Sunday, August 2, 2026

நாஞ்சில்நாடன் விருது விழா -2026




சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

விழா நாள்: ஆகஸ்ட் 09 மாலை 5.30 முதல்...

இடம்: ஆர்த்ரா ஹால்  அண்ணாசிலை அருகில், அவிநாசி சாலை, கோவை

----------

கோவையில் சிறுவாணி வாசகர் மையம் 2017 உலகப் புத்தக தினம் அன்று துவக்கப்பட்டது. வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ,சிறந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களை இன்றைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் பணியையும் இந்த மையம் செய்து வருகிறது .

இந்த அமைப்பின் மூலம் "மாதம் ஒரு நூல்" எனச் சிறந்த படைப்புகள் உறுப்பினர்களுக்கு  அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் தலைவராக தி சுபாஷிணி, ஒருங்கிணைப்பாளராக ஜி. ஆர். பிரகாஷ் ஆகியோர் உள்ளனர்.

கௌரவ ஆலோசகர்களாக திரு.நாஞ்சில்நாடன், திரு.வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC)ஆகியோர் வழிநடத்துகின்றனர். ஓவியர் ஜீவா புத்தகங்களுக்கான அட்டைப்படங்களை வடிவமைத்துத் தருகிறார்.

 

கடந்த ஒன்பது ஆண்டுகளில் தமிழகம் மற்றும் மற்ற மாநிலங்களிலிருந்தும் 500+ உறுப்பினர்கள் உள்ளனர்.

 

எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெயரில் வழங்கும் விருது பற்றி சிறு அறிமுகம் ;

 

கலை, இலக்கியம்  சமூகம் ஆகிய துறைகளில் நேர்மையாகவும் துணிச்சலாகவும் தொடர்ந்து செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும் இந்த விருது பரிசுத் தொகை ரூபாய் 50,000/- ,கேடயம் மற்றும் சான்றிதழ் அடங்கியது .இவ்விருதை நிறுவியவர் திரு.வி.கிருஷ்ணகுமார் அவர்கள்.

 

முந்தைய ஆண்டுகளில் விருது பெற்றவர்கள்;

ஓவியர் ஜீவா (2018),

முனைவர் ப. சரவணன் ( 2019) ,

பத்திரிகையாளர்,எழுத்தாளர் கா.சு.வேலாயுதன் (2020),

மணல்வீடு திரு.ஹரிகிருஷ்ணன்(2021)

சமூகச் செயற்பாட்டாளர் 'கௌசிகா' திரு. செல்வராஜ்(2022)

மொழிபெயர்ப்பாளர் திரு.அருட்செல்வப் பேரரசன்(2023)

கவிஞர் இசை(2024)

எழுத்தாளர் வேலாயுத முத்துக்குமார் (2025)

------------------

விருதாளர் திரு.இரா.மணிகண்டன்

 

நொய்யல் ஆறு, அதைச் சார்ந்த நீர்நிலைகளைப் பாதுகாப்பது, கோயம்புத்தூர் நகரத்தில் மக்களுக்கும் நீர்நிலைகளுக்கும் இடையிலான தொடர்பை மேம்படுத்துவது, பசுமைப் பரப்பளவை அதிகரிப்பது, பல்லுயிர்ச்சூழலைப் பெருக்குவது, பொதுமக்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வை மேம்படுத்துவது எனும் நோக்கங்களோடு 2017 முதல் திரு.இரா.மணிகண்டன் தலைமையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு செயல்பட்டுவருகிறது.

.இவ்வமைப்பின் தன்னார்வலர்கள் வாரம்தோறும் ஏரிகள், குளங்கள், குட்டைகள்,தடுப்பணைகள் போன்ற நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தூர்வாருதல், நெகிழிக் குப்பைகளை அகற்றுதல் போன்ற தூய்மைப் பணிகளைச் செய்துவருகிறார்கள்.இவர்களின் செயல்பாடுகளால் கோவையைச் சுற்றியுள்ள நீர்நிலைகள் தற்போது நீர்நிறைந்து காணப்படுகின்றன.

பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் விதமாக பல்லாயிரக்கணக்கான மரக்கன்றுகள் கோவையின் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ளன.

வெள்ளலூர் கிராமத்தில் வெள்ளலூர்க் குளம் பட்டாம்பூச்சி பூங்கா, 

காளப்பட்டியில் சங்க இலக்கியப் பூங்கா,

சீரபாளையத்தில் சமூகப் பூங்கா ஆகியவை இவரது எண்ணத்தில் உருவாகியுள்ளன.

திரு.இரா.மணிகண்டன் அவர்களின் சீரிய இச்சேவைகளுக்காக மத்திய,மாநில மற்றும் தனியார் அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

 

சிறுவாணி வாசகர் மையம் நாஞ்சில்நாடன் விருது (2026), திரு.இரா. மணிகண்டன் அவர்களுக்கு  வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.

 

தொடர்புக்கு - ஜி.ஆர்.பிரகாஷ்  

               9940985920   , 8778924880

 

 

 

கோவை புத்தகத் திருவிழா (2026) ல் சிறுவாணி வாசகர் மையம்

 




கோவை புத்தகத் திருவிழா (2026) ல்

சிறுவாணி வாசகர் மையம். (Siruvani Vasagar maiyam)

https://www.facebook.com/share/p/1EHJPDBSZd/

அனைவருக்கும் வணக்கம்.

கோவை புத்தகத் திருவிழா ஜூலை 17 ம் தேதி துவங்கி நேற்றுடன் பத்துநாட்கள் இனிதே நிறைடைந்தது.

நமது சிறுவாணி வாசகர் மையம் அரங்கு 35 ல் பங்குபெற்றதையும் அறிவீர்கள்.

கோவை புத்தகத் திருவிழாவில் பங்குபெற


ஊக்குவித்த திரு.நாஞ்சில்நாடன்,

திரு.வ.ஸ்ரீநிவாசன் ,

திரு.ஆர்.ரவீந்திரன்....


பங்குபெற வாய்ப்பளித்த புத்தகத் திருவிழாவின் தலைவர்

திரு.ராஜேஷ்,திரு.விக்னேஷ்,திரு.முகுந்தன் ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றி.

🙏🙏🙏


வாழ்நாள் சாதனையாளர் விருதுபெற்ற பேராசிரியர் க.ரத்னம் ஐயா அவர்கள் சிறுவாணி அரங்குக்கு வருகைதந்து சிறப்பித்தார்.அவருக்கு வணக்கமும் நன்றியும்.

---------

சிறுவாணி  வாசகர் அரங்குக்கு வருகைதந்து பெருமைப்படுத்திய நண்பர்கள்/ எழுத்தாளர்கள்/உறுப்பினர்கள் ;

முடிந்தவரை பெயர்களை க் குறிப்பிட்டு நன்றிகூற முயல்கிறேன்.

பட்டியலில் விடுபட்டவர்கள் இருப்பின் அது எனது நினைவுக் குறைபாடே.

மன்னிக்கவும்.

-----------

திரு நாஞ்சில் நாடன், ஓவியர் ஜீவா, எழுத்தாளர்  எஸ். ராமகிருஷ்ணன், காலச்சுவடு பதிப்பாளர் திரு. கண்ணன்,எழுத்தாளர் பா.ராகவன்,எழுத்தாளர் சாருநிவேதிதா,திரு.மரபின் மைந்தன் முத்தையா,திரு.D.பாலசுந்தரம் ஐயா,

திரு.சுதேசமித்திரன், திரு.அரவிந்த் வடசேரி, மொழிபெயர்ப்பாளர் நிர்மால்யா, ஐயா பொதிய வெற்பன், திரு.கோணங்கி, திரு.முருகேச பாண்டியன், திரு.அய்யப்ப மாதவன்,

திரு.கா.சு.வேலாயுதன்,

'லயம்'திரு.காலசுப்பிரமணியன்,

புரவலர் 

திரு.V. கிருஷ்ணகுமார்,புரவலர் திரு.சத்தியமூர்த்தி....


புன்னகை அம்சப்ரியா,

காலச்சுவடு திரு அய்யாசாமி

திரு.CGS.மணியன்,ஓவியர்.சுந்தரம் முருகேசன் ....


கவிஞர் யவனிகா ஸ்ரீராம்,

சிவக்கவிமணி அவர்களின் பேரர்கள் திரு.சிவசுப்பிரமணியன்,திரு.கந்தசாமி,எழுத்தாளர் சு.வேணுகோபால்,


எழுத்தாளர்கள் திரு.லா.ச.ரா சப்தரிஷி,திரு.சங்கரராம பாரதி,

திரு.கே.என்.செந்தில்,திரு.ஸ்கந்தசுப்ரமணியன்,திரு.வேடியப்பன்(டிஸ்கவரி),

திரு.ஜீவகரிகாலன்(யாவரும்),

இயக்குநர் ராம்-ன் தந்தையார் திரு.சங்கரநாராயணன்,

திரு.நாகசந்திரன்,

திரு.இயகாகோ சுப்பிரமணியம்,திரு.போகன்சங்கர்...யூட்யூப் நண்பர்கள்...


திரு.கண்ணன் தண்டபாணி,

திரு.ஜான்சுந்தர், 

திரு.அவைநாயகன்,

திரு.மயன் மகேஸ்குமார்,திரு.மணிவண்ணன் சண்முகம்,லஷ்மிஹர்,

மற்றும் 

அனைவருக்கும் நன்றி.🙏

 

நியூஸிலாந்து நண்பர்கள் திரு.சாய்,திரு.பாண்டியராஜ் மற்றும் கனடா,ஆஸ்திரேலியா,அமெரிக்காவிலிருந்து வருகைதந்த நண்பர்கள்...


ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி திரு.பரமசிவன்,

எழுத்தாளர் சுரேஷ்வெங்கடாத்ரி தினமும் வந்திருந்து உதவிசெய்தார்கள் அவர்களுக்கும் பேராசிரியர்.விஜயராகவன், கவிஞர் கோவை சுபா ஆகியோருக்கும் நன்றி. 🙏🏻🙏🏻


பவித்ரா பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் ஜி.ஏ.பிரபா,திரு.ம.முருகன்,கவிஞர் ஜெயஸ்ரீ வெங்கடேசன் மற்றும் திரு வெங்கட்ராகவன் ஆகியோருக்கு நன்றி.


வரும் ஆகஸ்ட் 09 ல்

நாஞ்சில்நாடன் விருது -2026 நிகழ்வின் தலைமை விருந்தினர் திரு.பாலகுருசாமி (முன்னாள்) துணைவேந்தர் அவர்கள்,

விருதுபெறும் இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு) அரங்குக்கு வருகைதந்தார்.அவருக்கு நன்றி.


புத்தகத் திருவிழாவிற்காக பணிநேரத்தை மாற்றிக் கொடுத்து உதவிய எங்கள் நிறுவன மேலாளர்...


மேலும் நமது சிறுவாணி வாசகர் மையத்திற்கு வருகைதந்த வாசகர்கள்,புதிதாக இணைந்துள்ள வாசகர்கள்,


எனது மகளுக்காகப் புத்தகங்களைத் தேடித்தேடி ,பரிந்துரை செய்து வாங்கித் தந்த பேராசிரியை.மாதங்கி,


இத்தனை நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் காரணமாயிருந்தது சிறுவாணி வாசகர் மையம் அமைப்பு.


இதனை உருவாக்கிய திரு.நாஞ்சில்நாடன்,

ஆடிட்டர் கிருஷ்ணகுமார்,மூத்த சகோதரியாக விளங்கும் தி.சுபாஷிணி மற்றும் ஆலோசகர்கள்,


பாரதி வண்ணப்படங்கள் 35000 என்கிற எண்ணிக்கையை இந்த புத்தகத் திருவிழாவில் நிறைவு செய்தது மகிழ்ச்சி.


மேலும் புத்தகத் திருவிழாவிற்கு வந்திருந்த 200 க்கும் மேற்பட்ட பள்ளி  மாணவர்களுக்கு வாசிப்பைப் பற்றி எடுத்துச்சொல்லி,

பல்வேறு நூல்களை அன்பளிப்பாக வழங்கியது மனதுக்கு நிறைவாக இருந்தது.


எனது குடும்பத்திலிருந்து அம்மா,மனைவி மற்றும் மகள்.


சிறுவாணியின்வாட்ஸ்அப் குழுக்களில் தொடர்ந்து ஊக்குவித்தவர்கள் ,

அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

🙏🙏🙏🙏🙏🙏


தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.


ஜி.ஆர்.பிரகாஷ்

ஒருங்கிணைப்பாளர்

சிறுவாணி வாசகர் மையம்

கோவை

-------------

 https://youtu.be/GUDaYT3enJo?si=1S6wCji9OFCM6rCS

 SVM from 4th minute


-----------------------

 https://youtu.be/Le9pDvQcv8Y?si=XtK6ErTFwnbM2wl9

 

4.51 minutes

----------------------

https://youtu.be/SjXMmzv8SKM?si=mdCMhkEczuABzB6I


Time: 26:40

----------------------

கோவைக்கு சுவை சேர்ப்பது 'சிறுவாணி நீர்'


அது நாவில்பட்டு தாகம் தீர்த்து உடலில் நிறையும்.


அது போன்றே 'சிறுவாணி வாசகர் மையம்' நூல்கள் கைககளில் தவழ்ந்து கண்களில் நுழைந்து இதயத்தை நிறைக்கின்றன.


 10ஆண்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த வாசகர்மையம் நம் இன்றைய மிகப்பெரிய குறைகளான நேரமின்மை மற்றும் சிறந்த  நூல்களை எங்கு தேடிச்சென்று வாசிப்பது..என்பதை களைந்து  குறைந்த விலையில் பல நூல்களை நம் இல்லத்திற்கே தேடிவந்து மாதம் ஒரு நூல் என வருடத்திற்கு 12நூல்கள் நம் வாசிப்பிற்கு தருகிறார்கள். 6லிருந்து 100 வயதுவரை இதன் வாசகர்கள்.  100 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கூடஇதன் வாசகர்களாக (உறுப்பினர்களாக) இருக்கலாம். நான் அறிந்திட்டில்லேன். ஏனெனில் சிறந்த வாசிப்பு சுவாசிக்க வைக்கும். வாழ்வை ருசிக்க வைக்கும்.


இதன் தலைவராக திருமதி. மதிப்பிற்குரிய அம்மா சுபாஷிணி திருமலை அவர்கள் செயல்படுகிறார்கள்.


சிறந்த படைப்புகள் நம்மை வந்தடைய கௌரவ ஆலோசகர்களாக திரு.  நாஞ்சில் நாடன், திரு. வ.ஸ்ரீநிவாசன், திரு.ஆர்.ரவீந்திரன் (RAAC) செயல்படுகிறார்கள்.


ஒரு குடும்பம் புத்தகம் வாசிக்கும் பார்த்திருக்கிறோம். ஒரு குடும்பமே புத்தகத்திற்காக உழைத்து பார்த்திருப்போமா?!

அத்தகைய சிறந்த குடும்பம்தான் திரு. ஜி.ஆர். பிரகாஷ், ஒருங்கிணைப்பாளர் அவர்களின் குடும்பம்.

வாசகர்மையத்திற்காக அத்தனை சிறந்த பங்களிப்பு அவர்களுடையது.


நூல்கள் நாவல்கள், சிறுகதைகள்,கட்டுரைகள், என அனைத்து தரப்பு சிறந்த நூல்கள் நம்மை வந்தடையும். சிறுவாணி வாசகர் மையத்தின்   1,25,50,75, 100 நூலகளாக நாஞ்சில் நாடன் ஐயா அவர்கள் நூல்கள் வந்துள்ளன. 100வது நூலாக "சொல்லாழி"! 


பல அறிய வாசிக்க வந்த நூல்களில் குறிப்பிடத்தக்க சில நூல்கள் திரு. லாச.ராஅவர்களின் பூர்வா,இதழ்கள்,கழுகு,விளிம்பில்,கல்சிரிக்கிறது பிராயச்சித்தம்;

இந்திரா பார்த்த சாரதிஅவர்களின் 'வேர்ப்பற்று';'கல்குமிழிகள்' ந. பிச்சமூர்த்தி அவர்களின் சிறுகதைகள்; பெண் எழுத்தாளர் ராஜம் கிருண்ணன் அவர்களின் 'கதவிற்கு அப்பால்';

இவ்வருடம் கோவை புத்தகத் திருவிழாவில் சாதனையாளர் விருது பெற்ற பேராசிரியர் க.ரத்னம் ஐயாவின் 'கல்லும் மண்ணும்';

மற்றும் பல சிறுகதை நூல்கள் மற்றும் சிந்தனைத்தூண்டும் பல கட்டுரை நூல்கள்.


இந்தாண்டு ஏப்ரல் - செப்டம்பர் வரையில்:

சிட்டி (சிறுகதைகள்), நவரச நினைவுகள் சௌகார் ஜானகி, சொல்லாழி, காவிரிக்கரையில் திருவையாறு,என்றும் அன்புடன், வந்தே மாதரம் என்ற அற்புத நூல்கள் நம்மை வந்தடைந்து கொண்டிருக்கின்றன.


நூல்களின் முகப்புப் படங்கள் ஓவியர் ஜீவா அவர்களின் கை வண்ணம்.

நூல்கள் வந்துவிட்டன ..ஆனால் அதை இன்னும் வாசிக்க வில்லையெனில் அவரின் அட்டை பட ஓவியமே நம்மை வாசிக்க தூண்டி இழுக்கும்.


அச்சில் வராத ஆனால் வாசிக்க வேண்டிய பல அற்புத நூல்களை தேடித்தேடி பதிப்பித்து நம்மிடையே கொண்டு சேர்க்கும் அரிய உழைப்பு சிறுவாணி வாசகர் மையத்தினுடையது.


தேன் சுவை தமிழால் சிந்தனையைத்தூண்டி,

அரிய நூல்களால் உள்ளம் நிறைத்து,

இல்லம் தேடி வரும் 'சிறுவாணி வாசகர் மைய' நூல்களும், அவர்களின் உழைப்பும்  நிச்சயம் தமிழன்னையால் ஆசிர்வதிக்கப்பட்டவை.!


கோவை புத்தகத் திருவிழாவில் மட்டுமே பங்குபெறும் சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகப் புத்தகங்களை வாங்கிடவும், வாசகர் மைய சந்தாதாரரர் ஆகிடவும்


சிறுவாணி வாசகர் மையம்/பவித்ரா பதிப்பகம்

கோவை புத்தகத் திருவிழா-2026

அரங்கு எண் 35


Jayasri venkatesan fb

--------------------

Let's enjoy this weekend!


 கோவையின் ஒரு Hidden Gem பற்றி இன்று பார்ப்போம். அதுவும்  ஜீலை 26 அன்றோடு அனுமதி முடிகின்றது!

 

புத்தகக் கண்காட்சி! அரங்கு A - ஸ்டால் 35

சிறுவாணி வாசகர் மையம் /பவித்ரா பதிப்பகம்


இவர்கள் தங்கள் வாசகர்மையம் மூலம் பல அரிய புத்தகங்களை வாசகர்களிடையே 10 ஆண்டுகளாக வெற்றிகரமாக வீட்டின் வரவேற்பு அறைக்கே கொண்டு சேர்க்கின்றார்கள்.


பல அரிய நூல்களான வேரும் விழுதும், நவம், உனது ஆத்ம பிரயத்னம்,போக்கிடம்,தக்கர் பாபா,விளிம்பில், பிஞ்ஞகன், கல்லும் மண்ணும், கம்பனும் சிவனும், காப்பிய இமயம் முதலிய பல அரிய நூல்கள்.

நாவல்கள் மட்டுமின்றி சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு,  கட்டுரைகள் நம்மிடையே கொண்டு சேர்க்கிறார்கள்.


அது சரி நாம் இந்த நூல்களை ஏன் படிக்க வேண்டும்?!


வாசிப்பு என்பது சிறு குழவியின் தீண்டலால்..போர் வீரனின் ஆயுத தாக்குதல் நம்முள் செய்யும், ஒரு புயலின் தாக்குதல் தென்றலாக வருடும்...மாயாஜாலமெல்லாம் நல் புத்தகங்கள் வாசிப்பில் நம்முள் நிகழும்.


 நம் மொழியின் சிறப்பை, வரலாற்றை, உண்மை சம்பவங்களை, கலாச்சாரத்தை பின் எப்படி அறிய முடியும்.

நூல்கள் வெறும் கற்பனையில் எழுதப்பட்டவை மட்டுமல்ல.  அவை உண்மையை தாங்கி காலம் கடந்து எடுத்துச் சொல்லும் காகித கல்வெட்டுகள்!

அதை காலம் கடந்தும் உயிர்ப்போடு வைக்க வாசகர்களால் மட்டுமே இயலும்!


மேலே குறிப்பிடப்பட்டவை அவற்றுள் மிக சில நூல்களே!  நம் இல்லம் தேடி  இத்தகை சிறந்த புத்தகங்கள் வருவதற்கு சிறுவாணி வாசகர் மைய சந்தாதாரர் ஆகவும், இன்னும் பல அரிய நூல்களை வாங்கவும்,


சிறுவாணி வாசகர் மையம்/பவித்ரா பதிப்பகம்

அரங்கு A - ஸ்டால் 35 கொடிசியா வர்த்தக வளாகம்


Let your weekend is fully "Booked"!!

Jayasri venkatesan

----------------------------

Thursday, July 16, 2026

சிட்டி (பெ.கோ. சுந்தரராஜன்) சிறுகதைகள்



சிட்டி
(பெ.கோ. சுந்தரராஜன்)
சிறுகதைகள்


சிட்டியின் கதைகள் அக்காலத்தில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சமூகக் கோட்பாடுகளுக்கும் நிலைக்கும் ஏற்றவையேயாகும். ஆகையால் அவை சிரஞ்சீவித்தனம் பெற்று விடுகின்றன. 
-
நரசய்யா       
                                                                   

நவீன தமிழ் வாசகர்களுக்கு ‘சிட்டி' எனும் மூத்த இலக்கிய ஆளுமையை அறியத் தரும் விதமாக ‘சிறுவாணி வாசகர் மையம்' இந்த நூலை வெளியிடுகிறது.  
நாஞ்சில்நாடன்



                                                             




 

நவரஸ நினைவுகள் சௌகார் ஜானகி (எழுத்து -எஸ்.சந்திரமௌலி)



நவரஸ நினைவுகள் 
சௌகார் ஜானகி
எழுத்து -எஸ்.சந்திரமௌலி

* “உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதைச் செய்யத் தயங்காதே” என்பார் அப்பா. “சரி எது? தவறு எது?’ என்பதைப் பகுத்தறியும் பக்குவமும் அவர் அளித்த பலம்தான். “சிம்பிளாய் இரு; கையில் காசில்லாவிட்டால் கடன் வாங்கியாவது செலவு செய்யணும்னு நினைக்காதே” என்று அப்பா சொன்னதை நான் மறந்ததே இல்லை.

* ஜொலிப்பும் பந்தாவும் மிக்க சினிமா உலகில் எளிமையை விரும்புகிறவளான நான் எதிர்நீச்சல் போட்டு சமாளித்தது ஒரு பக்கம் இருக்க, சின்னச் சின்ன மகிழ்ச்சிகள் பலவற்றைத் தியாகம் செய்யவும் வேண்டியிருந்தது. 

* பணத்திலும் பகட்டிலும் மிதக்கும் திரையுலகில் பணத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த போதிலும் பணம் மட்டுமே முக்கியமல்ல, உண்மையும், உழைப்பும் மனத் திருப்தியும்தான் வாழ்க்கையின் ஜீவ நாடிகள் என்ற கொள்கையைக் கை விடாமல் என்னால் வாழ முடிந்தது.

* எதையுமே மனத்தில் வைத்துக் கொள்ளாமல் வெளிப்படையாகப் பேசி விடுகிற குணம் எனக்கு. இதனால் திரையுலகிலேயே எனக்குப் பல பிரச்னைகள் ஏற்பட்டிருக்கின்றன. இத்தகைய சுபாவமுள்ள நான் எப்படி அரசியலுக்குப் பொருத்தமாக இருக்க முடியும்?

* இந்த நாட்டின் நல்ல பிரஜையாக, அரசாங்கத்தை மதித்து, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் வருமான வரி கட்டினேன்; இப்போதும் கட்டிக் கொண்டு வருகிறேன்.

பத்மஸ்ரீ சௌகார் ஜானகி
----------
கல்கியில் வெளிவந்த
கட்டுரைத் தொடர்:





 

சொல்லாழி - நாஞ்சில்நாடன்





 

                                        சொல்லாழி - நாஞ்சில்நாடன்

தமிழ் நவீன கவிதை இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான ந. பிச்சமூர்த்தி குறிப்பிட்டது போல் இந்தக் கட்டுரைகளும் பாதையில்லாக் காட்டில் பயணம் போகும் முயற்சியே!                                                                 

சிறுவாணி வாசகர் மையத்தின் முதல் நூலாக, இருபத்தைந்தாவது நூலாக, ஐம்பதாவது நூலாக, எழுபத்தைந்தாவது நூலாக எனது புத்தகங்கள் வெளியாகி உள்ளன. தற்போது நூறாவது நூலாக 'சொல்லாழி' வெளிவருகிறது.

-நாஞ்சில்நாடன்

காவிரிக்கரையிலே திருவையாறு- வழக்குரைஞர் நா.பிரேமசாயி நீ.சீனிவாசன்



காவிரிக்கரையிலே திருவையாறு-

வழக்குரைஞர் நா.பிரேமசாயி

நீ.சீனிவாசன் 

 (ஆறும் ஊரும்-1)


விலை ரூ.200/- (+50/- அனுப்பும் செலவு)


.... ... ... இவ்வளவு பெருமைகளையும் தன் கரையிலே அடக்கிக்கொண்டு அமைதியாக ஓடிக்கொண்டிருக்கிறது திருவையாற்றுக் காவிரி. 

இக் காவிரிக்கரை திருவையாற்றின் வரலாற்றினை, காட்சிகளாக, நம் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது போல் காட்டியுள்ளது இந்நூல்.

மொத்தத்தில்,  திருவையாற்றின் வரலாற்றினை அறிய விரும்புவோருக்கு ஒரு கையேடாக இந்நூல் விளங்குகிறது. பயன் பெறுக!


-பேராசிரியர் கோ. விஜயராமலிங்கம்

என்றும் அன்புடன் - ரம்யா வாசுதேவன்



என்றும் அன்புடன் 
ரம்யா வாசுதேவன் 

விலை ரூ200/-
+(50/- அனுப்பும் செலவு)
கட்டுரைகள் 

எல்லாத் தலைப்பும் உங்களுக்குத் தெரிந்ததுதான். அனுதினமும் இலையில் பரிமாறப்படும்  நாம் அறிந்த காய்கறிகள் போன்றவைதான். ஆனால், ருசியில்  பேதமுண்டல்லவா? உங்கள்  வாழ்வு சுவையானதா? உவர்ப்பானதா? மண்டைக்கு ஏறும் காரமா? திகட்டும் இனிப்பா? முஷ்டியை மடக்கியபடி இருக்கும் வன்மமா? என இந்நூலை வாசிக்கும் கணந்தோறும் உங்களை நீங்களே பார்த்தபடி இருப்பீர்கள்.

இந்த நூல், தகிக்கின்ற கோடையில் நிழல் தரும் குடை.  திசை அறியாது பயணிப்போரின் திசைகாட்டி.
- கிருஷ்ணா 





 

வந்தே மாதரம்- சி.சு.செல்லப்பா





வந்தே மாதரம்- சி.சு.செல்லப்பா

சிறுகதைகள்


Price 200/-
-------------
சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு. 

புனைகதை எழுத்துக்கள் பொழுதுபோக்கிற்காக, வாசகர் கவனத்தை ஈர்க்க, அவர் மனம் குதூகலிக்க எழுதப்படுபவையே அல்லாது பிரபந்தங்கள், காவியங்கள், சங்க இலக்கியங்கள் வகையில் இன்று எழுதப்படுபவை என்ற எண்ணம் அன்றைய சூழலில் இருக்கவில்லை. என்றுமே இருந்ததில்லை என்றும்தான் தோன்றுகிறது.

அவர் எழுத்துக்களும், கதைகள் மாத்திரமல்ல, தீவிரமாக முனைந்து செய்த அவரது செயல்களும் பழம் மதிப்புகளை அவற்றின் சாரத்தில் நம்பிக்கை கொண்டு தன் வாழ்க்கையையும் எழுத்தையும் தீர்மானித்துக் கொண்ட வையாகவே இருந்துள்ளன.

- வெங்கட் சாமிநாதன்
-------------
 




புத்தகங்களின் விலைப்பட்டியல் (QR Code)


கோவை புத்தகத் திருவிழாவில் மட்டுமே பங்குபெறும் சிறுவாணி வாசகர் மையம், பவித்ரா பதிப்பகப் புத்தகங்களின் விலைப்பட்டியல் அறிவதற்கான க்யூ ஆர் கோடு(QR Code) இணைக்கப்பட்டுள்ளது.



 


Tuesday, July 14, 2026

சென்ற நூற்றாண்டின் அரிய சிறுகதைகள் - தொகுப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

 






சென்ற நூற்றாண்டின் அரிய சிறுகதைகள்


தொகுப்பு: அரவிந்த் சுவாமிநாதன்


இத்தொகுப்பில் “இவர்கள் எல்லாம் சிறுகதைகள் எழுதியுள்ளனரா!” என்று ஆச்சரியப்படும் வகையில், இடம்பெற்றுள்ள பலரது சிறுகதைகள் அக்காலத்து மக்களின் மனநிலையை, வாழ்க்கையை, எண்ணவோட்டங்களை, சூழல்களை விரிவாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன.


இக்கதைகள், கடந்து போன நூற்றாண்டை நம் கண்முன் பிரதிபலிக்கின்றன. நம் முன்னோர்களின் வாழ்க்கையை சற்றே திரும்பிப் பார்க்க வைக்கின்றன. அந்தக் காலத்து மனிதர்கள், அவர்களது வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், கலாச்சாரம், சமூகப் பின்னணி போன்றவற்றை அறிந்து கொள்ள உதவும் ஓர் வாயிலாக இந்நூலைக் கருதலாம்.


விலை ரூ 250/-(+50/- அனுப்பும் செலவு)

--------

கல்குமிழிகள் - ந.பிச்சமூர்த்தி





 கல்குமிழிகள்

ந.பிச்சமூர்த்தி

விலை ரூ190/-(+50/- அனுப்பும் செலவு)


பிச்சமூர்த்தியின் கதைகள் வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை நமக்குத் தருகின்றன. அத்தோற்றம், தள்ளி நின்ற ஒருவர் "பார்த்தியா, இப்படி இருக்கு கதை" என்று ஒரு புன்சிரிப்புடன் சொல்வதாகவும் படுகிறது. கதைகளும் சொல்கிறார்தான். பல சம்பவங்கள் நிறைந்து, கதா பாத்திரங்களும் நிறைந்து உள்ள கதைகளும்தான். 

பிச்சமூர்த்தியின் கதை சொல்லும் பாணியும் தனித்தது. மிகச்சிறிய வாக்கியங்கள். மிகக்குறைவான சொற்கள். மிகச் சிக்கனமான சொல்முறை 'நறுக்குத் தெறித்தாற்போல்' என்று சொல்கிறோமே. அப்படித்தான் இருக்கும். 

இக்கதை சொல்லலில் சங்கிலித் தொடர் இல்லை.மிகக் குறைந்த சொற்களில் ஒரு தாவல்.


வெங்கட் சாமிநாதன்

-ந. பிச்சமூர்த்தி கதைகள்–



Monday, July 13, 2026

எழுத்தும் சிந்தனையும் AI to Zero - மது ஸ்ரீதரன் ஜனவரி-2026

 




எழுத்தும் சிந்தனையும்

AI to Zero 

-மது ஸ்ரீதரன்

விலை ரூ 300/-+(50/- அனுப்பும் செலவு)

--------------------

நமக்குப் பிடித்த பாடல் ஒன்றை நாமாக யூ-டியூப்பில் தேடிப் பிடித்துக் கேட்பதற்கும், எதிர்பாராத நேரத்தில் ஒரு டீக்கடையிலோ, டவுன் பஸ்ஸிலோ கேட்பதற்கும் வேறுபாடு இருக்கிறது அல்லவா? இரண்டாவதில் அந்தப் பாடல் இன்னும் இனிமையாக ஒலிக்கும். இதை Serendipity என்கிறார்கள்.


அதே போல இந்த நூல் நீங்கள் தேடிப் பார்க்காமலேயே சில புதுத் தகவல்களை உங்களுக்குக் கொடுக்கக் கூடும். இதில் உள்ள சில விஷயங்கள் நீங்கள் ஏற்கனவே அறிந்ததாக இருக்கலாம், சில விஷயங்கள் புரியாமல் இருக்கலாம். எது எப்படியோ, எதிர்பாராமல் கேட்க நேரிடும் டீக்கடைப் பாடல் போல இந்த நூல் உங்கள் வாசிப்பு அனுபவத்தை சற்று மேம்படுத்தும். 

----------------------------


நவீன அறிவியல் கருத்துக்களையும் தொழில்நுட்பங்களையும், தமிழ் இலக்கியங்களையும் இணைத்து எழுதிய எழுத்தாளர்களின் தொடர்ச்சி தமிழில் உண்டு. பெ.நா. அப்புசாமி முதல் சுஜாதா வரை ஒரு  பட்டியல் தரலாம்.  நான் சமீபத்தில் படித்த புத்தகம்  

தமிழ் இலக்கியம், பாடல்கள், ஆன்மீகம், வானியல் போன்ற பல தகவல்களோடு சுவாரசியமான களஞ்சியமாக  எழுத்தாளர் மதுஸ்ரீதரன் அவர்களின் ‘எழுத்தும் சிந்தனையும்’. சிறுவாணி வாசகர் மைய வெளியீடு.

ஆங்கில எழுத்துக்கள் 26 க்கும் தலா ஒரு கட்டுரை என நூல் முழுவதும் படிக்க எடுத்தால் கீழே வைக்க இயலாத ரகம்.

AI செயல்பாடுகளைப் பற்றித் தெளிவாகவும் எளிமையாகவும் கூறும் கட்டுரை, நுகர் கலாச்சாரம் பற்றிய கட்டுரை, பழந்தமிழ் இலக்கியம், புராணம் முதல் திரைப்பாடல் வரிகள் உள்ளிட்ட எடுத்துக்காட்டுகள் அடங்கிய பல கட்டுரைகள் என நூலில் மேலும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

மதுஸ்ரீதரனின் பலமாக நான் எண்ணுவது எடுத்துக்கொண்ட தலைப்பின் கருப்பொருளை எளிமையாக உதாரணங்கள் மூலம் வாசகருக்குக் கடத்துவதுதான்.

நுகர்பொருள் கலாசாரம் பற்றிய கட்டுரையில், ‘வாங்குவதால்தானே விற்கிறோம்' என்கிறது ஒரு கூட்டம். ‘விற்பதால்தானே வாங்குகிறோம்' என்கிறது ஒரு கும்பல்.

சுற்றுச் சூழலை, மற்றவர்களை விட்டு விடுவோம். ‘வாங்கிக் குவித்தல்' நம் சேமிப்பைப் பதம் பார்த்து விடுகிறது. நம் பாதுகாப்பான எதிர்காலத்தைக் கேள்விக்குறி ஆக்குகிறது.

‘இன்றைக்கு இந்த நொடியை அனுபவிப்போம், நாளை வெறும் கனவு, அதை நாம் ஏன் நம்பணும்?' என்பதெல்லாம் கவிதைக்குச் சரிப்படும். நாளைக்கு ரிட்டையர் ஆகி, பென்சன் இல்லாத போது யாரிடம் சென்று கையேந்துவது? கண்டதை வாங்கிக் குவிக்காமல் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கலாம் என்று தோன்றுமே!  

எதை நாம் துறக்கிறோமோ அதைச் சார்ந்த துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுகிறோம் என்பது இக்காலகட்டத்தில் அவசியமான அறிவுரை.


கருந்துளை பற்றிய ஒரு கட்டுரையில் மரணமும் ஒரு கருந்துளை போன்றதே. உள்ளே நுழைந்தவர்கள் மீண்டும் திரும்புவதில்லை எனச் சொல்லும்போது ஞான மார்க்கத்தில்  ரிடர்ன் டிக்கெட் கிடையாது எனும் ஓஷோவின் கருத்தை இணைக்கிறார்.


தொடுவானம் போல மனிதனின் ஆசை அவன் அதை நெருங்க நெருங்க விலகிச் செல்கிறது.அடைதல் பிழை. அடைந்துவிட்டால் சந்தோஷமாக இருக்கலாம் என்பது தப்புக்கணக்கு. நாம் அனைவருமே கனியை உண்டபிறகும் ஏமாறும் டான்டலஸ்தான் என கிரேக்க புராணத்தையும் ஒப்பிடுகிறார்.


இளவயதில் நிறைய நேரம்,உடல் வலிமை இருக்கிறது.ஆனால் பணம் இல்லை.

நடுத்தர வயதில் நேரம் இல்லை.

முதுமையில் வலிமை இல்லை.

ஆக ஏதாவது ஒரு நிச்சயமின்மை இருந்துகொண்டேதான் இருக்கிறது. மூன்றில் இரண்டுதான் தேர்ந்தெடுக்க முடியுமென ஒரு கட்டுரை.

அரிதினும் அரிதான உயிரினமான நாம் நம் இருப்பை கொண்டாடிக் களிக்க வேண்டாமா? நம் பூமியை, நம் வானை, நமக்கு வழங்கப்பட்ட இந்த காலத் துணுக்கை நொடிக்கு நொடி அனுபவிக்க வேண்டாமா? ஆராதிக்க வேண்டாமா? வேற்றுமைகளை மறந்து ஒன்று கூடி நடனமாட வேண்டாமா? ஆனால், உலகத்தின் நிலையை எண்ணிப் பாருங்கள். அதிகாரம். வன்முறை, பிரிவினை, அடக்குமுறை...

வாசிப்பவரை நோக்கி எழுப்பப் படும் இக்கேள்வி சிந்தித்துத் திருந்துவதற்கானது.

‘நான் சந்தோஷமாக இருப்பேன்' என்பது உண்மையில் ஒரு மிகச்சிறந்த குறிக்கோள் என்கிறார்கள் ஞானிகள். ‘பைலட் ஆவேன்', ‘பில்லியனர் ஆவேன்', ‘உலகம் சுற்றுவேன்', ‘முதல்வன் ஆவேன்' இவைகளைக் காட்டிலும் இந்த குறிக்கோள் சிறந்தது, எளிதில் அடையக்கூடியது. நடைமுறை சாத்தியம் உள்ளது.

‘இந்த நிமிடம் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்' என்ற எளிய குறிக்கோளை நமக்குள் வைத்துக் கொண்டால் அதை யாராலும், ஒட்டுமொத்த உலகத்தாலும் மாற்ற முடியாது என்பதைக் கவனியுங்கள். நமது மற்ற குறிக்கோள்கள் சிக்கலானவை, பலகீனமானவை, பிறரின் சார்புள்ளவை.

‘எதிர்காலம் ஒவ்வொரு நாளாக அல்ல, நொடியாக நம்மிடம் தரப்படுகிறது. ஒவ்வொரு நொடியும் வாழ்பவனுக்கு எதிர்காலம் அர்த்தமற்றுப் போகிறது. மரண பயம் உட்பட எல்லா பயங்களும் அவனுக்குப் பொருளற்றுப் போய் விடுகின்றன.

முதல் முறை கொடுக்கும் போது நன்றியுணர்வை உருவாக்குகிறோம்.

இரண்டாம் முறை கொடுக்கும் போது எதிர்பார்ப்பை. மூன்றாம் முறை நமக்கு இவர் கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தை, நான்காம் முறை இவர் கொடுப்பதும், நாம் பெறுவதும் சகஜம் என்ற எண்ணத்தை உருவாக்குகிறோம். ஐந்தாம் முறை நாம் ஒருவேளை கொடுப்பதை நிறுத்தினால் வெறுப்பையும், பகைமையையும் உருவாக்குகிறோம்.

கொடுப்பவர்தான் எல்லையை நிர்ணயிக்க வேண்டும். ஏனெனில், வாங்குபவர்களுக்கு எந்த எல்லையும் இல்லை!

மதுஸ்ரீதரனின் முந்தைய சிறுவாணி வாசகர் மைய வெளியீட்டு நூலான ‘எண்ணும் எழுத்தும்' போலவே இந்த ‘எழுத்தும் சிந்தனையும்' (AI to Zero) நூலும் நம்மை வியக்கவும், சிந்தனையிலாழ்த்தவும் செய்கின்றன என்றால் மிகையில்லை.

வாசிப்பவரின் எண்ணஓட்டத்தை விரிவாக்கி, மரபைப் போற்றி, புதியன காணும் போக்கைக் கைக்கொள்ளத் தூண்டுமாறு நம்மையெல்லாம் வியக்க வைக்கின்றன மதுஸ்ரீதரனின் கட்டுரைகள்.  

அனைத்து வயதினரும் படிக்கவேண்டிய செறிவான புத்தகம்.


 21.06.2026 தினமலர் கோவைப் பதிப்பில்

'நான் படித்த புத்தகம்' பகுதியில் வெளிவந்துள்ள  

செய்தியின் முழுவடிவம் இது.




ஒத்தைக் காளை வண்டியும் முத்துசாமி ராவும்- அ.கா.பெருமாள் டிசம்பர்-2025

 



ஒத்தைக் காளை வண்டியும் முத்துசாமி ராவும்-
அ.கா.பெருமாள்

விலை ரூ 250/-+(50/- அனுப்பும் செலவு)
--------
ஆய்வாளர் அ.கா.பெருமாள்  நாட்டார் வழக்காற்றியல் அறிஞர்.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள்  களஆய்வில்
சேகரித்தவை.கிராமியக் கலைகளைப்  பற்றிய செய்திகள்,  வரலாறு, பண்பாடு தொடர்பானவை. இந்தக் கட்டுரைகள் எல்லாவற்றிலும் நாட்டார் வழக்காற்றுச் செய்திகள் இழையோடுகின்றன.


எருமைச் சீமாட்டி- பெருமாள் முருகன் / அக்டோபர் -2025

 



எருமைச் சீமாட்டி-

பெருமாள் முருகன் சிறுகதைகள்

Pages:200 

விலை 250/-+(50/- அனுப்பும் செலவு)

-------

பெருமாள் முருகன், கொங்குப் பகுதியின் நிலத்தையும் வீட்டையும் ஆவினங்களையும் ஆளும் பெண்களின் புறவுலகைப் பேசியவாறே மறைவாய் அவர்களது அகவிரிவை அறியத் தருகிறார். வாசிப்பின் தொடக்க நிலையில் இருப்பவர்க்கும் இடையூறு அளிக்காத நடையும் கதைக் களங்களும் ஆசிரியருடையவை என்பதால் இக்கதைகள் சகலருக்குமானது.


திட்டமான சிறுகதை ஒழுங்கமைவைக் கற்கவும், ஒரு கதையில் நேர்த்தியான உரையாடலை உருவாக்கவும், பலரது பார்வைக் கோணங்களை முன்வைக்கவும் தமிழில் பெ.முவை வாசிப்பது இன்றியமையாதது.


இக்கதைகள் வாசிப்பின்பத்தை மெருகூட்டுபவை என்பதில் ஐயமில்லை.

- ஜார்ஜ் ஜோசப்


-------------

மணல் உதறும் அணில்

பேரிலக்கியச் செல்வம் கொண்ட தமிழில் வாசிப்போர் எண்ணிக்கை வெகுகுறைவு. இது சமூக முரண். வாசகர் குறைவாக இருந்தும் எப்படி நூல்கள் பல்கிப் பெருகுகின்றன, இலக்கிய வளம் செழுமை பெற்றுக் கொண்டேயிருக்கின்றன என்பதுதான் வியப்பு. இந்த வியப்பிற்கு விடை காண வேண்டுமானால் புத்தகச் சந்தை, நிறுவனங்கள், அரசு முயற்சிகள் ஆகியவற்றைக் கணக்கெடுத்துப் பார்த்தால் போதாது. அப்படிக் கணக்கெடுத்தால் சிலசமயம் மனக்கஷ்டத்திற்கு ஆளாகவும் நேரலாம். ஆனால் தனிமனித முயற்சிகள் ஒருபோதும் சோர்வு தருவதில்லை. தமிழும் தமிழ் இலக்கியம் இத்தனை வளம் பெற்றிருக்கத் தனிமனிதர்கள்தான் காரணமோ என்றுகூடத் தோன்றும். 

வாசிப்பின்பத்தை அனுபவித்த ஒருவர் தம்மைப் போல இன்னொருவரைக் காண்கையில் அடையும் பரவசத்தை நம் சூழலில் நிறையக் காணலாம். வாசித்தவற்றைப் பற்றிப் பேசுவதும் நூல்களைப் பகிர்ந்து கொள்வதும் இயல்பாக நடந்தேறும். கடன் வாங்கிய பணத்தைக் கேட்டுச் சண்டையிடுவோர் உண்டு. கடன் வாங்கிய நூலைப் ‘போனால் போகட்டும்’ என்று விட்டுவிடுவோரே அதிகம். வாங்கிய நூலை வாசித்தததும் யாருக்காவது கொடுத்துவிடும் வழக்கம் கொண்டோரும் உள்ளனர். கோவை, பூசாகோ (பிஎஸ்ஜி) கலை அறிவியல் கல்லூரியில் முதுகலைத் தமிழிலக்கியம் படித்தேன். என் ஆசிரியர் ச.மருதநாயகம் தனிநூலகம் வைத்திருந்தார். ஒருவர் தம் வீட்டில் அத்தனை பெரிய நூலகம் வைத்திருக்க முடியும் என்பதைக் கண்டு பெரும்பரவசம் அடைந்தேன். நூல்கள் சேகரிக்கும் ஆர்வம் பெருகியதற்கும் அதுதான் காரணம். 

சேகரித்து வைத்திருந்தது மட்டுமல்ல, என்னைப் போன்ற மாணவர்கள் தடையின்றி நூல்களை எடுத்துச் சென்று வாசிக்கவும் உதவினார். வாசிக்கக் கொடுத்த நூலை ‘படிச்சிட்டயாப்பா?’ என்று எப்போதாவது கேட்பார். அவர் அப்படிக் கேட்டால் பதறிப் போவேன். ‘நாளைக்குக் குடுத்துருவங்கையா’ என ஏதோ பதில் சொல்வேன்.  ‘பொறுமையாப் படிப்பா. படிச்சிருந்தா உங்க கருத்தத் தெரிஞ்சுக்கலாமுன்னு கேட்டன்’ என்பார். போகப்போகத்தான் அவர் மனோபாவம் புரிந்தது. அவர் விசாரிப்பு நூலைத் திருப்பிக் கொடுக்கச் சொல்லும் நினைவூட்டல் அல்ல. படித்த என் கருத்தை அறிய வேண்டும் என்பதற்காகத்தான். அது வாசிப்பின்பத்தை முழுமையாக அனுபவிக்கும் மனநிலை.
 
நான் கல்லூரி ஆசிரியர் பணியில் சேர்ந்தபோது என் சேகரிப்பிலிருந்து பத்திருபது நூல்களைக் கல்லூரிக்கு எடுத்துப் போய் வைத்திருப்பேன். பாடநூலைத் தவிர வேறு புத்தகங்களையே அறியாத முதல் தலைமுறை மாணவர்களை வாசிப்பில் ஈர்க்க அவற்றைப் பயன்படுத்துவேன். தொடக்க நிலை வாசிப்புக்கு உகந்த நூல்கள். குறிப்பேட்டில் மாணவர் பெயரை எழுதி வைத்துக்கொண்டு நூலைக் கொடுப்பேன். அதிகபட்சம் ஒருவாரத்தில் திருப்பிக் கொடுக்கும்படி சொல்வேன். கொடுக்கவில்லை என்றால் கேட்டுப் பெறுவேன். சிலரைக் கடுமையாகத் திட்டவும் வேண்டியிருக்கும். புத்தக அருமை தெரியாமல் எங்கோ போட்டுவிட்டுத் தேடுவோர் உண்டு. கிழித்து எடுத்து வருவோர் உண்டு. புத்தகத்தைக் கையாளுதல், சேகரித்தல், பாதுகாத்தல் ஆகியவற்றைப் பற்றி வகுப்பெடுக்கவும் செய்வேன்.  ‘அறிவுச்சொத்து புத்தகம்’ என்பதை மனதில் பதிய வைக்க என்னென்னவோ செய்ய வேண்டியிருக்கும். 

வாசிப்பு ஆர்வம் மட்டுமல்ல, புத்தகத்தைப் பாதுகாக்கும் கவனமும் கொண்டோருக்கு என் நூல்களைத் தருவதில் ஒருபோதும் சுணக்கம் காட்டியதில்லை. எனக்கு உதவியாக ஒருவேலையைச் செய்து தரும் மாணவருக்குப் புத்தகத்தைக் கொடுப்பேன். திருமண நிகழ்வுகளுக்கு நான் கொடுக்கும் ஒரே பரிசு புத்தகம்தான். முதல் பக்கத்தில் என்  வாழ்த்துப்பாவும் இடம்பெற்றிருக்கும். நம்மைப் போல இன்னொருவர் இருப்பதைக் கண்டால் மகிழ்கிறோம். நம்மைப் போலச் சிலரை உருவாக்கவும் முயல்கிறோம். வாசிப்புச் சுவை கண்டோரிடம் இவ்வியல்பு மிகுந்திருக்கும். 

வாசிப்புப் பண்பாட்டை உருவாக்கப் பலவித முயற்சிகள் நடைபெறும் காலம் இது. மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள், புதிய நூலகங்கள், நூல் கொள்முதலில் புதிய கொள்கை, பன்னாட்டுப் புத்தகக் காட்சி என அரசு ஒருபக்கம் வாசிப்பைக் கூட்டச் செய்யும் முயற்சிகள் போற்றத்தக்கவை. அதேசமயம் எந்தப் பின்புலமும் அற்றவர்கள் செய்பவை அனேகம். உடலில் ஒட்டிய மணலை உதறி உதவும் அணில் போல வாசிப்புப் பண்பாட்டிற்குப் பலரும் பங்களிக்கின்றனர். அவ்வகையில் சிறுவாணி வாசகர் மையத்தின் ‘மாதம் ஒருநூல்’ என் மனதைக் கவர்ந்த திட்டம். தம் செயல்பாட்டு எல்லைக்கு உட்பட்டு என்ன செய்ய முடியும் என்று சிந்தித்த வாசக உள்ளத்தின் திட்டம். 

நூலார்வம் கொண்டோரை உறுப்பினர்களாகச் சேர்த்து  வீடு தேடி மாதம் ஒருநூலைக் கொண்டு சேர்ப்பது சாதாரணம் போலத் தோன்றும். நூல் தேர்வு, வாசகர் தேர்வு,  அதை அச்சிடும் பணிகள், அனுப்புதல் என்று தொடர்ந்து ஓர் இயக்கமாகச் செயல்படுவது எளிதல்ல. நூல்களைப் பெறுவோர் பாக்கியவான்கள். ஒருநூல் கைக்கு வந்து சேர்வதில் இருக்கும் கஷ்டமும் சேர்ந்த பின் கிடைக்கும் மகிழ்வும் என் தலைமுறையினருக்கு நன்றாகத் தெரியும். நல்ல நூலைத் தேடி நூலகங்களுக்கும் எங்கோ அரிதாகப் பெருநகரங்களின் சிறுசந்தில் இருக்கும் புத்தகக் கடைக்கும் அலைந்த தலைமுறை. இன்றோ நாம் இருக்கும் இடத்திற்கு நூல் வந்து சேர்கிறது. முகம் தெரியாத ஒருவர் நூலைக் கொண்டு வந்து நம் கையில் வைக்கிறார். இதைத் தொழில்நுட்பம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. தொழில்நுட்பம் எத்தனை வளர்ந்தாலும் அதைப் பயன்கொள்ளும் திறம் நம்மைப் பொருத்ததுதான். அத்திறம் கொண்ட அமைப்பாகிய சிறுவாணி வாசகர் மையம் வாசிப்புப் பண்பாட்டிற்குச் செய்யும் பங்களிப்பாகவே இத்திட்டத்தைக் காண்கிறேன். அதற்கு என் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள். 

சிறுவாணி மூலம் என் சிறுகதைத் தொகுப்பு ஒன்று வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. என் அறுபதாம் வயதுத் தொடக்கத்தை ஒட்டி இப்படி ஒருநூலை வெளியிட்டுப் பெருமைப்படுத்துவதைக் கண்டு நெகிழ்கிறேன். சாத்தியப்படுத்திய நண்பர் பிரகாஷ் அவர்களுக்கும் சிறுவாணி நண்பர்களுக்கும் நன்றி. என் பணியை எளிமையாக்கிக் கதைகளைத் தேர்வு செய்து கொடுத்தவர் இளவல் ஜார்ஜ் ஜோசப். வாசிப்பிலும் எழுதுவதிலும் தீரா வேகம் கொண்டவர் அவர். இந்தத் தொகுப்பை உருவாக்குவதிலும் அவ்வேகத்தைக் கண்டேன். நினைவுபடுத்த வேண்டிய தேவையே இல்லாமல் பணியை முடித்துத் தரும் இயல்புடைய அவருக்கு நன்றி. 

என் சிறுகதை நூலொன்றுக்கு ‘எருமைச் சீமாட்டி’ எனத் தலைப்பிட வேண்டும் என்பது நெடுநாள் அவா. எருமைகளைப் பற்றிப் பிரமாதமான சித்திரங்கள் நம் பழைய  இலக்கியத்தில் இருக்கின்றன. அழகிய உருவமும் கம்பீரமும் வலிமையும் கொண்ட வளர்ப்பு விலங்கு எருமை. அதன் கனைப்பே எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் குடும்பத்திற்குப் பால்மாடு ஆகாது என்று சில சம்பவங்களால் முடிவுசெய்து எருமை வளர்த்தோம். அதனால் எருமைகளோடு எனக்கு நல்ல பழக்கமுண்டு. நான் விரும்பிய வகையில் தலைப்பு மட்டுமல்ல, எருமைச் சித்திரம் கொண்ட அட்டை அமைந்திருக்கிறது. இதை உருவாக்கிய ஓவியர் ஜீவா அவர்களுக்கு நன்றி. நூல் தயாரிப்பில் பங்களித்த அனைவருக்கும் நன்றி.

13-09-25                                                 
நாமக்கல்                                                                                                   பெருமாள் முருகன்



Friday, September 19, 2025

9 ஆம் வருடத்தில் (மாதம் ஒரு நூல்) இதுவரையிலான புத்தகங்கள்.2025-2026




 


சிறுவாணி வாசகர் மையம் 9 ஆம் வருடத்தில்
(மாதம் ஒரு நூல்) 
உறுப்பினர்களுக்கு

இதுவரை அனுப்பியுள்ள புத்தகங்கள்.









நாஞ்சில் -50 & நாஞ்சில்நாடன் விருது விழா Videos 24.08.2025

 





சிறுவாணி வாசகர் மையம்
வழங்கும் நாஞ்சில்-50
- எழுத்துலகில் 50 ஆண்டுகள்
(நாஞ்சில்நாடன் அவர்களை சிறப்பித்தல்) 
&
நாஞ்சில்நாடன் விருது - 2025 பெறுபவர் 
வே.முத்துக்குமார் 

திரு.பிரவீண் விப்ரநாராயணன்
இசைநிகழ்ச்சி


சங்கரா கண் மருத்துவமனை
பத்மஸ்ரீ.
டாக்டர்.R.V. ரமணி விருதுரை

 
சங்கரா கண் மருத்துவமனை
டாக்டர்.ராதா ரமணி விருதுரை


முனைவர்.பேராசிரியர்  ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் உரை


"சொல்வனம்"
வ.ஸ்ரீநிவாசன் உரை


எழுத்தாளர் நாஞ்சில்நாடன் சிறப்புரை


விருதாளர் வே.முத்துக்குமார் 
ஏற்புரை

இறைவணக்கம்












பனுவல் போற்றுதும் - நாஞ்சில்நாடன் 2025


பனுவல் போற்றுதும்

           நாஞ்சில்நாடன்

கட்டுரைகள்

                ரூ. 250/-


படிக்கப் படிக்கத் தெரிகிறது. இன்னும் ஒன்றுமே  படித்திருக்கவில்லை என்பது. அவ்வையே சொன்னாள், 'கற்றது  கை மண்ணளவு, கல்லாதது உலகு அளவு' என்று. மீதி வாழ்நாளில் இன்னும் எத்தனை புத்தகங்களை வாசித்து விட இயலும்? அதற்காக 'எட்டுக் கருப்பட்டியை ஒண்ணா முழுங்கீரவும்' முடியாது.

‘பனுவல் போற்றுதும்’ நூலின் பல கட்டுரைகள் எனது வழக்கமான பாணி யிலானவை அல்ல. எனது ஆய்வு முடிவுகளும் அல்ல. என்னை வசீகரித்த
 நூல்களை வாசகருக்கு அறிமுகம் செய்கிறேன். அவ் வளவே!

நாஞ்சில் நாடன்





 

பவித்ரா பதிப்பகத்தின் புதிய /பிற வெளியீடுகள் 2025

      பவித்ரா  பதிப்பகத்தின் 

புதிய /பிற வெளியீடுகள்


Whatsapp 9940985920


இமயம் கண்டேன் இறை கண்டேன்

க.சிவசுப்பிரமணியன்
ரூ 170/-

காசியைப்போல ஒவ்வோர் ஹிந்துவும் சென்று தரிசிக்க வேண்டியவை 'சார்தாம்' எனப்படும் நான்கு புண்ணிய ஸ்தலங்கள்.

'சார்தாம்' எனில் இறைவனின் நான்கு இருப்பிடங்கள்.

யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத் ,பத்ரிநாத்  என்பவை அவை.
அத்தலங்களுக்கும் மற்றும் பல திருத்தலங்களுக்கும் சென்று தரிசித்து வர முழுமையான பயண வழிகாட்டி இந்நூல்.

நூலாசிரியர், பெரியபுராண உரையாசிரியர் சிவக்கவிமணி சி.கே.எஸ் அவர்களின் பேரர் என்பது நூலின் மற்றொரு சிறப்பு.




பொய்மான்கரடு 

கல்கி 

(கொங்குப் பகுதி நாவல்-2)

         ரூ 150/-

நான் எழுதுகிற கதைகள் அமர இலக்கியங்கள் என்பது அடியேனுடைய தாழ்மையான அபிப்பிராயம். மற்றக் கதைகள் விஷயம் எப்படியிருந்தாலும், இந்தப் ‘பொய்மான் கரடு' என்கிற கதை, அமர இலக்கியம் என்பது பற்றிச் சிறிதும் ஐயம் இல்லை.

நம்மில் ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் ஏற்பட்ட கடமையை உணர்ந்து அதை நன்கு நிறைவேற்ற முயல்வோமானால், அதில் மனத்திற்கு உண்டாகும் திருப்தியும் நிம்மதியும் வேறெதிலும் ஏற்படுவதில்லை. இந்த உண்மையைப் ‘பொய்மான் கரடு' என்னும் இக்கதையை எழுதும் போது நான் நன்கு உணர்ந்தேன்.

கல்கி



நான்

லா..ரா  

(கட்டுரைகள்-நேர்காணல்-சிறுகதைகள் சில.)

                ரூ 180/-


நிகழ்ச்சி சரித்திரமாகி சரித்திரம் நினைவாகி நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, சொல்லின் பிசிர்விட்டு விஷயம் மெருகேறி நம் ரத்தத்தில் தோய்ந்து. பரம்பரைக்கு மாண்பை ஊட்டி வளர்க்கும் காவியமாகி விடுகிறது. உயிரின் காரியம் இழுக்க இழுக்க ஓயாத சரடு, புரியாத ஜாதுவில், கழலக்கழல்ல அதில்தான் எத்தனை வர்ணங்கள், பொலிவுகள் , நூல் நயங்கள், நளினங்கள். ஆனால் எந்த இடத்திலும் அற்றுப் போகாத ஒரே சரடு. இந்த ஆச்சர்யத்தைத்தான் கலைகள் பாடுகின்றன.

ஆண்டவனே, உன்னை வேண்டிக் கொள்கிறேன் ஆச்சர்யம் குன்றாமலிருக்க  வேணும்.

லா .ச-.ரா



மகுடபதி 

கல்கி 

கொங்குப் பகுதி நாவல்-1

                ரூ 250/-

"கல்கி" ஆசிரியருக்குச் சொந்த ஊர் மாயவரம் பக்கத்திலுள்ள கிராமம். நானும் அங்கே போய்த்தான் இருக்கிறேன். "மகுடபதி"யை வாசித்த பிறகு, ஆசிரியர் பிறந்து வளர்ந்து சுகதுக்கங்களை அனுபவித்த இடம் கோயமுத்தூர் ஜில்லாதான் என்று சொல்லத் தோன்றுகிறது.

ஆசிரியர் ஏதோ சொற்ப காலந்தான் கொங்கு நாட்டில் வாழ்ந்திருக்கிறார். ஆனாலும், அங்குள்ள மக்களோடு இதயங் கலந்தவாறாக வாழ்ந் திருக்கிறார். மக்களோடு மாத்திரமல்ல ; கொங்கு நாட்டு நிலத்திலும் புழுதியாடத் திளைத்திருக்கிறார்.

டி .கே .சிதம்பரநாத முதலியார்



இரு நாவல்கள் 

.ரத்னம்

         ரூ 300/-

நினைவின்நிழல்,   கனவுமாலை

ஒன்றுக்கொன்று கதைத் தொடர்புடைய இந்த இரண்டு நாவல்களும் ஒரே நூலாக……..




உருவகக் கதைகள்

.ரத்னம்

                ரூ 150/-

தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உயிர் அற்றனவும் விலங்குகள் பறவைகள், அஃறிணை உயிர்கள் முதலியன அறிவொடு பட்டனவாகப்  பேசுவதாகவும், மற்றவர் பேசுவதைக் கேட்பதாகவும் படைக்கப்பட்ட  பஞ்சதந்திரக் கதைகள், புத்த ஜாதகக் கதைகள் இருந்திருக்கின்றன .
இத்தொகுதியில் அமைந்த கதைகள் பலவும் இவ்வகையினவே. இவற்றை ‘உருவகக் கதைகள்’ எனப்  பெயரிடக் காரணம், பேசும் திறன் அற்றனவும் பேசுவதாக உருவகப்படுத்தப் பட்டிருப்பதே. 

க.ரத்னம்




தரங்கிணி

லா.ச.ரா சிறுகதைகள்

                ரூ 250/-   

 “எப்படி எனக்கு நேர்ந்ததெல்லாம் இந்தக் கதையில் நேர்ந்திருக்கின்றது? எனக்கே கூட தெரியாதபடி என்னுள் பூட்டி வைத்திருந்த என் அந்தரங்கங்கள் எப்பிடி இங்கு அம்பலமாயின. எனக்கு எழுத வராததனால் நான் எழுதாத குறை. என் எண்ணங்கள் எப்படி அவருடைய எழுத்தானது?"  என்பது லா.ச. ரா.வின் மீதான வாசகனின் வியப்பு.

இந்தத் தொகுப்பிலும் இதனை உணரலாம்

-சப்தரிஷி லா -ச- ரா          




பூர்வா 

லா.ச.ரா சிறுகதைகள்

    ரூ 220/-


எத்தனை விதங்களில் எழுதினாலும் நான் எழுதவது நான் என் பிறவியுடன் கொண்டு வந்திருக்கும் என் கதைதான். இதைச் சொல்கையில் உயிரின் சாசனத்தை வாசகர்களின் நெஞ்சில் நித்தியமாய் செதுக்கிக் கொண்டிருக்கிறேன். இதுவே என் விதி. என் விதியே என் பெருமிதம். இதுதான் நான் தேடும் என் சொல் - என் சொல்தான் என் உளி என்கிறார் லா.ச.ரா.

இக்கதைகளை வாசிப்பவர்கள் அதனை உணர்வார்கள்.

– சப்தரிஷி.லா.ச.ரா-



கங்காதரனும் குழந்தை ராமனும்

.சிவசுப்பிரமணியன்

பயண நூல்

   ரூ 180/-

'மனித வரலாறு தோன்றுமுன்பே தோன்றிய நகரம் காசி' என்பார் மார்க் ட்வைன். ஸ்ரீ ராமருக்கும் முன் பிறந்தது அயோத்தி, காசியும், அயோத்தியும் ஹிந்து மதத்தின் உயிர். இரண்டுமே ஆயிரம் வருஷங்களாகப் பல்லாயிரம் பிரச்சினைகளை எதிர் கொண்டு இன்று பொலிவுடன் நிற்பவை.

காசி. அயோத்தி, பிரயாகராஜ். கயா,புத்தகய ஆகிய பாரதத்தின் பெருமிதமிக்க தலங்களின் வரலாறுகளை, ஆன்மீகத் தொடர்பை விரிவாக சொல்லும் இந்நூல் காசி, அயோத்தி புனிதப் பயணத்துக்குச் சிறந்த வழிகாட்டியும் கூட.


வில்லியும் சிவனும் 

  இராய.சொ

ஆய்வு நூல்

                ரூ 300/-

கம்பர், வில்லி போன்ற பெருங்காப்பியப் புலவர்கள் தம் காப்பியத்துக்கு உரிய கடவுள் எதுவாயினும், தாம் வழிபடு கடவுள் எதுவாயினும், அக்கடவுளைப் பாடும்போது தமிழ்மக்கள் வழிபடும் ஏனையக் கடவுளர்களையும் மதித்துப் பாடியுள்ளனர். பாடும்போது அச்சமய மக்கள், தம் கடவுளரைப் போற்றிப் பாடும் அளவிற்கு, ஏற்றிப் பாடியுள்ளனர்.

அதனால் அவர்கள் யாத்த காப்பியங்கள், சமயப்பொது நூலாகவும், எல்லா மக்களும் கற்றற்கு உரிய பொதுவிலக்கியமாகவும் விளங்குகின்றன.
 
இந்த இலக்கிய மரபை விரிவாக அறிந்து கொள்ள  இவ்வெளியீடு துணை செய்யும் என்பது என் கருத்து.

டாக்டர் வ.சுப. மாணிக்கம்


கம்பனும் சிவனும் 

             இராய.சொ

ஆய்வு நூல்

                ரூ 400/-

ராய. சொ. அவர்கள் தமிழ்க்கடலும் சிவமணியும் ஆதலின் கம்பன் காப்பியக் கடலிடைச் சிவமணிகளைக் கண்டு எடுத்துக் காட்ட முன்வந்தார். 

இத்துறையில் இப் பதிப்பு தமிழாராய்வார்க்கு ஒரு புதிய பாதை என்று கூற விழைகின்றேன். ஒரு பெருமரத்து ஆங்காங்கு இலை மறையக் கிடந்த பழங்களை ஒருவர் பறித்துத் தொகுத்துக் குவித்துக் காட்டுங்கால் உண்டாகும் மகிழ்ச்சியை இப் பதிப்பில் பெறுகின்றோம்.

டாக்டர் வ.சுப. மாணிக்கம்




டாக்டர்.ரங்காச்சாரி

           ராஜம் கிருஷ்ணன்

வாழ்க்கை வரலாற்று நாவல்

 ரூ 450 /-

மிகக் கருத்தோடும் பொறுப்போடும் முனைந்து ஓடிஓடி நோய் தீர்த்த டாக்டர். ரங்காச்சாரி அவர்களின் கடமையுணர்ச்சியையும், உயிர் காக்கும் அருளுணர்ச்சியையும், ஓய்வற்ற தொண்டையும், உதவியையும், அக்காலத்தார் பெற்றுப் பிழைத்த உண்மை நிகழ்ச்சிகளையும் படிப்போர் நெஞ்சம் குழையும்! மருத்துவத் தொண்டின் மாண்பும் புலப்படும்!

டாக்டர் ரங்காச்சாரி ஒருவர் போதுமா? தொடர்ந்து மனித சமுதாயத்திற்கு உதவ எண்ணற்ற ரங்காச்சாரிகள் தேவை, தேவை! நோயகற்றி வாழ்வளிக்கும் நாயகர்களை நாடு எதிர்பார்த்துக் காத்திருக்கிறது!

புதிய ரங்காச்சாரிகள் வருக, வருக என்ற வரவேற்புடன் காத்திருக்கிறோம்.

----------

ராஜம்கிருஷ்ணன் நூற்றாண்டு வெளியீடு




ஔவை பாடல் திரட்டு-

.சரவணன்

ஆய்வு நூல்

 ரூ 250/-

"தமிழ்நாட்டின் மற்ற செல்வங்களையெல்லாம் இழந்துவிடப் பிரியமா? ஔவையின் நூல்களை இழந்துவிடப் பிரியமா?" என்று நம்மிடம் யாரேனும் கேட்பார்களாயின், 'மற்ற செல்வங் களையெல்லாம் பறிகொடுக்க நேர்ந்தாலும் பெரிதில்லை. அவற்றைத் தமிழ்நாடு மட்டும் சமைத்துக்கொள்ள வல்லது. ஒளவைப் பிராட்டியின் நூல்களை இழக்க ஒருபோதும் சம்மதப்பட மாட்டோம். அது மட்டும் சமைத்துக்கொள்ள முடியாத தனிப் பெருஞ்செல்வம்' என்று நாம் மறு மொழி உரைக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.

-மகாகவி பாரதியார்


சிரஞ்சீவிக் கதை  

கல்கி சிறுகதைகள்

  ரூ 200/-


தமது சரித்திர நாவல்களாலும் சமூக நாவல்களாலும் எண்ணற்ற சிறுகதைகளாலும், கவிதை, கட்டுரைகள் போன்ற படைப்புகளாலும் தாம் எழுதிய தலையங்கங்களாலும் தற்கால தமிழ் இலக்கியத்தில் சிரஞ்சீவித் தன்மை பெற்றவர் கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி

கல்கி அவர்களின் நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு




தக்கான் திருமொழி

108 திவ்யதேசங்கள் - தலா இரு பாடல்கள் 




கம்பனில் காத்திருப்பு

நண்பர், பேராசிரியர் ஜகந்நாத் அவர்களின் கம்பராமாயண வாசிப்பு ரசனை, ஆய்வு, சமயம் ஆகிய மூன்று கண்ணோட்டங்களையும் உள்ளடக்கியது. இவற்றுக்கிடையில் முரண்பாடுகளை அவர் காண்பதில்லை. இவை மூன்றையும் இணைத்துச் செல்வதாகவே அவரது பார்வை அமைந்துள்ளது என்பதை இந்தத் தொகுப்பை வாசிப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.

-ஜடாயு




நாஞ்சில்நாடன் விருது விழா -2026

சிறுவாணி வாசகர் மையம் வழங்கும் நாஞ்சில்நாடன் விருது-2026 க்கு திரு.இரா.மணிகண்டன் (கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு)  தேர்வு செய்யப்பட்டுள்...