Monday, October 29, 2018

"தமிழ்க் களஞ்சியம்"--ரசிகமணி டி.கே.சி






நவம்பர்-2017
"தமிழ்க் களஞ்சியம்"--ரசிகமணி டி.கே.சி 
(2004க்குப் பிறகு வெளிவரும் கட்டுரைகள்-)

பக்கங்கள் 160     விலை 150 /-
ISBN 978-81-940780-6-7
*****************************************************************************************
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 8-
தமிழ்க் களஞ்சியம்
- - - - - - - - - - -
ஓர் எழுத்தாளரின் படைப்பையோ ஒரு கவிஞரின் கவிதையையோ ஒரு வாசகர்   வாசிக்கும்போது  'என்னமா எழுதியிருக்கிறார் !' என்ற வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படவேண்டும். அந்தப் படைப்பை கவிதையை அந்த வாசகர் ரசித்து அனுபவித்து
'என்னமா எழுதியிருக்கிறார் பாருங்கள் !'
என்று தமது சக இருதயர்களிடம் கூறித்
தமது ரசானுபவத்தைப்பகிர்ந்துகொள்ள
வேண்டும்.

அந்த மாதிரி 'என்னமா எழுதிய' அற்புதமான தமிழ்க் கவிதைகளை 'என்னமா
எழுதியிருக்கிறார்கள் பாருங்கள் !' எனஅழைத்து டி.கே.சி. என்னும் ரசிகமணி
நமக்கு ஊட்டுகின்ற அற்புதம் 'தமிழ்க்களஞ்சியம்' என்ற இந்தப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது.

39 கட்டுரைகளில் நூற்றுக்கும் மேற்பட்டசிறப்பான கவி மலர்களின் நறுமணத்தை/கவிக்கனிகளின் இன்சுவையை சரளமானநடையில் வெகு இலகுவாக நமக்கு ஊட்டிவிடுகிறார்கள் டி.கே.சி.

1953ல் கல்கியில் வாராவாரம் இடம்பெற்று 2004ல் பாரதி அறநிலையால் புத்தக வடிவம் கொண்டு இப்போது சிறுவாணி வாசகர் மையத்தால் புதிய பதிப்பாக வெளிவந்
துள்ள தமிழ்க் களஞ்சியம் - ஒரு தமிழ்ப்பொக்கிஷம்.

"வைகுந்த நாட்டில் இடம்பிடிக்க
வேண்டும் எனில்
தென்அரங்கர் திருத்தேரின்
வடம்பிடிகக வாருங்கள் !"
எனப் பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
மக்களை அழைக்கும் அருமையான பாடல் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

தமிழ்க் கவி அமுதத்தை அருந்த வேண்டு
மெனில் டி.கே.சியின் தமிழ்க் களஞ்சியம்
புத்தகத்தை வாசிக்க வாருங்கள் !
பவித்ரா பதிப்பகத்திற்கும் சிறுவாணி வாசகர் மையத்துக்கும் மனம்
நிறைந்த நன்றி.

திரு.கி.ரா.திருமலையப்பன்)
***************************************************************************************************************
Suresh Venkatadri

கோவை, சிறுவாணி வாசகர் மையத்தின் இந்த மாத,வெளியீடு.தனிப்பாடல் திரட்டில் உள்ள பாடல்களை குறித்து ரசிகமணி டி.கே.சி.அவர்களின் கட்டுரைகளின் தொகுப்பு.நமக்கு தமிழின் நவீன இலக்கிய பரிச்சயம் உள்ள அளவு, மரபு இலக்கியத்தில் இல்லை. இதைப் படித்தாவது, அங்கு நுழைய முடியுமா பார்க்கலாம்.

***************************************************************************************
 ·
நவமாய் உதித்த சிறுவாணி வாசகர்
மையம், இலக்கியத்தின் உச்சி விளிம்பில்
இதயநாதம் எழுப்பிப் பூங்கொத்து வைத்துத்
தேவாரமணி ஓசை ஒலிக்க, இனி இல்லை
மரண பயம் எனக்கூறித் தீண்டாமையைத்
தகர்த்த தக்கர்பாபாவின் வரலாற்றைத்
தமிழ்க் களஞ்சியமாக வழங்கியிருக்கிறது.
சிறந்த பணி தொடர்ந்து மிளிர
வாழ்த்துக்கள் !

**************************************************************************************·



No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....