்கம்.

 சிறுவாணி வாசகர் மையம்- ரா.கி ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்படும்  போட்டி பற்றிய சில நினைவலைகள்......

****

கடந்த ஆண்டு நாஞ்சில்நாடன் விருது விழாவில் சிறுகதைப் போட்டி நடத்துவதற்கான யோசனையும், அறிவிப்பும் சொல்லப்பட்டாலும் covid-19 பரவல் காலத்தில் சிறுகதைப் போட்டி நடத்த வேண்டுமா என்று நாங்கள் தயக்கத்தில் இருந்தபோது,

 ரா.கி. ரங்கராஜன் அவர்களின் பேரர் ஆடிட்டர் சீனிவாசராகவன் நமது தாத்தா பெயரில் நடத்தலாம் எனவும் பரிசுத்தொகையைத் தானே தருகிறேன் எனவும் உற்சாகமூட்டினார். 

ஆலோசனைக் குழுவினரிடமும் எங்களை வழி நடத்திக்கொண்டிருக்கும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களிடமும் தெரிவித்த போது அவர்களும் மகிழ்வோடு ஒப்புக்கொண்டனர். இவ்வாறுதான் ரா.கி. ரங்கராஜன் பெயரில் சிறுகதைப் போட்டி நடத்த முடிவானது.

-------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 2

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டியை அறிவித்துவிட்டு சரியாக இரண்டரை மாதங்கள் (செப்டம்பர் 30 வரை) கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

நாங்கள் எதிர்பார்க்காத வகையில் தமிழகம் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் மொத்தம் 525 க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்திருந்தன .கடைசி தேதிக்குப் பிறகும் சிலர் ஆர்வத்தால் கதைகளை அனுப்பிக் கொண்டிருந்தனர்.

வந்திருந்த அனைத்து மின்னஞ்சல்களுக்கும் உடனுக்குடனே பதில்கள் அனுப்பப்பட்டன.

--------------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 3

சிறுகதைப் போட்டிக்கு வந்திருந்த 525 கதைகளில்  முதற்கட்டமாகப் பரிசீலிக்கப்பட்டுத் தேர்வு செய்தவை 220 கதைகள்.அவற்றை 

நடுவர்கள் எழுத்தாளர் லா.ச.ரா. சப்தரிஷி

எழுத்தாளர் வே. முத்துக்குமார்,

சீரிய வாசகர்  திருமதி சுஜாதா சஞ்சீவி மற்றும் அவரின் தந்தையாரும் மூத்த வாசகருமான திரு.மாதவன்(90),

சிறுவாணி வாசகர் மையத் தலைவர் திருமதி சுபாஷிணி 

திருமலை ஆகியோர் தீவிரமாக பரிசீலித்தும் விவாதித்தும் தேர்வு 

செய்தவை மொத்தம் 51 கதைகள்.

 ---------------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 4

நடுவர்கள் தேர்வு செய்து தந்த 51 சிறுகதைகள் சிறுவாணி வாசகர் மையத்தின் ஆலோசகர் "சொல்வனம்" திரு.வ. ஸ்ரீநிவாசன் 

அவர்களிடம் மூன்றாம் கட்டத் தேர்வுக்காக அனுப்பப்பட்டதில் அவர் 

பரிசீலித்துத் தேர்வு செய்த கதைகள் மொத்தம் 25 .

 

இறுதியாக இந்த 25 கதைகள் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் 

அவர்களிடம் பரிசுக்குரிய  கதைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக 

வழங்கப்பட்டன. பல்வேறு எழுத்துப் பணிகளுக்கு இடையில் அவர்

 தேர்ந்தெடுத்துக் தரும் கதைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

 

சிறுவாணி  வாசகர் மையம் துவக்கப்பட்டு நான்கு வருடங்கள் நிறைவடையப் போகும் சமயத்தில் முதல்முறையாக சிறுகதைப் போட்டி நடத்துகிறது.ஆகவேதான் அந்த அனுபவங்களை விரிவாகப் பகிர்ந்துகொள்ளவே இந்தத் தொடர் பதிவுகள்.

--------------------------------------------

சிறுகதைப் போட்டி நினைவுகள் 5

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப்போட்டி பற்றிய தகவலை முகநூல்,வாட்ஸ்அப் மூலம் பரவலாகக் கொண்டு சென்ற நண்பர்கள்,

போட்டியில் கலந்து கொண்ட அனைத்துப் படைப்பாளிகள்,பிரபல எழுத்தாளர்கள், வெளிநாடுவாழ் எழுத்தாளர்கள் மற்றும்  படைப்புகளை ஒவ்வொரு கட்டமாக பரிசீலித்து கொடுத்த நடுவர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

 கடந்த வருடம் நாஞ்சில்நாடன் விருது விழாவில் போட்டி பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே திரு சீனிவாச ராகவன் மற்றும்  தாங்களும் இதில் பங்களிப்பதாக உறுதியளித்த  திரு. ஜான் பீட்டர்திரு. ரிஷபன் சீனிவாசன், திரு சத்தியப்பிரியன்  ஆகியோர்க்கு நன்றி.

 திரு சீனிவாச ராகவன் அனைத்துப் பரிசுகளுக்கான தொகைகளையும் அளித்து விட்டதால் மற்றவர்கள் அளித்த தொகைகள் சிறுகதைப் போட்டியில் தேர்வு பெற்ற கதைகள் நாஞ்சில்நாடன் விருது 2021 விழாவில் புத்தகமாக வெளிவரும் போது புத்தகத் தயாரிப்புச் செலவுகளுக்காக பயன்படுத்தப்படும்.

 சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். நன்றி

 ***

(பரிசு விவரங்கள்)

முதல் பரிசு 10,000/-,  இரண்டாம் பரிசு ரூ 7500/- ,மூன்றாம் பரிசு ரூ 5000/- ,

ஊக்கப்பரிசு 10 பேருக்குத் தலா ரூ1000 /-..

 

முந்தைய பதிவுகளின் லிங்க் கள்.

 

https://m.facebook.com/story.php?story_fbid=2971978259699406&id=100006617824711

 

https://m.facebook.com/story.php?story_fbid=2972539579643274&id=100006617824711

 

https://m.facebook.com/story.php?story_fbid=2973253979571834&id=100006617824711

----------------------------------------------------------------------------------------------------------------

சிறுவாணி வாசகர் மையம்-ரா.கி.ரங்கராஜன் 

நினைவுச் சிறுகதைப் போட்டி முடிவுகள்-2020

 

முதல் பரிசு ரூ10,000/-        தவிப்பூ

மகேஷ்குமார் செல்வராஜ்(ம.செ)

**************************************************************************************

இரண்டாம் பரிசு ரூ 7500/- வெயில் அணிந்தவன்-

இராம.பாலஜோதி

******************************************************************************************

மூன்றாம் பரிசு ரூ 5000/-     பெருந்தீ

மணிமாலா,சிங்கப்பூர்

 ***************************************************************

ஊக்கப்பரிசு 10+2 பேருக்குத் தலா ரூ1000 /-..

 

1.பாதுகா-மீரா செல்வக்குமார்

 2.அம்மாவின் கட்டில்-நந்து சுந்து

 3.தீர்ப்புகள்-வெ.சுரேஷ்

 4.பெண்ணானவள்-தமிழ்ச்செல்வி

 5.வெள்ளரி ஓடை-துரை அறிவழகன்

 6.கர்ண மந்திரம்-எஸ்.ஸ்ரீதுரை

 7.மெல்போமின்&டயோனிசஸ்-விஜயராவணன்

 8.கோட்டம்-ஆர்.கே.அருட்செல்வன்

 9.எங்கே என் நிம்மதி?-பூபதி பெரியசாமி

 10.கடைசிப் பிண்டம்-பாமதி நாராயணன்

 11.பஜகோவிந்தம்-ஜெ.பாஸ்கரன்

 12.ஸ்தம்பனம்-ந.கணேஷ்

-------------------------------------------------------------------------------------------------------------------------------


 





No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....