Monday, October 29, 2018

"இதய நாதம்"


ஜூன்-2017

இதயநாதம் 
ந. சிதம்பர சுப்ரமணியன்

நாவல் (sandiya publications)

பக்கங்கள் 224   விலை 140 /-

*******************************************************************


சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 3. இதயநாதம்
- - - - - - - - -
1952ல் ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்கள்
எழுதிய நாவல். சங்கீதத்தில் ஆர்வமுடைய கிட்டு என்ற சிறுவன், சபேசய்யர் என்ற குருவிடம் பயிலும் வாய்ப்புப் பெற்று, சிறந்தபாடகர் கிருஷ்ண பாகவதராக உயர்ந்தகதை.

பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்படவில்லை. ( சினிமாவாக இருந்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரராக மாறியதாகக்
காட்டியிருப்பார்கள். ) திடீரென அவருக்குத்தொண்டை பழுதாகி, பாட முடியாதபடி குரல் அடைத்து விடுகிறது. கலங்கும் அவருக்குப் பெரியவர் கந்தசாமி பாகவதர் எப்படி ஆன்மீக மார்க்கத்தை போதித்து ஆறுதல் அடையச் செய்தார் என்பதுதான் கதை.

"வித்தைக்கு விநயம் வேண்டும். வித்தை விநயத்தை உண்டு பண்ணா விட்டால் அதுநஷ்டம்தான்"

"வித்வத்தாவது சாதகத்தால் அடையக்கூடிய வஸ்து. ஆனால், சாரீர சம்பத்திற்கு
முந்தின ஜன்மத்தின் பூஜா பலன் வேண்டும்"

"சங்கீதமே அனுக்ரக வித்தை. அதை அடைவதற்கும் பூர்வ ஜன்ம சுகிர்தம் வேண்டும்"

இவ்வாறான அற்புதக் கருத்துக்கள் சிறந்த கதாபாத்திரங்களின் வாயிலாகக் கூறப்படுவது வாசகர்களின் அறிவுக்கு விருந்தாகஅமைந்திருக்கிறது.

நாதத்தின் எல்லையை
கடந்துவிட்டால், அதற்கு அடுத்த படியில்
இருப்பது மௌனம். அதுவே இதயநாதம்.
ஞான ஊற்றைத் தோண்டும் கருத்து.


(நன்றி. திரு கி.ரா.திருமலையப்பன்)
********************************************************************************************************
Suresh Venkatadri
August 11, 2017 ·

மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான, ந.சிதம்பர சுப்ரமணியத்தின் 'இதயநாதம் நாவல் , சென்ற மாதம்,கோவை சிறுவாணி வாசகர் மையம் அமைப்பினரால் மறு வெளிஈடு செய்யப்பட்டுள்ளது..மிக நீண்ட காலத்துக்கு முன் படித்தது, கிட்டத்தட்ட முழுமையாக நினைவிலிருந்து அழிந்துவிட்டது என்றே கூற வேண்டும்.இப்போது மீண்டும் படித்தேன்.

மிக எளிமையான கூறுமுறை, அலங்காரங்கள் ஏதுமற்ற நேரடியான நடையில், சம்பவங்களை விவரிக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. மோகமுள் வருவதற்கு முன்னால்.'இதயநாதம் நாவலே,,தஞ்சையின், இசைப் பாரம்பரியத்தை பற்றிய சிறந்த நாவல் என்று வழங்கி வந்திருக்கிறது என்று படித்திருக்கிறேன்.ஆனால், இது அடிப்படையில்,இசையின்,பின்னணியில், லட்சியவாதத்துக்கும், லௌகீகத்துக்கும், இடையிலான முரணைப் பற்றியது என்று சொல்ல வேண்டும்.கூடவே ஆச்சாரமான, பின்னணியைக் கொண்ட ஒருவர்,ஒரு ஆச்சாரமான கலையை, 'தாசி',குலத்தில் பிறந்த ஒருவரை தன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டு கற்றுக்கொடுக்கும்,விஷயம், அன்று, ஒரு புரட்சிகரமான அம்சமாகவும் இருந்திருக்க வேண்டும்.,இவை நாவல், வெளிவந்த காலத்தில், (1952ல்),மிகப் புதுமையாக,இருந்திருக்க வேண்டும்.

இப்போது படிக்கையில்,இதைப்போன்ற, பல்வறு கதைகள் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்திருப்பதால், ஒரு Template கதையாக தோன்றுகிறது. முழுக்கவுமே, அப்படி ஆகிவிடாமல், காப்பாற்றுவது, கதையின் க்ளைமாக்ஸ்தான்.முற்றிலும் எதிர்பாராதபடி,கதையின் நாயகன் கிருஷ்ண பாகவதருக்கு, நேரும்,விபத்தும்,அதை ஏற்றுக்கொண்டு, கடந்து செல்லும்,, வழியை கந்தசாமி பாகவதர் அவருக்கு காட்டும், இடமும்தான் இந்த நாவலை மிகச் சராசரியான ஒன்றிலிருந்து, குறிப்பிடத்தகுந்ததாக மாற்றுகிறது.

எஸ்.ஜி.கிட்டப்பா,மற்றும்,கே.பி.சுந்தரராம்பாளின், கதை என்றும் இதைப்பற்றி படித்திருக்கிறேன்.இசையனுபவத்தை சொற்களாக மாற்றுவதில்,வெற்றி அடைந்திருப்பதாகச் சொல்லமுடியவில்லை. முன்னுரையில் ஆசிரியர், நாவலின்,, பாத்திரங்களும், சம்பவங்களும், சில நிஜ மனிதர்களின் வாழ்விலிருந்தும்,, சம்பவங்களிலிருந்தும், உருவாக்கப்பட்டது என்றே குறிப்பிடுகிறார்.சிதம்பர சுப்ரமணியத்தின், மண்ணில் தெரியுது வானம் நாவலையும் படித்துப் பார்க்க வேண்டும்.
****************************************************************************************************************************

Rajaram Retd A I Radio: 

இதயநாதம் நாவலை எனக்கு '75-இல் தி.ஜா அறிமுகப்படுத்தினார். மோகமுள் வாசித்துவிட்டு அதில் காணும் இசை நுணுக்கங்களை.சிலாகித்து நான் அவரிடம் பேசியபோது.'நான் எழுதினது ஒண்ணுமே இல்லை.இதைப் படிச்சுப் பாருங்க ,' என்று இதயநாதம் கொடுத்தார். தம்மிற் பெரியவராய் ஒருத்தரைக் கண்டு தி.ஜா வியந்த பண்பு கண்டு நான் அசந்தேன்

*******************************************************************************************************************************



No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....