சிறுவாணி வாசகர் மையம் விருது விழாவில் நடந்த நாட்டிய நிகழ்வு.
நடன மங்கை அஞ்சனா.
சிறுவாணி வாசகர் மையம் நடத்திய *******************************
வாசகர் எழுத்தாளர் சந்திப்பு
நாஞ்சில் நாடன் விருது வழங்கும் விழா
மற்றும் புத்தக வெளியீடு*******************************************
21 1 2018 ஞாயிறு மாலை 4 மணி முதல்
கோவை ஆருத்ரா ஹாலில் நடைபெற்றது. சிறுவாணி வாசகர் மைய வாசகர்கள் மற்றும் எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன், தி சுபாஷிணி, வ. ஸ்ரீநிவாசன்,லா.ச.ரா சப்தரிஷி,சித்தார்த்தன்சுந்தரம் ஆகியோர் கலந்துகொண்ட சந்திப்பு நடைபெற்றது.
*******************************
அதனைத் தொடர்ந்து செல்வி .அஞ்சனா நாட்டியத்துடன் நிகழ்வுகள் துவங்கின.
நாஞ்சில் நாடன் அவர்களின் அனுமதியுடன் சிறுவாணி வாசகர் மையத்தால் நிறுவப்பெற்றது " நாஞ்சில் நாடன் விருது"
(எதனெதனாலோ இயங்கும் உலகில் அதைப்பற்றிக் கவலைப்படாமல் கலை, இலக்கியம் ,சமூகம் ஆகிய பல்வேறு துறைகளில் நேர்மையாகவும் உண்மையாகவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அளிக்கப்படும்)இவ் விருது முதல் வருடம் ஓவியர் ஜீவா அவர்களுக்கு வழங்கப்பட்டது.
. மூத்த வழக்கறிஞரும் (புதுடெல்லி உச்ச நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றம் )திரு கே எம் விஜயன் விருதினை வழங்கினார். திரு ஆர் ரவீந்திரன் (பாரதி பாசறை), இரத்தினவேல் (ராயல் தியேட்டர் உரிமையாளர்), திரு.கண.சிற்சபேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். இவ்விழாவிற்கு திரு நாஞ்சில் நாடன் தலைமை ஏற்று நடத்தினார் .திரு ஜீவா ஏற்புரை வழங்கினார்.
*****************************
அடுத்து எழுத்தாளரும் சொல்வனம் இணைய இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவருமான திரு.வ.ஸ்ரீநிவாசன் எழுதிய
" எதைப்பற்றியும் அல்லது) இது மாதிரியும் தெரிகிறது, "காணக்கிடைத்தவை"
ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டன நூல்களை திரு நாஞ்சில் நாடன் வெளியிட திரு கே எம் விஜயன் பெற்றுக்கொண்டார். திரு .வ.ஸ்ரீநிவாசன் ஏற்புரை வழங்கினார்.
இவ்விழாவில் கண. சிற்சபேசன், ஆடிட்டர் கிருஷ்ணகுமார் , சித்தார்த்தன் சுந்தரம், மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பா.மா.மனோகரன் நிகழ்வுகளை ஒருங்கமைத்தார்.
What a lovely way to spend a Sunday Evening listening to wisdom of Tamil literary greats and fans - @jeevartist was his usual simple self on receipt of #NaanjilNaadhanAward from Siruvani Vasagar Maiyam
கோவையில் 'சிறுவாணி வாசகர் மையம்"எனும் அமைப்பு "மாதம் ஒரு நூல்"எனும்வகையில் இலக்கியத்தரமான நூல்களை வாசகர்களுக்கு நேரடியாக அனுப்பிவைக்கிறது.
இவ்வமைப்பின் சார்பில் வரும் 21.01.18 (ஞாயிறு) அன்று
"நாஞ்சில் நாடன் விருது" ஓவியர் திரு. ஜீவா அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
நாஞ்சில் நாடன் விருது-
சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளரைக் கௌரவிக்கும் வகையில் இவ்விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கலை,இலக்கியம்,சமூகம் ஆகிய பல்வேறு துறைகளில் நேர்மையாகவும், செம்மையாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு இவ்விருது அளிக்கப்படவுள்ளது. (இவ்விருது ரூ 50,000 ரொக்கம்,Memento,citation அடங்கியது.)
***************************************************************************************************************************
சினி ஆர்ட்ஸ் ஜீவா என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நம் ஜீவானந்தன் அவர்கள் 1956ல் பிறந்தார். தந்தையார் திரு வேலாயுதம், அந்நாளில் பெரிதும் போற்றப்பட்ட தலைசிறந்த ஓவியர். அவர் தம் தூரிகை தீண்டலால் தூண்டப்பட்டு, ஓவியக் கலையில் ஆர்வம் கொண்டார் திரு ஜீவா.
கோவை கிக்கானி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, கோவை அரசுக் கல்லூரியில் இளங்கலை அரசியல் அறிவியலும், சென்னை பிரெஸிடென்சி கல்லூரியில் முதுகலை அறிவியலும் கற்று தேர்ந்து, பின்னர் கோவை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர்.
எப்போதும் அரசியல் செய்யத்தெரியாத அரசியல் வல்லுநர், இப்போது கறுப்புக் கோட்டு போடாத சட்ட மேதை... காகிதப் படிப்புக்கு சட்டமும், ஆத்ம திருப்திக்காக - ஓவியமும், அன்றாட வாழ்விற்காக திரைப்பட பேனர் வடிவமைப்பு என வாழ்வை வடிவமைத்துக் கொண்டவர்.
அந்நாளைய புகழ்பெற்ற பல திரைப்படங்களின் பேனர்களை பாங்குற வடிவமைத்தவர். கதாபாத்திரங்களின் உணர்வுகளை உள்வாங்கி, உருவம் மற்றும் வடிவம் கொடுப்பதில் தன்னிகரற்ற தனிச்சிறப்பு கொண்டவர். இவர் வடிவமைத்த சுவரொட்டி ஓவியங்களால் ஈர்க்கப்பட்டு வெற்றிபெற்ற படங்கள் பலப்பல...
1980-களில், கல்கி பத்திரிகையில் மாணவ பத்திரிக்கையாளராக இருந்து திரைப்பட விமர்சனங்களை நடுநிலையோடு வழங்கியவர்.
1980-களில் திரு மாலன் ஆசிரியராய் இருந்து துவங்கிய "திசைகள்" பத்திரிகையில், சிறு, குறுங்கதைகளுக்கான ஓவியங்களை வரைந்து, படைப்புகளுக்கு மெருகேற்றினார்.
இவர் தலைமையில் இயங்கும் "சித்ரகலா அகாடமி" - 1978 முதல் கோவையிலும், பெங்களூரிலும் தொடர்ந்து வருடாந்திர கண்காட்சியை நடத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல்,, தொடர்ந்து 40 ஆண்டுகளாக, மாணவர்களுக்கு ஓவியக்கலையை, சேவை நோக்கோடு கட்டணமின்றி கற்றுக்கொடுத்து வருகிறார். இன்று திரைப்படம் மற்றும் ஊடகத்துறைகளில் முன்னணியில் இருக்கும் பல ஆர்ட் டைரக்டர்கள், இவரின் முன்னாள் மாணாக்கர்கள்.
பல்வேறு ஊடகம், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் மற்றும் கருத்தரங்கங்களில் "கலை மற்றும் ஓவியம்" தொடர்பான கருத்துரைகளை தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார்.
அயல் சினிமா, வலம் போன்ற இதழ்களில் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
சமீபத்தில் வெளியாகி இருக்கும் "ஏக்நாத்ஜி - One Life One Mission " எனும் திரைப்படத்தில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்களின் பாத்திரமேற்று நடித்துள்ளார்.
Portrait painting.Pencil and Pen strokes, Water colour, Oil and acrylic paintings , Digital paintings போன்ற பல்வேறு ஓவிய பரிமாணங்களிலும் தனி முத்திரை பதித்தவர்.
கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, குறளோவியம் எனும் தலைப்பில் நடந்த திருக்குறள் அதிகாரம் சார்ந்த 133 ஓவியம் வரைய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்ட இரு ஓவியர்களில் ஒருவர் திரு ஜீவா அவர்கள்.
கனடா நாட்டின் "தாய்வீடு" அமைப்பினர் அழைப்பை ஏற்று, கனடா நாட்டிற்கு சென்று அங்குள்ள மாணவர்கள், தமிழ் ஆசிரியர்கள், மற்றும் மூத்த குடிமக்களுக்கு 10க்கும் மேற்பட்ட ஓவியப்பட்டறைகள் மூலம் இலவச ஓவியப்பயிற்சி அளித்தார்.
வார்த்தை,ஓம்சக்தி, உயிர்மை, அந்திமழை, தமிழ் ஹிந்து,கனடா நாட்டின் தாய் வீடு போன்ற பல்வேறு பிரபல இதழ்கள் மற்றும் பதிப்பகங்களில் வெளிவரும் ஆக்கங்களுக்கு, அதனை மெருகேற்றும் வகையில் வசீகரமாய் ஓவியங்கள் வரைந்து வருகிறார்.
சாகித்ய அகாதமி எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன் அவர்களின் படைப்புகள் உட்பட பல்வேறு பிரபல நாவல், புதினங்கள், சிறுகதை படைப்புகளுக்கு, முகப்பு அட்டை ஓவியம் வடிவமைத்தவர்.
மகாராஷ்டிரா மாநில அரசு, ஜப்பான் அரசோடு இணைந்து தயாரித்த "அஜந்தா எல்லோரா" பற்றிய ஆவணப்பதிவிற்கு "ஓவியங்கள்" வரைந்தவர்.
நாடு,மாநில எல்லைகளைத் தாண்டி, சுவிட்சர்லாந்து , கனடா போன்ற பல்வேறு நாடுகளின் ஆக்கங்களுக்கு ஓவியங்கள் வடிவமைத்து உலகப் பிரசித்தி பெற்றவர் நம் விழா நாயகர் திரு .ஜீவா அவர்கள்.
இயற்கை மற்றும் சுற்றுசூழலில் மிகுந்த அக்கறை கொண்ட திரு ஜீவா அவர்கள், சூழல் தொடர்பான பல ஓவியங்களை வரைந்தவர். கோவையின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், தூய்மையை வலியுறுத்தும் வகையிலும் "கிராஃபிட்டி பிரீமியர் லீக்" எனும் தலைப்பில், மாநகராட்சியோடு இணைந்து சுவரோவியங்களை நகரின் பல்வேறு பகுதிகளில் வரைந்து, நகருக்குப் புதுப்பொலிவு கொடுத்ததோடு, பல்வேறு அமைப்புகள் இப்பணியை தொடரவும் உந்து சக்தியாய் இருந்துவருகிறார்.
கோவையின் அடையாளமாக கருதப்படும் உக்கடம் பெரியகுளத்தை அங்குலம் அங்குலமாய் பாதுகாத்து வருவதுடன், அதன் இயற்கை எழிலையும், பல்லுயிர் பரிமாணங்களையும் தொடர்ந்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு ஆவணப்படுத்திவருகிறார்.
சந்தர்ப்ப சூழலால், சிறைவாசம் அனுபவிக்கும் சிறைக்கைதிகளுக்கு இலவச ஓவிய பயிற்சியை இரண்டு ஆண்டுகள் நடத்தினார்.
அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கலைகளின் மீது ஆர்வம் ஏற்படுத்தும் வகையில், அம்மாணவர்களுக்கு சேவைநோக்கோடு, ஓவியப்பயிற்சி அளித்து வருகிறார்.
விருதுகள்:-
திரு. ஜீவா அவர்கள் கலை உலகத்திற்கு அளித்த படைப்புக்கள், பங்களிப்புகளுக்காக பல அங்கீகாரங்களைப் பெற்றவர். அவற்றுள் சில.
Rotract Club of Coimbatore Unique-ன், "Vocational Excellence" விருது பெற்றவர்.
ரத்தினம் கல்லூரி இவருக்கு "Icon of Coimbatore " விருது வழங்கி சிறப்பித்தது.
உலகின் தலைசிறந்த 100 கேலிச்சித்திர கலைஞர்களில் ஒருவராக, ரோமானிய கார்ட்டூன் சங்கத்தினரால் 2007 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் பரிந்துரை செய்யப்பட்டார்,
2016-ல், உலகின் இரண்டாவது தலைசிறந்த கேலிச்சித்திர கலைஞராக ரோமன் கார்ட்டூன் அசோஸியேஷனால் தேர்தெடுக்கப்பட்டார் நம் நாயகர் திரு ஜீவா.
எழுத்துத் துறையிலும் தனி முத்திரை படித்தவர். 2011-ல் நடந்த தேசிய திரைப்பட விருதுகளில் "Best Book of Cinema " பிரிவில் இவர் ரசனை இதழில் தொடராக எழுதி நூல்வடிவம் பெற்ற"திரைச்சீலை" புத்தகத்திற்கு, சிறந்த புத்தகத்திற்கான விருது குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்டது . 29 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்ப் புத்தகத்திற்கு கிடைத்த விருது என்பதும் குறிப்பிடத்தக்கது
கலை, இலக்கியம், சமூகம் சார்ந்து பல்வேறு துறைகளில் நேர்மையாகவும், செம்மையாகவும், செயல்பட்டமைக்காக ஓவியர் ஜீவா அவர்களுக்கு "நாஞ்சில் நாடன்" விருது அளிப்பதில் "சிறுவாணி வாசகர் மையம்" பெருமை கொள்கிறது.
நாள்: 21.01.2018
தி. சுபாஷிணி தலைவர்,
ஜி.ஆர்.பிரகாஷ்
ஒருங்கிணைப்பாளர்
சிறுவாணி வாசகர் மையம்
கோவை.
---------------------------------------------------------------------------------------------------
S Sidharthsundaram:
நேற்று சிறுவாணி வாசகர் மையம் சார்பில் நடைபெற்ற வாசகர்- எழுத்தாளர் சந்திப்பு, விருது வழங்கும் விழா, புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த வாசகர்கள் சிறுவாணியின் வளர்ச்சிக்கு நல்ல பல யோசனைகள் கூறினார்கள். அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விவாதித்து முடிவெடுத்து அதை குழுவினருக்குத் தெரிவிப்பார்கள்.
அரங்கம் நிறைந்த கூட்டம். நாஞ்சில் நாடன், லா.ச.ரா. சப்தரிஷி, வ. ஸ்ரீநிவாசன், சுபாஷிணி, சித்சபேசன், ரவீந்திரன், கிருஷ்ணகுமார் என சில இலக்கிய ஆளுமைகளையும், இலக்கியத்தின் மீது ஆர்வமுள்ள நல்ல உள்ளங்களையும் சந்தித்த மகிழ்ச்சி...
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் அவர்களின் அயராத உழைப்பாலும், அவரது குடும்பத்தினரின் ஆதரவுடனும், நேற்றைய விழா சிறப்பாக அமைந்திருந்தது.
வாருங்கள் ஊர் கூடி தேர் இழுப்போம். நண்பர்களிடமும் சிறுவாணியை அறிமுகப்படுத்துவோம்... நூலினைப் பகுத்துணர்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு... அடுத்த வருடம் இதைவிடப் பெரிய அளவில் விருது விழாவை நடத்த நம் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
பிரகாஷ், அவரது குடும்பத்தினர், கிருஷ்ணகுமார், ரவீந்திரன் மற்றும் விழா சிறக்க தங்களது உழைப்பையும், நேரத்தையும், பொருளையும் செலவழித்த அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
https://youtu.be/HGqk6v7X6Bo
---------------------------------------------------------------------------------------------------
நேற்று சிறுவாணி வாசகர் மையம் சார்பில் நடைபெற்ற வாசகர்- எழுத்தாளர் சந்திப்பு, விருது வழங்கும் விழா, புத்தகங்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்திருந்த வாசகர்கள் சிறுவாணியின் வளர்ச்சிக்கு நல்ல பல யோசனைகள் கூறினார்கள். அது குறித்து சம்பந்தப்பட்டவர்கள் விவாதித்து முடிவெடுத்து அதை குழுவினருக்குத் தெரிவிப்பார்கள்.
அரங்கம் நிறைந்த கூட்டம். நாஞ்சில் நாடன், லா.ச.ரா. சப்தரிஷி, வ. ஸ்ரீநிவாசன், சுபாஷிணி, சித்சபேசன், ரவீந்திரன், கிருஷ்ணகுமார் என சில இலக்கிய ஆளுமைகளையும், இலக்கியத்தின் மீது ஆர்வமுள்ள நல்ல உள்ளங்களையும் சந்தித்த மகிழ்ச்சி...
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் அவர்களின் அயராத உழைப்பாலும், அவரது குடும்பத்தினரின் ஆதரவுடனும், நேற்றைய விழா சிறப்பாக அமைந்திருந்தது.
வாருங்கள் ஊர் கூடி தேர் இழுப்போம். நண்பர்களிடமும் சிறுவாணியை அறிமுகப்படுத்துவோம்... நூலினைப் பகுத்துணர்வதற்கு ஓர் அரிய வாய்ப்பு... அடுத்த வருடம் இதைவிடப் பெரிய அளவில் விருது விழாவை நடத்த நம் அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
பிரகாஷ், அவரது குடும்பத்தினர், கிருஷ்ணகுமார், ரவீந்திரன் மற்றும் விழா சிறக்க தங்களது உழைப்பையும், நேரத்தையும், பொருளையும் செலவழித்த அனைவருக்கும் பாராட்டுகளும், வாழ்த்துக்களும்.
https://youtu.be/HGqk6v7X6Bo
No comments:
Post a Comment