Monday, October 29, 2018

"தேவார மணி"- ராய. சொ(4)



ஆகஸ்ட்-2017 
"தேவார மணி" -
தமிழ்க் கடல் ராய. சொ. 

(1953 க்குப் பிறகு மறுபதிப்பு)

பக்கங்கள்  128   விலை 100 /-
ISBN 978-81-940780-3-6
*********************************************************************************************************** 

சிறுவாணி வாசகர் மையத்தின் வெளியீடு 5 -தேவார மணி

        அப்பரும் சம்பந்தரும் சுந்தரரும் பாடிப் பரமனைத் துதித்த ஆயிரக்கணக்கான
தேவாரப் பாடல்களில் நமக்குக் கிடைத்தவை 8239. அவை அத்தனையையும்
கற்றுத் துறைபோக இயலாத என் போன்றோர்க்கு உதவும் அருள்நோக்கோடு
தமிழ்க்கடல் ராய.சொ. தொகுத்தளித்த 300 பாடல்களின் திரட்டை நாஞ்சில்நாடனின் தூண்டுதலால் பவித்ரா பதிப்பகம் வெளியிட்டுச் சிறுவாணி வாசகர் மையம் வழங்கியுள்ள சிறந்த புத்தகம்.

தேவாரத்திற்கு விமர்சனம் ஏது ? எங்கெல்லாம் தித்திப்பு தூக்கலாக இருக்கிறது என்று
எடுத்துக்காட்டுவது  கூட இயலாத காரியம்தான்!

"மாசில் வீணையும்...",
"விறகில்த் தீயினன்..."
போன்ற அற்புதப் பாடல்கள் அடிக்கடி
கேட்டு மனதில் பதிந்தவை.

"மாயவன், சேயவன், வெள்ளியவன், விடம் சேரும் மைமிடற்றன்,
ஆயவன் ஆகியொர் அந்தரமும்அவன் என்றுவ ரையாகம்
தீயவன், நீரவன், பூமியவன்,திரு நாரையூர்தன்னில்
மேயவ னைத் தொழு வார் அவர் மேல்வினை ஆயின வீடுமே."

"எல்லாத் தெய்வங்களும் ஒன்றே. ஏகன்அநேகன். அந்த ஒன்று பரம்பொருளைத்
தொழுது வினை யாவற்றையும் அறுத்துக்கொள்ளுங்கள்" என்று வழிகாட்டுகிறது
அருமையான இந்தத் தேவாரமணி.

'காமரம்' என்றால் 'இசை' என்று கற்பிக்
கிறது இன்னொரு பாடல். (68 ).
"ஒருமுழம் உள்ள குட்டம் ( 89 )" எந்த நிலையில் நாம் இருக்கிறோம் என எச்சரிக்கிறது.
"கல்நெடுங் காலம் வெதும்பி" னாலும்(49)
கலங்கவேண்டாமென அபயக்கரம் நீள்கிறது.
"விண்ணிடைத் தருமராசன் வேண்டினால்
விலக்குவார் யார் ? - விடை தருகிறது 96.

வாசித்துக்கொண்டே இருக்கிறேன்,
நன்றியுடன்.
ஏடு பெயர்த்து எழுதியபோது ஏற்பட்ட பிழைகளை ராய. சொ. சரிசெய்திருக்கிறார். "இக்குறைபாட்டைச் சரிசெய்யவில்லையானால் நூலாசிரியர்க்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்தவர்கள் ஆகமாட்டோம்" என்கிறார் அவர்.

ரசிகமணியும்இதே பணியைத்தான் மேற்கொண்டார்.
Great men think alike.

திரு.கி.ரா.திருமலையப்பன்
***************************************************************************************************************************

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....