Friday, November 2, 2018

"நண்பர்கள் நினைவில் பாரதியார் - இளசை மணியன்-(6)







டிசம்பர்-2017

"நண்பர்கள் நினைவில் பாரதியார்

இளசை மணியன்-


(இதுவரை வெளிவராத பாரதி பற்றிய கட்டுரைகள்-)

பக்கங்கள் 180     விலை 160 /-
ISBN 978-81-940780-5-0
**********************************************************************************************************

சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 9 -
நண்பர்கள் நினைவில் பாரதியார்

- - - - - - - - - - - - - - - - - - - -
ஆங்கிலத்தில் ஒரு Rap song இருக்கிறது.அது "மனிதர்களுக்கு 2 இறப்புகள் இருக்கின்றன" என்று கூறுகிறது. ஒன்று -உடலை விட்டு உயிர் பிரிகின்றவழக்கமான இறப்பு. இன்னொன்று - மற்றவர் நினைவிலிருந்து மறைவது.

இந்த 2வது இறப்பு இல்லாதவர்களின் பட்டியலில்
இடம் பிடித்தவர் நமது பாரதியார். இதைத்தான் "பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்" என்று உறுதியளித்தார்.இதையே
"தம் புகழ் நிறுவித் தாம் மாய்ந்தனரே"
எனச் சங்கப் பாடல் இனங் காட்டுகிறது.

'நண்பர்கள் நினைவில் பாரதியார்என்னும் இப்புத்தகத்தில் பாரதியோடு பழகும் பாக்கியம் பெற்றவர்களும்நெஞ்சால் அவரை நேசிப்பவர்களும் உதிர்த்த நினைவுகளைத்
திரட்டி நமக்குத் தந்துள்ள இளசை மணியன்அவர்களின் பணி மகத்தானது.
பாரதியின்அற்புத குணாதிசயங்களைக் கூறி நம்மை
வியக்கவும்அவர் பட்ட இன்னல்களைஅறிந்து நாம் உள்ளம் கசியவும் செய்கிறது 
இந்தத் தொகுப்பு.

"பாரதியார் ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் பிறந்திருந்தால் அவருக்கு எத்தனை ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ! தமிழ் நாட்டாரிடமிருந்து அவ்வளவு பெரிய நன்றியறிதலை நாம் எதிர்பார்க்கவில்லை" என மனம் வெதும்புகிறார் திரு.வி.க.

பாரதியாரின் பூத உடல் மறைந்து நூறாண்டுகள் இன்னும் நிறையவில்லை. எத்தனை
நூறு ஆண்டுகள் கடந்தாலும் அவரது அற்புதக் கவிதைகளில் மனம் தோய்வதே நாம்அவருக்கு அளிக்கும் சாகாவரம்.

பாரதியின் நினைவு நாளில் இந்த அருமையான புத்தகத்தை வழங்கிய தொகுப்பாசிரியர்பதிப்பகத்தார்சிறுவாணி வாசகர் மையத்திற்கு
நெஞ்சார்ந்த நன்றி.

திரு கி.ரா.திருமலையப்பன்
****************************************************************************************************
#சிறுவாணி_வாசகர்_மையம்
மாதம் ஒரு நூல் திட்டத்தில்( நவம்பர் 2017)வெளியீடு

வருடம் 1.   நூல் 6
---------
"நண்பர்கள் நினைவில் பாரதியார் "- எழுத்தாளர், பாரதி ஆய்வாளர் இளசை மணியன் அவர்கள் தொகுப்பாசிரியர்.
---------
"பார்மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்" என்று பாடிய பாரதியைப் பற்றி அவரது நண்பர்கள்,உறவினர்கள் எழுதியவற்றின் தொகுப்பு இந்நூல்.

கடந்தகாலத்தின் சிறப்புகளைப் போற்றி நிகழ்காலத்தின் மடமைகளைச் சாடி மகத்தான இந்தியாவைக் கனவுகண்டவர் பாரதி.அவரது வாழ்க்கையின் அறியாத பல்வேறு நிகழ்வுகளைக் கூறும் இந்நூல் பாரதியியலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கிறது.  இந்நூலை வெளியிட்டு தமக்குச் சிறப்பு சேர்த்துக் கொண்டது "சிறுவாணி வாசகர் மையம்".

”நண்பர்கள் நினைவில் பாரதியார்” என்னும் இந்நூலில், நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார், எஸ்.ஜி.ராமனுஜலு நாயுடு, பரலி சு.நெல்லையப்பர், வாசுதேவ சர்மா, கைலாசபதி போன்றவர்கள், மகாகவி பாரதியார் பற்றி, தினமணி, சக்தி, கவிதா சக்தி, ஆனந்த விகடன், காந்தி, தினகரன் உள்ளிட்ட பல இதழ்களில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.  

இளசை மணியன் அவர்கள் பாரதி பிறந்த எட்டயபுரத்தை சேர்ந்தவர். பாரதி ஆய்வாளர், பல நூல்களின் ஆசிரியர், வாழ்நாளின் பெரும் பகுதியை பாரதி குறித்த ஆய்வுகளுக்காக செலவிட்டதால் அப்பணிக்காக பல விருதுகளை பெற்றவர். பாரதி பற்றிய பல அரிய தகவல்களை கொண்டிருந்தவர்.

இந்நூல் 10.12.17 கோவையில், சேம்பர் ஆப் காமர்ஸ் ஹா லில், பெ.சு.மணி,இளசை மணியன் கலந்து கொண்ட பாரதி பாசறை நடத்திய பாரதி பிறந்தநாள் விழாவில் வெளியிடப்பட்டது.

காந்தி கல்வி நிலையத்தின் புதன் வாசகர் வட்டத்தில் 27.12.2017 அன்று  திருமதி சுபாஷிணி அவர்கள் "நண்பர்கள் நினைவில் பாரதியார்"  என்ற இளசை மணியன் அவர்களின் நூலை அறிமுகம் செய்து பேசினார்.

-----------------
வாசிப்பனுபவம்

அஞ்சு வயசா இருக்கும் போதே தாயை இழந்துவிட்ட சிறுவன் தமிழைத் தாயாய் அணைத்துக்கொண்டான்.

 அந்தச் சிறுவயதிலேயே கவி இயற்றுவதில் புலமை. அரசர் வரை புகழ். பதினைஞ்சு வயதாகும்போது திருமணம். பதினாறு வயதில் தந்தை மரணம். பின் இரண்டு வருடங்கள் காசியில் அத்தை வீட்டிலே வாசம். காசிக்குச் வேறெதோ வேலையாகச் செல்லும் அரசர் "பாரதி எங்களின் சமஸ்தானச் சொத்து" என்று கையோடு ஊருக்கு அழைத்து வந்துவிடுகிறார். வந்தவருக்கு தமிழ்ப் பண்டிதர் வேலை, பின் சுதேசமித்திரன் பத்திரிக்கையில் உதவி ஆசிரியர். பின்பு அவரே இந்தியா என்ற வாரப் பத்திரிக்கை என்ற ஒன்றைத் தொடங்குகிறார். அந்த பத்திரிக்கையில் வந்ததனைத்துமே எழுத்துக்கள் அல்ல திராவகங்கள். எலும்பு வரை ஊடுருவக்கூடிய திராவகங்கள். ஆளும் பிரிட்டிஸ் சர்க்கார் எந்நேரம் வேண்டுமானாலும் கைது செய்ய நேரலாம் என்ற தகவலால் பாண்டிச்சேரியில் தஞ்சம் அடைகிறார். பாண்டிச்சேரி ப்ரெஞ்ச் ஆட்சி ப்ரிட்டிஷ் ஆட்சி செல்லாது. பத்து வருடம் பாண்டிச்சேரியிலே வாசம். பின்பு திரும்பி வருகையிலே எல்லையில் கால் வைத்தவுடனேயே கைது. சிறிதுகாலம் சிறை வாசம். பின் விடுதலை. மீண்டும் சுதேசமித்திரனில் உதவி ஆசிரியர் பணி. யானை மிரட்சிக்குப்பிறகு சில மாதங்களிலேயே மரணம்.
பாரதியின் சுருக்கமான வாழ்க்கையின் சுருக்கம் தான் இது. ஆக வாழ்ந்தது 39 ஆண்டுகள். இந்த 39 ஆண்டுகளில் சீரிய கவி பாடியது அதிக பட்சம் பத்து ஆண்டுகள் தானிருக்கும். ஒரு யுகத்துக்கே தேவையான பெயரைச் சம்பாதித்திருக்கிறார். இவ்வளவு சம்பாரித்த இவரைப்பற்றி இவரது சகாக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதே புத்தகம் தரும் செய்தி. முப்பது கட்டுரைகளைக் கொண்டுள்ள இதில் ஒரு சிலதைப் பற்றி மட்டும் சொல்லி முடித்துக் கொள்கிறேன்.
என் குருநாதர் பாரதியார் எனும் கட்டுரையில் கல்கி பாரதியைத் தனது குருநாதர் என்று போற்றுகிறார். 1931லே எழுதப்பட்ட இந்த கட்டுரையில் "தமிழ்ச் சமூகத்தில் இன்னும் பாரதியார் தமக்குரிய ஸ்தானத்தை அடையவில்லையென்றே தோன்றுகிறது. பாடகர்களும், நாடகக்காரர்களும் பாரதியாரின் பாட்டைப் பாடாமல் வேறு ஏதோ ஹிந்துஸ்தானி மெட்டிலுள்ள அர்த்தமில்லாத அசட்டுப் பாடல்களையே தேசிய கீதமென்று பாடி வருகிறார்கள். அவைகளைக் கேட்டு ரஸிகர்களும் ஆரவாரிக்காறார்கள், இந்தப் பாடல்கள் கேவலம் பிணங்களைப் போல, உயிரற்று, கவிதையற்று வெறும் சொல்லடுக்குகளாயிருப்பதைக் காண்கிறேன். என்று இந்த போலி தேசிய கீதங்கள் மறைந்து பாரதியின் பாடல்கள் பாடப்படுமோ அந்த நாளுக்காக நாங்கள் காத்திருக்கின்றோம்" என்ற அவரது கூற்றில் பல அர்த்தங்கள் தொனிக்கிறது.
பாரதி ஏழையல்ல, கர்ணனே எனும் கட்டுரையை வ.வே.சு. ஐயர் மனைவி பாக்கியலட்சுமி அம்மாள் எழுதியிருக்கிறார். "பாரதி களங்கமற்ற ஒரு சின்னக் குழந்தைபோல இருப்பார். மனதில் எண்ணங்களை மறைத்து வைத்துக்கொள்ளத் தெரியாது. தான் எத்தனை வறுமையோடிருந்த போதிலும் அதற்காக அவர் சற்றும் வருந்தினவரல்ல. ஒவ்வொரு நாள் எங்கள் வீட்டிற்கு வரும்போது, கோட் ஸ்டேண்டில் இருக்கும் துணிகளில் ஏதேனும் தனக்கு வேண்டுமென ஆசை உண்டானால் அதை எடுத்து, தான் அணிந்து கொண்டு கண்ணாடி எதிரில் நின்று பார்த்துக் கொண்டு 'ஐயரே, இது எனக்கு நன்றாயிருக்கிறது. எனக்குத்தான். கொடுக்கமாட்டேன்' என்று சொல்லிவிடுவார். கொஞ்ச தூரம் போகையிலே குளிர் தாங்க முடியவில்லை என்பான் இன்னொருன் கோட்டு அவனுக்கு தானம் செய்தாகிவிடும். இப்படியான இவரது வாழ்க்கையில் வறுமையிருந்தாலும் செயலில் கர்ணனே என்று உணர்ச்சிகளைக் கொட்டியுள்ளார்.
பாரதி சொன்ன சின்னக்கதை எனும் கட்டுரையில் வரகவி. திரு. ஆ. சுப்ரமண்ய பாரதி ஒரு குட்டிக்கதை சொல்லியிருக்கிறார். பட்டுப்புழுவுக்கும் சிற்றெரும்புக் கூட்டத்துக்குமான அந்தக் கதை அனைவருமே படித்து இன்புற வேண்டிய கதை.
நான் அறிந்த பாரதி எனும் தலைப்பில் நாகசாமி அவர்கள் பாரதி குளிப்பதையும், நடக்கும் போது குதிப்பதையும், சாப்பிடுவதையும் சற்றே நெருங்கி பதிவு செய்திருக்கிறார்.
பாரதியார் உட்கார்ந்த நாற்காலி எனும் கட்டுரையில் பாரதியின் வீட்டுச் சென்ற பதிவை சற்றே நகைச்சுவையாகவும் சற்றே பெருமிதத்துனும் பதிவுசெய்திருக்கிறார் சாவி.
ரஸத்திலே தேர்ச்சி கொள் எனும் பாரதிதாசனின் கட்டுரை பாரதியின் கவிப்புலமையை பறை சாற்றுவதாக அமைந்திருக்கிறது. புதிய ஆத்திச்சூடி உருவான கதையை ரஸம் சொட்ச்சொட்டச் சொல்லியிருக்கிறார் பாரதிதாசன்.
பாரதியார் சரித்திரம் எனும் கட்டுரையை நாவலர் ச. சோமசுந்தர பாரதி பாரதியின் மனைவியார் கேட்டுக் கொண்டதால் எழுதியது என ஒரு மிகச்சிறந்த தகவல்களையெல்லாம் பகிர்ந்திருக்கிறார்.
இன்னுமே வ.வே.சு. ஐயர்/ திரு.வி.க/ உ.வே.சா/ வி.சக்கரைச்செட்டியார்/ வ.ரா/ அமுதன்/ சங்கு சுப்ரமணியன் என இன்னும் பலரின் நினைவுகளை நம் நினைவுகளுக்குள்ளுக்கும் புகுத்தியிருக்கிறது புத்தகம்.

பாரதியாரை பிடித்துத் தருவோருக்கு நூறு ரூபாய் பரிசு.
நன்றி #Kmkarthikeyan
--------------
ஆங்கிலத்தில் ஒரு Rap song இருக்கிறது.அது "மனிதர்களுக்கு 2 இறப்புகள் இருக்கின்றன" என்று கூறுகிறது. ஒன்று -உடலை விட்டு உயிர் பிரிகின்ற, வழக்கமான இறப்பு. இன்னொன்று - மற்றவர் நினைவிலிருந்து மறைவது.
இந்த 2வது இறப்பு இல்லாதவர்களின் பட்டியலில் இடம் பிடித்தவர் நமது பாரதியார். இதைத்தான் "பார் மீது நான் சாகாதிருப்பேன் கண்டீர்" என்று உறுதியளித்தார்.இதையே
"தம் புகழ் நிறுவித் தாம் மாய்ந்தனரே"
எனச் சங்கப் பாடல் இனங் காட்டுகிறது.
'நண்பர்கள் நினைவில் பாரதியார்' என்னும் இப்புத்தகத்தில் பாரதியோடு பழகும் பாக்கியம் பெற்றவர்களும், நெஞ்சால் அவரை நேசிப்பவர்களும் உதிர்த்த நினைவுகளைத்
திரட்டி நமக்குத் தந்துள்ள இளசை மணியன் அவர்களின் பணி மகத்தானது. 
பாரதியின்அற்புத குணாதிசயங்களைக் கூறி நம்மை
வியக்கவும், அவர் பட்ட இன்னல்களை அறிந்து நாம் உள்ளம் கசியவும் செய்கிறது 
இந்தத் தொகுப்பு.

"பாரதியார் ஐரோப்பாவில் அல்லது அமெரிக்காவில் பிறந்திருந்தால் அவருக்கு எத்தனை ஞாபகச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ! தமிழ் நாட்டாரிடமிருந்து அவ்வளவு பெரிய நன்றியறிதலை நாம் எதிர்பார்க்கவில்லை" என மனம் வெதும்புகிறார் திரு.வி.க. 
பாரதியாரின் பூத உடல் மறைந்து நூறாண்டுகள் இன்னும் நிறையவில்லை. எத்தனை
நூறு ஆண்டுகள் கடந்தாலும் அவரது அற்புதக் கவிதைகளில் மனம் தோய்வதே நாம்அவருக்கு அளிக்கும் சாகா வரம்.

நன்றி-திரு கி.ரா.திருமலையப்பன் 

பக்கங்கள் 180
விலை 160/-
(அனுப்பும்செலவு தனி)

ஜி.ஆர்.பிரகாஷ்
9940985920
8778924880 (Gpay)

#பவித்ரா_பதிப்பகம்                                                                      #Siruvani_vasagar_maiyam
#pavithra_pathippagam

No comments:

கனவு மழை -வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்

கனவு மழை வ.ஸ்ரீநிவாசன் சிறுகதைகள்  பக்கங்கள்;166          விலை;ரூ 180/- நாஞ்சில்நாடன் அனைத்துக் கதைகளிலுமே நேர்த்தியான முதிர்ச்சி தெரிகிறது....