Thursday, October 22, 2026

'ரி' --அ.முத்துலிங்கம்

 





சிறுவாணி வாசகர் மையத்தின்  'மாதம் ஒரு நூல்' திட்டத்தில் பெருமைமிகு

அடுத்த வெளியீடு...


                                                                            'ரி'

                                                            அ.முத்துலிங்கம்


                                                    (தேர்ந்தெடுத்த சிறுகதைகள்)


தயாரிப்பில்....


அ.முத்துலிங்கத்தின் புனைகதை வெளிப்பாடு மனித இயல்பின் பல்வேறு ஆர்வங்களையும் தாபங்களையும் குதூகலங்களையும் சோகங்களையும் வெகு நுட்பமான வகையில் தூண்டிவிடக்கூடியது.

அவருடைய உலகத்தில் இயற்கைக்கு நிறைய இடமிருக்கிறது.

நிகழ்ச்சிகளை விவரிக்கையில் அவர் மிகையுணர்ச்சியையும் பச்சாத்தாபத்தையும் வெகு இயல்பாகத் தவிர்த்து  விடுகிறார்.

இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சமான அவருடைய நகைச்சுவையுணர்வு நிறைய உள்ள  படைப்புகளில்தான், ஆழ்ந்த சோகமும் உள்ளது.

புனைகதையில் இன்று சாத்தியமான நவீனத்துவம் அனைத்தும் உள்ளடங்கிய அதேநேரத்தில் அ.முத்துலிங்கத்தின் கதைகள் வாசகர்களில் பெரும்பான்மையோருக்கு எளிதில் எட்டக் கூடியதாகவும் அமைந்திருக்கின்றன. 


*அசோகமித்திரன்



No comments:

'ரி' --அ.முத்துலிங்கம்

  சிறுவாணி வாசகர் மையத்தின்  'மாதம் ஒரு நூல்' திட்டத்தில் பெருமைமிகு அடுத்த வெளியீடு...                                             ...