Naanjil Naadan Award - Artist Jeeva
POLIMER TV
(ஒரு மகிழ்வான செய்தி: 26.01.18 இன்று மதியம் 2.00 மணி முதல் ,பாலிமர் தொலைக்காட்சியில் சிறுவாணி வாசகர் மையம் சார்பில் நடைபெற்ற
"நாஞ்சில் நாடன் விருது"விழா ஒளிபரப்பாக உள்ளது)
04.02.18 மாலை 4.00 மணிக்கு சிறுவாணி வாசகர்
மையம் வழங்கிய
நாஞ்சில்நாடன் விருது --விழா பாலிமர் டிவியில் மறு ஒளிபரப்பு.
கோவையில் செயல்பட்டு வரும் சிறுவாணி வாசக மையம் இலக்கியச் சந்திப்புகளை ஒருங்கிணைக்கிறது. இவ்வாண்டு
முதல் நூல்களையும் வெளியிடுகிறார்கள். நாஞ்சில்நாடன் விருது ஒன்றை நிறுவி இவ்வாண்டு நண்பர் ஓவியர் ஜீவா அவர்களுக்கு வழங்கியிருக்கிறார்கள்.
JEYAMOHAN.IN
********************************************************************
Iyyappa Madhavan
January 23
சர்வ சாதா காலமும் ஓவியராய் இருக்க முடியுமா. எந்தக் கணமும் தூரிகை விரல்களில் ஒளிந்திருக்குமா கண்கள் எப்போதும் காண்பதையெல்லாம் ஓவியங்களாய்ப் பார்க்குமா. இப்படியான மனநிலைதான் கலைஞனின் மனமில்லையா.
அவர் அப்பா ஓர் ஓவியர். அவர் பையனும் ஓவியர். ஆனால் அப்பாவிடமிருந்து அவர் சொல்வதைப் போல விலகியேதான் இருந்திருக்கிறார்.
உங்களைப் போலவே அப்பா பேச்சு கேட்காதவன் தான் நானும் என்று சொன்னார். அப்பாவின் ஓவியங்களிலிருந்து அவரது ஓவியத் திறன் தோன்றவில்லை.
அவர் சுயம்பு. எதுவும் தெரியாமல் எதையும் வரையும் அழகிய ஓவியன். அவர் வரையாத நடிகர்களுமில்லை. அவர் வரையாத எழுத்தாளர்களுமில்லை. அவர் என்னை வரைந்த போது நான் அழகன் தான் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
எதுவும் கற்றுக்கொள்ளாதவரே கற்றுக்கொடுக்க முடியும் தன் அனுபவங்களிலிருந்து என்பதற்கு உதாரணம் இவர். இவரால் ஓவியர்கள் உயிர் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
எதையும் ஒளிவு மறைவின்றி பேசுவார். ஆகையால் இவரிடம் எல்லோருக்கும் பயம் உண்டு. நேர்மையாயிருப்பது எத்தனை பேருக்கு முடியும். இவரால் முடிந்திருப்பது அவர் மனிதத்தைத் தக்க வைத்திருக்கிறது.
தொழில் முறையில் படங்கள் வரைந்துகொடுத்துவிட்டு பணத்திற்காய்க் காத்திருப்பார். அது சில நேரம் வருமென்கிறார். சில நேரம் வரவே வராது என்பார். கலைஞனின் வாழ்வு இப்படித்தான் எப்பவும்.
நல்ல படைப்புகளையும் ஊக்க படுத்துவார். அதேவேளை மோசமான படைப்பை விமர்சிப்பார். அவரால் நல்ல படைப்பை இனங்காண முடிகிறது. நல்ல கலைஞனால் நல்ல படைப்பை விட்டு தர முடியாதில்லையா.
தேசிய விருது வாங்கியவர். நல்ல எழுத்தாளரும்கூட. அவருக்கு பேனாவும் தூரிகையும் ஒன்றுதான்.
ரவீந்திரன் சார்Raveendran Ramasamyஅவருக்கு விருதுகொடுப்பதாகச் சொன்னபோது மிகவும் மகிழ்வுற்றேன். நல்ல தேர்வு என்று வாழ்த்தினேன்.
அதேபோல் விழாவிற்கு போனேன். நிழற்படங்கள் எடுத்தேன். அவரின் உண்மையான நண்பர்கள் அவரை இதயத்திலிருந்து வாழ்த்தினார்கள். நான் புகைப்படங்களின் வழியே அவரின் தூய இதயத்தைப் படமெடுத்துக்கொண்டிருந்தேன்.
நண்பர்கள் நினைவுப்பரிசு வழங்கினார்கள். ரவீந்திரன் சார் ஒரு ஒளிப்படக் கருவியை வழங்கினார். அதிகாலை உக்கடத்தைப் படமெடுக்கும் ஓவியர் இனி அற்புத நிழற்படங்களை வழங்குவார்.
நான் எதுவும் வழங்கவில்லை. வழங்காத மனதில் அவரின் அன்பைச் சுமந்திருப்பதே எனக்குப் போதுமானதாய்ப் பட்டது.
சிறுவாணி இலக்கிய மையம் - நாஞ்சில்நாடன் அவர்களால் தொடங்கப்பட்டு வருடம் தோறும் விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முதல் வருடத்தில் ஓவியர் Jeeva Nanthan இந்த விருதைப் பெற்றிருக்கிறார்.
அவருக்கு நம் வாழ்த்துகளையும் அன்பையும் தெரிவிப்போம்.
******************************************************************************************************************
Raveendran Ramasamy
January 12 ·
தேடிச் சோறு நிதம் தின்னும் வாழ்க்கைதான் , இருந்தும் எத்தனை பேர் இதை அர்த்தமுடன் வாழ்கிறார்கள் ?
எத்தனை பேர் வாழ்க்கை என்னும் முடிவில்லாத ஓட்டத்தில் ,தமக்குப் பிடித்த ஒன்றை மட்டும் செய்து கொண்டு அறம் பிறழாமல் வாழ்கிறார்கள் ?
பெரிய ஆளுமைகளின் நிழலில் இடம் தேடாமல் தூர இருந்து ஒரு கும்பிடு போட்டு விட்டு வந்த வழியே செல்பவர் எத்தனை பேர் ?
சோர்வை ஒரு புன்னகையில் மறைத்துக்கொண்டு தொடர்ந்து நடப்பவர்கள் எத்தனை பேர் ?
லட்சியவாதிகள் லட்சங்களில் இல்லை ..
ஓரு சிலர்தான் !
அவர்களில் ஒருவரை வாழ்த்த வாருங்கள் !
******************************************************************************************************************
Raveendran Ramasamy
January 17
“ஜீவாவைப் போலவும்”
கோவையில் கலை இலக்கிய, சமூகப்பணிகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு அளிக்கப்படும் “நாஞ்சில்நாடன் “ விருதை முதன்முலில் பெறும் ஓவியர்ஜீவா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!
விரும்புவதெல்லாம்
இந்த மரத்தைப் போலவும்
இந்தப் பறவையைப் போலவும்
இந்த மிதிவண்டியைப் போலவும்
இவ்வுலகில் வாழத்
தகுதி பெற்றிருத்தல்
ஒன்றே
- தேவதேவன்
*************************************************************************************************************
Siddharthan Sundaram
January 25 ·
//'Cine Arts' Jeevananthan was honored with `Nanjil Naadan award' during readers and writers meet organized by "Siruvani Vasagar Maiyyam" in Coimbatore. "Trinity Mirror" special story on lawyer turned artist, who like world-famous Spanish painters cum writers Pablo Picasso and Salvador Dali, showed his prowess in penning a book.//
A fitting award to the artist, who deserves!!
****************************************************************************
Saraswathi Gayathri is with Subashini Tirumalai.
January 25
சிறுவாணி வாசகர் வட்டத்தின் விருதுபெற்ற Jeeva Nanthan சாருக்கு வாழ்த்துகள்.
தூரிகை பிடிக்கிற விரல்கள் இன்னும் பல விரல்களை பற்றட்டும்.
தங்களின் " திரைச்சீலை" புத்தகம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கவேண்டிய ஒன்று .,என்று Saptharishi Lasara அவர்கள் சொன்னார்.( நான் வாங்கிப்படிக்கவேண்டும்) கூடவே எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கிற ஜீவா சாரை புகழ்ந்துகொண்டிருந்தார்.
பேரன்பும்,வாழ்த்துகளும்.
நான் கோவையில் இருந்தால் ஜீவா சாரின் ஞாயிற்றுக்கிழமை ஓவியப்பயிற்சி வகுப்பில் சேர்ந்திருப்பேன்.
*******************************************************************************************************************
Suresh Kumar S
January 22
உண்மையான படைப்பாளிகள் யார் ?
தாம் கற்ற, செய்யும் தொழிலுக்கு உண்மையாகவும், தம் பணியால் தன்னைத் தாங்கும் இந்தச் சமூகத்துக்கும் அதன் அடுத்த தலைமுறைச் சந்ததிக்கும் உண்மையாகவும் இருப்பவர்களே.
அவர்கள் திரு.கே.எம் விஜயன் போல வழக்கறிஞர்களாக இருக்கலாம்; திரு.நாஞ்சில் நாடன் போல் எழுத்தாளர்களாக இருக்கலாம்; திரு.Jeeva Nanthan போல் ஓவியர்களாக இருக்கலாம்.
மூவரையும் ஒரே மேடையில் பார்ப்பதற்கு, கேட்பதற்கு, ரசிப்பதற்கு நேற்று வாய்ப்பளித்த Siruvani Vasagarmaiyam அமைப்புக்கு என் மனதார நன்றி. அத்துடன், திருமதி Subashini Tirumalai திரு. Saptharishi Lasara போன்ற பெரியவர்களின் அறிமுகமும் நட்பும் கிடைத்ததும் என் பேறேயாகும்.
***********************************************************************************************************************
No comments:
Post a Comment