Friday, September 19, 2025

9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026

 


சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில்
(மாதம் ஒரு நூல்) 
உறுப்பினர்களுக்கு

இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.







நாஞ்சில் -50 & நாஞ்சில்நாடன் விருது விழா Videos 24.08.2025

 





சிறுவாணி வாசகர் மையம்
வழங்கும் நாஞ்சில்-50
- எழுத்துலகில் 50 ஆண்டுகள்
(நாஞ்சில்நாடன் அவர்களை சிறப்பித்தல்) 
&
நாஞ்சில்நாடன் விருது - 2025 பெறுபவர் 
வே.முத்துக்குமார் 

திரு.பிரவீண் விப்ரநாராயணன்
இசைநிகழ்ச்சி


சங்கரா கண் மருத்துவமனை
பத்மஸ்ரீ.
டாக்டர்.R.V. ரமணி விருதுரை

 
சங்கரா கண் மருத்துவமனை
டாக்டர்.ராதா ரமணி விருதுரை


முனைவர்.பேராசிரியர்  ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் உரை


"சொல்வனம்"
வ.ஸ்ரீநிவாசன் உரை


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்புரை


விருதாளர் வே.முத்துக்குமார் 
ஏற்புரை

இறைவணக்கம்












பனுவல் போற்றுதும் - நாஞ்சில்நாடன் 2025


பனுவல் போற்றுதும்

           நாஞ்சில்நாடன்

கட்டுரைகள்

                ரூ. 250/-


படிக்கப் படிக்கத் தெரிகிறது. இன்னும் ஒன்றுமே  படித்திருக்கவில்லை என்பது. அவ்வையே சொன்னாள், 'கற்றது  கை மண்ணளவு, கல்லாதது உலகு அளவு' என்று. மீதி வாழ்நாளில் இன்னும் எத்தனை புத்தகங்களை வாசித்து விட இயலும்? அதற்காக 'எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீரவும்' முடியாது.

‘பனுவல் போற்றுதும்’ நூலின் பல கட்டுரைகள் எனது வழக்கமான பாணி யிலானவை அல்ல. எனது ஆய்வு முடிவுகளும் அல்ல. என்னை வசீகரித்த
 நூல்களை வாசகருக்கு அறிமுகம் செய்கிறேன். அவ் வளவே!

நாஞ்சில் நாடன்





 

பவித்ரா பதிப்பகத்தின் புதிய /பிற வெளியீடுகள் 2025

      பவித்ரா  பதிப்பகத்தின் 

புதிய /பிற வெளியீடுகள்


Whatsapp 9940985920


இமயம் கண்டேன் இறை கண்டேன்

க.சிவசுப்பிரமணியன்
ரூ 170/-

காசியைப்போல ஒவ்வோர் ஹிந்துவும் சென்று தரிசிக்க வேண்டியவை 'சார்தாம்' எனப்படும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள்.

'சார்தாம்' எனில் இறைவனின் நான்கு இருப்பிடங்கள்.

யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் ,பத்ரிநாத்  என்பவை அவை.
அத்தலங்களுக்கும் மற்றும் பல திருத்தலங்களுக்கும் சென்று தரிசித்து வர முழுமையான பயண வழிகாட்டி இந்நூல்.

நூலாசிரியர், பெரியபுராண உரையாசிரியர் சிவக்கவிமணி சி.கே.எஸ் அவர்களின் பேரர் என்பது நூலின் மற்றொரு சிறப்பு.




பொய்மான்கரடு 

கல்கி 

(கொங்குப் பகுதி நாவல்-2)

         ரூ 150/-

நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் ‘பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் ‘பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.

கல்கி



நான்

லா..ரா  

(கட்டுரைகள்-நேர்காணல்-சிறுகதைகள் சில.)

                ரூ 180/-


நிகழ்ச்சி சரித்திரமாகி சரித்திரம் நினைவாகி நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர்விட்டு விஷயம் மெருகேறி நம் ரத்தத்தில் தோய்ந்து. பரம்பரைக்கு மாண்பை ஊட்டி வளர்க்கும் காவியமாகி விடுகிறது. உயிரின் காரியம் இழுக்க இழுக்க ஓயாத சரடு, புரியாத ஜாதுவில், கழலக்கழல்ல அதில்தான் எத்தனை வர்ணங்கள், பொலிவுகள் , நூல் நயங்கள், நளினங்கள். ஆனால் எந்த இடத்திலும் அற்றுப் போகாத ஒரே சரடு. இந்த ஆச்சர்யத்தைத்தான் கலைகள் பாடுகின்றன.

ஆண்டவனே, உன்னை வேண்டிக் கொள்கிறேன் ஆச்சர்யம் குன்றாமலிருக்க  வேணும்.

லா .ச-.ரா



மகுடபதி 

கல்கி 

கொங்குப் பகுதி நாவல்-1

                ரூ 250/-

"கல்கி" ஆசிரியருக்குச் சொந்த ஊர் மாயவரம் பக்கத்திலுள்ள கிராமம். நானும் அங்கே போய்த்தான் இருக்கிறேன். "மகுடபதி"யை வாசித்த பிறகு, ஆசிரியர் பிறந்து வளர்ந்து சுகதுக்கங்களை அனுபவித்த இடம் கோயமுத்தூர் ஜில்லாதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆசிரியர் ஏதோ சொற்ப காலந்தான் கொங்கு நாட்டில் வாழ்ந்திருக்கிறார். ஆனாலும், அங்குள்ள மக்களோடு இதயங் கலந்தவாறாக வாழ்ந் திருக்கிறார். மக்களோடு மாத்திரமல்ல ; கொங்கு நாட்டு நிலத்திலும் புழுதியாடத் திளைத்திருக்கிறார்.

டி .கே .சிதம்பரநாத முதலியார்



இரு நாவல்கள் 

.ரத்னம்

         ரூ 300/-

நினைவின்நிழல்,   கனவுமாலை

ஒன்றுக்கொன்று கதைத் தொடர்புடைய இந்த இரண்டு நாவல்களும் ஒரே நூலாக……..




உருவகக் கதைகள்

.ரத்னம்

                ரூ 150/-

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உயிர் அற்றனவும் விலங்குகள் பறவைகள், அஃறிணை உயிர்கள் முதலியன அறிவொடு பட்டனவாகப்  பேசுவதாகவும், மற்றவர் பேசுவதைக் கேட்பதாகவும் படைக்கப்பட்ட  பஞ்சதந்திரக் கதைகள், புத்த ஜாதகக் கதைகள் இருந்திருக்கின்றன .
இத்தொகுதியில் அமைந்த கதைகள் பலவும் இவ்வகையினவே. இவற்றை ‘உருவகக் கதைகள்’ எனப்  பெயரிடக் காரணம், பேசும் திறன் அற்றனவும் பேசுவதாக உருவகப்படுத்தப் பட்டிருப்பதே. 

க.ரத்னம்




தரங்கிணி

லா.ச.ரா சிறுகதைகள்

                ரூ 250/-   

 “எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கின்றது? எனக்கே கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்பிடி இங்கு அம்பலமாயின. எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. என் எண்ணங்கள் எப்படி அவருடைய எழுத்தானது?"  என்பது லா.ச. ரா.வின் மீதான வாசகனின் வியப்பு.

இந்தத் தொகுப்பிலும் இதனை உணரலாம்

-சப்தரிஷி லா -ச- ரா          




பூர்வா 

லா.ச.ரா சிறுகதைகள்

    ரூ 220/-


எத்தனை விதங்களில் எழுதினாலும் நான் எழுதவது நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான். இதைச் சொல்கையில் உயிரின் சாசனத்தை வாசகர்களின் நெஞ்சில் நித்தியமாய் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதுவே என் விதி. என் விதியே என் பெருமிதம். இதுதான் நான் தேடும் என் சொல் - என் சொல்தான் என் உளி என்கிறார் லா.ச.ரா.

இக்கதைகளை வாசிப்பவர்கள் அதனை உணர்வார்கள்.

– சப்தரிஷி.லா.ச.ரா-



கங்காதரனும் குழந்தை ராமனும்

.சிவசுப்பிரமணியன்

பயண நூல்

   ரூ 180/-

'மனித வரலாறு தோன்றுமுன்பே தோன்றிய நகரம் காசி' என்பார் மார்க் ட்வைன். ஸ்ரீ ராமருக்கும் முன் பிறந்தது அயோத்தி, காசியும், அயோத்தியும் ஹிந்து மதத்தின் உயிர். இரண்டுமே ஆயிரம் வருஷங்களாகப் பல்லாயிரம் பிரச்சினைகளை எதிர் கொண்டு இன்று பொலிவுடன் நிற்பவை.

காசி. அயோத்தி, பிரயாகராஜ். கயா,புத்தகய ஆகிய பாரதத்தின் பெருமிதமிக்க தலங்களின் வரலாறுகளை, ஆன்மீகத் தொடர்பை விரிவாக சொல்லும் இந்நூல் காசி, அயோத்தி புனிதப் பயணத்துக்குச் சிறந்த வழிகாட்டியும் கூட.


வில்லியும் சிவனும் 

  இராய.சொ

ஆய்வு நூல்

                ரூ 300/-

கம்பர், வில்லி போன்ற பெருங்காப்பியப் புலவர்கள் தம் காப்பியத்துக்கு உரிய கடவுள் எதுவாயினும், தாம் வழிபடு கடவுள் எதுவாயினும், அக்கடவுளைப் பாடும்போது தமிழ்மக்கள் வழிபடும் ஏனையக் கடவுளர்களையும் மதித்துப் பாடியுள்ளனர். பாடும்போது அச்சமய மக்கள், தம் கடவுளரைப் போற்றிப் பாடும் அளவிற்கு, ஏற்றிப் பாடியுள்ளனர்.

அதனால் அவர்கள் யாத்த காப்பியங்கள், சமயப்பொது நூலாகவும், எல்லா மக்களும் கற்றற்கு உரிய பொதுவிலக்கியமாகவும் விளங்குகின்றன.
 
இந்த இலக்கிய மரபை விரிவாக அறிந்து கொள்ள  இவ்வெளியீடு துணை செய்யும் என்பது என் கருத்து.

டாக்டர் வ.சுப. மாணிக்கம்


கம்பனும் சிவனும் 

             இராய.சொ

ஆய்வு நூல்

                ரூ 400/-

ராய. சொ. அவர்கள் தமிழ்க்கடலும் சிவமணியும் ஆதலின் கம்பன் காப்பியக் கடலிடைச் சிவமணிகளைக் கண்டு எடுத்துக் காட்ட முன்வந்தார். 

இத்துறையில் இப் பதிப்பு தமிழாராய்வார்க்கு ஒரு புதிய பாதை என்று கூற விழைகின்றேன். ஒரு பெருமரத்து ஆங்காங்கு இலை மறையக் கிடந்த பழங்களை ஒருவர் பறித்துத் தொகுத்துக் குவித்துக் காட்டுங்கால் உண்டாகும் மகிழ்ச்சியை இப் பதிப்பில் பெறுகின்றோம்.

டாக்டர் வ.சுப. மாணிக்கம்




டாக்டர்.ரங்காச்சாரி

           ராஜம் கிருஷ்ணன்

வாழ்க்கை வரலாற்று நாவல்

 ரூ 450 /-

மிகக் கருத்தோடும் பொறுப்போடும் முனைந்து ஓடிஓடி நோய் தீர்த்த டாக்டர். ரங்காச்சாரி அவர்களின் கடமையுணர்ச்சியையும், உயிர் காக்கும் அருளுணர்ச்சியையும், ஓய்வற்ற தொண்டையும், உதவியையும், அக்காலத்தார் பெற்றுப் பிழைத்த உண்மை நிகழ்ச்சிகளையும் படிப்போர் நெஞ்சம் குழையும்! மருத்துவத் தொண்டின் மாண்பும் புலப்படும்!

டாக்டர் ரங்காச்சாரி ஒருவர் போதுமா? தொடர்ந்து மனித சமுதாயத்திற்கு உதவ எண்ணற்ற ரங்காச்சாரிகள் தேவை, தேவை! நோயகற்றி வாழ்வளிக்கும் நாயகர்களை நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

புதிய ரங்காச்சாரிகள் வருக, வருக என்ற வரவேற்புடன் காத்திருக்கிறோம்.

----------

ராஜம்கிருஷ்ணன் நூற்றாண்டு வெளியீடு




ஔவை பாடல் திரட்டு-

.சரவணன்

ஆய்வு நூல்

 ரூ 250/-

"தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?" என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்ற செல்வங் களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்' என்று நாம் மறு மொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

-மகாகவி பாரதியார்


சிரஞ்சீவிக் கதை  

கல்கி சிறுகதைகள்

  ரூ 200/-


தமது சரித்திர நாவல்களாலும் சமூக நாவல்களாலும் எண்ணற்ற சிறுகதைகளாலும், கவிதை, கட்டுரைகள் போன்ற படைப்புகளாலும் தாம் எழுதிய தலையங்கங்களாலும் தற்கால தமிழ் இலக்கியத்தில் சிரஞ்சீவித் தன்மை பெற்றவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

கல்கி அவர்களின் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு




தக்கான் திருமொழி

108 திவ்யதேசங்கள் - தலா இரு பாடல்கள் 




கம்பனில் காத்திருப்பு

நண்பர், பேராசிரியர் ஜகந்நாத் அவர்களின் கம்பராமாயண வாசிப்பு ரசனை, ஆய்வு, சமயம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது. இவற்றுக்கிடையில் முரண்பாடுகளை அவர் காண்பதில்லை. இவை மூன்றையும் இணைத்துச் செல்வதாகவே அவரது பார்வை அமைந்துள்ளது என்பதை இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

-ஜடாயு




உயிரின் வலி - மரு.த.ரவிக்குமார் September 2025








 

உயிரின் வலி

       மரு..ரவிக்குமார்

கட்டுரைகள்

  ரூ. 200/-


ஈரோடு மெடிக்கல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடல் டீன் ஆக இருக்கும் டாக்டர் ரவிக்குமார் அவர்கள் அலைபேசியில் சில நாட்களுக்கு முன்பு என்னிடம்  பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு அனுபவத்தைச் சொன்னார். 

இளநீர் வியாபாரி ஒருவர் இளநீரை வெட்டி சீவும் பொழுது  தன் கட்டை விரலையும்  சேர்த்து சீவிக் கொண்டு விட்டார். 

ரத்தம் பீறிட்டு அடித்த போதும், அவர் கொஞ்சம் கூட அதைப் பொருட்படுத்தாமல், பதட்டப்படாமல் கீழே துண்டித்து விழுந்த  விரலை எடுத்து,  பிளாஸ்டிக் பையில் போட்டு, அதில் ஐஸ் கட்டி ஒன்றைப் போட்டுக்கொண்டு நேராக ஹாஸ்பிடலுக்கு வந்து விட்டார்.

அவருடைய மனைவியோ வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு, கதறி அழுது ஒரு தடவை மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.  விரலை பறி கொடுத்தவர் சர்வசாதாரணமாக மனைவிக்கு ஆறுதல் சொன்னார். 

"இப்ப எதுக்காக இப்படி அழுது புலம்பிட்டிருக்கே. நடந்தது நடந்து போச்சு . டாக்டர்கிட்ட வந்துட்டோம்ல இனி அவர் சரி பண்ணிடுவாரு" என்று சொல்லி நான் அளித்த அந்த சிகிச்சை முறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஏற்றுக் கொண்டார்.

அடுத்த சில நாட்களில் அவருடைய கட்டை விரல் பழையபடி மற்ற விரல்களுக்கு சமமாக மகுடம் சூட்டிக் கொண்டது.  

ஒவ்வொருவரும் இதே போல் எதிர்பாராமல் தங்களுக்கு ஏற்படக்கூடிய உடம்புப் பிரச்சினைகளைக் கண்டு  கலங்காமல் மனரீதியாக எதிர் கொண்டால் பலன் கிடைக்கும். நடந்ததை எண்ணி புலம்பிக் கொண்டே இருந்தால் வலியும் அதிகமாக இருக்கும். 

இது போன்ற பல  அனுபவங்களை  அவர் தொகுத்து 'உயிரின் வலி' என்ற தலைப்பிலே   ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்  என்று அவர் சொன்ன போது நான் ஆச்சரியப்பட வில்லை.

ஏனென்றால் அவர் திறமையான டாக்டர் மட்டும் அல்ல.

ஒரு நல்ல எழுத்தாளரும் கூட......


எழுத்தாளர் ராஜேஷ்குமார்



தமிழ் இலக்கியக் கதைகள் - நா.பார்த்தசாரதி August 2025




தமிழ் இலக்கியக் கதைகள்

           நா.பார்த்தசாரதி

                                                                      சிறுகதைகள்     

                                                                          ரூ. 200/-





 

கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும் பி.ஏ.கிருஷ்ணன் July 2025








கல்லடிக்கும் உளிகளும் உப்பளப் பாறைகளும்

பி.ஏ.கிருஷ்ணன்


விலை ரூ 180/

பல விவாதங்களின், உரையாடல்களின் முதலடியாகவும், இலக்கியத்தில், கலைகளில் தம்மை மகிழ்வித்த இடங்களை திரு. பி.ஏ. கிருஷ்ணன், பிறருடன் பகிரும் நன் முயற்சியாகவும் இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.  
                                                                                                            
இதில் இருக்கும் கட்டுரைகளை கவனம் கூர்ந்து வாசகர்கள் படிப்பாரேயாகில் பல புதிய வாசல்கள் அவர்களுக்குத் திறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.     
                                           
வ.ஶ்ரீநிவாசன்.



 

9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026

  சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்)  உறுப்பினர்களுக்கு இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.