Tuesday, July 15, 2025

Wednesday, July 9, 2025

தாமரைக்குளம் - சுத்தானந்த பாரதியார் May -2025




 தாமரைக்குளம்

         சுத்தானந்த பாரதியார்


128

Pages


ரூ 150/-


சுவாமி சுத்தானந்த பாரதியார் அவர்கள் பல மொழிகளிலும், சிறுகதைக் கட்டுக்கோப்பை உணர்ந்தவர். அவர் எழுதியிருக்கும் இந்தக் கதைக் கோவையில், மருட்கை, சோகம், வீரம். சிருங்காரம், ஹாஸ்யம், அச்சம், இளிவரல், வெகுளி, சாந்தம் ஆகிய நவரசங்களும் ததும்புகின்றன.

நாம் இக்கதைகளைப் படிக்கும்போது, உணர்ச்சிப்புயல், இரத்தத் துடிப்பாகவும். இதய பூகம்பமாகவும் வளர்கின்றது.

வி.ஆர்.எம். செட்டியார், பி.ஏ.
1.1.1942
--------------------
ஏன் இந்த நூல் இக்காலகட்டத்தில் அவசியமாகிறது? நவீன வாழ்க்கையில் நாம் இழந்துவிட்ட, மூத்தோர் கதைசொல்லும் முறை யில் அமைந்த சிறுசிறு கதைகள்.தேசபக்தியை,நற்பண்புகளை, ஒழுக்கத்தை வலியுறுத்திய கதைகள்.


நம்மை பால்யத்தை நோக்கி மீண்டும் அழைத்துச் செல்லும் கதைகள்.


 

கதவுக்கு அப்பால் - ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு April 2025





                              ராஜம் கிருஷ்ணன் நூற்றாண்டு (1925-2025) வெளியீடு

 கதவுக்கு அப்பால்

         -ராஜம் கிருஷ்ணன்


176

Pages


ரூ 180/-


தற்கால நிகழ்வுகளில் நான் நம்பிக்கை இழந்து

சோர்ந்து விழும் போதெல்லாம் ராஜம்கிருஷ்ணன்

எழுதியதைப் பார்த்து மீண்டும்

மீண்டெழுகிறேன்.

- அம்பை

 ---------------------

பெண்கள் மிகக்குறைவாகவே எழுதிக்கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில் தமிழ்ப்புனைவெழுத்தில் கால் பதித்து வழக்கமான வணிகப்போக்குக்கு மாறான தீவிரம் கொண்ட சமூக விமரிசனங்களாகத் தன் நாவல்களை உருவாக்கியவர் ராஜம் கிருஷ்ணன் . பெண் எழுத்தாளர்களில் அவரைப்போல அகலவும் ஆழவும் உழுதிருப்பவர்கள் வேறு எவரும் இல்லை.


தமிழ் இலக்கியத்தின் பல களங்களிலும்

தமிழ்ச்சமூகத்தின் பல தளங்களிலும்

அழுத்தமாய்ச் சுவடு பதித்திருக்கும்

காலடிகள் ராஜம் கிருஷ்ணனுடையவை.

எம்..சுசீலா

----------------






 

பொழுதுபோக்கு - தி.ஜ.ர June-2025

பொழுதுபோக்கு             தி.ஜ.ர ரூ. 250/-