Friday, January 3, 2020

சிறுவாணி வாசகர் மையம் - அறிவிப்பு






அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள். 

2017  புத்தாண்டு தினத்தன்று சிறுவாணி  வாசகர் மையத்தின் "மாதம் ஒருநூல் " திட்டம் பற்றி அறிவித்துத் துவங்கிய முயற்சிக்குத் தாங்கள் அளித்துவரும் ஆதரவு க்கு முதலில் நன்றி.

சிறுவாணி  வாசகர்  மையம் வணிகநோக்கின்றி முழுக்கச் சிறந்த படைப்புகளை வாசகர்களிடம் கொண்டுசெல்லும் வகையில் செயல்படுவது தாங்கள் அறிந்ததே.

வாசகர் வட்டம், இலக்கியச் சிந்தனை அமைப்புகளை முன்மாதிரியாகக் கொண்டு துவங்கிய சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரும் என உறுதியளிக்கிறோம்.

மார்ச்--2020 உடன் மூன்றாம் வருடச் சந்தா முடிவடைகிறது.
(12 புத்தகங்கள்)

ஏப்ரல் 2020- மார்ச் 2021 க்கான நான்காம் ஆண்டுக்கான 
கட்டணம் ரூ 1600 /-
பிற மாநிலங்களுக்கு ரூ 2000 /-
(தபால் செலவு உட்பட).

இப்போதிலிருந்தே தங்கள் ( ஏப்ரல் 2020-மார்ச் 2021) சந்தாவைப் புதுப்பித்துத்  தொடர்ந்து ஆதரவு தருவதோடு , தங்கள் ஒவ்வொருவரும் உடன் இன்னொருவரையும்  சிறுவாணி வாசகர் மைய உறுப்பினர்களாகச்  சேர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி,கல்லூரிகளின் நூலகங்களோடும் கைகோர்க்க விரும்புகிறோம்.

தங்கள் அன்புக்கும், துணையிருப்புக்கும் மீண்டும் மனமார்ந்த 
நன்றி.

தி.சுபாஷிணி
ஜி.ஆர்.பிரகாஷ் 
சிறுவாணி வாசகர்  மையம்.








நன்றி-
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள்,

அந்திமழை ஜனவரி 2020

நாஞ்சில்நாடன் விருது-2020

கோவையிலிருந்து செயல்பட்டுவரும் "சிறுவாணி வாசகர் மையம்" ஆண்டுதோறும் சமகாலத்தில் வாழும் படைப்பாளுமையான திரு.நாஞ்சில்நாடன் பெயரில் விருதுவழங்கி வருகிறது.

2020 க்கான "நாஞ்சில்நாடன் விருது"  எழுத்தாளரும், பத்திரிகையாளருமான கா.சு.வேலாயுதன் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

2020 , பிப்ரவரி 02 இல் கோவையில் "ஆர்த்ரா ஹாலில்" நடைபெறவுள்ள  "நாஞ்சில் நாடன் விருது"விழாவிற்கு
திரு.நாஞ்சில்நாடன் தலைமை ஏற்கிறார்.

 விழாவில் பேராசிரியர்.கண.சிற்சபேசன் விருது வழங்குகிறார். விஜயா பதிப்பகம் திரு.மு.வேலாயுதம், திரு.வ.ஸ்ரீநிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

விருது பற்றி....

கலை, இலக்கியம் , சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் நாஞ்சில் நாடன்  விருது , பரிசுத் தொகை ரூபாய் 50,000 , பாராட்டுப் பத்திரம் மற்றும் விருதுச் சிற்பம் அடங்கியது .

2018 இல் ஓவியர் ஜீவா அவர்களுக்கும், 
 2019 ஆம் ஆண்டு
முனைவர் ப. சரவணன் அவர்களுக்கும் நாஞ்சில்நாடன் விருது வழங்கப்பட்டது.
------------------
சிறுவாணி வாசகர் மையம் பற்றி.....

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதையும், சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகின்றன. இதன் தலைவராக
 தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி ஆர் பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.
கௌரவ ஆலோசகர்களாக
திரு.நாஞ்சில் நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர்.
-------------







                                                                               நன்றி- அந்தி மழை



நன்றி- காலச்சுவடு-ஜனவரி 2020








          




ஜனவரி-2020 "லீயர் அரசன்" தமிழில்- ஜஸ்டிஸ் மகராஜன்






ஜனவரி மாதப் புத்தகம்
"லீயர் அரசன்"
மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகம்

தமிழில்- ஜஸ்டிஸ் மகராஜன் அவர்கள்
பக்கங்கள் 176 விலை 200/-
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ஷேக்ஸ்பியரின் (கிங் லீயர்)  லீயர் அரசன்  - ஜஸ்டிஸ் மகாராஜன்

ஷேக்ஸ்பியரின் King Lear  அதன் தமிழாக்கம் சென்னை   உயர்நீதி
மன்றத்தின்  நீதிபதியாக இருந்த,  இரசிகமணி  டி.கே.சியின் வட்டதொட்டி இயக்கத்தில் பங்கேற்ற ஜஸ்டிஸ் எஸ். மாகாராஜன் இதை லியர் அரசன் என்று 1965ல் தமிழாக்கம் செய்து 1965லும்1971-72லும் என்று மூன்று பதிப்புகளாக வெளிவந்து அன்றைய சென்னை மாகாணத்தில் முக்கிய தமிழுக்கான வரவு என்று அப்பொழுதுகொண்டாடப்பட்டது. 

நான்  கல்லூரியில்   1970களில் படிக்கும்போது தமிழ் துணைப்பாடமாக இந்த நூல் மதுரைபல்கலைக்கழகத்தால் பாடப் புத்தகமாகவும் வைக்கப்பட்டது. இதற்கு இராஜாஜி அணிந்துரையும் வழங்கியுள்ளார். அது கீழ்வருமாறு:

‘’ஷேக்ஸ்பியரின் கிங் லீயர் அவருடைய சோக நாடகங்களில் எல்லாம் தலைசிறந்த ஒன்று. ஆனால் கதையின் சோகம் ஆங்கிலேய சூழ்நிலையை சார்ந்திருக்கிறது என்றாலும் கதையில் பொதிந்துள்ள துராசைகளும் பாசங்களும் மனிதர் அனைவருக்கும் பொதுவான பாவச்சுமையும் துயரமும் ஆகும்._ 

ஸ்ரீ மகாராஜனின் நூலைப் படித்து அதன் பயனாக நம்முடைய கண்கள் கலங்கி, அந்தக் கண்ணீர், வினைப் பயனாக உள்ளங்களில் அமைந்து அல்லற் படுத்தும் துர்குணங்களை கழுவித் தீர்க்கும் என்பது என்னுடைய எண்ணம்.

_கிங் லீயர் தற்காலத் தமிழ்ப் படைப்புகளில் நல்ல மதிப்பும் ஸ்தானமும் பெற்ற ஒரு நூலாகும்.’’
- ராஜாஜி_

நீதித்துறையிலும்,தமிழ்இலக்கியத்திலும் 
ஒரு ஆளுமையாக திகழ்ந்த  ஜஸ்டிஸ் மகாராஜன்   திருநெல்வேலியில் வழக்கறிஞராக பணியாற்றியவர். 2012ல் அவருடையநூற்றாண்டுகொண்டாடப்
பட்டு அவருடைய தமிழ் படைப்புகளை எல்லாம்ஒரேதொகுப்பாகவெளியிடப்
பட்டது. 

நீண்ட காலத்திற்கு பிறகு கோவை சிறுவாணி  வாசகர் மையம்   அதன் ஒருங்கிணைப்பாளர் ஜி.ஆர்.பிரகாஷ்  இந்த அரிய நூலை திரும்பவும் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளார். இந்த பணியில் அவருக்கு ஆலோசனைகள் வழங்கிய நாஞ்சில் நாடன் மற்றும் கோவை ரவீந்திரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இம்மாதிரி அரிய நூல்களை சிறுவாணி வாசகர் மையம் தொடர்ந்து வெளியிட வேண்டும். 

இந்த மாதம் சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்ட இந்த லியர் அரசன் மற்றும் உஷா தீபனின் முழு மனிதன்  என்ற இரண்டு நூல்களையும் அனுப்பி வைத்த பிரகாஷ் அவர்களுக்கு மிக்க  நன்றி.

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
21.01.2020
#கிங்_லீயர்    #ஷேக்ஸ்பியர்     #சிறுவாணிவாசகர்மையம்       #இராஜாஜி
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Monday, December 9, 2019

டிசம்பர்-2019 முழு மனிதன் -உஷாதீபன்



 டிசம்பர்-2019  புத்தகம் "முழு மனிதன்"

உஷாதீபன் 

Sunday, November 10, 2019

காமதேனு 10 ,நவம்பர் 2019




10 ,நவம்பர் 2019 காமதேனு இதழில்....
நன்றி:திரு. கா.சு. வேலாயுதன்





T K Kalapriya

ஆண்டுக்கு 1600/-- ரூபாய் சந்தா செலுத்தினால், “சிறுவாணி வாசகர் மையம்” மாதம் தோறும் கூரியர் மூலம்  நல்ல புத்தகங்களை அனுப்பி வைப்பார்கள். ஆண்டுக்கு 12 புத்தகங்கள் சேகரமாகும். பதிபபகங்களுடன் இணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்பில் நல்ல புத்தகங்களைப் பிரத்யேகமாகத் தருவித்து/ பதிப்பித்து அனுப்புகிறார்கள் இந்த மாதம் மட்டுமே,580 ரூபாய் பெறுமானமுள்ள மூன்று புத்தகங்களை அனுப்பியிருக்கிறார்கள். அதில் சிற்பி தனபால் சுய சரிதை அற்புதமான புத்தகம். அது குறித்து நண்பர் ஆர்.சிவக்குமார் இன்று முகநூலில் பிரமாதமான குறிப்பு எழுதியிருக்கிறார். நண்பர்கள் அதிக அளவில் சந்தா செலுத்தி மாதந்தோறும் நல்ல நூல்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்.நீங்கள் செலுத்தும் பணத்தை விடவும் பெறுமதி மிக்க புத்தகங்கள் உங்களை வந்தடையும் — with Raveendran Ramasamy.






Saturday, October 12, 2019

நவம்பர் 2019- கஸ்தூரிதிலகம் - பரணீதரன்



நவம்பர் 2019- 
கஸ்தூரிதிலகம்   - பரணீதரன்


பக்கங்கள் 258 விலை 250/-

ISBN 978-81-942051-2-8

                கஸ்தூரிதிலகத்தில் அன்னை கஸ்தூரிபா வின் வாழ்க்கை மட்டுமல்ல,காந்தியடிகளின் வாழ்க்கையும் இணைந்திருக்கிறது.
இந்நூல் இவர்களின் அரசியல் வரலாற்றையோ,சமூகப் பணிகளின் வரலாற்றையோ விளக்குவதென்று சொல்வதற்கில்லை.இது அவர்களின் சீரிய தாம்பத்ய வாழ்க்கையின் வரலாறு என்பதுதான் மிகப் பொருத்தமானது.


                   இந்த நூலைப் படிப்பவர்கள் கஸ்தூரிபா வும் காந்திஜிக்குச் சரிநிகர் சமானமான ஓர் மகாத்மாதான் என்பதை உணரமுடியும்.
                                                                                          அணிந்துரையிலிருந்து...............

----------------------------------------------------------------------------------------------------------


 
 
  
பரணீதரன் அவர்கள்
இவரது இயற் பெயர் டி.எஸ்.ஸ்ரீதர்.(94)
ஆனந்த விகடனில் ஸ்ரீதர் என்ற பெயரில் அரசியல் கார்ட்டூன்களும், ஜோக்குகளும் பல ஆண்டுகளுக்கு வரைந்திருக்கிறார்.
மெரீனா என்ற புனைப் பெயரில் இவர் எழுதிய நகைச்சுவை கலந்த நாடகங்கள் பல விகடனில் தொடராக வெளிவந்திருக்கின்றன. பின்னர் இவை நாடகமாகவும் மேடையில் நடிக்கப்பட்டன. தனிக் குடித்தனம், ஊர்வம்பு, மாப்பிள்ளை முறுக்கு போன்ற இவரது பல நாடகங்கள் அந்நாளில் மேடையில் சூப்பர் ஹிட்!
பரணீதரன் என்ற பெயரில் இவர் எழுதிய ஆன்மீக கட்டுரைகள் பல்லாயிரக்கணக்கான வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன. காஞ்சி மகா பெரியவர் அவர்களிடம் அதீத பக்தி கொண்டிருப்பவர் பரணீதரன். காஞ்சி மகானுடன் பல இடங்களுக்கு பயணப்பட்டிருக்கிறார். அந்ந அனுபவங்கள் பல கட்டுரைகளாக மலர்ந்திருக்கின்றன. அதேபோல், இவர் புனித ஆலயங்கள் பலவற்றுக்கு சென்று கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார்.  பகவான் ரமணர், சேஷாத்திரி சுவாமிகள், ஷீரடி சாய்பாபா போன்ற மகான்கள் பலரின் வாழ்க்கைக் கதைகள் எழுதியிருக்கிறார்.
ஆனந்த விகடனில் பல்லாண்டு காலம் பணிபுரிந்து, அதன் இணை ஆசிரியராக ஓய்வு பெற்றவர் டி.எஸ். ஸ்ரீதர். இன்றும் அவரை சந்தித்து வாழ்த்து பெற வரும் வாசகர்கள் பலர்.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------



 12.10.2019

இன்று கஸ்தூரி திலகம் நூலை பதிப்பிக்க உரிமை தந்த பரணிதரன் அவர்களின் தங்கை மகன் வி எஸ் வி அவரகளைப் பார்க்க சென்றேன்.அவர அன்புடன் வரவேற்று உபசரிததார்கள். நான் அவரிடம் கஸ்தூரி திலகம் நூலை அளித்தி நமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து கொண்டேன். அவர் ஆனந்த விகடனில் இசை பற்றிய கட்டுரைகளை எழுதி வருபவர்.

வியெஸ்வி அவர்கள்


பின் இந்நூலாசிரியர் பரணிதரன் அவர்களைக் காணவேண்டுமே என்றேன். அவர் வசிக்கும் வீட்டு விலாசத்தையும் அவரைக் கவனித்துக் கொள்ளுபவரிடம் போன் பண்ணி நான் வரப்போவதையும் தெரிவிக்கவும் செய்தார். 
பரணிதரன் சார் ஒரு குழந்தையாய் இருந்தார். புத்தகத்தை சொல்லி கொடுத்தேன். பார்த்து சிரித்தார். தெரிந்து கொண்டாரா  தெரியவில்லை. முகத்தில. மலர்ச்சி இருந்தது. சிரிப்புத்தான் அவருக்கு.   பிறந்த குழந்தையை பாதுகாப்பதுபோல் கேர்டேக்கர் ஹேமாதான் உணவு ஊட்டி, உடை உடுத்திவிட்டு கவனித்துக்கொள்கிறார். புத்தகம் கொடுத்து ஆசீர்வதிக்க கேட்டேன். கைகளால ஆசீர்வதித்தார். பேச்சு இல்லை. குழந்தை போல. சிரிக்கின்றார் .  அந்த சிரிப்பின் சந்தோஷம் மகிழ்வை அளித்தது. அவரை கவனித்துக்கொள்ளும் ஹேமமாலினி அம்மையாருக்கு நன்றியைத் தெரிவித்துவிட்டு மீண்டும் ஒரு நாள் வருகிறேன் என்று சொல்லிவிட்டு வந்தேன்.

தி.சுபாஷிணி
சிறுவாணி வாசகர் மையம்,

தலைவர்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------









சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகளோடு
 எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் , ஓவியர் ஜீவா அவர்கள்...
கோவை" விஜயா பதிப்பகம்" திரு.வேலாயுதம் ஐயா அவர்கள்-
-----------------------------------------------------------------------------------------------------------
------------------------------------------------------------------------------------------------------------

                   

அக்டோபர் 2019 நவில்தொறும்.....- எம்.ஏ.சுசீலா



அக்டோபர் 2019 வெளியீடு

நவில்தொறும்.....-  எம்.ஏ.சுசீலா
கட்டுரைகள்

பக்கங்கள் 158   விலை 150/-

ISBN 978-81-942051-11




எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பேராசிரியர் எம்.ஏ.சுசீலா அவர்களிடம் "நவில்தொறும் ...." 


 


சிறுவாணி வாசகர் மைய வெளியீடுகளோடு
எழுத்தாளர் திரு.நாஞ்சில்நாடன் , ஓவியர் ஜீவா அவர்கள்...
கோவை" விஜயா பதிப்பகம்" திரு.வேலாயுதம் ஐயா அவர்கள்-
-------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------
மார்க்ஸிய மெய்யியலாளரும் கோவையின் மூத்தஅறிஞருமான திரு.கோவை ஞானி ஐயா அவர்களிடம் சிறுவாணி வாசகர் மையப் புத்தகங்கள்.
22.10.19


 
-------------------------------------------------------------------------------------------------------------------
 .








நாஞ்சில்நாடன் விருது விழா -2026

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்...