Monday, October 29, 2018

"பூங்கொத்து" அசோகமித்திரன்- ஜூலை-2017 -(3)









ஜூலை-2017  -
"பூங்கொத்து"  
அசோகமித்திரன்
(-அவர் மறைவுக்கு சில நாட்கள் முன்பாக மையத்தின் நோக்கம் கருதி மனமுவந்து அளித்த இதுவரை நூல் வடிவில் வெளிவராத கட்டுரைகள் )

பக்கங்கள்  176  விலை 140 /-

ISBN 978-81-940780-2-9

****************************************************************************************************
சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 4.
பூங்கொத்து

இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் -
அவரே தேர்ந்தெடுத்து, தலைப்பும் தந்து,
பவித்ராவுக்கு வழங்கி, சிறுவாணி வாசகர் மையம் நமக்கு அளித்த கட்டுரைத் தொகுப்பு.
அறிமுக உரையில் ஞாநி "முதல் வாசிப்பில் அசோகமித்திரனின் படைப்புகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. மறுமுறை வாசிக்கும்போதுதான் அவற்றின் சிறப்புகள் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கின்றன
என எழுதியிருக்கிறார். ஏன் அப்படி என்று யோசித்தபோது, ஒரு பதிவில் கி.ரா. இப்படிக் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது :-

"எழுத்தாளர்களும் ஒரு வகையில் துர்வாசர்கள்தாம். சபலம், கர்வம், அகம்பாவம், அக்கரமம் எல்லாமே இவர்களிடம் உண்டு. இதே
சமயம் பசுப்போல குணவான்களும் இருக்கிறார்கள்."

அசோகமித்திரன் பசுப்போல குணவான். கோபத்தைக் காட்டமாட்டார், லேசா முகத்தைச் சுளிப்பார். ஓங்கி மண்டையில் குட்டமாட்டார், சின்னதா, செல்லமா இடுப்பில் நிமிண்டுவார். குலுங்கக் குலுங்க நம்மைச்
சிரிக்கவைகக மாட்டார், உதட்டோரம் ஒருசிறுநகை அரும்பச் செய்வார்.
அந்தப் பாணியில் அவர் எழுதிய கட்டுரைகள்.
"தேவ் ஆனந்த்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குகொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது,முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லைஆனால் அவர் எழுதிய புத்தகத்தில் ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறை கூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை."
என எழுதும் அசோகமித்திரனின் இயல்பும்அதுதான் என்பதை இந்தக் கட்டுரைகள்நிரூபிக்கின்றன.

புத்தகங்கள், எழுத்தாளர்கள், திரைப்படங்கள்,
அந்தக்காலச் சென்னை, சிங்கம் ஜெயகாந்தன் எனத் தாம் பார்த்த, கேட்ட, படித்த, சிந்தித்தவற்றையெல்லாம் சரளமாகக் கூறிக்கொண்டே போகிறார்.
நன்று,

திரு.கி.ரா.திருமலையப்பன்)

****************************************************************************************************
Suresh Venkatadri

July 24, 2017

"பிற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி அவர் மெல்லிய குரலில்தான், சொல்வார்.தான் விமர்சகன் அல்ல என்று அவர் திரும்பத் திரும்ப கூறினாலும், அவருடைய அபிப்ராயங்களுக்கு மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு.
நகுலன் ஒரு கவிதை கூட எழுதினார்:

கநாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக வராது.
கவிதையோ படு அபத்தம்.
அது சரி. அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?

க.நா சு, பற்றி அசோகமித்திரன்.கோவை சிறுவாணி வாசகர் மையம், வெளியிட்டிருக்கும், "பூங்கொத்து " நூலிலிருந்து. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. முந்தாநாள் புத்தகம் கையில் கிடைத்தது. சரி சும்மா ஓரிரண்டு கட்டுரைகளை வாசிக்கலாம் என்று தொடங்கினேன். ஆனால், நூலிள்ள , 39 கட்டுரைகளையும், வாசிக்காமல், வைக்க முடியவில்லை. அவ்வளவு, சுவாரசியம், எளிமை, கூறிய நகைச்சுவை, உள்பொதிந்த சோகம் என்று,ஒரு அற்புதமான கலவை. 

சிறுவாணி வாசகர் மையத்துக்கும், பவித்ரா பதிப்பகத்துக்கும் வாழ்த்துக்கள்.

****************************************************************************************************
Akila Alexander
அன்றொருநாள் அசோகமித்திரன் ...
ஹிந்து லிட் ஃபெஸ்டிவலில் பார்க்க நினைத்து இயலாமல் போயிற்று. புத்தகக் கண்காட்சியில் திரையிடப்படுவதை அறிந்திருந்தும் அலுவலக நேரம் என்பதால் தவரவிட்டு விடுவேனோ என்று அஞ்சினேன். தென்னக ரயில்வே புண்ணியத்தில் ஆவணப்படத்தைப் பணியிடையே வந்து பார்த்து திரும்பினேன்.
நண்பர்களை அக்கறையுடன் கவனித்துக்கொண்டிருந்த பிரசன்னாம்மாவையும், கலைராணி அவர்களையும் சந்தித்து பேசிக்கொண்டிருக்கையில் அறிந்த அறியாத VIP க்கள் வர அரங்கம் நிறைந்து திரையிடல் ஆரம்பமானது.
திரை உயிர் பெற அசோகமித்திரனுக்கு பாராட்டு மற்றும் எழுத்தாளர்கள் சந்திப்பில் ஆரம்பித்து, அவருடன் அவருடை வேளச்சேரி வீட்டிலில் உரையாடல், சில குடும்ப புகைப்படங்கள், திருவல்லிக்கேணி, ஹைத்ராபாத், அங்கு அவர் படித்த கல்லூரி என பயணித்திருக்கிறார்கள்.
ஆவணப்படத்தில் பலர் அசோகமித்திரனுடன் உரையாடி இருக்கிறார்கள். உலக யுத்த, இந்திய சுதந்திரப்போர் அதன்பின் நடந்த மதக்கலவரங்களைப் பார்தவர். ஹத்ராபாத் வளர்பினால் மதங்களுக்கப்பார்பட்டவராக அவரும் அவருடைய எழுத்தும் இருக்கிறது தன் எழுதுவதில் தனக்கு உள்நோக்கம் இல்லை என்றாலும் ambition இருந்தது என்கிறார். தன் தமிழ் மற்றும் ஆங்கில எழுத்து வழி அவர் கொண்டிருக்கும் வாசகர் பரப்பு அதிகம். அரவிந்த் அடிகா அசேகமித்திரனின் எழுத்து பற்றி கூறக்கேட்டது இனிய அனுபவம்.
ஆவணப்படம் எடுக்கையில் instruction தருவது, கமிரா நகர்வது, லைட்டிங் சரிசெய்வது மற்றும் பிரசன்னாம்மா பேசுவது போன்ற காட்சிகளும் அதன் இயல்பில்வர, நம் கண்முன் shooting நடப்பது போன்றதொரு வித்யாசமா அனுபவத்தைத் தந்திருக்கிறார் Prasanna Ramaswamy .
அசோகமித்திரன் சட்டென்று திரும்பி தன் மெல்லிய குரலில் "என்னப்பா" எனக் கேட்பது போன்று இருந்தது. திரையிலும், திரைக்குப் பின்னும் இந்த ஆவணப் படத்திற்கு தம் பங்காற்றிய அனைவருக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.
உங்கள் கட்டுரைத்தொகுப்பான "பூங்கொத்து" வாசித்துக்கொண்டிருக்கிறேன் அசோகமித்திரன்.

*************************************************************************************************************************************
 #சிறுவாணி_வாசகர்_மையம்-
#பவித்ரா_பதிப்பகம்
"மாதம் ஒரு நூல்"திட்டத்தில்
(ஜூலை-2017)
 வெளியீடு 
-------------

வருடம்-1       நூல் 3.பூங்கொத்து
- - - - - - - - -
இலக்கிய ஜாம்பவான் அசோகமித்திரன் -
அவரே தேர்ந்தெடுத்து, தலைப்பும் தந்து,
பவித்ராவுக்கு வழங்கி, சிறுவாணி வாசகர் மையம் நமக்கு அளித்த கட்டுரைத் தொகுப்பு.
அறிமுக உரையில் ஞாநி "முதல் வாசிப்பில் அசோகமித்திரனின் படைப்புகள் சாதாரணமாகத் தோன்றுகின்றன. மறுமுறை வாசிக்கும்போதுதான் அவற்றின் சிறப்புகள் மெல்ல மெல்லப் புலப்பட ஆரம்பிக்கின்றன
என எழுதியிருக்கிறார். ஏன் அப்படி என்று யோசித்தபோது, ஒரு பதிவில் கி.ரா. இப்படிக் குறிப்பிட்டது ஞாபகத்திற்கு வந்தது :-

"எழுத்தாளர்களும் ஒரு வகையில் துர்வாசர்கள்தாம். சபலம், கர்வம், அகம்பாவம், அக்கரமம் எல்லாமே இவர்களிடம் உண்டு. இதே
சமயம் பசுப்போல குணவான்களும் இருக்கிறார்கள்."

அசோகமித்திரன் பசுப்போல குணவான். கோபத்தைக் காட்டமாட்டார், லேசா முகத்தைச் சுளிப்பார். ஓங்கி மண்டையில் குட்டமாட்டார், சின்னதா, செல்லமா இடுப்பில் நிமிண்டுவார். குலுங்கக் குலுங்க நம்மைச்
சிரிக்கவைகக மாட்டார், உதட்டோரம் ஒருசிறுநகை அரும்பச் செய்வார்.
அந்தப் பாணியில் அவர் எழுதிய கட்டுரைகள்.
"தேவ் ஆனந்த்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்குகொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது,முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லைஆனால் அவர் எழுதிய புத்தகத்தில் ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறை கூறல் இல்லை. அவருடைய இயல்பில் அவற்றுக்கு இடமில்லை."
என எழுதும் அசோகமித்திரனின் இயல்பும்அதுதான் என்பதை இந்தக் கட்டுரைகள்நிரூபிக்கின்றன.
புத்தகங்கள், எழுத்தாளர்கள், திரைப்படங்கள்,
அந்தக்காலச் சென்னை, சிங்கம் ஜெயகாந்தன் எனத் தாம் பார்த்த, கேட்ட, படித்த, சிந்தித்தவற்றையெல்லாம் சரளமாகக் கூறிக்கொண்டே போகிறார்.
நன்று, 

(திரு.கி.ரா.திருமலையப்பன்)
-------------
"பிற எழுத்தாளர்களின் படைப்புகளை பற்றி அவர் மெல்லிய குரலில்தான், சொல்வார்.தான் விமர்சகன் அல்ல என்று அவர் திரும்பத்  திரும்ப கூறினாலும், அவருடைய அபிப்ராயங்களுக்கு  மிகுந்த மதிப்பு இருந்தது. அதனாலேயே அவருக்கு நிறைய எதிரிகளும் உண்டு. 
நகுலன் ஒரு கவிதை கூட எழுதினார்:
கநாசுவா? தமிழே தெரியாதே!
அவர் சிறுகதை எழுதித் தோற்றவர்.
நாவல் சுத்தமாக வராது.
கவிதையோ படு அபத்தம்.
"அது சரி. அவர் என் நாவல் பற்றி என்ன சொன்னார்?"

   க.நா சு, பற்றி அசோகமித்திரன்.கோவை சிறுவாணி வாசகர் மையம், வெளியிட்டிருக்கும், "பூங்கொத்து " நூலிலிருந்து. அவரே தேர்ந்தெடுத்துக் கொடுத்த கட்டுரைகளின் தொகுப்பு. நூலிள்ள , 39 கட்டுரைகளையும், வாசிக்காமல், வைக்க முடியவில்லை. அவ்வளவு, சுவாரசியம், எளிமை, கூறிய நகைச்சுவை, உள்பொதிந்த சோகம் என்று,ஒரு அற்புதமான கலவை.
 (திரு.சுரேஷ் வெங்கடாத்ரி)
-----------------
"இலக்கியம் என்றதும் அது சராசரி மனிதர்களைப் போல இல்லாத அசாதாரணக் காவிய நாயகர்களைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற கருத்து ஏதோ ஒரு பழங்காலத்தில் இருந்திருக்கலாம். உண்மையில் இலக்கியம் என்பது தங்களுடைய சாதாரண வாழ்க்கையில் சாதாரண நிகழ்ச்சிகளின் சில தருணங்களில் எப்படி சராசரி மனிதர்கள் தங்களை அறியாமலேயே கூட காவிய நாயகர்களுக்குச் சமமானவர்களாக உயர்ந்து நிற்கிறார்கள் என்பதை நமக்கு உணர்த்துவது தான். அப்படி உணர்த்தும் எழுத்தாளர் அசோகமித்திரன்.
-பரிக்க்ஷா ஞாநி
------------------
பக்கங்கள் 176
விலை ரூ140/-

#Siruvani_vasagar_maiyam
#pavithra_pathippagam

Gpay 
8778924880






"இதய நாதம்"


ஜூன்-2017

இதயநாதம் 
ந. சிதம்பர சுப்ரமணியன்

நாவல் (sandiya publications)

பக்கங்கள் 224   விலை 140 /-

*******************************************************************


சிறுவாணி வாசகர் மைய வெளியீடு 3. இதயநாதம்
- - - - - - - - -
1952ல் ந.சிதம்பர சுப்ரமண்யன் அவர்கள்
எழுதிய நாவல். சங்கீதத்தில் ஆர்வமுடைய கிட்டு என்ற சிறுவன், சபேசய்யர் என்ற குருவிடம் பயிலும் வாய்ப்புப் பெற்று, சிறந்தபாடகர் கிருஷ்ண பாகவதராக உயர்ந்தகதை.

பணம் சம்பாதிக்க அவர் ஆசைப்படவில்லை. ( சினிமாவாக இருந்தால் ஓவர்நைட்டில் கோடீஸ்வரராக மாறியதாகக்
காட்டியிருப்பார்கள். ) திடீரென அவருக்குத்தொண்டை பழுதாகி, பாட முடியாதபடி குரல் அடைத்து விடுகிறது. கலங்கும் அவருக்குப் பெரியவர் கந்தசாமி பாகவதர் எப்படி ஆன்மீக மார்க்கத்தை போதித்து ஆறுதல் அடையச் செய்தார் என்பதுதான் கதை.

"வித்தைக்கு விநயம் வேண்டும். வித்தை விநயத்தை உண்டு பண்ணா விட்டால் அதுநஷ்டம்தான்"

"வித்வத்தாவது சாதகத்தால் அடையக்கூடிய வஸ்து. ஆனால், சாரீர சம்பத்திற்கு
முந்தின ஜன்மத்தின் பூஜா பலன் வேண்டும்"

"சங்கீதமே அனுக்ரக வித்தை. அதை அடைவதற்கும் பூர்வ ஜன்ம சுகிர்தம் வேண்டும்"

இவ்வாறான அற்புதக் கருத்துக்கள் சிறந்த கதாபாத்திரங்களின் வாயிலாகக் கூறப்படுவது வாசகர்களின் அறிவுக்கு விருந்தாகஅமைந்திருக்கிறது.

நாதத்தின் எல்லையை
கடந்துவிட்டால், அதற்கு அடுத்த படியில்
இருப்பது மௌனம். அதுவே இதயநாதம்.
ஞான ஊற்றைத் தோண்டும் கருத்து.


(நன்றி. திரு கி.ரா.திருமலையப்பன்)
********************************************************************************************************
Suresh Venkatadri
August 11, 2017 ·

மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான, ந.சிதம்பர சுப்ரமணியத்தின் 'இதயநாதம் நாவல் , சென்ற மாதம்,கோவை சிறுவாணி வாசகர் மையம் அமைப்பினரால் மறு வெளிஈடு செய்யப்பட்டுள்ளது..மிக நீண்ட காலத்துக்கு முன் படித்தது, கிட்டத்தட்ட முழுமையாக நினைவிலிருந்து அழிந்துவிட்டது என்றே கூற வேண்டும்.இப்போது மீண்டும் படித்தேன்.

மிக எளிமையான கூறுமுறை, அலங்காரங்கள் ஏதுமற்ற நேரடியான நடையில், சம்பவங்களை விவரிக்கும் பாணியில் எழுதப்பட்டுள்ளது. மோகமுள் வருவதற்கு முன்னால்.'இதயநாதம் நாவலே,,தஞ்சையின், இசைப் பாரம்பரியத்தை பற்றிய சிறந்த நாவல் என்று வழங்கி வந்திருக்கிறது என்று படித்திருக்கிறேன்.ஆனால், இது அடிப்படையில்,இசையின்,பின்னணியில், லட்சியவாதத்துக்கும், லௌகீகத்துக்கும், இடையிலான முரணைப் பற்றியது என்று சொல்ல வேண்டும்.கூடவே ஆச்சாரமான, பின்னணியைக் கொண்ட ஒருவர்,ஒரு ஆச்சாரமான கலையை, 'தாசி',குலத்தில் பிறந்த ஒருவரை தன் சிஷ்யையாக ஏற்றுக் கொண்டு கற்றுக்கொடுக்கும்,விஷயம், அன்று, ஒரு புரட்சிகரமான அம்சமாகவும் இருந்திருக்க வேண்டும்.,இவை நாவல், வெளிவந்த காலத்தில், (1952ல்),மிகப் புதுமையாக,இருந்திருக்க வேண்டும்.

இப்போது படிக்கையில்,இதைப்போன்ற, பல்வறு கதைகள் திரைப்படங்கள் ஆகியவற்றைப் பார்த்திருப்பதால், ஒரு Template கதையாக தோன்றுகிறது. முழுக்கவுமே, அப்படி ஆகிவிடாமல், காப்பாற்றுவது, கதையின் க்ளைமாக்ஸ்தான்.முற்றிலும் எதிர்பாராதபடி,கதையின் நாயகன் கிருஷ்ண பாகவதருக்கு, நேரும்,விபத்தும்,அதை ஏற்றுக்கொண்டு, கடந்து செல்லும்,, வழியை கந்தசாமி பாகவதர் அவருக்கு காட்டும், இடமும்தான் இந்த நாவலை மிகச் சராசரியான ஒன்றிலிருந்து, குறிப்பிடத்தகுந்ததாக மாற்றுகிறது.

எஸ்.ஜி.கிட்டப்பா,மற்றும்,கே.பி.சுந்தரராம்பாளின், கதை என்றும் இதைப்பற்றி படித்திருக்கிறேன்.இசையனுபவத்தை சொற்களாக மாற்றுவதில்,வெற்றி அடைந்திருப்பதாகச் சொல்லமுடியவில்லை. முன்னுரையில் ஆசிரியர், நாவலின்,, பாத்திரங்களும், சம்பவங்களும், சில நிஜ மனிதர்களின் வாழ்விலிருந்தும்,, சம்பவங்களிலிருந்தும், உருவாக்கப்பட்டது என்றே குறிப்பிடுகிறார்.சிதம்பர சுப்ரமணியத்தின், மண்ணில் தெரியுது வானம் நாவலையும் படித்துப் பார்க்க வேண்டும்.
****************************************************************************************************************************

Rajaram Retd A I Radio: 

இதயநாதம் நாவலை எனக்கு '75-இல் தி.ஜா அறிமுகப்படுத்தினார். மோகமுள் வாசித்துவிட்டு அதில் காணும் இசை நுணுக்கங்களை.சிலாகித்து நான் அவரிடம் பேசியபோது.'நான் எழுதினது ஒண்ணுமே இல்லை.இதைப் படிச்சுப் பாருங்க ,' என்று இதயநாதம் கொடுத்தார். தம்மிற் பெரியவராய் ஒருத்தரைக் கண்டு தி.ஜா வியந்த பண்பு கண்டு நான் அசந்தேன்

*******************************************************************************************************************************



Thursday, October 25, 2018

"விளிம்பில்".-லா.ச. ரா-- மே-2017(2)



மே-2017
விளிம்பில் 
லா.ச. ராமாமிர்தம்

சுயசரித நவீனம்

பக்கங்கள் 128   விலை 100 /-
ISBN 978-81-940780-1-2
***************************************************************************************************************************

Suresh Venkatadri
May 27, 2017

"காரியங்களை அரைகுறையாக விட்டுவிட்டுப் போகிறேன் என்று கவலைப்பட்டு பிரயோசனமில்லை.காரியங்கள் எப்போதும் அரை குறையாகத்தானிற்கும்.விட்ட இடத்திலிருந்து பின்னவர் தொட்டுத் தொடரத்தான் காரியங்கள்.காரியம் என்று ஒன்று தனியா? வாழ்வதைவிடக் காரியம் எது? ஏது?"
--லா.சா. ரா. "விளிம்பில்".

கோவை சிறுவாணி வாசகர் மையம் வெளியிட்டுள்ள லா.சா.ராவின் விளிம்பில் நூல் கிடைக்கப்பெற்றேன். திறந்தவுடனேயே ஒரு முத்து.
*********************************************************************************************************************************
விளிம்பில்
- - - - - - -
நமது சிறுவாணி வாசகர் மையத்தின் இரண்டாவது வெளியீடு.
லா.ச.ராமாமிருதம் என்ற தபஸ்வி, தமது நிஷ்டை கலையும் வேளைகளில் உணர்வு
களை எழுத்தில் கோர்க்கும் நவரத்தின மாலைகளில் ஒன்று.
லா.ச.ரா. அவர்களைப் பல ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி பஞ்சவடி இல்லத்தில் 

தரிசித்திருக்கிறேன். ( அன்றைக்கு இதை எழுதியிருந்தால் 'சந்தித்திருக்கிறேன்' என்று
குறிப்பிட்டிருப்பேன் ! )
அந்த நேரம் நான் 'ஜனனி' மட்டும் வாசித்திருந்தேன். அப்போது எனக்கிருந்த ரசனை
யின் ரேஞ்சுக்கு ( சப்தரிஷி சொல்வது போல ) ஆகாசத்தை ஆலிங்கனம் செய்ய
முடியவில்லை.
அதன்பின் என் அருமைச் சித்தப்பா தீப. நடராஜன் அவர்களின் வழிகாட்டலாலும் தூண்
டுதலாலும் எனது வாசிப்பு, ரசனையின் அகலமும் ஆழமும் அதிகரித்து, எனக்கும் 

வயதேறி, "மிக ஓர் காலம் இனி இல்லை" என்ற விளிம்பில் இருக்கும் இன்றைய நிலையில்,லா.ச.ரா.வைத் தொட்டுச் சற்று உணரமுடிகிறது.
"ரமண மகரிஷியையோ, பகவான் ராம கிருஷ்ணரையோ, சங்கீத மும்மூர்த்திகளை
யோ, இவர்கள் வகுத்த பாதையை ஆய நாம் இன்னும் தகுதி பெறவில்லை"
என்றும்,
"எல்லாப் பாதைகளுமை ரோமுக்கு நடத்திச் செல்கின்றன என்று மொழி. பாதைகள்
ரோமாபுரியைக் காட்டலாம். ஆனால் யாருமே ரோமாபுரியைச் சேரவில்லை.
( இந்தப் பத்தியை முழுவதும் வாசியுங்கள்)
என்றும், தத்துவமாகட்டும்,
"வயது ஏறஏற எங்களிடையே பேச்சின்  அடிக்கடி குறைந்து விட்டது"  எனவும்,
"எங்களையும் அறியாமல் எங்களிடையே  நேரும் அபூர்வமான சமய இளக்கங்களில்
பலகணிகள் அபூர்வமாய்த் திறப்பதுண்டு"  எனவும்,
உ றவியல் ஆகட்டும்,  எண்ணத்தைச் செதுக்கி ஏட்டில் வடிக்கும்
வல்லமையில் சிறந்தவரின் இந்த நன்னூலைத் தந்தமைக்கு நன்றி.


நன்றி திரு.கி.ரா.திருமலையப்பன்

-----------------------------------------------------------------------------------------------------------------------------
சிறுவாணி வாசகர் மையத்தின் "மாதம் ஒரு நூல்" திட்டத்தில்....

(மே-2017)

புத்தகம் 2. 
"விளிம்பில்"– லா. ச. ராமாமிருதம்

 
 ’விளிம்பில்’   லா.ச.ரா சொல்ல,  அவர் மகன் லா.ச.ரா.சப்தரிஷி, தான் எழுதியதாகக் குறிப்பிடுகிறார். புத்தகத்தின் சில பகுதிகளையும் மீண்டும் சுருக்கமாகச்  சொல்கிறார் ‘தந்தை போற்றுதும்’ என்ற கடைசி கட்டுரையில்! (“இந்த பதினாறு வருடங்களில், ஐந்து முறை படித்திருப்பேன். இருந்தாலும், என்னுரைக்காக மறு, மறு, மறு, மறு, மறு, மறு வாசிப்பு.  புதிதாகப் புரிந்தது. புரிந்து கொண்டேயிருக்கிறது.” - லா. ச .ரா. சப்தரிஷி.)

தனது எண்பதாவது வயது வரை, தன் அனுபவங்கள், சிந்தனைகள், மனைவியின் எண்ண ஓட்டங்கள்,மனதில் பதிந்து போன சில  நிகழ்வுகள், தத்துவார்த்த விவாதங்கள், "அவள்"அருளும் அவர் சிலிர்ப்பும்  எனத் தன் சுயவரலாற்றுச் சுருக்கத்தினை, சொற்ச்சித்திரமாக வரைந்துள்ளார் லா. ச .ரா.  

விளிம்பில்  நிற்கும் வயாதானவர்களின்  நியாயங்களை, எல்லா வயதினரும்  புரிந்துகொள்ளும்படி எழுதியிருப்பது சிறப்பு.

லாசரா தன் வீடு பற்றியும், தன் டாக்டர் பற்றியும் கூறுகிறார் –

‘புது வீடு கட்டும் முயற்சி -மூன்று வருடங்களாக.  பஞ்சாயத்து ஆபீசில்  மேஜைக்கு மேஜை  லஞ்சம்  கொடுத்தும்  காரியம் சித்தியாகவில்லை. கோப்புகள் நகர்வதுடன் சரி’. 

வீட்டை விற்று விட நினைக்கிறார் லா ச ரா - அப்போது, ‘உங்களுக்கென்ன,  உங்கள் மேல் ஒரு சொட்டு  மழைவிழாமல் பார்த்துக் கொள்வது எங்கள் பொறுப்பு’. – என்கிறார்கள் மகன்கள். வீட்டை விற்றால் திரும்ப இடம் கிடைக்காது என்பது அவர்கள் வாதம்.

குடும்ப டாக்டர், “எல்லாம் சாப்பிட வேண்டியதுதான்,  பட வேண்டியதுதான்.  இல்லாட்டி நான் பிழைக்கிறது எப்படி?  மரணம் ஒருநாள் வருவது எப்படி? நான்தான் சொன்னேனே, we have no choice in life Sir, நீங்க எழுத்தாளர்;  Science, Religion, Art, Philosophy, கீதை  எல்லாம் சொல்ற ஒரே message என்ன தெரியுமா?  “ CARRY ON! “ அதுதான் டைம்லெஸ்ஸா  நடந்துட்டிருக்குது. அதுதான் Reality.”  என்று சொல்வதாக எழுதுகிறார்! 

“நீங்கள் என்ன கிருஷ்ண பரமாத்மான்னு உங்களுக்குள்ளே நெனைப்பா? நீங்கள் சாப்பிட்டால் மத்தவா  வயிறும்  நெறைஞ்ச  மாதிரின்னு? அரைச்சவாளுக்கு ஆட்டுக்கல், வார்த்தவாளுக்கு தோசைக்கல் என்கிற 
கதையாய்ப் போச்சே! இப்படி உங்களுக்குப் பசிச்சால், அதிகப் பசியும் ஒரு வியாதிதான்,  டாக்டரைக்  கேளுங்கோ!”

கிராமத்தில், “ என்ன குருட்டு யோஜனை?  புது வேஷ்டியில் நெய்க்கறை பண்ணிண்டாச்சா?  நெருப்புப் பத்திக்க  எந்நேரம் ஆகும்?  வேளையில்லே பொழுதில்லே அதென்ன  வெட்டி முறிக்கிற  யோசனையோ?”  – அவர் மனைவி!

”சில விஷயங்களில் அவளுடைய ஞாபக சக்தி அபாரமாயிருக்கிறது. காலங்களின் மூலை  முடுக்குகளிலிருந்து அவள் சம்பவங்களைச் சொல்லும்போது, சற்றுஆச்சர்யம், கொஞ்சம் வேடிக்கை, ஒரு தினுசான சந்தோஷமாயிருக்கிறது. கிராமப் பண்பு பற்றி ஒரு தனி வரலாறே எழுதுமளவுக்கு, அவளிடம் அத்தனை  நினைவுகள், விஷயங்கள் மண்டிக் கிடக்கின்றன என்று இப்போதுதான் அறிகிறேன் “ என்கிறார். கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் இருந்த நாட்களையும், பெருமாள் கோயில் சர்க்கரைப் பொங்கல், புளியஞ்சாதம், திதியோன்னம் என அவர் மனைவி விவரிப்பதைச் சொல்லி, வியந்து போகிறார்! 

புத்தகம் முழுவதும் தனக்கும் தன் மனைவிக்கும் உள்ள அந்த பந்தத்தை, மையச்சரடாய்க் கொண்டு, மற்ற நிகழ்வுகளைப் பூக்களாய் அதில் தொடுத்துச் செல்கிறார் லாசரா –
வலிமையான, சுவாரஸ்யம் குன்றாத விவரணைகள்!

லால்குடி பெருந்திரு அம்பாளைத் தெய்வமாக, தன் பெயர்த்தியாக, மனைவியாக – இல்லை, பெண்மையை  அம்பாளாகக்  கொண்டாடுகிறார். அம்பாள் சன்னதியில், அபிஷேகம், அலங்காரம், ஸதாபிஷேகத்தில் தாலி 
முடிவது, குழந்தைகள் உடன் நிற்பது எல்லாம் அவரது விவரணையில்  காட்சிகளாய்  மனதில்  விரிகின்றன!

”விழுதுகள்தாம் எங்கள் சொத்து.
அதனினும் பெரிது
உனக்கு நான் எனக்கு நீ.”
என்று முடிக்கிறார்!

விளிம்புகளின் சில முத்துச் சிதறல்கள் !

“அந்தப் பிராமணனுக்கு அதிலெல்லாம் ஆசை கிடையாது. அதுக்காக பொம்மனாட்டி நான் அவரைக் கையைப் பிடிச்சு இழுக்க முடியுமா?”

”….ஆயுசு கழியறதா, கரையறதா உங்களுக்கு வித்தியாசம் தெரிந்தால் சொல்லுங்களேன், எழுத்தாளராச்சே!”

“ மரணத்தை சந்தோஷத்துடன் வரவேற்கும் சமயங்களும் உளவோ? “

“ வயது ஏற ஏற எங்களிடையே பேச்சின்  அடிக்கடி குறைந்து விட்டது.”

“ வயது ஏற ஏற குமிழிகள் ஒவ்வொன்றாய்  வெடிக்கும்போது திகைப்பாயிருக்கிறது”.

ஆகவே, எனக்கும் தொந்தரவு இல்லாமல், பிறருக்கும் அலுப்புத் தட்டாமல், கெளரவமாய்க் கிளம்பி விட வேண்டியதுதான்!

“ ஆமாம். மூச்சுப் போனபின் கட்டைதானே? எரியாதா? துணைக்கு சந்தனக்கட்டை கேட்கறதா? “

“ உனக்கு நான். எனக்கு நீ – இது காதல் அல்ல.  சேர்ந்து வாழும் ஏற்பாடு.  இதற்குப் படிந்து அதை  ஒழுங்காய்  நிறைவேற்றத்தான் கல்யாணம். காதல் கண்டு கல்யாணத்தை விட,   கல்யாணம்  கண்டு  வளர்க்கும்  காதல்தான்  பெரிசுன்னு  தெரியலையா? “

லா ச ரா என்னும் படைப்பாளியின் எண்ண ஓட்டங்களை, அவரது சொற்களிலேயே, அவரது வாழ்க்கைச் 
சம்பவங்களுடன் இணைத்து, வாசிப்பது ஒரு புது அனுபவமாகஇருக்கிறது. மீண்டும், மீண்டும்  படிக்கத்  தூண்டுகிறது.

"A ‘MUST READ’ BOOK FOR EVERY ONE "
(டாக்டர் ஜெ.பாஸ்கரன் விமர்சனக் குறிப்பிலிருந்து....)

பக்கங்கள் 128
விலை ரூ 100/-

#விளிம்பில்
#சிறுவாணி_வாசகர்_மையம்
#பவித்ரா_பதிப்பகம்
#Pavithra_pathippagam
#siruvani_vasagar_maiyam

Gpay
8778924880

Siruvani Vasagar maiyam-2017

 Siruvani Vasagarmaiyam
February 1, 2017
இனிய நண்பர்களே!
வணக்கம்.
இலக்கியத்தின் இயங்குவிசை நல்வாசிப்புத்தான்.நல்ல நூல்களைத் தேடி வாசிக்க வாசிக்க , வாசகரின் ஞானம் வளர்ந்து, மொழி மிளிர்ந்து, ரசனை ஒளிர்ந்து ஒளியாய்ப் பரிணமிக்கிறது.
இது தொடர் இயக்கமாய் இருத்தல் வேண்டும்.

இவ்வுணர்வை செயல்படுத்தும் நோக்கில் " சிறுவாணி வாசகர் மையம்" எனும் அமைப்பு பொங்கல் நன்னாளில் பல நல் இதயங்களின் வாழ்த்துக்களுடன் நிறுவப்பட்டது.

நண்பர்களே ! சிறுவாணி வாசகர் மையம் மூலம் உங்கள் நல்வாசிப்பை நயன்மிகு
வாசிப்பாய் மிளிரச் செய்ய நாங்கள் நல்ல நூல்களைத் தேனீ போல் தேடித்தேடிப் பதிப்பித்து உங்களுக்கு
ஏதுவான விலையில் உங்கள் வீட்டிற்கே அனுப்பத் திட்டமிட்டுள்ளோம்.
இத்திட்டத்தை ஒளிமிகு
தங்கத்திட்டமாய் செயலாக்க
நீங்களும் உங்கள் நண்பர்களும் அங்கத்தினராய் இணைய அன்பாய் வேண்டுகிறோம்.

நீங்கள் செய்ய வேண்டியது, வருடசந்தா 1600 அளிக்க வேண்டியதுதான்.  

புத்தகவாசிப்பால் மனிதமனங்களைப் பண்படுத்தும் எங்களின் முயற்சிக்கு தங்கள் பங்களிப்பை வேண்டுகிறோம்.

அன்புடன்
தி. சுபாஷிணி
G.R.பிரகாஷ்
 ------------------------------------------

Siruvani Vasagar Maiyam
24-5 Sakthi Mahal,
Chinnammal Street,
K K Pudur (post),
Coimbatore-641 038.
-------------------------------------------
வருடசந்தா 1600
MO/ Cheque /DD மூலமும் சந்தாவை மேற்கண்ட முகவரிக்கு அனுப்பலாம்
--------------------------------------------
NEFT/ RTGS மூலம் பணம் அனுப்புவதற்கு...
Syndicate Bank
Avinashi Road Branch
Coimbatore- 641 018.
Current A/c No: 61211010003590
IFSC. : SYNB0006121
Benificiary: Siruvani Vasagar Maiyam

(SMS மூலம் தங்கள் முகவரி மற்றும் விவரங்களைக் கீழ்க்காணும் எண்ணுக்கு அல்லது மின்னஞ்சலுக்குத் தெரிவிக்கவும்.)
------------------------------------------
94881 85920 (பிரகாஷ்)


Tuesday, October 16, 2018

Siruvani Vasagar maiyam-2017

சிறுவாணி வாசகர் மைய'த்தின் முதல் நூல் நாஞ்சில் நாடன் அவர்களின் 'நவம்' 
உலக புத்தக தினமாகிய நேற்று (23.04.2017)வெளியாகி விட்டது. 
விரைவில் மேலும் பல மகத்தான எழுத்தாளர்களின் சிறந்த நூல்கள் ஒவ்வொரு மாதமும்.
************************************************************************************************************

Siruvani Vasagarmaiyam
February 9, 2017
அன்பு நண்பர்களே
வணக்கம்.
திருமதி லக்ஷ்மி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்திய வாசகர் வட்டம், திரு. ப. லக்ஷ்மணன்அவர்கள் நடத்தி வரும் இலக்கிய சிந்தனை ஆகியவற்றினை முன்மாதிரியாகக் கொண்டுதான் சிறுவாணி வாசகர் மையம் தொடங்கி இருக்கிறோம்.

இலக்கிய சமூக நற்சிந்தனை உள்ள நூல்களை லாப நோக்கின்றி மாதம் ஒரு நூலாக வாசகர் இருக்கும் இடத்திற்கே அனுப்புகின்றோம்.
அவைகள் ஆகச்சிறந்த படைப்புகளின் புதியவைகளாகவோ அல்லது மறுபதிப்புப் பாராத சிறந்த படைப்புகளாகவும் இருக்கலாம்.

முதல் நூலாக சாகித்ய விருதாளர் திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் புதிய படைப்பை அவரது வாழ்த்துக்களோடு அளிக்க இருக்கின்றோம்.
இவ்வாசகர் மையத்தை
மூத்த எழுத்தாளர் திரு. அசோகமித்திரன் அவர்களும்,திரு எஸ்.ரா அவர்களும் வாழ்த்தி உற்சாகப் படுத்தியிருக்கிறார்கள்.

மேலும் திரு பாரதி கிருஷ்ணகுமார்,திரு.வ.ஸ்ரீநிவாசன்,
திரு.ரவீந்திரன் ஆகியோர் தங்களது மேலான ஆலோசனைகளால் எங்களை வழிநடத்தவுள்ளார்கள்.

அதனால் நாங்கள் நம்பிக்கையாய் இதற்கான முதற் கட்டப் பணியான வாசகர்களின் சேர்க்கைப் பணியைச்
செய்து கொண்டிருக்கின்றோம்.

தாங்களும் வாழ்த்தி தங்கள் நண்பர்களுக்கும் மாணவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தி.சுபாஷிணி-தலைவர்

பிரகாஷ்-ஒருங்கிணைப்பாளர்
*******************************************************************************************************************

பொன். குமார்
புத்தக வரவு...

கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல தளத்தில் இயங்கி வந்தாலும் படைப்புகளுக்கு ஈடாக கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இது வரை 12 கட்டுரைத் தொகுப்புகளைத் தந்துள்ளார். 13 ஆம் தொகுப்பாக ' நவம் ' என்னும் கட்டுரைத் தொகுப்பு வந்தாலும் இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப் பட்டவைகளாகும். சிறுவாணி வாசகர் மையம் சார்பாக பவித்ரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது
************************************************************************************

Suresh Venkatadri
May 13, 2017 ·

கோவை சிறுவாணி வாசகர் மையம்,வெளியிட்டிருக்கும்,நாஞ்சில் நாடன் அவர்களின் ' நவம்' கட்டுரைத்தொகுதி கிடைக்கப் பெற்றேன்.ஒருமை என்பதில் துவங்கி,தசம் வரை எண்கள் சார்ந்த சொற்களை அவற்றின், மரபு சார்ந்த வரலாறு அரசியல் என்று பேசும் கட்டுரைகளைக் கொண்ட தொகுதி.இதன் பல கட்டுரைகளை தமிழினி இதழ்,சொல்வனம் இணைய இதழ் ஆகியவற்றில் படித்திருந்தாலும்,ஒரு தொகுப்பாக படிப்பது வேறு ஒரு அனுபவத்தைத் தரக்கூடும்.நூலின் வடிவமைப்பும்,நிறமும் அழகாக உள்ளன.நன்றி, Raveendran Ramasamy ,Prakash GR...

**********************************************************************************













நாஞ்சில்நாடன் விருது விழா -2026

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்...