Monday, October 29, 2018

"தீண்டாமையைத் தகர்த்த தக்கர் பாபா" வெளியீடு 2017






அக்டோபர்-2017
"தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா"
தி.சுபாஷிணி
(தக்கர்பாபா பற்றித் தமிழில் வெளிவரும் முதல்நூல்)


























               2017,அக்டோபர் 1,2 தேதிகளில் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் "யாதுமாகி நின்றாய்"-தமிழ்நாடு,தமிழர், நம் காந்தி என்ற பெயரில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
               கிருஷ்ணா ஸ்வீட்ஸ்,லீட் இந்தியா,டெல்லி காந்தி அருங்காட்சியகம் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் தமிழர்களுக்கும் காந்திக்குமான தொடர்பை வெளிப்படுத்தும் வகையில் புகைப்படங்களும் நிகழ்வுகளும் அமைந்திருந்தன.
அக்டோபர் 1 காலை புகைப்படக் கண்காட்சியை சாந்தி ஆசிரமம் Dr. வினிஅறம் திறந்துவைக்க, ஆனைமலை ரங்கநாதன், காந்தி டுடே சுநில் கிருஷ்ணன், தி.சுபாஷிணி திருமலை சிறப்புஅழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு  உரையாற்றினர்.
மாலையில் "மைத்ரீம் பஜத" இசைநிகழ்ச்சியில் MS சுப்புலஷ்மி அவர்களின் கொள்ளுப் பேத்தி சௌந்தர்யா காந்தி பாடல்களைப் பாடினார்.

அக்டோபர் 2 காந்தி பிறந்தநாளில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மாலையில் காந்தியின் ஆப்த நண்பர் தக்கர்பாபா பற்றி தமிழில் வெளிவரும் "தீண்டாமையைத் தகர்த்த தக்கர்பாபா"நூலை  எழுத்தாளர் நாஞ்சில்நாடன் வெளியிட "Raac"அமைப்பின் செயலர் R.ரவீந்திரன் பெற்றுக்கொண்டார்.

TD திருமலை அவர்களின் மகளும் எழுத்தாளருமான தி.சுபாஷிணி எழுதிய இந்நூலை ,கோவை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ளது. நாஞ்சில்நாடன்,விப்ரநாராயணன் சிறப்புரையாற்ற தி.சுபாஷிணி ஏற்புரை வழங்கினார்.

தொடர்ந்து ஏ.கே.செட்டியார் தயாரித்த "காந்தி"ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இரு நாட்கள் நடந்த கண்காட்சியை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.


அனைவருக்கும் கண்காட்சி பற்றிய "யாதுமாகி நின்றாய்"என்ற நூல் வழங்கப்பட்டது.

மேலும் கண்காட்சியில் இடம்பெற்ற புகைப்படங்களின் பின்னணி 
குறித்த "Gandhi expo" app உருவாக்கப்பட்டுள்ளது.இந்த App ஐ இலவசமாக டவுன்லோட்செய்துகொள்ளலாம்.

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....