Sunday, July 7, 2024

சனிமூலை - ராகவன் தம்பி -ஆகஸ்ட் 2024

கோவை புத்தகத் திருவிழா வெளியீடு

நாள் 20.07.2024 மாலை 3.00 மணி...


சிறுவாணி வாசகர் மையத்தின் ஆகஸ்ட் மாதப் புத்தகம்

சனிமூலை 

ராகவன் தம்பி 

கட்டுரைகள்

Rs 250/-


சனிமூலை என்று தன் கன்னி எழுத்து முயற்சியை அடையாளப் படுத்துவார்களா? பொதுவாக நம் தமிழர்களுக்கு இதைக் கேலி செய்யத் தோன்றலாம். ஆனால் அப்படி ஒருவர் கிடைத்திருப்பதும், சனிமூலை ஒரு புத்தகமாக உருவாவதும் நல்ல விஷயங்கள்தான். நமக்கு வேண்டிய விஷயங்கள்தான். இது சம்பிரதாயமான பாராட்டு அல்ல. பாசாங்குகளும் பாவனைகளும் அற்ற தனக்கு நேர்மையும் உண்மையுமான மனப் பதிவுகள். ஒன்று சொல்ல வேண்டும். ஏற்கனவே போட்டிருக்கும் பாதையில் செல்லாமல் தனக்கென வழி ஒன்று தேடிக்கொண்டு அவஸ்தைப் படுகிறவர்களால்தான் உலகத்தில் புதிய சிந்தனைகளும் பாதைகளும் உருவாகின்றன.

ராகவன் தம்பியின் இந்த எழுத்து அவரது முத்திரை தாங்கியது. இங்கு வேறு யாரிடமும் நான் காணாதது. வேடிக்கையாக எழுதப்பட்ட ஒரு சுய சரிதம் எத்தனை பரிமாணங்களைப் பெற்று விடுகிறது! வியப்பு மட்டுமல்ல சந்தோஷமும்தான்.

இப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் எழுத்து வேறு யாரிடம் இருக்கிறது?


வெங்கட் சாமிநாதன்







 

No comments:

என் பதவிக்கால நினைவுகள் - பாரதரத்னா. டாக்டர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா- செப்டம்பர் 2024

கோவை புத்தகத் திருவிழா வெளியீடு நாள் 20.07.2024 மாலை 3.00 மணி... சிறுவாணி வாசகர் மையத்தின் செப்டம்பர் மாதப் புத்தகம் என் பதவிக்கால நினைவுகள்...