Tuesday, November 6, 2018

ஏன் எழுதுகிறார்கள்?-





.மார்ச்(2018)-
ஏன் எழுதுகிறார்கள்?-
சார்வாகன் கட்டுரைகள்
PAGES-136    Rs 127 /-

 *****************************************









Balaguru Kalyanasundaram to World Books Museum
December 29, 2018 at 10:12 AM

எழுத்தாளருக்கும் வாசகனுக்குமிடையே நிகழும் முதல் சுகிப்பு அதிமுக்கியமானது. அவர் எத்தனையோ படைப்புகளை படைத்திருந்தாலும் அவரின் முதல் படைப்பு எதுவாகவே இருந்தாலும் கூட, வாசகனை வந்தடையும் முதல் படைப்பு கொடுக்கப்போகும் அனுபவம்தான் அவன் தொடரப்போகிறானா? இல்லை விலகப்போகிறானா? என்பதை முடிவு செய்கிறது. இந்த நிகழ்வே ஒரு வித விதிப்புக்குட்பட்டது என்று தோன்றுவதுண்டு. ஏனென்றால் மிகச்சிறந்த படைப்பாளிகளின் ஆகச்சிறந்த படைப்புகள் கூட தவறான காலகட்டத்தில் நம்மை வந்தடையும் போது சுகிப்பதற்கு மாறாக அசுகையாக எஞ்சிநிற்பதுண்டு . தெனாலிராமன் கதையில் வரும் சூடான பாலில் வாய்வைத்து சூடு பட்டு பின் பால் என்ற வஸ்துவை பார்த்தாலே தெறித்து ஓடும் பூனை கணக்கா அனுபவம் எனக்கு சில படைப்பாளிகளிடம் நிகழ்ந்துள்ளது.


"சார்வாகன் " என்ற பெயரை சாருதான் அவர் தளத்தில் அறிமுகப்படுத்தினார், பெரிதாக அவரைப்பற்றி தெரியாது . கடந்தவாரம் அவரின் மருத்துவ & இலக்கிய மேதமைப் பற்றிய ஒரு கட்டுரையை வாசித்தபின் அவரின் எழுத்தை வாசிக்கவேண்டும் என்று ஆவல் தொற்றிக்கொண்டது . கைவசமிருந்த ஒரு கட்டுரைத் தொகுப்பிலிருந்து துவங்கலாமென்று தொடங்கினால் . முதல் கட்டுரையே அதிர்ச்சியளித்தது . காரணம் சில மாதங்களுக்கு முன் வாசித்த சி.சு செல்லப்பாவின் எழுத்து இதழ் தொகுப்பாக வெளியிட்ட " எதற்காக எழுதுகிறேன் " என்ற புத்தகத்தின் பெயரை போன்றே இருந்த கட்டுரையின் தலைப்பு " எதற்காக எழுதுகிறார்கள்? " என்றிருந்தது . (எதற்காக எழுதுகிறேன்? என்ற கேள்வியை அப்போது தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த லா.ச.ரா , க. ந. சு போன்ற படைப்பாளிகளிடம் கொடுத்து அவர்களை ஒரு நிகழ்வில் அவர்களின் கட்டுரைகளை வாசிக்க வைத்திருக்கிறார் , அந்த கட்டுரைகளின் தொகுப்பை புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் ) .

அன்று நடந்த அந்த கட்டுரை வாசிப்பு நிகழ்வுக்கு பார்வையாளராக சார்வாகன் சென்றதை குறிப்பிட்டு கட்டுரையைத் தொடங்குகிறார் . பின் இவரது பார்வையில் ஏன் எழுதுகிறார்கள் என்று மிக ஆழமாக அலசுகிறார் .நான்கு காரணங்கள் இருக்கிறது என்று இன்னும் விளக்குகிறார் . அன்று கட்டுரை வாசித்தவர்களில் ஒரு சிலரைத்தவிர அனைவரும் அவைக்காக வாசித்தார்கள் என்று உடைக்கிறார் .அந்த அரிதாரங்களில்லாமல் இவர் வேறொரு கோணத்தில் நோக்குகிறார் .இவர் எழுத்தாளர் எழுத்து என்ற அளவில் சொல்லும் பல விஷயங்கள் படைப்பாளி படைப்பு என்ற தளத்தில் எந்த துறைக்கும் பொருந்தும் விதமாக விரிகிறது . பூடகங்கள் அற்று நகைச்சுவை இழையோட நம்முள் சரிகிறது அந்த எழுத்து .மொத்தமாக இவர் எழுத்தின் வன்மையை அந்த ஒரு கட்டுரையே பறைசாற்றுகிறது .நாம் செய்துக்கொண்டிருப்பது என்ன என்று நம் முன்னே ஒரு கண்ணாடியை எடுத்து வைத்துவிட்டுச் செல்கிறது அந்த கட்டுரை.

எழுத்தாளருக்கும் வாசகனுக்குமிடையே நிகழும் முதல் சுகிப்பு அதிமுக்கியமானது.

#ஏன்_எழுதுகிறார்கள்
#சார்வாகன்

#வாசித்தவை_நேசித்தவை
----------------------------------------------------------------------------------------------------------------------------
Jeeva Nanthan

சார்வாகனை வரைந்து மாதங்கள் பல ஓடிவிட்டன.
வரையும்போது உங்க தந்தை நினைவு வந்ததா
என்று தொலைபேசியில் வினவினார் நண்பர்.
ஆம் என்றேன்.
ஏன் என்றார்.
கொஞ்சம் அப்பா ஜாடை இவர் என்றேன்.
நூலை படிக்க எடுத்தேன். உள்ளே போகமுடியவில்லை.
அட்டை ஓவியம் தடுத்தது .
உங்களிடம் உங்கள் தந்தையை பற்றி பேச ஆவல் மிகுந்தது.
அழைத்தேன் என்றார்.
ஒரு ஓவியம் ,ஓவியன் வரையும்போது அவனுக்கு ஏற்பட்ட சிந்தனையை கடத்தி பார்வையாளனுக்கு உணர்த்தும் அற்புதம் அறிந்தேன் என்றார்.
கண்ணீருடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------

No comments:

என் பதவிக்கால நினைவுகள் - பாரதரத்னா. டாக்டர் சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா- செப்டம்பர் 2024

கோவை புத்தகத் திருவிழா வெளியீடு நாள் 20.07.2024 மாலை 3.00 மணி... சிறுவாணி வாசகர் மையத்தின் செப்டம்பர் மாதப் புத்தகம் என் பதவிக்கால நினைவுகள்...