கோவை புத்தகத் திருவிழா(ஜூலை 19-28)
வெளியீடு 20.07.24 மாலை 3.00 முதல்....
இமயம் கண்டேன் இறை கண்டேன்
க.சிவசுப்பிரமணியன்
காசியைப்போல ஒவ்வோர் ஹிந்துவும் சென்று தரிசிக்க வேண்டியவை 'சார்தாம்' எனப்படும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள்.
'சார்தாம்' எனில் இறைவனின் நான்கு இருப்பிடங்கள்.
யமுனோத்ரி
கங்கோத்ரி
கேதார்நாத்
பத்ரிநாத் என்பவை அவை.
அத்தலங்களுக்கும் மற்றும் பல திருத்தலங்களுக்கும் சென்று தரிசித்து வர முழுமையான பயண வழிகாட்டி இந்நூல்.
நூலாசிரியர், பெரியபுராண உரையாசிரியர் சிவக்கவிமணி சி.கே.எஸ் அவர்களின் பேரர் என்பது நூலின் மற்றொரு சிறப்பு.
ரூ 170/- (+40 தபால் செலவு )
பவித்ரா பதிப்பகம்
Gpay 8778924880
Whatsapp 9940985920
இஃதென் ஆறாவது கவிதைத் தொகுப்பு.
இந்தக் கவிதைகள் மூலம் எனது இனம், மதம்,அரசியல் கோட்பாடுகள் என எவற்றையும் நான் நிறுவ முனையவில்லை.
யாமொரு வாணிபக் கவிஞனும் அல்லேம்!
ஏதாயினும் பெயரில் என்ன இருக்கிறது? மனிதனுக்குப் பயன்பட்டால் பயிர். பயன்படாமல் போனால் களை என்பது எவர் முன் முடிவு?
'வேம்பின் புழு வேம்பன்றி உண்ணாது' என்று பெரிய திருமொழியில் திருமங்கை மன்னன் குறிப்பதைப் போன்றதே எனது கவிதை முயற்சிகளும்.
நாஞ்சில்நாடன்
விலை ரூ 100/-
ஏற்றமும் தாழ்வும்
டி.கே.ஜயராமன்
கதை சொல்கிற கலையில் தேர்ந்த மரபில் வந்த ஒருவருடைய தரமான படைப்புக்களாக இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் அமைந்திருக்கின்றன . இந்தப் பதினொரு கதைகளையும் சிறுகதைகள்தான் என்று தயங்காமல் என்னால் கூற முடியும். அதிலும் அருமையான சிறுகதைகள் என்று கூறுவேன். நம்முடைய பகுத்தறிவுக்கும் உள்ளுணர்வுகளுக்கும் வேலை தருகிற கதைகள். ஒவ்வொன்றிலும் வேறு வேறு ருசிகள். சொல்லுகிற முறையிலும் புதிய உத்திகளைக் கொண்டவை.
யாரும் இதுவரை சாதிக்காத சாதனையென்றும், முற்போக்கென்றும், உலகத்திலேயே இல்லாத கருத்தென்றும் கண்டபடியெல்லாம் உளறிப் புலம்பி, ஆர்ப்பாட்டம் செய்யாமல், கலையுணர்வுடனும் கருத்தாழத்துடனும் புது நோக்குடனும் தொனியுடனும் விளங்கும் சிறுகதைகள்.
ஆர்வி
விலை ரூ 140/-
சிறுவாணி வாசகர் மையத்தின் ஆகஸ்ட் மாதப் புத்தகம்
சனிமூலை
ராகவன் தம்பி
கட்டுரைகள்
சனிமூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத்திருப்பதும், சனிமூலை ஒரு புத்தகமாக உருவாவதும் நல்ல விஷயங்கள்தான். நமக்கு வேண்டிய விஷயங்கள்தான். இது சம்பிரதாயமான பாராட்டு அல்ல. பாசாங்குகளும் பாவனைகளும் அற்ற தனக்கு நேர்மையும் உண்மையுமான மனப் பதிவுகள். ஒன்று சொல்ல வேண்டும். ஏற்கனவே போட்டிருக்கும் பாதையில் செல்லாமல் தனக்கென வழி ஒன்று தேடிக்கொண்டு அவஸ்தைப் படுகிறவர்களால்தான் உலகத்தில் புதிய சிந்தனைகளும் பாதைகளும் உருவாகின்றன.
ராகவன் தம்பியின் இந்த எழுத்து அவரது முத்திரை தாங்கியது. இங்கு வேறு யாரிடமும் நான் காணாதது. வேடிக்கையாக எழுதப்பட்ட ஒரு சுய சரிதம் எத்தனை பரிமாணங்களைப் பெற்று விடுகிறது! வியப்பு மட்டுமல்ல சந்தோஷமும்தான்.
இப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எழுத்து வேறு யாரிடம் இருக்கிறது?
வெங்கட் சாமிநாதன்
Rs 250/-
சிறுவாணி வாசகர் மையத்தின் செப்டம்பர் மாதப் புத்தகம்
என் பதவிக்கால நினைவுகள்
பாரதரத்னா. டாக்டர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா
இன்றைக்கும் உலகில் ஒவ்வொரு துறையிலும் அநேக மேதைகள் இருக்கின்றனர். அவரவர்கள் தாமாக எண்ணற்றதும், அதிசயிக்கத்தக்கதுமானவற்றை கண்டுபிடித்து எழுதியிருக்கிறார்கள். ஆனால், சர் எம். விஸ்வேஸ்வரய்யா தான் செய்ததோடன்றி, மற்றவர்களும் அதே மாதிரிப் பின்பற்றிச் செய்யும் முறைகளையும் வகுத்து, சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரையும் முன்னேற்றமடையச் செய்திருக்கிறார்.
இவர் நம் தேசத்திற்காகவும் நமக்காகவும் செய்திருக்கும் சேவைகளுக்குப் பிரதியாக நாம் எதைக் கொடுக்க முடியும்?
ஜி.டி.நாயுடு
ரூ 250/-
-
No comments:
Post a Comment