Sunday, July 4, 2021

வடம்போக்கித்தெரு வீடு-ரிஷபன்-செப்டம்பர்-2021





செப்டம்பர்-2021           வடம்போக்கித்தெரு வீடு-ரிஷபன்

Pages 138

Price 140/-

Isbn-978-81-952661-0-4

--------------------------------------------------------------------------------------------

எதற்கும் பரவசமும் பரபரப்பும் அடைவதும் உணர்ச்சிகளின் பிடியில் சிக்கி அலைக்கழிவதும் மனித இயல்பாய்ப் போய்விட்டது.   

எதுவும் நிஜமும் இல்லை பொய்யும் இல்லை.ஆனால் இதைச் சரியாக உணராமல் மக்கள் பாதிப்புகளுக்கு ஆளாகி மாறிக்கொண்டே இருக்கிறார்கள். நம் கற்பனைக்கு எல்லையே இல்லை. முடிவு தெரியாத வரை எல்லா கற்பனைகளும் சுவாரசியம் தான்.

.....ரிஷபன் ஸ்ரீநிவாசன்   படைப்புகள்     நேசமும்,மென்மையும் கொண்டவை. ஆதாரமான அன்பை வெளிப்படுத்துவதோடு,   ஒவ்வொரு கதையும் ஒவ்வொருவிதமான உணர்வையும் தருவன.

-----------------------------------------------------------------------------------------------------------------

வடம் போக்கித்தெரு 

ரிஷபன்

சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகம்

விலை ரூ140/-,  அட்டைப்பட ஓவியம் ஜீவாநந்தன்


// நேசமும் ,மென்மையும் கொண்ட இவரது படைப்புகளின் ஆதாரமாக அன்பை வெளிப்படுத்துவதோடு ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதமான உணர்வைத்தருவன // 

துளிர் முதல் அப்பாவின் ஜாடையில் வரை இருபத்து இரண்டு கதைகள்.

காதல் - சொல்லிய காதல் சொல்லாத காதல் , காதலி மரணம் ,காதலின் மரணம் 

திருமணம் ,பிரிவு,மறுமணம் எல்லாம் இருக்கும் கதைகள் மத்தியதர மக்களின் நிறைந்திருக்கும் சம்பவங்கள் நியாய அநியாயங்களுக்கிடையில் ஊசலடும் மனம் நினைவுகளால் ஆர்ப்பரிக்கும் அதனை கட்டுப்படுத்த அல்லாடும் மனிதர்கள். எல்லாவற்றிலும் இழையோடும் ஆதார குணம் அன்பு செய்தல்.

ரிஷபனின் பலம் எளிய உரையாடல்கள் அதனால் பின்னப்பட்ட மூன்றே மூன்று பக்கங்களுக்கு மிகாத ஒரு சிறுகதைகள் 

ஒரு பேருந்துப் பயணத்தில் படித்து விட முடிகிற சிறுகதைகள் தான் எனினும் பயணத்தோடு முடிந்து விடுபவையோ ,மறந்து விடக்கூடிய கதைகளோ அல்ல.

நேர்த்தியாக பராமரிக்கப்பட்டிருக்கிற தோட்டத்தின் வசீகரத்திற்கு சற்றும் குறைவில்லாதன  வெளியே தானாய் வளர்ந்திருக்கிற சிறு செடியின்மஞ்சள் நிற குட்டி குட்டிப்பூக்களும். 

அப்படித்தான் ரிஷபனின்கதை மாந்தர்களும் வசீகரிக்கிறார்கள்.ஜனனம்கதையின் டிரைவரை போல.

ஆதாரம் சிறுகதையில் பாட்டி சொல்வது போல் // இந்த அன்பு தாண்டா தம்பி நான்  நூறு வயசு வாழறதுக்குக் காரணம் //

அன்பின் இழைகள் நம்மை பின்னிப்பிணைந்திருக்கின்றன என்பதை நிரூபிக்கும் எழுத்திற்காக வாழ்த்துகள் .

//மனிதன் வேதனைகளால் மட்டுமே  ஆனவன்என்றுவலியுறுத்துகிற மாதிரி பரபரப்பில் அல்லாடுகிற ஜீவன்கள் .தேறி வெளியேறியதும் துள்ளப்போகிற ஆத்மாக்கள் //

கற்குதிரை கதையில் இடம்பெற்றிருக்கிற வார்த்தைகள் போல் ரிஷபன் அவர்கள் வர்ணிக்க ,அவர் அனுபவித்த ,பார்த்த காட்சிகள் ஏராளம்உண்டு.

அவையெல்லாம் சிறுகதைகளாக ,குறுங்கதைகளாக எழுத்தில் வர வேண்டும்.

அவரின்  ஜ்வால்யாவும் ,அம்முவும் இன்றும் மனதில் .

Saraswathi Gayathri 

-----------------------------------------------------------------------------------------------------------------



 

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....