Monday, October 29, 2018

"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா" தி.சுபாஷிணி(5)



.அக்டோபர்-2017

"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா" தி.சுபாஷிணி 

தக்கர்பாபா பற்றித் தமிழில் வெளிவரும் முதல்நூல் 


பக்கங்கள்  210   விலை 160 /-
ISBN 978-81-940780-4-3
**********************************************************************************
சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடு 7-
தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா

அடகென்று சொல்லி அங்கவையும்
சங்கவையும் அமுதத்தை இட்டதாக அவ்வையார் போற்றினார்.

'வாழ்க்கை வரலாறு'என்று சாதாரணமாகக் குறிப்பிட்டு ஒரு மகாபுருஷரின் திவ்விய சரிதையைத் தமிழில் முதன்முதலாக எழுத்தில் வடித்திருக்கிறார் மதிப்பிற்குரிய சகோதரி சுபாஷிணி.

படிக்கப் படிக்கப் பரவசமும் இப்படிப்பட்ட
மகானைப் பற்றிய விவரங்களை இத்தனைநாட்கள் அறியாமல் இருந்தேனே என்றவெட்கமும் அடைந்தேன்.

'எற்றே இவர்க்கு நாம் என்று' காந்திஜியேவியந்த மாமனிதர். அவருடைய வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சம்பவமும் அவர்
புரிந்த ஒவ்வொரு சேவையும் மனிதகுலம் முழுவதும் தெரிந்துகொள்ள வேண்டியவை.

அவரது நாட்குறிப்புகளும் அவர் தொடர்புகொண்ட மாந்தர்களின் விவரங்களும் வாசிக்கும்போது ஏற்பட்ட உணர்வை என்னால் விவரிக்க முடியவில்லை. பின்னிணைப்பாகத் திரு. டி.டி. திருமலை,லட்சுமண அய்யர் முதலியவர்களைப் பற்றிய குறிப்புகளைத் தந்துள்ளது மிகவும் பயனுள்ளது.

நூல்ஆசிரியைக்கும் பவித்ரா பதிப்பகத்தார்க்கும் சிறுவாணி வாசகர் மையத்துக்கும் என் மனம் நிறைந்த நன்றி.


திரு.கி.ரா.திருமலையப்பன்.
************************************************************************************************************************
சிறுவாணி வாசகர் மையத்தின் அக்டோபர் மாத நூல் இதுவரை அறியப்படாத காந்திய ஆளுமையைப் பற்றியது.

காந்தியின் ஆப்தநண்பர் திரு.தக்கர்பாபா பற்றி தமிழில் முதல்முறையாக வெளிவரும் வாழ்க்கை வரலாற்றுநூலின் ஆசிரியர் எழுத்தாளர் தி.சுபாஷிணி அவர்கள்.


 நன்றி-சிறுவாணி வாசகர் மையம் .
**************************************************************************************************************************

காந்தியப்பேரொளியால் ஈர்க்கப்பட்டு காந்தியடிகளின் அகிம்சை வழியில் போராடியவர்கள் விடுதலைபெற்றபின் நாட்டின் நிர்மாணப்பணிகளில் சில தலைவர்கள் பதவியில் அமர்ந்து நாட்டின்  தொழில், வேளாண்மை, மின்உற்பத்தி, போக்குவரத்து வசதி போன்ற உள்கட்டமைப்புகளை மேம்படுத்த முனைந்தார்கள்.வேறுசிலர் அரசுப்பதவிகளை மறுத்து சமூக சீர்திருத்தம், மதநல்லிணக்கம், தீண்டாமை ஒழிப்பு, கல்வி வளர்ச்சி ,கிராம வளர்ச்சி போன்ற காந்தியப்பணிகளைத்தொடர்ந்தார்கள்.

வினோபாபாவே, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கமலாதேவி, தக்கர் பாபா போன்றவர்களைப்பற்றி வரலாற்று நூல்கள் எழுதப்பட்டுள்ளன.

தக்கர்பாபா தீண்டாமை ஒழிப்புப்பணிகளில் காந்தியடிகளையே பொறாமைப்படவைத்தவர்.
அவருடைய வாழ்வையும் பணிகளையும் விவரிக்கும் 'தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா ' நூலினை காந்தியத்தொண்டர் T.D.திருமலையின் மகள் தி.சுபாஷிணி சிறப்பாக எழுதியுள்ளார்.சிறுவாணி வாசகர் மையத்திற்காக,  பவித்ரா பதிப்பகம் 
வெளியிட்டுள்ளது.

பக்கங்கள் 208.விலை ரூ160/-

பஞ்சாப் லோஹனா ராஜ பரம்பரையினர் குஜராத்திற்குக் குடிபெயர்ந்து பவநகரில் எளிய வாழ்வு வாழ்ந்தவர்கள்.

விட்தல்தாஸ் தக்கர் மூலிபா மகன் அம்ரித்லால் விட்தல்தாஸ் தக்கர்பாபா 29-11-1869 அன்று பிறந்தார்.சிவில் என்ஞினீயங் டிப்ளமா படித்து1899இல் கிழக்கு ஆப்ரிக்கா உகாண்டாவில் ரயில்பாதை அமைக்கும் பணியில் மூன்றாண்டுகள் பணிபுரிந்து 1903 இல் இந்தியா திரும்பி சஸ்லி எனுமிடத்தில் அரசுப் பொறியாளரானார்.1906 இல் பம்பாய் முனிசிபாலிட்டியில் ரயில்வே இன்ஸ்பெக்டரானார்.1914 இல் வேலையைவிட்டுவிட்டு இந்திய ஊழியர் சங்க த்தில் உறுப்பினராகி கோகலே தலைமையேற்றார்.காந்தியடிகள் சந்திப்பிற்குப்பின் 1932 இல் ஹரிஜன சேவா சங்கச் செயலாளரானார்.வாழ்நாள் முழுதும் ஒடுக்கப்பட்டோர் உயர்விற்காகவும், தீண்டாமை ஒழிப்பிலும் முழுமையாக ஈடுபட்ட தக்கர்பாபா நிறுவியதே தி.நகர் தக்கர்பாபா வித்யாலயா ஹரிஜன மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சிநிலையம். காந்தியடிகள் 1946 இல் அடிக்கல் நாட்டினார்.தக்கர்பாபாவின் பணிகளை எழுதுவது புத்தகத்தையே மீண்டும் எழுதுவதாகும்.

1951 இல் 82 ஆம் வயதில் மறைந்தார்.
Ilango krishnan





No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....