Monday, October 29, 2018

"இனி இல்லை மரண பயம்"


செப்டம்பர்-2017
"இனி இல்லை மரண பயம்"  
சந்தியா நடராஜன் 
( மரணம் பற்றிய தொகுப்பு-)

பக்கங்கள்  112   விலை 100 /-
**************************************************************
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 6.இனி இல்லை மரணபயம்...
- - - - - - - - - - - - - - - - -
மனிதர்களை எத்தனையோ பயங்கள் ஆட்டிப்படைக்கின்றன. ஒரு திரைப்படத்தில்கதாநாயகன், தனக்கு அதிலே பயம், இதிலேபயம் என்று ஏகப்பட்ட பயங்களை விவரிப்பார்.

ஆங்கில மொழியில் அந்த ஃபோபியா,
இந்த ஃபோபியா என ஒவ்வொரு பயத்திற்கும் தனித்தனிப் பெயர் இருக்கிறது.இந்த எல்லாப் பயங்களிலும் தலைசிறந்ததுமரண பயம்தான்.

அருளாளர்கள், மகான்களைத் தவிர்த்து, அரசர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளில் ஆரம்பித்துச் சாமானியர்கள் வரை மரணபயத்திற்கு வசப்படாதார் யார்?

ஆனால், மரணம் என்பது நிச்சயமானது,
தவிர்க்கமுடியாதது, எனவே மரணத்தை
நினைத்து பயப்படவேண்டியதில்லை என்பதை ஆதாரங்கள், உதாரணங்கள், அறிஞர்கள் மற்றும் மகான்களின் அறிவுரைகளோடு எடுத்துச் சொல்கிறது இந்தப் புத்தகம்.

"இருந்து என்ன ஆகப்போகிறது
செத்துத் தொலைக்கலாம்,
செத்து என்ன ஆகப்போகிறது
இருந்து தொலையலாம்"
என சிம்பிளாக ஜஸ்ட் லைக் தட் கல்யாண்ஜி கூறும் கவிதை,

"மரணம் என்பது என்றோ வர இருக்கும் நம் இறுதித் தோழன். அவனுடன் அன்போடு கைகுலுக்கி நிறைவு பெறலாம்" என்னும் ஆசிரியர் குறிப்புடன் இந்த நூலும் அழகாக நிறைவு பெறுகிறது.

"இருப்பதற்காக வருகிறோம்,
இல்லாமலே போகிறோம்"
என்ற வரிகள் ( நகுலன் எழுதியதுதானே? )
நினைவுக்கு வருகின்றன.

மரணபயம் நம்மை இல்லாமல் போக்கிவிடும். எதற்காக வந்தோம் என்பதை உணர்ந்து செயலாற்றினால் வரலாற்றில் இடம்பெறலாமே.

"நமக்கினி பயமேது - தில்லை
நடராஜன் அருள் இருக்கும்போது..."
என்ற பிரபலமான கீர்த்தனையை நாம் எல்லோரும் கேட்டிருக்கிறோம்.
"சந்தியா நடராஜனின்
இந்த நூல் இருக்கும்போது
நமக்கினி மரணபயம் ஏது ?"என நாம் திடம் பெறலாம்.

பாராட்டுக்கள்.

( ராஜாஜியின் "குறையொன்றும் இல்லை.."பாடலில் "கலிநாளுக்கிரங்கி கல்லிலேஇறங்கி..." என்ற வரிகளில் குறிப்பிடும் வரலாறு என்னவென்று தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ் ! )     நன்றி.

திரு.கி.ரா.திருமலையப்பன்
*******************************************************************************************************************************

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....