10.12.17
பாரதி பிறந்தநாள் விழா / பாரதி விருது /
நூல் வெளியீடு
சிறுவாணி வாசகர்
மையத்தின் டிசம்பர் மாத நூல் "நண்பர்கள் நினைவில் பாரதியார்" கோவை பாரதி
பாசறை நடத்தும் பாரதி பிறந்தநாள் விழாவில் வெளியிடப்படுகிறது.
அனைவரும் வருக. பக்கங்கள் 180 விலை 160 /-
நாள்-10.12.17
நேரம்-மாலை 6.00 மணி
இடம்- சேம்பர்
ஆப் காமர்ஸ் ஹால்
அவிநாசி ரோடு,கோவை.
*******************************************************************************************************************
கோவையிலிருந்து இயங்கிவரும் பாரதி பாசறை அமைப்பின் சார்பில் பாரதி பிறந்தநாள் 2017,பாரதி விருது மற்றும் நூல்வெளியீட்டு விழா டிசம்பர் 10 ல் அவிநாசி ரோடு சேம்பர் ஆப் காமர்ஸ் ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் பாரதி ஆய்வாளர் திரு பெ.சு.மணி அவர்களுக்கு 2017 க்கான பாரதி விருது வழங்கப்பட்டது
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக டாக்டர் ஜீவானந்தம் (தமிழக பசுமை இயக்கம்,ஈரோடு), இளசை மணியன் , யாழ்ப்பாணம் நடேசன் ரவீந்திரன் ,இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டார்கள் .கடந்த வருடங்களில் பாரதி பாசறையின் மூலம் திரு ஸ்டாலின் குணசேகரன், திரு சீனி விஸ்வநாதன்,திரு.இளசை மணியன் ஆகியோருக்கு பாரதி விருது வழங்கப்பட்டுள்ளது.
இயக்குனர் பாரதி கிருஷ்ணகுமார் ,டாக்டர் வெ. ஜீவானந்தம், யாழ்ப்பாணம் நடேசன் ரவீந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். பெ.சு மணி ஏற்புரை வழங்கினார்கள்
இதனைத் தொடர்ந்து கோவையில் இயங்கி வரும் சிறுவாணி வாசகர் மையம் வெளியீடாக "நண்பர்கள் நினைவில் பாரதி "என்கிற நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை தொகுத்த திரு.இளசை மணியன் பாரதி பற்றிய ஆய்வு சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள்.
திரு.ஆர்.ரவீந்திரன் (Raac)நன்றியுரை வழங்கினார்.

Suresh
Venkatadri
December
11, 2017
நீண்ட நாட்களாக,பார்த்தும்,அவர்களின் உரைகளைக் கேட்க
வேண்டும் என்றும் நினைத்திருந்த,திரு.பெ.சு.மணி, மற்றும்,பாரதி கிருஷ்ணகுமார், இருவரையும்,பார்த்தும் அவர்களைக்
கேட்கவும்,நேற்று ஒரு நல்லூழ்
அமைந்தது.கூடவே,போனசாக,திரு.இளசை மணியன்,இலங்கைபேராசிரியரும்,மார்க்ஸிய,பாரதி,ஆய்வாளருமான,திரு,நடேசன் ரவீந்ந்திரன்
ஆகியோருடைய உரைகளையும் கேட்கமுடிந்தது.கோவை பாரதிப் பாசறை அமைப்பினர்,பாரதியின் நினைவு நாள்
தொடங்கி,பிறந்தநாள் வரை,நடத்திய, பாரதி விழாவின் நிறைவாக
நேற்று நடந்த பரிசளிப்பு விழா,நூல் வெளியீட்டு
விழா கூட்டம் மிகுந்த,மனநிறைவை
அளித்தது.விழா துவங்குமுன் கோவை சபர்பன்,பள்ளி,இசை ஆசிரியர் மற்றும்
மாணவர்கள் பாடிய பாரதி பாடல்களும் அருமை.
மாலை முழுவதும்,பாரதி நினைவுகளில்
மூழ்கியும்,நீண்ட நாட்களுக்குப் பின்
சந்தித்த சில நண்பர்களின் தோழமையிலும் திளைத்திருந்தேன்.கரும்பு தின்றதற்குக்
கூலியாக,
இளசை மணியன் அவர்கள்
தொகுத்திருக்கும்,நண்பர்கள் நினைவில் பாரதி,புத்தகம்
வேறு கிடைத்தது.
இந்த இனிமையாந அனுபவங்களை சாத்தியப்படுத்திய,
கோவை,பாரதி பாசறை மற்றும்,சிறுவாணி வாசக மைய
நண்பர்களுக்கு நன்றிகள்.
*******************************************************************************
Radha
Krishnan
தேடி எடுத்துப்
படைக்கின்ற உமக்கு வாழ்த்துக்கள் .தொடரட்டும் உனதுபணி வாழ்க வளர்க.
*******************************************************************************************************************
Siddharthan
Sundaram
முண்டாசுக்
கவிஞனின் பிறந்த நாளுக்கு சிறுவாணியின் வெளியீடு...!! அமர்க்களம்!!!
**********************************************************************************************************************
No comments:
Post a Comment