Tuesday, November 6, 2018

"உருமால் கட்டு" சு.வேணுகோபால்

·


செப்டம்பர்(2018)  "உருமால் கட்டு"   

சிறுகதைகள்
எழுத்தாளர் சு.வேணுகோபால்-

பக்கங்கள் 170     விலை 160 /-

ISBN 978-81-940988-2-9
 ************************************************************************************
சிறுவாணி வாசகர் மையத்தின் செப்டம்பர்-2018 வெளியீடான "உருமால் கட்டு"பற்றி.....

விவசாயத்தின் மேன்மையும் விவசாயிகள் மேற்கொள்ளும் இடர்ப்பாடுகளும் அவசர
நகரங்களில் ஆடம்பரமான மால்களில்பாக்கெட்களில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கி நுகர்ந்து கொண்டிருக்கும் மேல்த்தட்டு மாந்தர்களுக்கு அறவே தெரியாது.
கொஞ்சங் கொஞ்சம் தெரிந்த மத்தியதரக் குடியினரும் அதையெல்லாம் மறந்து
ரொம்ப காலமாச்சு.

இந்த நிலையில் உருமால் கட்டு தொகுப்பில் சு.வேணுகோபால்அவர்கள் வழங்கியுள்ள சிறுகதைகள், நமது மனச்சாட்சியைக் குத்திக் கிழிக்கின்றன.

முதலாவதாக இடம் பெற்றுள்ள 'உயிர்ச்சுனையே, வானம் பொய்த்ததாலும் வணிகர்களின் சுரண்டாலும் நன்செயும் புன்செயும் தண்ணீர்த் தாகத்தால் செத்துக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது.

அடுத்ததாய் வரும் அவதாரம்,"வாழ்க்கைகூட இம்மாதிரிப் பயணம்தானா ?...." என்று விரக்தியின் விளிம்புக்குப் போனாலும், மாற்றுத்திறனோடு பிறந்த குழந்தையை "குலம்காக்க வந்த எங்கள் தெய்வமே" எனக் காடர்கள் கொண்டாடுவதைக் காட்டிக கதாநாயகனின் மனதை மாற்றுகிறது. ஒரு பழையதிரைப்படத்தில் பாலையாவுக்கு நாகேஷ்வீடியோவாகப் பயமுறுத்தும் திகிலை இக்கதையில் எழுத்திலேயே ஆசிரியர் கிளப்பிவிடுகிறார்.

அடுத்த கதை 'உற்பத்தி'யும்"நீரைப் போன்ற ஜீவகளை ததும்பும் திரவம் வேறு உண்டா ?" என்று கேட்டு, அது வற்றிய கொடுமையில், பூமாதேவியின் கற்பையே சந்தேகிக்கிற அளவுக்கு வெறுப்பை உமிழ்கிறது.

இந்தத் தொகுப்பின் ஆகச் சிறந்த கதையாக என்னைக் கவர்ந்தது 'தீராக்குறை'தான். தன்மை, முன்னிலை, படர்க்கை என்று இலக்கணம் மூன்று முடிச்சுப் போடுவதை
ஒரே பாத்திரத்தின் நவரச உரையாடலில்அற்புதமாக அவிழ்த்து விட்டார் ஆசிரியர்.

'மண்ணைத் தின்றவன்' கதையைப் படித்தபோது, விவசாயத்தை விட மனம் வராமல் கிராமத்திலேயே தங்கிவிட்ட என் சித்தப்பா மகன் "ஒரு தடவை ஊருக்கு வந்துட்டுப்போங்கண்ணே" என அழைப்பது காதில்ஒலித்து என் வயிற்றைப் பிசைகிறது.

"மனம் போல நீதி மன்றம் வேறெங்கும்இல்லை. தண்டனைக்கான கைவிலங்கை
மனச்சாட்சி தூக்கிக்காட்டி 'உனக்கானதுதான்' என்று சொல்லி மறைகிறது" என
ஆசிரியர் எச்சரிப்பது உள்ளத்தை உறுத்துகிறது. அத்தனையும்ஆசிரியரின்/நம்மில் சிலரின் சொந்த அனுபவம். கற்பனையோ மிகையோ கிடையாது. ஆகையால் எல்லாக் கதை
களும் அப்படியே நமக்குள் ஊடுருவிவிடுகின்றன.

பாவண்ணன் அதிகம் கவனிக்கப்படவில்லையென நாகராஜன் அவர்கள் ஆதங்கப்
பட்டிருந்தார். சு. வேணுகோபாலும் அதே லிஸ்ட்டில்தான் இருக்கிறார். ஆனால்
நீங்கள் ஆதங்கப்படவேண்டாம் கே.பி.என். !

நாஞ்சில் நாடன் அவர்களும் சுபாஷிணி
மேடமும் சகோதரர் பிரகாஷும் சிறுவாணி நீரூற்றிக் கவனிக்கப்பட வேண்டியவர்களை நமக்கு அடையாளம் காட்டிவிடுவார்கள் !

அட்டைப் படத்தைப் பற்றிச் சொல்லாமலிருந்தால் நன்றி மறந்தவன் ஆவேன். எந்த நொடியும் உருமாலுக்குக் கீழே உள்ள முகம் வெளிச்சத்திற்கு வந்துவிடும் போலத் தோன்றுகிறது. பாராட்டுக்கள் ஓவியர் ஜீவா அவர்களே !

திரு.திருமலையப்பன்,திண்டுக்கல்
********************************************************************************************************************

திரு வேணுகோபால் அவர்களின்
“ உருமால்கட்டு “ - அப்பப்பா படிக்கப் படிக்க என்னுடைய இளையகால தினங்கள் கண்முன்னால் நிழலாடுகிறது.

சுவையோடு பேசும் கிணறு, காற்றோடு உராயும் மரக் கொம்புகள், இனிப்பின் நினைவு தரும் ஓடை- இன்று கிராமம் சிதைந்து விவசாயிகளின் வாழ்க்கையும் குலைந்து விட்டது. நவீன உலகம் கிராம வாழ்க்கையையே தடம்புரட்டிப் போட்டது .

கதைகள் படிக்கப் படிக்க மனது வெம்புகிறது. அற்புதமான படைப்பு , சிறுவாணி வாசகர் மையத்தின் இன்னொரு முத்தான வெளியீடு .

M .R.Venkateswaran

Coimbatore
சிறுவாணி வாசகர் மையம்.
புத்தகம் போட ஆரம்பிக்கும் முன் எழுத்தாளருக்கு ராயல்ட்டி. இந்த நல்லமைக்காகவே இந்த மையத்தில் சேரக்கூடாதா?

*********************************************************************************

" நீ பால குடிச்சாத்தான் தாத்தா நான் நல்லா கொளுவுவேனாம்

நான் குடிச்சா எப்படி தாத்தா நீ நல்லா கொளுவ முடியும்?

வந்து நீ என் தோளுல எடக்கையை வச்சிக்கிட்டு குடிப்பியாம். அந்த கைவழியா பாலு எனக்குள்ள போகுமாம்

தோளுல வேணாம் தாத்தா. உன் வாயில கை வச்சுக்கிடுறேன்

சரி கண்ணு. அறிவுன்னா அறிவு " //

//  தாத்தாவின் நரைத்த முடியைப் பிடித்துக் கொண்டு இடது தோளில் அமர்ந்திருந்தான் நிதின். இடக்கால் மார்பிலும் வலக்கால் முதுகிலும் உரசின.

" ஏய் நிதினு தூங்காத. இதுக்குத்தான் ஒன்ன தூக்கிட்டு வர்றதில்ல. நழுவுனா என்னாகும்

தூங்கல சித்தி ...சும்மா மூஞ்சிய தாத்தா தல மேல வச்சேன் " //

குழந்தைகளின் இயல்பான போக்கை அதன் அழகியல் தன்மையுடன் கதையினூடே எழுதியிருப்பது கதையில் காணப்படும் இருள் எனும் சோக நிகழ்வுகளுக்கிடையே அடிக்கடி தோன்றும் சந்தோஷ மின்னல்கள்.

மண்ணை நம்பி வாழும் ஒரு விவசாயியின் வாழ்க்கை போராட்டத்தை, அவமானத்தை, எதிர்பார்ப்புகளை, வேதனைகளை நம் கண்முன்னே நிகழ்வதுபோல யதார்த்தமாக காட்டியிருப்பது நெஞ்சத்தை பாரமாக்குகிறது.


எந்த மண்ணை கொண்டு மகளின் வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக் கொடுத்தாரோ அந்த மண்ணை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டி மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்காக அந்த மகளிடம் பணத்துக்காக இரந்து நின்றது...இறுதியில் அந்த முயற்சிகள் வெறும் புகையாகிப்போய் இயலாமையுடன் நிற்பது என ஒரு விவசாயக் குடியானவனின் அவஸ்தைகளை  உயிர்ச்சுனை என்ற சிறுகதையில் எழுத்தாளர் சு.வேணுகோபால் அப்பட்டமாக எடுத்துக்காட்டியுள்ளார்.
********************************************************************************************************************

அன்புள்ள புல்புல்







ஆகஸ்ட் -2018 "அன்புள்ள புல்புல்"
காந்தியக் கட்டுரைகள்-
யுவபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன்-

பக்கங்கள் 196    விலை 200 /-
**********************************************************************************************************

Kannan Thandapani is with Jeeva Karikalan and 2 others.
July 30
சுனில் கிருஷ்ணன் காந்தி குறித்து எழுதிய முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பாக 'அன்புள்ள புல்புல்' நூலை யாவரும் பதிப்பகம் மற்றும் சிறுவாணி வாசகர் மையம் பதிப்பித்துள்ளனர்.

கோவைப் புத்தகக் கண்காட்சியில், அன்புள்ள புல்புல் நூல் வெளியீட்டு விழாவின் போது...
 புத்தகத்திருவிழாவின் இறுதிநாளில் நடைபெற்ற "அன்புள்ள புல்புல்" நூல்வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புத் தந்த எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன்,
பதிப்பாளர் ஜீவகரிகாலன்,
திரு.கண்ணன் தண்டபாணி

                                                                       நன்றி.🙏🙏🙏 
*************************************************************************************************************************
       காந்தி முதலான பல உயர்ந்த மனிதர்களை இன்றைய இளைஞர்களிடம் கொண்டு
சேர்க்க வேண்டும் என்பது நம் அனைவரின்விருப்பம் அல்லவா ?அந்தப் பணியை   சுனில் கிருஷ்ணன் என்ற இளைஞர் மிக அற்புதமாகச் செய்து வருவதை அறிய மிகமிக ஆனந்தமாக இருக்கிறது.

கவிக்குயில் சரோஜினி நாயுடுவுக்கு காந்திஎழுதிய ஒரு கடிதத்தில் கவிக்குயிலை 'அன்புள்ள புல்புல்' என காந்தி விளித்திருக்கிறார். அந்த அழகான வாசகத்தை சுனில்
இந்தப் புத்தகத்திற்குத் தலைப்பாகச் சூட்டியிருக்கிறார்.

காந்தியின் தார்மீகக் கோபங்கள் சிங்கத்தின் கர்ஜனை போலச் சீறாமல் சின்னக் குயிலின் இசையாக மென்மையாயிருந்தாலும், எதிரிகளையும் தன் வசப்படுத்திய மேன்மைக் குரல் அல்லவா ? நமக்கெல்லாம் காநதியைப் பற்றித் 'தெரியும்....ஆனால்....தெரியாது' என்பதைத்
தெரிந்துகொண்ட சுனில், நமக்குத் தெரியாதவற்றைக் கற்பிப்பதோடு, தெரிந்தவற்றில் சிலரால் ஏற்பட்ட குழப்பங்கள், தவறான   அபிப்பிராயங்களை ஆதாரத்தோடு களைந்து 
ஒளி பாய்ச்சுகிறார்.

இந்தப் புத்தகத்திலுள்ள அருமையான - சரியான கருத்துகளை மேற்கோள் காட்ட
ஆரம்பித்தால், எழுதும் என் கைபேசியிலும் படிக்கும் உங்கள் அலைபேசியிலும் சார்ஜ்  இறங்கிவிடும்.

கீழ்க்குறித்த பகுதிகளைத் தவறாமல் படியுங்கள் :-
பக்கம் 9 - செயலே....
11 - யோசித்து.....
17 - கடந்த.....
103 - கிருஷ்ணம்மாள்.....
137 - கருணைக்கு.....
182 - காந்தியின்.....
184 - முழு அத்தியாயம்
148 - உப்பு சத்தியாக்கிரகத்தில் ராஜாஜி

பின் அட்டை சிறந்த வாசிப்பு அனுபவத்தையும் விரிந்த யோசிப்பு அனுபவத்தையும் வழங்கியுள்ள   இளம் திரு. சுனில் கிருஷ்ணனை "இளைய பாரதத்தினாய் வா வா வா"
என வரவேற்று வாழ்த்துகிறேன்.

உயர்வான இந்தப் புத்தகத்தை வழங்கிய
சிறுவாணி வாசகர் மைய நிர்வாகிகளுக்கு ஆயிரம் நன்றி.

திரு.திருமலையப்பன் 

*சிறுவாணி வாசகர் மையம் ஆகஸ்ட் மாதம் உறுப்பினர்களுக்கு அனுப்பிய "அன்புள்ள புல்புல் பற்றிய வாசகர் பாராட்டு.
(நன்றி யாவரும் பதிப்பகம் திரு.ஜீவகரிகாலன்)
****************************************************************************************************************







கோவைப் புத்தகக் கண்காட்சியில், நூல் வெளியீடு 2018


2018 கோவைப் புத்தகக் கண்காட்சியில், 
அன்புள்ள புல்புல் நூல் வெளியீட்டு விழாவின் போது..





 
 




கோவைப் புத்தகக் கண்காட்சியில் SVM photos 2018




 










 


 




















 














 









 




 

கோவை புத்தகத் திருவிழா (2018) வில்
சிறுவாணி வாசகர் மையம். (Siruvani Vasagarmaiyam)


கோவை புத்தகத் திருவிழா 20.07.2018ம் தேதி துவங்கி நேற்றுடன் (30.07.2018) பத்துநாட்கள் இனிதே நிறைடைந்தது.
நமது சிறுவாணி வாசகர் மையம் சார்பில் பங்குபெற்றதையும் அறிவீர்கள்.
கோவை புத்தகத் திருவிழாவில் பங்குபெற ஊக்குவித்த திரு.நாஞ்சில்நாடன்,திரு.வ.ஸ்ரீநிவாசன் ,
உதவிய
திரு.ஆர்.ரவீந்திரன்,திரு.CGS.மணியன்,ஓவியர்.ஜீவா,திரு.CR.இளங்கோவன்,திரு.மரபின்மைந்தன் முத்தையா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.
🙏🙏🙏

சிறுவாணி  வாசகர் மைய மேசைக்கு வருகைதந்து பெருமைப்படுத்திய நண்பர்கள்/ எழுத்தாளர்கள் ;
திரு.சிவசுப்பிரமணியம்( பெரும்பாலான நாட்கள்) 
எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்,
திரு.புவியரசு(தினமும்),
திரு.காலசுப்பிரமணியம்(லயம்),
திரு.சௌந்தர் வல்லத்தரசு அண்ணா,
திரு.ஜீவகரிகாலன்,
திரு.சிதம்பரநாதன்(ஓம்சக்தி)
திரு.மரபின்மைந்தன் முத்தையா,
திரு.காந்தி கண்ணதாசன்,
பேராசிரியர் துரை,
திரு.கவிதாசன்,
இயக்குநர் ராம்-ன் தந்தையார் திரு.சங்கரநாராயணன்.....,

திரு.நாகசந்திரன்,
வரலாற்று ஆய்வாளர் செ.திவான்
திரு.கண்ணன்(காலச்சுவடு),
கவிஞர் சக்திஜோதி,

புரவலர்கள்ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
திரு.ஆர்.ரவீந்திரன்,
திரு.CGS.மணியன்,
திரு.V.கிருஷ்ணகுமார்,

ஓவியர் ஜீவா,
எழுத்தாளர்கள் திரு. எம்.கோபாலகிருஷ்ணன்,
திரு.சு.வேணுகோபால்,திரு.க.வை.பழனிச்சாமி,கவிஞர் திரு.பூ.அ.ரவீந்திரன்

திரு.பவா செல்லதுரை,
திரு.இளையபாரதி,
திரு.ஆனந்தகுமார்,
திரு.இயகாகோ சுப்பிரமணியம்,

திரு.கோபாலகிருஷ்ணன்,
திரு.சுரேஷ்குமார்,
திரு.ஹரிஹரகிருஷ்ணன்

மொழிபெயர்ப்பாளர் பாலச்சந்திரன்,பேராசிரியர் திரு.மகுடேஸ்வரன்,
திரு.வ.ஸ்ரீநிவாசன்,
திரு.செல்வேந்திரன்,
கிழக்கு பதிப்பகம் திரு.பத்ரிசேஷாத்ரி

ரேடியோசிட்டி திரு.பிரபு,
Times of India நாளிதழில் சிறுவாணி வாசகர் மையம் பற்றி செய்தி வெளியிட்ட செய்தியாளர் விஷ்ணு,புகைப்படக்கலைஞர் ஜாக்ஸன்,

திரு.கல்யாண்ஜி(வண்ணதாசன்),
பேராசிரியர் அ.ராசாராம்,
ஆய்வாளர் அ.கா.பெருமாள்,
திரு.சீராளன் ஜெயந்தன்,திரு.கவிதைக்காரன் இளங்கோ,
திரு.மு.சந்திரகுமார்(லாக்கப்),
திரு.சி.மோகன்,
திரு.சுப்ரபாரதிமணியன்,
கவிஞர்/புகைப்படக்கலைஞர் அய்யப்பமாதவன்,  திரு.வேங்கடசுப்பிரமணியன்,
மாவட்டநீதிபதி அ.முகமது ஜியாவுதீன்,
திரு.D.பாலசுந்தரம்.
கோவை கங்கா மருத்துவமனை சேர்மன் டாக்டர் ஜே.ஜி.சண்முகநாதன் அவர்கள் வந்து உறுப்பினராகி வாழ்த்தியது,
திரு.சுரேஷ் வெங்கடாத்ரி,
சூர்யா பிரிண்டர்ஸ் திரு.மனோகரன்    

மேலும் நமது சிறுவாணி வாசகர் மையத்திற்கு வருகைதந்த வாசகர்கள், புதிதாக இணைந்துள்ள வாசகர்கள்,
ஆகியோர்  வருகைக்கு நன்றி.🙏🙏🙏
********************************************************************************************************
புத்தகத்திருவிழாவின் இறுதிநாளில் நடைபெற்ற "அன்புள்ள புல்புல்" நூல்வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புத் தந்த எழுத்தாளர் சுனில்கிருஷ்ணன்,
பதிப்பாளர் ஜீவகரிகாலன்,
திரு.கண்ணன் தண்டபாணி

இத்தனை நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் காரணமாயிருந்தது 
சிறுவாணி வாசகர் மையம் அமைப்பு.
இதனை உருவாக்கிய திரு.நாஞ்சில்நாடன்,
ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,
மூத்த சகோதரியாக விளங்கும் தி.சுபாஷிணி மற்றும் ஆலோசகர்கள்,

புத்தகத் திருவிழாவிற்காக பணிநேரத்தை மாற்றிக் கொடுத்து உதவிய எங்கள் நிறுவன மேலாளர் S.சம்பத்குமார்,HR திரு.ஜெயகாந்தன்,

கிடைத்தநேரத்தில் ஓய்வெடுக்காமல் வந்திருந்து உதவிய அலுவலக நண்பர்கள் சண்முகம் மற்றும் பாலகிருஷ்ணன்
.,
நன்றி.🙏🙏🙏 

**********************************************************************************************************

மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த 10 க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளி (நூலகங்களுக்கு) மாணவர்களுக்கு வாசிப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி,
திரு.நாஞ்சில்நாடன் எழுதிய "அஃகம் சுருக்கேல்" நூல் அன்பளிப்பாக வழங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது.

எனது குடும்பஉறுப்பினர்கள்

நமது வாட்ஸ்அப் குழுவில் தொடர்ந்து ஊக்குவித்தவர்கள் ,
மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்கள்/விடுபட்டவர்கள் இருப்பின் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.
தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.
🙏🙏🙏
ஜி.ஆர்.பிரகாஷ்
கோவை
**************************************************************************************************************
பின் குறிப்பு :

சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்"திட்டம்.

 (2018 ஏப்ரல்---2019 மார்ச் க்கான உறுப்பினர் சந்தா ரூ 1600 /-)

சிறுவாணி  வாசகர் மையத்தில் உறுப்பினராக ,சந்தா செலுத்த ,புதுப்பிக்க காசோலை/வரைவோலை/மணி ஆர்டர் கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும். :
(Siruvani vasagar maiyam)
சிறுவாணி வாசகர் மையம், 
24-5, சக்தி மஹால்,
 சின்னம்மாள் தெரு, 
கே. கே. புதூர், கோவை - 641038
************
NEFT / RTGS மூலம் பணம் அனுப்ப 

Syndicate Bank, Avinashi Road Branch, Coimbatore - 641018,
Current A/c no. 61211010003590
IFSC :   SYNB0006121  Beneficiary : Siruvani Vasagar Maiyam. 

*************
நேரடியாக சந்தாவைக் கணக்கில் கட்டினால் தகவல் மற்றும் தங்கள் முகவரியை 9488185920,9940985920
என்கிற தொலைபேசி  எண்ணுக்கோ/
siruvanivasagar@gmail.com என்கிற மின்னஞ்சலுக்கு ஈமெயில் மூலமோ தெரிவிக்கவும்.

************************************************************************************************************





'ரி' --அ.முத்துலிங்கம்

  சிறுவாணி வாசகர் மையத்தின்  'மாதம் ஒரு நூல்' திட்டத்தில் பெருமைமிகு அடுத்த வெளியீடு...                                             ...