Friday, April 5, 2024

மந்தைப்பிஞ்சை- கா.சி.தமிழ்க்குமரன்



 மந்தைப்பிஞ்சை-

கா.சி.தமிழ்க்குமரன்

ரூ.180/-


மொத்தம் இருபது  கதைகள் அடங்கிய தொகுப்பு  ‘மந்தைப்பிஞ்சை'. பாதையில்லாக் காட்டில், ஒற்றையடிப்பாதை அமைத்து பயணம் போனார் நூற்றாண்டைக் கடந்த கரிசல் இலக்கிய மேதை கி.ராசநாராயணன். பா.செயப்பிரகாசம், பூமணி, சோ. தர்மன் என நடந்து ஒற்றையடிப்பாதை அரசவீதி ஆயிற்று. அதில் திடமாகவும் தீர்மானத்துடனும் பயணிக்கின்றன கா.சி.தமிழ்க்குமரனின் கதைகள்.

                                                                                                          சென்னையில் உறைபவர்க்கும், அரசியல் - சினிமா -  ஆன்மீகத் தொடர்பு உடையவர்க்கும் எளிதாக வாய்க்கும் ஊடக, வாசகப் பூச்சொரிவு  நாட்டின் ஒதுக்குப் புறங்களில் வாழும் படைப்பாளிகளுக்கு வாய்ப்பதில்லை என்பதை சமீப காலமாய் நாம் உணர்கிறோம். 

மேலும் பெண்ணிய, தலித்திய, திராவிட, முற்போக்கு, சநாதன இன வரையறைப் பீடங்களின் முன் நின்று ஆராசனை வந்து சாமி ஆடுபவர்கள், தங்களது முன் முடிவுகளை அகல நீக்கி வைத்துவிட்டுத் திறந்த மனதுடன் வாசிப்பை மேற்கொண்டால், கா.சி.தமிழ்க்குமரன் போன்ற படைப்பாளிகள் கண்ணில் தென்படுவார்கள். 


நாஞ்சில் நாடன்



No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....