Saturday, October 16, 2021

ஊற்றுக்கண்- இயகோகா சுப்பிரமணியம்-டிசம்பர்-2021

  





டிசம்பர்-2021

ஊற்றுக்கண்- இயகோகா சுப்பிரமணியம்

பக்கங்கள் 144  விலை 130/-

-----------------------------------------------

நான் படித்த நூல்

 என் கல்லூரிக்காலத்தே, ஏன் அதற்கும் முன்பிருந்தே என்னை ஈர்த்த எழுத்தாளர் நா பா. அந்த இரண்டெழுத்து போதும், அவரை அறிய. அவரது தோற்றத்தைப் போலவே எழுத்தும் கம்பீரம்.

அவரது நாவல்களைத் தகுதி மிக்க ஒருவர் திறனாய்வு செய்திருக்கிறார்.

அவர் இயகோகா சுப்பிரமணியம். 

கோவை மக்களுக்கு அவரைப் பற்றி அறிமுகம் தேவையில்லை. விவசாயக் குடும்பத்தில் பிறந்த பொறியாளர், தொழிலதிபர். பன்முகத் தன்மை கொண்ட மனிதர்களை நாம் அறிமுகம் செய்ய இறங்கினால் அதிகப் பிரசிங்கித்தனம் ஆகிவிடும்.

இந்த நூலைக் கையில் எடுத்தவுடன் பரபரப்பாக நான் தேடிய நாவல் சத்தியவெள்ளம். ஏனெனில் என் பல்கலைக்கழக நாட்களை  நான் அங்கு படிக்கும்போதே பிரதிபலித்த நாவல். அதன் திறனாய் வைப் படித்த பின்னர், மற்றவைகள் வாசித்தேன்.

பிறகு அனைவருக்கும் பிடித்த பொன்வில ங்கு, குறிஞ்சி மலர் இதுபோல் ஏறத் தாழ பதினைந்து நாவல்கள், குறு நாவல், சிறுகதை.....

இவை. ஒவ்வொன்றை யும் நூலில் படித்து அந்த அனுபவம் பெற வேண்டும். 

இயகோகா வார்த்தைகளில் சில மட்டும் தருகிறேன்.

""நா பா வின் படைப்புகளில் வரும் நாயகனும் நாயகியும் - அவர்களாக நாம் மாறவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. தாங்கள் அப்படி மாறி,, இந்த மண்ணில் லட்சியங்களோடும், தியாக மனப்பான் மையோடும் வாழ்வது கடினம் என்று உணர்ந்தும் ஆசைப்பட்டுதான் திரும்ப திரும்ப  வாசித்தார்கள் என்றால் அது தான் நா பா வின் வெற்றி ""--- 

இதையே இந்த நூலின் core message என்று எடுத்துக்கொள்ளலாம்.

சிறுகதைகளை ப்பற்றிக்குறிப்பிடும்போது,"" நா பா போன்றவர்கள் கையாளும்போது, ஒரு இலக்கிய அந்தஸ்து கிடைத்து சாகா வரம் பெற்று விடுகின்றன.""- என்கிறார்.

அனைவரும் படிக்க வேண்டிய நூல்.


சிறுவாணி வாசகர் மையம் வெளியீடு.

Saba Rathinam

Coimbatore

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....