Tuesday, December 31, 2024

எட்டு ஆண்டுகளை நிறைவுசெய்து ஒன்பதாம் ஆண்டில்.........

 


அனைவருக்கும் வணக்கம்.

2017 இதே நாளில் அறிவித்துத்  துவக்கப்பட்ட சிறுவாணி வாசகர் மையம் எட்டு ஆண்டுகளை நிறைவுசெய்து ஒன்பதாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

வாசிப்பை நேசிப்பவர்களை ஒருங்கிணைத்து "மாதம் ஒரு நூல்"எனச் சிறந்த நூல்களைத் தேர்வுசெய்து உறுப்பினர்கள் வீட்டிற்கே அனுப்பி வருகிறோம்.

இப்பணியில் எங்களை வழிநடத்திச் செல்லும் ஆலோசகர்கள், எழுத்தாளர்கள்,
உறுப்பினர்கள், அச்சகத்தார், பத்திரிகை நண்பர்கள், முகநூல் நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறோம்.


🙏🙏🙏
தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ்
சிறுவாணி வாசகர் மையம்.

9940985920
8778924880

----------------------------------------------------

அறிவிப்பு

அனைவருக்கும் வணக்கம்.

2017 உலகப் புத்தக தினத்தில் தொடங்கப்பட்டு "மாதம் ஒரு நூல்" திட்டத்தில் உறுப்பினர்களுக்கு வீடுதேடிப் புத்தகங்களை அனுப்பிவருகிறோம். வணிகநோக்கமில்லாத எங்களின் முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவளிக்கும் தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

எட்டாவது ஆண்டு நிறைவில் இருக்கிறோம். இன்னும் மூன்று புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன. இவற்றோடு எட்டாவது ஆண்டு நிறைவு பெறுகிறது.

ஏப்ரல் 2025-மார்ச் 2026 (ஒன்பதாம்) ஆண்டுக்கான சந்தாவை வரும் ஜனவரி-1 முதல் பெறத் துவங்கவுள்ளோம்.

தற்போது காகித விலையேற்றத்தால், புத்தகங்களின் தயாரிப்புச் செலவு மிகவும் உயர்ந்துவிட்டது. அதோடு தபால், கூரியருக்கான தொகையையும் உயர்த்திவிட்டார்கள்.

மிகுந்த சிரமத்திற்கிடையேதான் சிறுவாணிப் புத்தகங்களைத் தயாரித்தும் அனுப்பியும் வருகிறோம். இதனாலெல்லாம் இந்த ஆண்டிற்கான சந்தாவைச் சற்றே  உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஏப்ரல் 2025-மார்ச் 2026

தமிழகத்திற்குள் 
ரூ 2000/-

பிற மாநிலங்களுக்கு
ரூ 2400 -

"வாசிப்பை மேம்படுத்த  வீடுதேடிவரும் புத்தகங்கள்" எனும்
சிறுவாணி வாசகர் மையத்தின் முயற்சிக்குத் தொடர்ந்து ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறோம்.

நன்றி


சுபாஷிணி திருமலை,
ஜி.ஆர்.பிரகாஷ்
சிறுவாணி வாசகர் மையம்,
கோவை.


No comments:

பொழுதுபோக்கு - தி.ஜ.ர June-2025

பொழுதுபோக்கு             தி.ஜ.ர ரூ. 250/-