கோவை புத்தகத் திருவிழா (2026) ல்
சிறுவாணி வாசகர் மையம். (Siruvani Vasagar maiyam)
https://www.facebook.com/share/p/1EHJPDBSZd/
அனைவருக்கும் வணக்கம்.
கோவை புத்தகத் திருவிழா ஜூலை 17 ம் தேதி துவங்கி நேற்றுடன் பத்துநாட்கள் இனிதே நிறைடைந்தது.
நமது சிறுவாணி வாசகர் மையம் அரங்கு 35 ல் பங்குபெற்றதையும் அறிவீர்கள்.
கோவை புத்தகத் திருவிழாவில் பங்குபெற
ஊக்குவித்த திரு.நாஞ்சில்நாடன்,
திரு.வ.ஸ்ரீநிவாசன் ,
திரு.ஆர்.ரவீந்திரன்....
பங்குபெற வாய்ப்பளித்த புத்தகத் திருவிழாவின் தலைவர்
திரு.ராஜேஷ்,திரு.விக்னேஷ்,திரு.முகுந்தன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.
🙏🙏🙏
வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற பேராசிரியர் க.ரத்னம் ஐயா அவர்கள் சிறுவாணி அரங்குக்கு வருகைதந்து சிறப்பித்தார்.அவருக்கு வணக்கமும் நன்றியும்.
---------
சிறுவாணி வாசகர் அரங்குக்கு வருகைதந்து பெருமைப்படுத்திய நண்பர்கள்/ எழுத்தாளர்கள்/உறுப்பினர்கள் ;
முடிந்தவரை பெயர்களை க் குறிப்பிட்டு நன்றிகூற முயல்கிறேன்.
பட்டியலில் விடுபட்டவர்கள் இருப்பின் அது எனது நினைவுக் குறைபாடே.
மன்னிக்கவும்.
-----------
திரு நாஞ்சில் நாடன், ஓவியர் ஜீவா, எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பாளர் திரு. கண்ணன்,எழுத்தாளர் பா.ராகவன்,எழுத்தாளர் சாருநிவேதிதா,திரு.மரபின் மைந்தன் முத்தையா,திரு.D.பாலசுந்தரம் ஐயா,
திரு.சுதேசமித்திரன், திரு.அரவிந்த் வடசேரி, மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா, ஐயா பொதிய வெற்பன், திரு.கோணங்கி, திரு.முருகேச பாண்டியன், திரு.அய்யப்ப மாதவன்,
திரு.கா.சு.வேலாயுதன்,
'லயம்'திரு.காலசுப்பிரமணியன்,
புரவலர்
திரு.V. கிருஷ்ணகுமார்,புரவலர் திரு.சத்தியமூர்த்தி....
புன்னகை அம்சப்ரியா,
காலச்சுவடு திரு அய்யாசாமி
திரு.CGS.மணியன்,ஓவியர்.சுந்தரம் முருகேசன் ....
கவிஞர் யவனிகா ஸ்ரீராம்,
சிவக்கவிமணி அவர்களின் பேரர்கள் திரு.சிவசுப்பிரமணியன்,திரு.கந்தசாமி,எழுத்தாளர் சு.வேணுகோபால்,
எழுத்தாளர்கள் திரு.லா.ச.ரா சப்தரிஷி,திரு.சங்கரராம பாரதி,
திரு.கே.என்.செந்தில்,திரு.ஸ்கந்தசுப்ரமணியன்,திரு.வேடியப்பன்(டிஸ்கவரி),
திரு.ஜீவகரிகாலன்(யாவரும்),
இயக்குநர் ராம்-ன் தந்தையார் திரு.சங்கரநாராயணன்,
திரு.நாகசந்திரன்,
திரு.இயகாகோ சுப்பிரமணியம்,திரு.போகன்சங்கர்...யூட்யூப் நண்பர்கள்...
திரு.கண்ணன் தண்டபாணி,
திரு.ஜான்சுந்தர்,
திரு.அவைநாயகன்,
திரு.மயன் மகேஸ்குமார்,திரு.மணிவண்ணன் சண்முகம்,லஷ்மிஹர்,
மற்றும்
அனைவருக்கும் நன்றி.🙏
நியூஸிலாந்து நண்பர்கள் திரு.சாய்,திரு.பாண்டியராஜ் மற்றும் கனடா,ஆஸ்திரேலியா,அமெரிக்காவிலிருந்து வருகைதந்த நண்பர்கள்...
ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு.பரமசிவன்,
எழுத்தாளர் சுரேஷ்வெங்கடாத்ரி தினமும் வந்திருந்து உதவிசெய்தார்கள் அவர்களுக்கும் பேராசிரியர்.விஜயராகவன், கவிஞர் கோவை சுபா ஆகியோருக்கும் நன்றி. 🙏🏻🙏🏻
பவித்ரா பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் ஜி.ஏ.பிரபா,திரு.ம.முருகன்,கவிஞர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் மற்றும் திரு வெங்கட்ராகவன் ஆகியோருக்கு நன்றி.
வரும் ஆகஸ்ட் 09 ல்
நாஞ்சில்நாடன் விருது -2026 நிகழ்வின் தலைமை விருந்தினர் திரு.பாலகுருசாமி (முன்னாள்) துணைவேந்தர் அவர்கள்,
விருதுபெறும் இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு) அரங்குக்கு வருகைதந்தார்.அவருக்கு நன்றி.
புத்தகத் திருவிழாவிற்காக பணிநேரத்தை மாற்றிக் கொடுத்து உதவிய எங்கள் நிறுவன மேலாளர்...
மேலும் நமது சிறுவாணி வாசகர் மையத்திற்கு வருகைதந்த வாசகர்கள்,புதிதாக இணைந்துள்ள வாசகர்கள்,
எனது மகளுக்காகப் புத்தகங்களைத் தேடித்தேடி ,பரிந்துரை செய்து வாங்கித் தந்த பேராசிரியை.மாதங்கி,
இத்தனை நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் காரணமாயிருந்தது சிறுவாணி வாசகர் மையம் அமைப்பு.
இதனை உருவாக்கிய திரு.நாஞ்சில்நாடன்,
ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,மூத்த சகோதரியாக விளங்கும் தி.சுபாஷிணி மற்றும் ஆலோசகர்கள்,
பாரதி வண்ணப்படங்கள் 35000 என்கிற எண்ணிக்கையை இந்த புத்தகத் திருவிழாவில் நிறைவு செய்தது மகிழ்ச்சி.
மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு வாசிப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி,
பல்வேறு நூல்களை அன்பளிப்பாக வழங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது.
எனது குடும்பத்திலிருந்து அம்மா,மனைவி மற்றும் மகள்.
சிறுவாணியின்வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்ந்து ஊக்குவித்தவர்கள் ,
அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
🙏🙏🙏🙏🙏🙏
தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.
ஜி.ஆர்.பிரகாஷ்
ஒருங்கிணைப்பாளர்
சிறுவாணி வாசகர் மையம்
கோவை
-------------
https://youtu.be/GUDaYT3enJo?si=1S6wCji9OFCM6rCS
SVM from 4th minute
-----------------------
https://youtu.be/Le9pDvQcv8Y?si=XtK6ErTFwnbM2wl9
4.51 minutes
----------------------
https://youtu.be/SjXMmzv8SKM?si=mdCMhkEczuABzB6I
Time: 26:40
----------------------
கோவைக்கு சுவை சேர்ப்பது 'சிறுவாணி நீர்'
அது நாவில்பட்டு தாகம் தீர்த்து உடலில் நிறையும்.
அது போன்றே 'சிறுவாணி வாசகர் மையம்' நூல்கள் கைககளில் தவழ்ந்து கண்களில் நுழைந்து இதயத்தை நிறைக்கின்றன.
10ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த வாசகர்மையம் நம் இன்றைய மிகப்பெரிய குறைகளான நேரமின்மை மற்றும் சிறந்த நூல்களை எங்கு தேடிச்சென்று வாசிப்பது..என்பதை களைந்து குறைந்த விலையில் பல நூல்களை நம் இல்லத்திற்கே தேடிவந்து மாதம் ஒரு நூல் என வருடத்திற்கு 12நூல்கள் நம் வாசிப்பிற்கு தருகிறார்கள். 6லிருந்து 100 வயதுவரை இதன் வாசகர்கள். 100 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூடஇதன் வாசகர்களாக (உறுப்பினர்களாக) இருக்கலாம். நான் அறிந்திட்டில்லேன். ஏனெனில் சிறந்த வாசிப்பு சுவாசிக்க வைக்கும். வாழ்வை ருசிக்க வைக்கும்.
இதன் தலைவராக திருமதி. மதிப்பிற்குரிய அம்மா சுபாஷிணி திருமலை அவர்கள் செயல்படுகிறார்கள்.
சிறந்த படைப்புகள் நம்மை வந்தடைய கௌரவ ஆலோசகர்களாக திரு. நாஞ்சில் நாடன், திரு. வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC) செயல்படுகிறார்கள்.
ஒரு குடும்பம் புத்தகம் வாசிக்கும் பார்த்திருக்கிறோம். ஒரு குடும்பமே புத்தகத்திற்காக உழைத்து பார்த்திருப்போமா?!
அத்தகைய சிறந்த குடும்பம்தான் திரு. ஜி.ஆர். பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் அவர்களின் குடும்பம்.
வாசகர்மையத்திற்காக அத்தனை சிறந்த பங்களிப்பு அவர்களுடையது.
நூல்கள் நாவல்கள், சிறுகதைகள்,கட்டுரைகள், என அனைத்து தரப்பு சிறந்த நூல்கள் நம்மை வந்தடையும். சிறுவாணி வாசகர் மையத்தின் 1,25,50,75, 100 நூலகளாக நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் நூல்கள் வந்துள்ளன. 100வது நூலாக "சொல்லாழி"!
பல அறிய வாசிக்க வந்த நூல்களில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் திரு. லாச.ராஅவர்களின் பூர்வா,இதழ்கள்,கழுகு,விளிம்பில்,கல்சிரிக்கிறது பிராயச்சித்தம்;
இந்திரா பார்த்த சாரதிஅவர்களின் 'வேர்ப்பற்று';'கல்குமிழிகள்' ந. பிச்சமூர்த்தி அவர்களின் சிறுகதைகள்; பெண் எழுத்தாளர் ராஜம் கிருண்ணன் அவர்களின் 'கதவிற்கு அப்பால்';
இவ்வருடம் கோவை புத்தகத் திருவிழாவில் சாதனையாளர் விருது பெற்ற பேராசிரியர் க.ரத்னம் ஐயாவின் 'கல்லும் மண்ணும்';
மற்றும் பல சிறுகதை நூல்கள் மற்றும் சிந்தனைத்தூண்டும் பல கட்டுரை நூல்கள்.
இந்தாண்டு ஏப்ரல் - செப்டம்பர் வரையில்:
சிட்டி (சிறுகதைகள்), நவரச நினைவுகள் சௌகார் ஜானகி, சொல்லாழி, காவிரிக்கரையில் திருவையாறு,என்றும் அன்புடன், வந்தே மாதரம் என்ற அற்புத நூல்கள் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.
நூல்களின் முகப்புப் படங்கள் ஓவியர் ஜீவா அவர்களின் கை வண்ணம்.
நூல்கள் வந்துவிட்டன ..ஆனால் அதை இன்னும் வாசிக்க வில்லையெனில் அவரின் அட்டை பட ஓவியமே நம்மை வாசிக்க தூண்டி இழுக்கும்.
அச்சில் வராத ஆனால் வாசிக்க வேண்டிய பல அற்புத நூல்களை தேடித்தேடி பதிப்பித்து நம்மிடையே கொண்டு சேர்க்கும் அரிய உழைப்பு சிறுவாணி வாசகர் மையத்தினுடையது.
தேன் சுவை தமிழால் சிந்தனையைத்தூண்டி,
அரிய நூல்களால் உள்ளம் நிறைத்து,
இல்லம் தேடி வரும் 'சிறுவாணி வாசகர் மைய' நூல்களும், அவர்களின் உழைப்பும் நிச்சயம் தமிழன்னையால் ஆசிர்வதிக்கப்பட்டவை.!
கோவை புத்தகத் திருவிழாவில் மட்டுமே பங்குபெறும் சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகப் புத்தகங்களை வாங்கிடவும், வாசகர் மைய சந்தாதாரரர் ஆகிடவும்
சிறுவாணி வாசகர் மையம்/பவித்ரா பதிப்பகம்
கோவை புத்தகத் திருவிழா-2026
அரங்கு எண் 35
Jayasri venkatesan fb
--------------------
Let's enjoy this weekend!
கோவையின் ஒரு Hidden Gem பற்றி இன்று பார்ப்போம். அதுவும் ஜீலை 26 அன்றோடு அனுமதி முடிகின்றது!
புத்தகக் கண்காட்சி! அரங்கு A - ஸ்டால் 35
சிறுவாணி வாசகர் மையம் /பவித்ரா பதிப்பகம்
இவர்கள் தங்கள் வாசகர்மையம் மூலம் பல அரிய புத்தகங்களை வாசகர்களிடையே 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக வீட்டின் வரவேற்பு அறைக்கே கொண்டு சேர்க்கின்றார்கள்.
பல அரிய நூல்களான வேரும் விழுதும், நவம், உனது ஆத்ம பிரயத்னம்,போக்கிடம்,தக்கர் பாபா,விளிம்பில், பிஞ்ஞகன், கல்லும் மண்ணும், கம்பனும் சிவனும், காப்பிய இமயம் முதலிய பல அரிய நூல்கள்.
நாவல்கள் மட்டுமின்றி சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு, கட்டுரைகள் நம்மிடையே கொண்டு சேர்க்கிறார்கள்.
அது சரி நாம் இந்த நூல்களை ஏன் படிக்க வேண்டும்?!
வாசிப்பு என்பது சிறு குழவியின் தீண்டலால்..போர் வீரனின் ஆயுத தாக்குதல் நம்முள் செய்யும், ஒரு புயலின் தாக்குதல் தென்றலாக வருடும்...மாயாஜாலமெல்லாம் நல் புத்தகங்கள் வாசிப்பில் நம்முள் நிகழும்.
நம் மொழியின் சிறப்பை, வரலாற்றை, உண்மை சம்பவங்களை, கலாச்சாரத்தை பின் எப்படி அறிய முடியும்.
நூல்கள் வெறும் கற்பனையில் எழுதப்பட்டவை மட்டுமல்ல. அவை உண்மையை தாங்கி காலம் கடந்து எடுத்துச் சொல்லும் காகித கல்வெட்டுகள்!
அதை காலம் கடந்தும் உயிர்ப்போடு வைக்க வாசகர்களால் மட்டுமே இயலும்!
மேலே குறிப்பிடப்பட்டவை அவற்றுள் மிக சில நூல்களே! நம் இல்லம் தேடி இத்தகை சிறந்த புத்தகங்கள் வருவதற்கு சிறுவாணி வாசகர் மைய சந்தாதாரர் ஆகவும், இன்னும் பல அரிய நூல்களை வாங்கவும்,
சிறுவாணி வாசகர் மையம்/பவித்ரா பதிப்பகம்
அரங்கு A - ஸ்டால் 35 கொடிசியா வர்த்தக வளாகம்
Let your weekend is fully "Booked"!!
Jayasri venkatesan
----------------------------



No comments:
Post a Comment